Saturday, October 22, 2016

தேர்வு எழுத வந்த பலர் தேர்வு எழுத அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.

 
சமீபத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை IBPS தேர்வு நடந்தது. அதற்கு நான் invigilatorஆக சென்றிருந்தேன். அங்கே தேர்வு எழுத வந்த பலர் முறையான அடையாள அட்டை (ID PROOF ) இல்லாதால் தேர்வு எழுத அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டனர். குறிப்பாக திருமணம் ஆன பெண்கள்! அவர்களில் பலர் தேர்வு -க்கு விண்ணப்பிக்கும் போது கணவரின் initialஐ போட்டு விண்ணப்பித்துவிட்டு தேர்வு எழுத கொண்டுவந்த ID PROOF களில் தந்தையின் initial இருந்ததால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அப்படிப்பட்டவர்கள் ORIGINAL MARRIAGE CERTIFICATE இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று IBPS கண்டிப்பான உத்தரவு பிரப்பித்திருந்ததால் அனுமதிக்கப்படவில்லை . அவர்கள் அழுது கொண்டே சென்றது மனதுக்கு வேதனையாக இருந்தது. தேர்வாளரின் பெயரில் சிறு தவறு ( spelling mistake ) இருந்தால் கூட தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட வில்லை. எனவே வரும் சனி, ஞாயிறு கிழமைகளில் ( 23.10, 2016 24.10.2016 ) தேதிகளில் நடைபெறஉள்ள IBPS தேர்வு எழுத உள்ள நபர்கள் (குறிப்பாக திருமணம் ஆன பெண்கள் ) இதை கவனத்தில் கொள்ளவும். உங்களிடம் இரண்டு , மூன்று ID இருந்தால் கூட எடுத்து செல்லுங்கள் ஒன்றில் தவறு இருந்தால்கூட மற்றதை பயன்படுத்திக் கொள்ளலாம். ( தயவு செய்து இதை அனைத்து குரூப்பிலும் பதிவிடுங்கள் ஓரிருவர் பயனடைந்தாலும் சந்தோசம் தானே! ) -