Saturday, November 29, 2014

குட்டிஸுக்கு அறிமுகப்படுத்த சில தரமான வலைதள முகவரிகள்

ணையத் தொழில்நுட்ப வளர்ச்சியில் குழந்தைகளும் கைகோத்து பயணிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஃபேஸ்புக், பொழுதுபோக்குப் பக்கங்கள் என அவர்களின் கவனம் சிதற விடாமல் ஆக்கப்பூர்வமான வழியில் மடை திருப்ப, குழந்தைகளுக்கான பிரத்யேக வலைதளங்கள் பல செயல்பட்டு வருகின்றன. உங்கள் வீட்டு குட்டிஸுக்கு அறிமுகப்படுத்த சில தரமான வலைதள முகவரிகள் இங்கே..

Kids Health

மருத்துவச் செய்திகளை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பக்கம் இது. 'ஆஸ்துமா என்றால் என்ன?', 'நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?', 'வைரஸ் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது?' என, இப்படி மருத்துவம் சம்பந்தமான குழந்தைகளின் அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இங்கே விடை கிடைக்கும்.

மேலும், வீடியோ மூலமாகவும் தகவல்களை தெளிவுற தெரிந்துகொள்ளலாம். இதன் வலைதள முகவரி: http://kidshealth.org/kid/

National Geographic Kids


அமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society, குழந்தைகளுக்காக நடத்தும் வலைதளம் இது. இதில் தாவரங்கள், உயிரினங்கள் பற்றிய செய்திகளை குழந்தைகள் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்.

வாண்டுகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான இந்த தளத்தின் புகைப்படங்களும், வீடியோக்களின் இதன் பெரிய பிளஸ். வலைதள முகவரி: http://kids.nationalgeographic.com/kids/.

Kidsmart

இது லண்டனிலிருந்து குழந்தைகளுக்காகச் செயல்படும் இணையதளம். இணையம் தொடர்பான பல்வேறு விஷயங்களை சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறது இந்த இணையதளம்.

சாட்டிங், சமூக வலைதள பக்கங்கள், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாகத் தெரிந்துகொள்ளலாம். வலைதள முகவரி: http://www.kidsmart .org.uk/.

உங்கள் செல்லங்களின் இணையப் பொழுதுகள் இனி பயனுள்ளதாகக் கழியட்டும்!

குழந்தைகள் பாதுகாப்பு!

குட்டிக் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக வளர்த்தாலும், நாம் அஜாக்கிரதையாக இருக்கும் சிறு விஷயங்கள்கூட, அவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். அவற்றில் முக்கிய ஐந்து 'கூடாது'கள் இங்கே!

1. அயர்ன் பாக்ஸ் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும், குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்காதீர்கள். மேலும், அயர்ன் செய்யும்போது குழந்தைகள் நெருங்காதவாறு பார்த்துக்கொள்வதுடன், அயர்ன் பாக்ஸை ஸ்விட்ச் ஆஃப் செய்தாலும், அதிலிருக்கும் சூடு வெளியேறும்வரை குழந்தைகள் தொட்டுவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இதே போல சூடான குக்கரை அவசரத்தில் நீங்கள் இறக்கி வைக்க, அதை ஓடி வந்து தொடுவது, குட்டி சேர் என்று நினைத்து குழந்தைகள் உட்கார்ந்து அவதிக்குள்ளான சம்பவங்கள் எல்லாம் இங்கே நடந்ததுண்டு... கவனம்.

2. ஆணி, பொட்டு, மாத்திரை, பட்டன் போன்ற சின்னச் சின்னப் பொருட்களை, குழந்தைகள் எடுக்கும் இடத்தில் வைக்காதீர்கள். அதை எடுத்து வாயில் போட்டுக்கொண்டால், விபரீதம்தான். அதிக பட்டன், வேலைப்பாடுகள் நிறைந்த டிரெஸ்களை குழந்தைகளுக்கு அணிவிப்பதைத் தவிர்ப்பதும் நல்லது.

3. இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்லும் சமயத்தில், குழந்தை சைலன்ஸரில் கை வைத்தால், அதற்கு நீங்களே பொறுப்பு. எனவே, இத்தகைய கொடும் சூழல் ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன், வீடுகளில் மட்டுமல்லாமல், வெளியிடங்களுக்குச் செல்லும்போது எந்த பைக்கின் சைலன்ஸர் ஏரியாவையும் தொடக்கூடாது என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.

4. வாஷிங்மெஷின், இ்ண்டக்‌ஷன் அடுப்பு என எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்கும்போது சைல்ட் லாக் வசதியுடன் வாங்குங்கள். ஃப்ரிட்ஜை பூட்டி வையுங்கள். குழந்தைகள் ஃப்ரிட்ஜை திறந்து விளையாடும்போது மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது. மேலும் மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றைக் குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருப்பது நல்லது. ஸ்விட்ச் பாக்ஸ், ஏ.சி பாயின்ட் இருக்கும் இடங்களின் அருகே கட்டில், நாற்காலி என எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால், சுட்டி அதன் மேல் ஏறி சுவிட்சில் கை வைக்க வாய்ப்புள்ளது. முடிந்த வரை எலெக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்தியவுடன் பிளக்கை எடுத்துவிடவும்.

5. பாத்ரூமை மூடியே வைத்திருங்கள். பாத்ரூமில் வாளி, 'டப்'களில் தண்ணீர் பிடித்து வைக்காதீர்கள். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் விளையாடச் சென்று, அதற்குள் விழுந்துவிடலாம். பாத்ரூமை சுத்தப்படுத்த பயன்படுத்தும் ஆசிட்கள், துவைக்கும், குளிக்கும் சோப்பு, ஷாம்பு போன்றவற்றை கீழே வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

னைத்து எலெக்ட்ரானிக் பொருட்களையும் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து வயது வந்த குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதும் அவசியம்.

Wednesday, November 26, 2014

குடிநோய் - மூளையின் நினைவுகள் முழுமையாக அழிகின்றன.

திரைப்படக் காட்சிகளில் அடிக்கடி இந்த வசனத்தைக் கேட்டிருக்கலாம்; 'ஆமா, இப்ப நான் எங்கே இருக்கேன், என்ன நடந்துச்சு'.

குடிநோயாளிகளுக்கு இதெல்லாம் சகஜம். முந்தைய நாள் மிதமிஞ்சி மது அருந்தியபோது என்ன நடந்தது என்றே தெரியாமல் மறுநாள் விழிப்பார்கள். முந்தைய நாள் என்ன வேண்டுமென்றாலும் நடந்திருக்கலாம். மொத்தப் பணத்தையும் எடுத்து மதுக்கூடப் பணியாளருக்குத் தர்மம் செய்திருக்கலாம். உடன் இருந்தவருக்கு சொத்தையும் எழுதிக் கொடுத்திருக்கலாம். இல்லை, யாரையாவது கொலையே செய்திருக்கலாம். ஆனால், மூளையைத் துடைத்து விட்டதுபோல எதுவும் சுத்தமாக நினைவிருக்காது. மது மீட்பு மனநல மருத்துவம் இந்த நிலையை 'பிளாக் அவுட்' (Blackout) என்கிறது.

அடுத்தவரையும் அழிக்கும் ஆபத்து!

இதில் இரு வகை உண்டு. கம்ப்ளீட் பிளாக் அவுட் (Complete blackout). இது முழுமையாக நினைவுகள் அழிந்து போதல். இன்னொன்று ஃபிராக்மென்ட்டரி பிளாக் அவுட் (Fragmentary blackout). நேற்று இரவு நடந்தது கொஞ்சமாக நினைவில் ஒட்டிக்கொண்டிருக்கும். யோசித்தாலும் முழுக் காட்சிகளையும் நினைவுக்குக் கொண்டுவர முடியாது. உடன் இருந்தவர் எடுத்துச் சொன்னால், ஓரளவு நினைவுகளை மீட்க முடியும். ஆனால், முதல் வகையான 'முழுமையாக நினைவுகள் அழிந்துபோதல்'என்பது அபாயகரமான நிலை. இதற்குக் காரணம், அதிக அளவு மது அருந்துவது மட்டுமல்ல, முறையற்று மது அருந்துவது.

அது என்ன முறையற்று மது அருந்தல்? சிலர் பந்தயம் வைத்து மது அருந்துவார்கள். பத்து நிமிடங்களில் நான்கு 'பியர்'அருந்துவது. அரை மணி நேரத்தில் முழு பாட்டில் மதுவைக் காலி செய்வது. விதவிதமான போட்டிகள். சிலர் சீக்கிரம் போக வேண்டும் என்பதற்காக அவசரக் கோலத்தில் அதிக அளவு மது அருந்துவார்கள். மெதுவாக, ஆசுவாசமாக மது அருந்தும்போதுதான் அதன் போதை சீராக, படிப்படியாக ஏறும். முறையற்று, குறுகிய கால அவகாசத்தில் அதிக அளவு மது அருந்தும்போது அந்த போதையை உடனடியாக உள்வாங்க மூளை தடுமாறுகிறது. வழக்கமாகப் போதையில் ஆட்டம் போட்ட மூளை செல்கள் இப்போது மயக்கமாகிவிடுகின்றன. தற்காலிகமாக மூளையின் நினைவுகள் முழுமையாக அழிகின்றன. அந்த நிமிடத்திலிருந்து நடக்கும் எதுவுமே மூளையில் பதிவது இல்லை. மூளைக்குக் கட்டுப்படாத அந்த நபர் எதுவும் செய்வார். அவருக்கு எதுவுமே தெரியாது. இதனை 'டிஃபெக்டிவ் கான்ஷியஸ்னெஸ்' (Defective consciousness) என்போம். நேற்றைய தினம் படித்த, அதிக மது அருந்திவிட்டு 'மயக்கம் அடைந்த நிலை' என்பதைவிட இது அபாயம். ஏனெனில், அந்த நிலையில் மது அருந்தியவருக்கு மட்டுமே ஆபத்து. ஆனால், இது மற்றவர்களையும் பாதிக்கும். பெரும் பாலான வன்முறைகள், பாலியல் குற்றங்கள் இது போன்ற நேரத்தில் நடக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

உடல்ரீதியாக ஒரு விசித்திர குடிநோய் இருக் கிறது. சில குடிநோயாளிகள் எந்த நேரமும் தண்ணீர்த் தொட்டியிலோ அல்லது அண்டாவுக்குள் தண்ணீர் ஊற்றியோ உட்கார்ந்திருப்பார்கள். நாம் ஏற்கெனவே சில அத்தியாயங்களுக்கு முன்பு பார்த்த பாதங்களில் முள் போன்று குத்தும் 'பின்ஸ் அண்ட் நீடில்ஸ்' நோயின் முற்றிய நிலை இது. முழங்கால் முதல் பாதம் வரையும், விரல் நுனி தொடங்கி மணிக்கட்டு வரையும் உண்மையிலேயே நெருப்பைப் பற்ற வைத்ததுபோல எரியும். குளிர்ந்த நீரில் இருந்தால் மட்டுமே ஓரளவு எரிச்சல் தணியும். இதன் அடுத்த கட்டமாக இந்த நோய் தசைகளுக்கும் தாவுகிறது. தசையைக் கயிற்றால் கட்டி இழுத்ததுபோலத் தாங்க முடியாத வலி ஏற்படும். உடனடியாகச் சிசிக்சை எடுத்தால் குணப்படுத்திவிடலாம்.

'ஹனிமூனர்ஸ் டே பால்ஸி!'

இது மட்டுமல்ல... உலகில் எத்தனையோ நோய்கள் இருக்கின்றன. ஆனால், மதுவினால் வரும் மன, உடல் நோய்கள் மட்டும் விசித்திரமானவை. துன்பமும் சுவாரஸ்யமும் கலந்தவை. மது மீட்பு மன நல மருத்துவத்தில் சில நோய்களுக்குச் செல்லமான பெயர்கள் நிலைபெற்றுவிட்டன. அவற்றில் குறிப்பிடத் தக்க ஒன்று, 'சாட்டர்டே நைட் பால்ஸி' (Saturday night palsy) அல்லது 'ஹனிமூனர்ஸ் பால்ஸி'(Honeymooner's palsy). அதிக அளவு மது அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்பவர்கள், ஆழ்ந்த மயக்கத்தில் பெரும்பாலும் வலதுபுறத் தோளில் தலை சாய்த்துப் படுப்பார்கள். ஏன் இடதுபுறத் தோளில் தலை சாய்த்துப் படுக்க மாட்டார்களா என்று கேள்வி எழலாம். நமக்கு வலது கை பழக்கம்தான் பெரும்பான்மைப் பழக்கம் - எழுதுவது உட்பட.

சுமார் 8 முதல் 10 மணி நேரம் வரை தினசரி அல்லது அடிக்கடி இப்படிப் படுக்கும்போது ஒரு கட்டத்தில் வலது கை திடீரென்று தனியாக உணர்ச்சியற்று தொங்கிவிடும். மரத்தில் பாதி வெட்டப்பட்ட கிளை தொங்குவதுபோல. இயக்க முடியாது. பிடிமானம் இல்லாமல் ஆடும். இதற்குக் காரணம், மணிக்கட்டை இயக்கும் ரேடியல் நரம்பு (Radial nerve) தோள்பட்டை வழியாகத்தான் செல்கிறது. அந்த நரம்பை அரை மணி நேரம் தொடர்ந்து அழுத்திப் பிடித்தாலே மணிக்கட்டில் சிறு மாற்றங்களை உணர முடியும். அப்படி இருக்கும்போது மதுவின் போதையில் பல மணி நேரங்கள், பல நாட்கள் தலையை அழுத்தித் தூங்கினால் ரேடியல் நரம்பு முற்றிலும் செயலிழந்துவிடும் என்கிறார்கள் டாக்டர்கள்.

அதெல்லாம் சரி, இதற்கு ஏன் விசித்திரமான பெயர்கள்? சனிக்கிழமை இரவுகளில் அதிக அளவு மது அருந்துவது ஒரு பெரும் கலாச்சாரமாக இருக்கிறது. அதனால் 'சாட்டர்டே நைட் பால்ஸி'. பொதுவாக, புது மணத் தம்பதியைக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? ரொம்பவே அன்புடன் ஒட்டி, உரசிக்கொண்டு இருப்பார்கள். பயணத்திலும் சரி, படுக்கையிலும் சரி, பெரும்பாலும் மனைவி கணவரின் தோள்பட்டையில் தலைசாய்த்திருப்பார். அதனால் வந்தது, 'ஹனிமூனர்ஸ் பால்ஸி' என்கிற பெயர்.

- டி.எல். சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

Guruvaar Prarthna

Guruvaar Prarthna

 

Our Beloved Sadguru Sainath, please accept our humble prayers on this Holy day of Guruvaar. Please stay in our heart and guide us what to see, what to speak, how to deal and help us to remember you always. Give us enough strength to face any situation that world is offering me. On this holy day we remember your helping hand to Nana ji and praying for Your helping hands to us!

 

N G Chandorkar was climbing Harischandra hill on a summer day, and was seized with thirst. No water was available anywhere in the place.

 

N. G. Chandorkar: If Baba was here he would give me water.

 

At that time Baba was at Shirdi, 40 miles away. At Shirdi Mosque:

 

Baba: Nana is thirsty. The heat of summer is great. Should we not give him at least a palmful of water?

 

The devotees present there could not make out why Baba talked like that. But on the hill Nana saw a Bhil coming down.

 

NGC: Bhil, I am thirsty. Can't I get water to drink?

 

Bhil: Under the very rock you are sitting on, there is water.

 

So saying the Bhil left.

 

The rock was shifted and below it, was a palmful of drinking water. N. G. Chandorkar drank it.

 

Baba: Nana, you were thirsty. I gave you water. Did you drink it?

 

(- from Baba's Charters and Sayings, No. 350)

 

"Bolo Samartha Sadguru Sainath Maharajki Jai."

 

Thursday, November 20, 2014

குடிநோயாளி - மனிதத் தோலுக்குள் ஊடுருவும் பூச்சிகள்!

அந்தச் சிறுவனுக்கு வயது 16 இருக்கும். ஓரிடத்தில் நிற்க முடியாமல் எம்பிக் குதித்துக்கொண்டிருந்தான். கை கால்களை உதறினான். கை கால்களில் ஏதோ ஒட்டிக்கொண்டிருப்பதுபோல வழித்துவிட்டான். கொசுவை அடிப்பதுபோல உடலெங்கும் அடித்துக்கொண்டான். கன்னத்தில் நகத்தால் கீறி, பிய்த்துப்போட்டான். ரத்தம் வழிந்தது. வலி தாங்காமல் கதறி அழுதான். அருகில் இருந்த அவனது பெற்றோர் அவனை ஆற்ற முடியாமல் தவித்தனர்.

"ஒரு மாசமா இப்படித்தாங்க பண்றான். பாலிடெக்னிக் படிக்க அனுப்பினோம்ங்க. அங்க குடிக்கக் கத்துக்கிட்டான். எங்களால அவனைக் கட்டுப்படுத்த முடியலைங்க. இப்பெல்லாம் வீட்டுக்கே வாங்கிட்டு வந்துடறான். அது பிராந்தி மாதிரியும் தெரியலை. கருப்பா, கலங்கலா இருக்கு. அவன் ரூம்ல தேடிப் பார்த்தோம். அங்கங்க ஒளிச்சி வெச்சிருக்கிற பிராந்தி பாட்டிலுக்குள்ள எதையோ ஊறப்போட்டு வெச்சிருக்கான். எங்களுக்கு ஒண்ணுமே புரியலைங்க" என்றார்கள். எனக்குப் புரிந்தது. அது கஞ்சா. சமீப காலமாக குடிநோயாளிகளிடம் அதிகரித்துவரும் புதுவிதப் பழக்கம் இது.

குடிநோயாளிகள் தொடர்ந்து மது அருந்தும்போது அவர்களின் ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு கணிசமாகக் கூடிப்போயிருக்கும். ஒரு கட்டத்தில் வழக்கமான அளவில் மது அருந்தும்போது அவர்களுக்குப் போதை ஏறாது. சிலருக்குக் கூடுதலாக மது அருந்தினாலும் போதை ஏறாது. 'அடுத்து என்ன?' என்று தேடுவார்கள். பெரும்பாலும் அவர்களுக்குக் கிடைப்பது கஞ்சா அல்லது சில வகையான மாத்திரைகள்.

'மம்மி' வண்டுகள்

டாக்டரிடமிருந்து அழைப்பு வந்ததும் ஓடோடிச் சென்றான் அந்தச் சிறுவன். மணிக்கட்டிலிருந்து ஏதோ ஒன்றைப் பிடித்து, "இந்தப் பூச்சிதான் டாக்டர், உடம்பெல்லாம் ஊருது. தோலுக்குள்ள குடையுது" என்று டேபிள் மீது வைத்தான். அங்கு ஒன்றும் இல்லை. ஆனால், மறுபடியும் மறுபடியும் பிடித்துப் பிடித்து வைத்தான். டாக்டர் ஊசி போட்ட பின்புதான் ஆசுவாசம் அடைந்தான்.

திண்டுக்கல் அருகே வட மதுரையில் மது மீட்புச் சிகிச்சை மையம் நடத்திவருகிறார்கள் மருத்துவத் தம்பதியர் பாலகுரு - ஷர்மிளா. அங்குதான் இந்தக் காட்சியைப் பார்க்க நேர்ந்தது. "ஹாலிவுட் படமான 'மம்மி'யில் ஒரு காட்சியைப் பார்த்திருப்பீர்கள். வண்டுகள் மனிதனின் தோலில் ஊடுருவிச் சென்று கொன்றுவிடும். பார்க்கப் படுபயங்கரமாக இருக்கும். அப்படியான ஒரு வியாதிதான் இது. உண்மையில் பூச்சிகள் எதுவும் தோலுக்குள் இருக்காது. ஆனால், அப்படியான மனப்பிரமை ஏற்படும். சமீப காலமாக திண்டுக்கல்லில் இதுபோன்ற கேஸ்கள் அதிகம் வருகின்றன. அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவு வருவதுதான் அதிர்ச்சி. மாணவர்கள் மதுவுடன் கஞ்சாவையும் கலந்து குடிக்கப் பழகிவிட்டார்கள். அதன் விளைவுகளுள் ஒன்றுதான் இந்தச் சிறுவனுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்தச் சிறுவனுக்குத் தோலுக்கு அடியில் ஏதோ ஊர்வதுபோல இருக்கும். நேரமாக நேரமாக இந்த நமைச்சல் அதிகரிக்கும். தோலுக்குள் ஒரு பூச்சி துளைத்துக்கொண்டு ஊடுருவினால் எப்படி இருக்குமோ அப்படி வலிக்கும். பாதிப்பைப் பொறுத்துச் சிலருக்கு உடலின் சில பாகங்களில் மட்டும் இது ஏற்படும். சிலருக்கு உடல் முழுவதும் ஏற்படும். கண்ணுக்கு எதிரே ஏதோ உருவம் தெரியும் விஷுவல் ஹாலுசினேஷன் போல, காதுக்குள் குரல் கேட்கும் ஆடிட்டோரி ஹாலுசினேஷன் போல. இந்தப் பையனுக்கு இருப்பது டேக்டைல் ஹாலுசினேஷன் (Tactile hallucination). இதனை நாங்கள் 'பக்ஸ் அண்டர் ஸ்கின்'(Bugs under skin) என்போம்.

இந்த நோயின் முற்றிய நிலையில் எப்போதும் கை, கால்களிலிருந்து எதையோ பிய்த்துப்போட்டபடி இருப்பார்கள். சிலர் உடலில் இருக்கும் ரோமங்களை எல்லாம் பிய்த்துப்போட்டிருப்பார்கள். ரத்தம் வருவதுகூட அவர்களுக்குத் தெரியாது. உடலெங்கும் புண்கள் காணப்படும். அவர்கள் அப்படிப் பிய்த்துப்போடும்போது அவர்களின் கண்களுக்கு மட்டும் உண்மையிலேயே பூச்சி தெரிவது போலிருக்கும். அதனை நசுக்கிக் கொல்லவும் செய்வார்கள். கஞ்சாவுக்கே உரிய பிரத்யேக வியாதி இது. அதிலும் மதுவுடன் கஞ்சாவைக் கலந்து குடிக்கும்போது குறுகிய காலத்திலேயே இந்த நோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். மூளை, நரம்பு மண்டலத்தை மிகவும் சேதமாக்கிவிடும் இது" என்றார் பாலகுரு.

நான் கடவுள்!

திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் மதுவுக்கு இணையாகத் தாராளமாகக் கிடைக்கிறது கஞ்சா. முள்ளிப்பாடி, மூணாண்டிப்பட்டி, வத்தலக்குண்டு, வடமதுரை ஆகிய இடங்களில் கணிசமான அளவு கல்லூரி மாணவர்களுக்கு இந்தப் பழக்கம் ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது. டாக்டர் ஷர்மிளா சொல்லும் விஷயங்கள் அதிர்ச்சிகரமானவை. "ஒட்டன்சத்திரம் அருகே விழுப்பாச்சி அருவியில் ஒரு கோயில் இருக்கிறது. காட்டுப் பகுதியான அங்கு நிறைய சாமியார்கள் உலவுகின்றனர். அவர்களிடையே கஞ்சா சர்வ சாதாரணமாகப் புழங்குகிறது. திண்டுக்கல்லில் ஒருசாரார் ஆன்மிகத்தையும் போதையையும் போட்டுக் குழப்பிக்கொண்டு இதற்கு அடிமையாகி விடுகின்றனர். அதுபோல நிறைய கேஸ்கள் எங்களிடம் வருகின்றன.

ஒரு கல்லூரி மாணவர் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு ஒரு சாமியாரிடம் சென்றிருக்கிறார். தன்னை மறந்தால்தான் கடவுளைக் காண முடியும் என்று மாணவரை சாமியார் கஞ்சாவுக்குப் பழக்கியிருக்கிறார். கூடவே, மதுவும். வீட்டை விட்டுச் சென்ற அந்த மாணவரை இரண்டு மாதங்கள் கழித்துத் தேடிக் கண்டுபிடித்துள்ளனர். அவரை இங்கு அழைத்து வந்தபோது 'நானே கடவுள்! எனக்கே சிகிச்சை அளிக்கிறீர்களா? அற்ப மானிடப் பிறவிகளா...' என்று வசனம் பேச ஆரம்பித்துவிட்டார். சுமார் ஒரு மாதம் கடவுளை வைத்திருந்து சிகிச்சை அளித்து மனிதனாக அனுப்பி வைத்தோம்" என்று சிரித்தார்.

- டி.எல். சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

Wednesday, November 19, 2014

Guruvaar Prarthna

Guruvaar Prarthna

 

Beloved Sadguru Sainath, please accept our humble prayers on this Holy day of Guruvaar. Our miseries are going on increasing. When You help us a step forward, our karma pulling down two steps behind. You said that nothing will harm us who turn our attention towards You, but Maya will lash or whip us who forget You. Baba, we never ever forget you, you are our breath, You are our life and You are everything for us. We continue to pray and remember you all the time. You are our Father and  we beg You to keep your children safe and secure. On this holy day, we remember Your advice narrated by You.

 

134. There was a great Saint at Akkalkot.  Maharaj used to be absorbed in meditation. A devotee, who was grievously ill, was undergoing unbearable suffering.

 

135. He had served for a long time hoping to be rid of the disease. He was unable to bear the pain anymore. He became very dejected.

 

136. He determined to commit suicide, and choosing a time in the night, going to a well he threw himself in it.

 

137. Maharaj came there at that time and pulled him out with his own hands. "Whatever is destined has to be fully borne ", he advised him.

 

138. " All physical tribulations, diseases, even leprosy and all other problems, which we have because of our actions in the previous birth, unless they are fully borne, we cannot be free from them, even by committing suicide.

 

139. If this suffering remains unfinished, you have to be born again. Therefore, try to bear up with this trouble a little longer. Do not kill yourself ".

 

140. Reading this story, which was apt for the occasion, Ambdekar was surprised and felt ashamed on the spot, understanding Baba's all-pervasiveness.

 

141. Ambdekar realized that the fate due to previous birth must be endured. He was made to understand this at the right time and it was good that he had not attempted the reckless deed.

 

142. This illustrative story was like a voice from outer space. It strengthened his faith at Sai's feet. Sai's deeds are unimaginable.

 

143. 'Sai's warning guided through Sagun's words. If there had been some delay in getting this unexpected book, my life would have been ruined.

 

144. I would have lost my own life, and would have caused utter destruction of the family. My wife would have had to undergo a lot of suffering and I would not have achieved my own good nor attained my spiritual goal.

 

145. Baba inspired Sagun and made the book an instrument to divert my mind from committing suicide'.

 

146. If such an incident had not occurred, the poor man would have unnecessarily lost his life. But where there is a saviour like Sai, who would be able to kill?

 

147. This devotee's father had faith in Akkalkot Swami. Baba made him understand that he should follow in his father's footsteps.

 

148. So be it. Later everything was well. Those days passed. He studied astrology, putting in a lot of efforts, and that was rewarding.

 

149. He got Sai's grace and blessings. Fortune smiled upon him, later on. He became well-versed in astrology and his earlier adverse circumstances ended.

 

150. His love for the Guru increased, and he achieved happiness and health. He had ease and happiness in family life. He became very happy.

 

(from Shri Sai Samartha Satchrita, Chapter 26, Ovi 134 – 150)

 

"Bolo Samartha Sadguru Sainath Maharajki Jai."

 

Monday, November 17, 2014

The Nuri Granth - The Cups of Pison

The Cups of Poison

 

In the abode of worldly pleasures,

There be innumerable evil effects:

Full of deceitful actions is the world.

And full of false outward show it is;

Create within you, longing for the Lord and go and sit,

At the feet of the Beloved, says Nuri!

 

These sorrows and sufferings,

Are but the gifts of the grace of the Beloved!

These ferocious fires,

Are but the currents emanating from the beloved!

 

O dear one! See the cups of poison are here,

Go and drink them, at the feet of the Beloved, says Nuri!

 

-Nuri Granth page 67.

A Prayer for Strength

​O Lord,

In this time of need, strengthen me.
 
You are my strength and my shield; You are my refuge and strength, a very present help in trouble.
 
I know, Father, that Your eyes go to and fro throughout the earth to strengthen those whose hearts long for You.
 
The body grows weary, but my hope is in you to renew my strength.

I do not fear, for you are with me.

 I am not dismayed or overwhelmed, for you are my God.
 
I know You will strengthen me and help me; that You will uphold me with Your righteous hand.
 
Even as the shadows of illness cover me, I feel the comfort of Your strength, Or Lord.
 
Amen.

Significance of the Hindu Prayer of Peace

​While prayer is an integral part of all religious traditions, the kinds of prayer that are practiced differ depending on your religion. Seen as a direct line of communication with God, prayer is largely used as a way to relay and release religious devotees' desires, fears and thanks for themselves and others to a higher power. For some religions, like Hinduism, prayers are recited as chants or mantras, each with its own specific purpose -- which can be for an individual or for the good of all. 

Forms of Prayer

Hinduism recognizes innumerable aspects of divinity as the personification of thousands of gods. Most Hindus believe that all gods are parts of one supreme divinity and consequently either worship all as one or choose one personification of divinity that resonates with their lives. Such a chosen deity then becomes the focus of prayer. Hindu prayers can be either the repetition of formulated mantras and chants or simple prayers created by the religious devotee.

Topics for Prayer

Like many other religions, much of Hindu prayer is directed toward giving thanks or asking for aid. Because each deity has an explicit focus of his or her attention, a Hindu may pray to a particular god to request specific help. For example, the Hindu god Ganesha is seen as the remover of obstacles. Therefore if devotees wishes for clarity of understanding or a clear path to achieving certain desires, they will pray to Ganesha to remove impediments. However, in the Hindu tradition prayers can also be offered on the behalf of all people, rather than just for the benefit of one devotee.

Why Pray for Peace

As a result of the Hindu belief in karma (that each individual soul reaps the consequences of all its actions) and the power of compassion, many Hindu mantras and chants are said for the benefit of all people. Such universal prayers can request anything from freedom from sickness and suffering to wisdom and peace for all. A core concept in Hinduism is that the goal of life is enlightenment, which comes with complete release of the ego and control over the wandering mind. Enlightenment is viewed as the perfectly clear mind's union with God and as such is the attainment of the ultimate state of moksha (freedom) or peace. Prayers for peace in Hinduism are, therefore, conceived out of the desire to free all people from suffering and unite them with God.

Specific Peace Prayers

Hindu mantras, chants and prayers aimed at creating peace internally and throughout the world can be found throughout Hindu scripture, and highly regarded Hindu practitioners, such as Mahatma Gandhi, have also created such prayers. The simplest way to pray for peace is to repeat the Sanskrit word for peace, "shanti," three times. The number of repetitions is symbolic: the first is for the removal of disturbances that come from God, such as natural disasters; the second for disturbances that come from other people and things in the world; and the third for disturbances originating from the devotee's own mind.
There are also many peace mantras that come from a variety of scriptural sources. The most frequently used peace mantras come from the Upanishads of the Veda, which is the most sacred of Hindu scriptures. One mantra, sometimes referred to as the "Asatoma" mantra, requests that devotees be led from the real to the unreal, from darkness to light, and from the fear of death to the knowledge of immortality. Other common mantras are the " Purnam-idam" mantra and the "Lokah" prayer, which does not have an origin in the Veda. The "Lokah" prayer requests happiness, health and peace everywhere.

​​

Sunday, November 16, 2014

Scientific reason behind your Facebook addiction

The scientific reason behind your Facebook addiction
There are about 7 billion people on Earth. Over 864 million of them check Facebook every day. That's an awful lot of daily habits, and it's part of the reason Facebook is worth some $200 billion.

So why is the social network so addictive?

Nir Eyal, a multiple-time entrepreneur and Stanford Graduate School of Business lecturer, has written a book that answers that high-stakes question.

As its title promises, "Hooked: How to Build Habit-Forming Products" reveals the psychological processes that occur when our favourite products become integrated into our daily routines.

We talked with Eyal about why habits are so crucial to doing effective business, why branding is unnecessary and how Facebook became a part of our everyday lives. Here's an edited transcript of our interview.

At the start of the book you write that "companies find that their economic value is a function of the strength of the habits they create." Why do you make this claim?
The cold truth is that the best products don't always win. Many times it's the products that have the ability to keep users coming back and using them without conscious thought and using them out of habit are the ones that keep us coming back.

Let's say Google. Google is one of these products that I think is incredibly habit-forming, and it's the kind of product that shows this characteristic of something that we use with little or no conscious thought.

You don't even consider whether there's a better search engine out there for people who are habituated to Google, and the evidence is in head-to-head comparisons, when you strip out the branding, people can't tell the difference between Bing and Google. It's a 50/50 split. And yet Google dominates the market with something around 87% of the market share. So these habits because a huge competitive advantage, and one of those advantages is that they keep competition out.

What's the difference between habit-forming products and something like brand loyalty?
Don Draper-style advertising is really only available to the biggest brands out there. It's only commodity goods that use those kind of messages because they have to differentiate goods that are really hard to differentiate between — Shell gasoline versus Exxon, Coke versus Pepsi, Sprint versus T-Mobile, it's all the same thing! The only way they can really differentiate is through brand.

But you don't see many commercials for the greatest tech companies in the last five to 10 years because they're creating these associations not through brand impressions, but through experiences — and experiences form habits.

Let's use a case study. More than 864 million people use Facebook every day, and a full 30% of Americans get all of their news on Facebook. How has Facebook become a habit for so many people?
I think the main hook is pretty simple. What Facebook wants to create an association with is every time you're bored, every time you have a few minutes. We know that, psychologically speaking, boredom is painful. Whenever you're feeling bored, whenever you have a few extra minutes, this is a salve for that itch.
The internal trigger is boredom, and the external trigger are these notifications — every time someone posts something and you get a little jewel icon on your phone that says check Facebook.

Eventually you don't need those, because we just start checking those out of habit, but at the beginning we just get triggers from those. The action is as simple as opening the app. I can alleviate my boredom, I can scratch that itch, just by scrolling through my newsfeed.

What photos do people post? What are the comments going to say? How many likes do people get? It's a slot machine with lots of variability of what I might find.

How does the product keep you coming back?
Through investment. Investment comes every time I like something or add a friend. And by loading the next trigger.

I'm loading the next trigger because when I send someone a message on Facebook, or I like something, or I comment on something, guess what Facebook gets to do? They get to send me an external trigger, bringing me back, saying so and so replied to something that you were involved with.

You did it! You prompted that message; it's not Facebook spamming you. You posted a photo and someone liked it, come see it. Loading the next trigger is when they send you this external notification that you prompted and now you're passing through the hook once again, continuing through the same basic cycle. Forever and ever.

 
 

How to find out everything Google knows about you

How to find out everything Google knows about you
 
 
When you use Google, you are making a deal. You get to use Gmail and search and YouTube and Maps for free and in exchange, you agree to share information about yourself. Google gets to sell that information to advertisers.

The more Google knows about you, the more it can match you to an advertiser who thinks you are an ideal customer. Advertisers are willing to pay more for ads served to ideal potential customers. For instance, airlines want to target people who love to travel. Children's clothing makers want to target parents.

Google uses a lot of methods to learn about you. There's the stuff you tell Google outright when you sign up for its services, like Gmail and Google Maps or via an Android phone, like your name, phone number, location, and so on. Google also deduces information about you from watching your internet searches (what do you search for, click on etc) and from the stuff you do with Google's products.

By visiting a site called "Ads Settings" you can see what Google knows about you.

It's not that easy to find Ads Settings. First, click on the link below or type it into your browser: https://www.google.com/settings/

Then click on "Account history."

Scroll down to Ads and click on "Edit settings."

This page shows you what Google thinks it knows about you including your age bracket, the languages you speak and ...

... your interests.

From that page, you can edit that information or "opt out" of allowing Google to share your information with advertisers.

Thursday, November 13, 2014

டயாபடீஸ் - வரும்முன் தடுக்க... வந்த பின் காக்க....

அய்யய்யோ அவருக்கு சர்க்கரையாம்'' என்று நாலு தெரு தாண்டி இருந்தவரைப் பார்த்து அதிர்ந்த நாட்கள் கடந்துவிட்டன. வீட்டுக்கு வந்த விருந்தினர்களிடம், காப்பியா? டீயா?' என்ற கேள்விக்கு அடுத்துக் கேட்கப்படுவது, 'சர்க்கரை வேணுமா?, வேண்டாமா?' என்பதுதான். "பொண்ணுக்குச் சர்க்கரை இல்லியாம்'' என்பது சீக்கிரமே, திருமணத்துக்கான சிறப்புத் தகுதிகளில் ஒன்றாகிவிடும்  அளவிற்கு சர்க்கரை நோய் இன்று பரவலாகிவிட்டது. நோயைப் பற்றி பயப்படுவதை நிறுத்தி, அதை எதிர்கொண்டு வெளிவருவதை யோசிக்கும்போதே, நோயில் இருந்து பாதி வெளிவந்ததாக அர்த்தம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
சர்க்கரை நோய் ஏன் வருகிறது? வராமல் தடுப்பது எப்படி? சர்க்கரை நோய் வந்துவிட்டால் எப்படி எதிர்கொள்வது? சர்க்கரை நோயை எப்படிக் கட்டுப்படுத்துவது? சர்க்கரை நோயால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படாமல் காப்பாற்றுவது எப்படி? சர்க்கரை நோயாளிகள் உண்ண வேண்டிய உணவுப் பொருட்கள் என்னென்ன? 
'நாம் சாப்பிட்ட உணவானது, உடலில் உள்ள திசுக்களுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. தவிர, கல்லீரலும் குளுக்கோஸை உற்பத்தி் செய்கிறது. ரத்தத்தில் கலக்கப்பட்ட குளுக்கோஸை திசுக்கள் தானாகக் கிரகிக்க முடியாது. இதற்கு ஒரு சாவி போல செயல்படுவதுதான் இன்சுலின். கணையத்தில் இன்சுலின் சுரக்கிறது. ஒருவருக்குப் போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ, இன்சுலின் செயல்திறன் போதுமானதாக இல்லை என்றாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடுகிறது. இதையே சர்க்கரை நோய் என்கிறோம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது நரம்பு மண்டலம், கண், சிறுநீரகம், ரத்தக் குழாய் என உடலின் அனைத்து உறுப்புக்களையும் பாதிக்கிறது.
சர்க்கரை நோய் டைப் 1 மற்றும் டைப் 2  என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. தவிர, ப்ரீ டயாபடீஸ், கர்ப்பகால சர்க்கரை நோய் போன்ற  வகைகளும் உண்டு.
டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் முற்றிலுமாக சுரப்பது இல்லை. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடியது. இவர்கள் ஆயுள் முழுக்க இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும்.
டைப் 2 சர்க்கரை நோய் என்பது மரபியல் மற்றும்  வாழ்க்கைமுறை மாறுபாட்டால் ஏற்படக்கூடியது. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும். ஆனால் அதன் அளவு போதுமானதாக இருக்காது. சிலருக்கு இன்சுலின் தரம் போதுமானதாக இருக்காது. இதை இன்சுலின் ரெசிஸ்டென்ஸ்' என்போம்.
டைப் 2 சர்க்கரை நோய் யாருக்கெல்லாம் வரலாம்?
  45 வயதைக் கடந்தவர்கள்
  உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் மற்றும் உடல் பருமனானவர்கள்
  கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் வந்தவர்கள்
  குடும்பத்தில் பெற்றோருக்குச் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள்
  ப்ரீ டயாபடீஸ் உள்ளவர்கள்
  உடல் உழைப்பு குறைந்தவர்கள்
  உடற்பயிற்சி செய்யாதவர்கள்
  கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள்
  உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்
  உணவுக் கட்டுப்பாடு இல்லாதவர்கள்
முதல்நிலை தடுப்பு முறை
சர்க்கரை நோய் வராமல் தடுப்பதே முதல்நிலை தடுப்பு முறை.  இதைப் பின்பற்றிச் சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி?
உயரத்திற்கேற்ற சரியான எடையைப் பராமரிக்க வேண்டும்.
உங்கள் எடை எத்தனை கிலோ எனக் குறிக்கவும், உங்கள் உயரத்தை மீட்டரில் அளந்து அதை இரண்டாகப் பெருக்கவும், இப்போது எடையை உயரத்தால் வகுத்தால் வருவதே... பி.எம்.ஐ (Body Mass Index)
பொதுவாக பி.எம்.ஐ 25க்குள் இருந்தால் அது சராசரி. ஆனால், இந்தியர்களுக்கு பி.எம்.ஐ அளவு 18.5க்கு கீழ் இருந்தால் சராசரி எடையைவிடக் குறைவு, 18.5 முதல் 22.9 வரை இருந்தால் சராசரி, 23 முதல் 29.9 வரை இருந்தால் உடல் எடை அதிகம், 30க்கு மேல் இருந்தால் பருமனான உடல்.
உங்கள் பி.எம்.ஐ அளவு எப்போதும் 18.5 முதல் 22.9க்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடையும் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை மட்டுமல்ல, இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான வாய்ப்பையும் குறைக்கும்.
இடுப்புச் சுற்றளவு ஆண்களுக்கு 90 செ.மீக்கு மிகாமலும், பெண்களுக்கு 80 செ.மீக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
உடல் உழைப்பு மிகக் குறைந்து ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும் வாழ்க்கைமுறை டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடும். டி.வி, கம்ப்
யூட்டருக்கு முன்னால் மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்காமல், துடிப்பான வாழ்க்கைமுறைக்கு மாறுவதன் மூலம் நோயைத் தடுக்க முடியும்.
தசைகளுக்குக் கடினமான வேலை கொடுங்கள். அது இன்சுலின் செயல்திறனை அதிகப்படுத்தும், குளுக்கோஸ் கிரகிக்கும் திறனை மேம்படுத்தும்.
தினசரி குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வது, டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை 30 சதவிகிதம் அளவுக்குக் குறைக்கிறது.
மிகச் சரியான டயட்
சர்க்கரை நோயைத் தடுக்கும் டயட் என்பது, ஆரோக்கியமான உணவை உட்கொள்வதுதான். சரியான நேரத்தில், சரியான உணவை சாப்பிடுவது சர்க்கரை நோயைத் தவிர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
தகுந்த அளவில், வெவ்வேறு ஊட்டச்சத்துமிக்க உணவுகளைச் சரிவிகிதத்தில்் எடுத்துக்கொள்ளுங்கள். இது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்வுக்கு அடிப்படை.
சாப்பிடும் உணவு ஊட்டச்சத்து மிகுந்ததாகவும்், கொழுப்பு குறைவானதாகவும், கலோரி நடுத்தர அளவி்ல் உள்ளதாகவும் இருக்க வேண்டும்.
நாம் சாப்பிடும் அரிசி போன்ற கார்போஹைட்ரேட் உணவுகள் மீது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
சர்க்கரை நோய் வராமல் தடுக்க உணவில் செய்ய வேண்டிய மாறுதல்கள்:
முழுதானிய உணவுக்கே முன்னுரிமை!
முழுதானிய உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.முழுதானியத்தில் உள்ள தவிடு மற்றும் நார்ச்சத்தானது, செரிமான என்சைம்களை மட்டுப்படுத்தி, உணவு உடனடியாக செரிமானமாவதைத் தாமதப்படுத்துவதன் மூலம், சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகத்தைக் குறைக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை  சிறிது சிறிதாகவே சேகரமாவதால் இன்சுலினின் வேலைப்பளு குறைந்து சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுகிறது.
முழுதானியங்களில்  தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் இதரச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கிறது.
மைதாவில் செய்யப்பட்ட பிரட், வெள்ளை அரிசி சாதம், மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு உள்ளிட்டவை மிக விரைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்பவை. இதனால் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
சத்தான உணவை எடுத்துக்கொள்ளுங்கள், அதை காலை உணவில் இருந்தே தொடங்குங்கள். மூன்று வேளை உணவுக்குப் பதில் ஆறு வேளையாகப் பிரித்து உண்ணுங்கள்.
கூல்டிரிங்க்ஸுக்கு நோ
சர்க்கரை அளவு அதிகம் உள்ள குளிர்பானங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குளிர்பானங்கள், பழச்சாறு, சோடா, கோலா வகைகள் போன்றவை உடல் எடைகூடுவதற்குக் காரணமாக இருக்கின்றன. இதனால் இன்சுலின் செயல்திறன் பாதிக்கப்பட்டு, டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
குளிர்பானங்களுக்குப் பதிலாக, தண்ணீர், க்ரீன் டீ போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
கொழுப்பு நல்லதா?
நாம் உண்ணும் உணவில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என இரண்டு வகைக் கொழுப்புகளும் உள்ளன. நல்ல கொழுப்புள்ள உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். வெஜிடபிள் எண்ணெய், கொட்டை வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் நல்ல கொழுப்பான பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது.
பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட, வறுக்கப்பட்ட உணவுகளில் கெட்ட கொழுப்பான டிரான்ஸ்ஃபேட் உள்ளது. இவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
உணவு பாக்கெட்களில் 'ஹைட்ரஜனேட்டட்'  (Hydrogenated) என்று இருந்தாலே அதைத் தவிர்த்துவிட வேண்டும். சிவப்பு இறைச்சியைத் தவிர்த்து விடுதல் நல்லது. மாடு, பன்றி போன்ற கொழுப்புச் சத்துள்ள இறைச்சிகளைச் சாப்பிடுவது சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
கொழுப்பு குறைந்த பால் பொருட்கள், கோழி (தோல் நீக்கப்பட்டது), மீன் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். சிகரெட் பிடிப்பவர்களுக்கும், மது அருந்துபவர்களுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இரண்டாம் நிலை தடுப்பு முறை
சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதைக் கட்டுக்குள் வைத்து மகிழ்ச்சியான வாழ்வைத் தொடருவதற்கான வழிமுறைகளை, இரண்டாம் நிலை தடுப்பு முறைகள் என்கிறோம்.
சர்க்கரை நோய் வந்தாலும் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடர,  சர்க்கரை நோயாளிகள் ஒவ்வொருவரும் ஏ, பி, சியைப் பற்றித் தெரிந்திருப்பது அவசியம்.
ஏ என்பது ஏ1சி பரிசோதனையையும், பி என்பது ரத்த அழுத்தத்தையும், சி என்பது கொலஸ்ட்ரால் அளவுக் கட்டுப்பாட்டையும் குறிக்கும்.
ஏன் ஏ, பி, சி முக்கியம்?
சர்க்கரை நோய் இல்லாதவர்களைக் காட்டிலும் சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு இதய நோய்், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே இவர்கள் தங்கள் ஏ, பி, சி அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகமிக முக்கியம்.
ஏ1சி பரிசோதனை(ஏ)
இது கடந்த மூன்று மாதத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைக் கண்டறிய உதவுகிறது. இந்த பரிசோதனையில் 7க்கு கீழ் இருந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது என்று அர்த்தம். எனவே சர்க்கரை நோயாளிகள் 7க்கு கீழ் தங்கள் பரிசோதனை முடிவுகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ரத்த அழுத்தம்(பி)
ரத்த அழுத்தம் 140/90 எம்.எம்.எச்.ஜி என்ற அளவில் இருக்க வேண்டும்.
கொலஸ்டிரால்(சி)
 மொத்தக் கொழுப்பு 180 எம்.ஜி.எஸ்க்கு மிகாமல் இருக்க வேண்டும். எச்.டி.எல் (நல்ல கொழுப்பு) ஆண்களுக்கு 45க்கு மேலும், பெண்களுக்கு 50க்கு மேலும் இருக்க வேண்டும்
 எல்.டி.எல் (கெட்ட கொழுப்பு) இருவருக்குமே 100க்கு குறைவாக இருக்க வேண்டும்.
 சர்க்கரை நோய் வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதுடன், மற்ற உடல் உறுப்புகளையும் பாதி்க்கிறது.
சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகள்
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அது சிறுநீரகத்தைப் பாதித்து, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வழிவகுக்கும். சர்க்கரை நோயால் சிறுநீரகம்  பாதிக்கப்படுவதுதான் 'டயாபடிக் நெப்ரோபதி'.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, சிறுநீரகமானது கூடுதலாக வேலை செய்யவேண்டிய  நிலை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் கூடுதல் பளு காரணமாக, சிறுநீரகம் தன் செயல்பாட்டையே நிறுத்திவிடும். நோய்க்கான அறிகுறிகள் வெளியே தெரிவதற்கு முன்பே இந்தப் பிரச்னை தொடங்கிவிடும். ஆரம்பக் கட்டத்தில் சிறுநீருடன் புரதம் வெளியேறும். இதை, சிறுநீர் பரிசோதனை செய்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம். அவ்வப்போது ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்பாட்டைக் கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே சரிப்படுத்தலாம். சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்வது, ஆரோக்கிய உணவுப் பழக்கவழக்கம் ஆகியவை மட்டுமே சர்க்கரை நோயால் சிறுநீரகம் பாதிக்கப்படாமல் இருக்கச்செய்யும் வழிகள்.
கண்ணில் ஏற்படும் பாதிப்புகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு 'கண் புரை நோய், குளுக்கோமா மற்றும் விழித்திரைப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோயாளிகளிடம் மிகச் சாதாரணமாகக் காணக்கூடியது டயாபடிக் ரெட்டினோபதி. பார்வை இழப்புக்கான முன்னணிக்  காரணங்களில் இதுவும் ஒன்று. விழித்திரையில் உள்ள ரத்த நாளங்களில் மாற்றம் ஏற்படுத்தும் நோய் இது. கண்ணுக்குள் ரத்த நாளங்கள் வீங்கி, திரவம் கசியத் தொடங்கும். காலப்போக்கில் விழித்திரையில் ரத்த ஓட்டத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.
ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகள் மற்றும் சிரைகள் பலவீனமடைந்து பழுதடையும். ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. கவனிக்காமல் விட்டால், பார்வை பறிபோய்விடும். பார்வை ஆரம்பத்தில் சிறிது மங்கலாகத் தெரியும், திடீரென பார்வை போதல், ஒளியைச் சுற்றி வட்டங்கள் தெரிதல், கண் கூசுதல் போன்றவையும் ஏற்படலாம்.
'மாக்யுலா' என்பது கண்ணில் துல்லியமான, நேரடியான பார்வை ஏற்படும் பகுதி. இந்தப் பகுதியில் கசியும் திரவம், மாக்யுலாவை வீங்கச் செய்யும். இதனால் பார்வை மங்கலாகும். இந்த நிலையை 'மாக்யுலர் எடிமா' என்கிறோம். டயாபடிக் ரெட்டினோபதி உள்ளவர்களுக்கு, எந்தக் கட்டத்திலும் இந்த நிலை ஏற்படலாம்.
இதைத் தவிர்க்க நோயாளிகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதும், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் பார்வைக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
ஈறுகளில் ஏற்படும் பாதிப்பு
சர்க்கரை நோயால் சிறுநீரகம், கண்களைப் போலவே அதிகம் பாதிக்கப்படுவது ஈறுகள்தான். சர்க்கரை நோய் அதிகரிக்கும்போது பல் ஈறுகள் பலவீனம் அடைவதால் பல் ஆடுதல் பிரச்னை ஏற்படும். பல் ஈறுகளில் பாக்கெட் போன்ற அமைப்பு உள்ளது. இது, பல்லுக்கும் ஈறுக்கும் இடையில் 1.2 மி.மீ. அளவுக்கு ஆழமாக இருக்கும். இங்குதான் பற்களைப் பாதுகாக்கும் திரவம் சுரக்கிறது.
பற்களில் உணவுத் துகள்கள், காரை படியும்போது ஈறு பாதிக்கப்படும். பல்லையும் எலும்பையும் இணைக்கும் தொடர்பு துண்டிக்கப்படும். இந்த ஆழமானது 3 முதல் 4. மி.மீ. அளவுக்கு ஆழமாவதை 'கம் பாக்கெட்' என்று சொல்வோம். இந்த பாக்கெட்டில் நோய்த் தொற்று ஏற்படும்போது அது சர்க்கரை நோயின் பாதிப்பையும் அதிகரிக்கிறது. எனவே, பல்லில் நோய்த் தொற்று வராமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.
தினந்தோறும் இரண்டுமுறை பல் துலக்க வேண்டும். பற்களுக்கு இடையில் உள்ள அழுக்கை அகற்ற ஃபிளாசிங் செய்ய வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
பாதங்களில் ஏற்படும் பாதிப்புகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு டயாபடிக் நியோரோபதி காரணமாக, அழுத்தத்தைத் தாங்கக்கூடிய கால் பகுதியில் அடிக்கடி புண் ஏற்படும்.  ஆறில் ஒரு  சர்க்கரை நோயாளிக்குப் பாதப்புண் ஏற்படுகிறது. இது காலையே துண்டிக்கும் அளவுக்கு விபரீதமாகிவிடச்  சாத்தியமுள்ள  பிரச்னை.
உலக அளவில் கால் துண்டிப்பு செய்யப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் பாதப்புண்ணால் பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகளே. கால்களில் வெட்டுக்காயங்கள், வெடிப்புகள், கொப்புளங்கள், சிவந்துபோய் இருத்தல், வீக்கம், கால்விரல் நகங்களில் பிரச்னை ஆகியவற்றை தினசரி கவனிக்க வேண்டும். கண்ணாடி உதவியுடனோ அல்லது அடுத்தவர் உதவியுடனோ அடிப்பாதங்களைப் பார்க்க வேண்டும். ஏதேனும் வித்தியாசமாக இருந்தால், உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.
அன்றாடம் கால்களை கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மிதமான வெந்நீரைப் பயன்படுத்த வேண்டும். கால்களை மென்மையான துணி அல்லது பஞ்சு வைத்து, அழுத்தமாகத் துடைக்காமல் ஒற்றி ஒற்றி ஈரத்தை எடுக்க வேண்டும். கால் விரல்களுக்கு இடையே ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெறும் காலுடன் நடக்கக் கூடாது. வீட்டிலும் செருப்பு அணிந்தே நடக்க வேண்டும். புகை பிடிக்கக்கூடாது. இதனால், கால்களில் ரத்த ஓட்டம் குறையும்.
அளவுக்கு மீறினால் சர்க்கரையும் கசக்கும்!

  சர்க்கரை நோய் என்றாலே, வாழ்நாள் முழுக்க கேழ்வரகும் கோதுமையும்தான் சாப்பிட வேண்டும் என்ற தவறான  எண்ணம் பலரிடம் இருக்கிறது. கேழ்வரகு, கோதுமை சாப்பிட வேண்டும்தான். அதற்காக, அரிசியைத் தீண்டவே கூடாது என்பது இல்லை. ஆனால், அரிசி, கேழ்வரகு, கோதுமை போன்ற தானிய வகைகளை எந்த வடிவத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.
  'நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம்' என்ற பழமொழி, எல்லோருக்குமே பொருந்தும் என்றாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு அதுதான் வேதவாக்கு. சர்க்கரை கலந்த இனிப்புப் பண்டங்கள் தவிர்த்து, பல்லால் நன்கு மென்று தின்னக் கூடிய உணவுகள் எல்லாமே அவர்களுக்கு ஏற்றவை.
  எந்த தானியமாக இருந்தாலும், கஞ்சி போன்ற திரவ வடிவிலோ, கூழ் போன்ற நிலையிலோ கண்டிப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மென்று தின்பது போன்ற கெட்டியான வடிவத்தில் இருக்க வேண்டும். உதாரணமாக, இட்லி, ரொட்டி, அடை போன்றவை. முடிந்தவரை தோசை, கஞ்சி, கூழ் போன்றவற்றைத் தவிர்க்கலாம். எந்தத் தானியமாக இருந்தாலும், தானிய அளவைக் குறைத்து, காய்கறிகளின் அளவைக்  கூட்டிக்கொள்ளவேண்டும். கேழ்வரகு அடை என்றால், அதில் நிறைய கீரை, வெங்காயம் போட்டுச் செய்து சாப்பிடலாம்.
  திரவ உணவுகளை அருந்தினால், சீக்கிரமே பசிக்கும். உதாரணமாக, கோதுமை ரவைக் கஞ்சி குடித்தால், ஒரு மணி நேரத்திலேயே பசி எடுக்கும். அதுவே, கோதுமைமாவுச் சப்பாத்தி என்றால், 3 மணி நேரத்துக்குப் பசிக்காது. ஏனெனில், சப்பாத்தியை மென்றுதான் சாப்பிட முடியும். அப்படியே விழுங்க முடியாது.
  அதேபோல, ஓட்ஸ் சாப்பிட்டாலும், அதைக் கஞ்சி போலக் காய்ச்சி சாப்பிடக் கூடாது. தண்ணீரைக் கொதிக்கவைத்து இறக்கிய பின், அதில் ஓட்ஸைப் போட்டு சில நிமிஷங்கள் வைத்திருந்தால், வெந்துவிடும். அந்த நிலையில் சாப்பிடலாம்.
  அரிசி, கோதுமை இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டில் எந்த உணவைச் சாப்பிட்டாலும், கண்டிப்பாக கணிசமான அளவில், காய்கறியைக் கூடவேச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம். அதுவும், காய்கறியை எண்ணெயில் வறுக்கவோ, பொரிக்கவோ கூடாது. பருப்பு சேர்த்து கூட்டு, பொரியல், சாம்பார், அவியல், தயிர் பச்சடி, சாலட் போன்ற வடிவங்களில் நிறைய எடுத்துக்கொள்ளவேண்டும்.
  'எனக்கு சர்க்கரை இருக்கிறது... தினமும் சப்பாத்திதான்' என்று சாப்பாத்தியை மட்டுமே சாப்பிடுவதால், பலன் இல்லை. அதனுடன், காய்கறிகள் சேர்த்த குருமா அல்லது கூட்டு கட்டாயம் இருக்க வேண்டும். இட்லி என்றால், நிறைய காய்கள் போட்டு சாம்பார் வைத்துத் தொட்டுக் கொள்ளவேண்டும்.
  மாவுச்சத்தைத் தவிர்த்து, நார்ச்சத்தை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவரைக்காய், சௌசௌ, வாழைத்தண்டு, முள்ளங்கி, கீரை வகைகள் போன்ற நார்ச்சத்துள்ள காய்கறிகள் நிறையச் சாப்பிடலாம். ஒரு கப் அளவு வாழைத்தண்டுப் பொரியல் அல்லது கூட்டை உணவில் சேர்த்துக்கொண்டால், நான்கு மணி நேரத்துக்குப் பசி் தாங்கும்.
  பூமிக்குக் கீழே விளையும் காய்கறிகளில் முள்ளங்கியைத் தவிர, மற்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும். கேரட், பீட்ரூட், சர்க்கரைவள்ளி, சேனை, சேம்பு போன்றவை வேண்டாம்.
  ஏதேனும் விருந்தில் வடை சாப்பிடுகிறீர்கள் என்றால், அதன் கூடவே காய்கள் நிறையச் சேர்த்த சாம்பார் அல்லது கூட்டு சேர்த்துக் கொள்வது போல பார்த்துக் கொள்ளுங்கள்.
  தினசரி சப்பாத்தி சாப்பிட வாய்ப்பு இல்லாதவர்கள் கூட, தண்ணீர் விட்ட சாதத்தில் சரிக்குச் சரி பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் வெட்டிப் போட்டுச் சாப்பிடலாம். வெங்காயம் சேர்க்கப்படும்போது, சாதத்தைக் கவளம் கவளமாக விழுங்காமல், மென்றுதான் சாப்பிடமுடியும். அது, உள்ளே போகும் அரிசியின் அளவைக் குறைத்து விடுவதுடன், உங்கள் சர்க்கரையின் அளவையும் கூட்டாமல் பராமரிக்க உதவும்.
  எப்போதாவது வீட்டில் சாதமும் தயிரும் மட்டும்தான் இருக்கிறது என்றால், கவலையை விடுங்கள். மேலே சொன்னது போல, ஒரு கை நிறைய சின்ன வெங்காயத்தை நறுக்கி, தயிர்சாதத்தோடு கலந்து சாப்பிடலாம்.
  ரொம்ப சிம்பிள்... எண்ணெயைக் குறைத்து, மாவுச்சத்தை நீக்கி, நார்ச்சத்தை உணவில் அதிகமாக்கிக்கொண்டால் போதும்... சர்க்கரை கூடும் என்ற பயமே வேண்டாம்.
மயக்கம் ஏன்?
''திடீர்னு லோ சுகர் ஆயிடுச்சு... மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க!'' என்று பிறர் சொல்ல அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். சர்க்கரையின் அளவு குறைவதை 'ஹைப்போகிளைசீமியா' (பிஹ்ஜீஷீரீறீஹ்நீமீனீவீணீ) என்போம். சர்க்கரை நோய் இருக்கும் யாருக்குமே சர்க்கரையின் அளவு அவ்வளவு சீக்கிரத்தில் குறைய வாய்ப்பு இல்லை. மருத்துவர் சொல்வது போல ஒழுங்கான நடைமுறைகளைப் பின்பற்றாதபோது, அப்படி நிகழ வாய்ப்பு உண்டு.
முதல் காரணம், ஒரே 'வால்யூம்' மாத்திரையைத் தொடர்ந்து எடுப்பது. அதாவது, பரிசோதனைகளுக்குப் பின், சர்க்கரையின் அளவைப் பொறுத்து, குறிப்பிட்ட காலத்துக்கு மருத்துவர் மாத்திரைகளைப் பரிந்துரைப்பார். ஒரு மாதத்துக்கு எனில், மாத்திரை முடிந்த ஒரு மாதத்துக்குப் பிறகும் அதே 'வால்யூம்' கொண்ட மாத்திரையைத் தொடர்ந்து சிலர் போட்டுக் ்கொள்வார்கள். இது மிகவும் தவறு. மருத்துவர் சொன்ன கால அளவு முடிந்ததும், மீண்டும் அவரை ஆலோசிக்க வேண்டும். சர்க்கரையின் அளவைப் பரிசோதித்த பிறகு, தேவைப்பட்டால் மாத்திரையின் வால்யூமைக் குறைத்துவிடுவார். ஏனெனில் ஒரு மாதம் மாத்திரை சாப்பிட்டதில் சர்க்கரையின் அளவு சீராகி இருக்கும். மருத்துவரிடம் போகாமல், அதே மாத்திரையைத் தொடர்ந்து எடுப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவுக்கு அதிகமாக குறைய வாய்ப்பு இருக்கிறது.
மாத்திரை சாப்பிட்டதும் உடனடியாக உணவு எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் சர்க்கரையின் அளவு குறையும். சர்க்கரை நோய்க்காரர்களுக்கு மூன்றுவகை மாத்திரைகள் உள்ளன. சாப்பிடும் முன்பு எடுத்துக்கொள்வது, சாப்பிட்ட பின்பு எடுத்துக்கொள்வது, உணவுடனேயே சேர்த்து எடுத்துக்கொள்வது. அவற்றை முறைப்படி எடுத்துக்கொள்ள மறக்கவோ, தவறவோ கூடாது. சாப்பிடுவதற்கு முன் மாத்திரை போட்டால், உடனேயே சாப்பிட்டுவிட வேண்டும். மாத்திரை போட்டு, நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், சர்க்கரையின் அளவு குறைந்து மயக்கம் வரலாம். சிலர் காலை ஏழரை மணிக்கு மாத்திரை போட்டு, ஒன்பது மணி வரை சாப்பிடாமல் இருப்பார்கள். திருமணம் போன்ற விழாக்களில், மாத்திரையை சீக்கிரமே போட்டுவிடுவார்கள். ஆனால், அங்கே பந்தி வைக்க தாமதம் ஆகிவிடும். அதுபோன்ற சமயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
சிலர் இனிப்பு சாப்பிடும் ஆசையில், அதிகமான இனிப்புப் பண்டங்களைச் சாப்பிட்டுவிட்டு, அன்று மட்டும் ஜாஸ்தியாக ஒரு மாத்திரை போட்டுக் ்கொள்வார்கள். அது மிகவும் தவறு. மேலும், சர்க்கரையின் அளவு குறைந்தால் சாப்பிடுவதற்காக, சட்டைப்பையில் அல்லது கைப்பையில் சாக்லேட் வைத்துக்கொள்ளச் சொல்வோம். ஆனால், சிலர் 'டாக்டர் சொன்னார்' என்று சொல்லி, அந்த சாக்லேட்டை சும்மாவே சாப்பிட்டுவிடுவார்கள். ஏனெனில், சாக்லேட் சாப்பிட்ட பத்தே நிமிஷத்தில் சர்க்கரையின் அளவு 'சடாரெ'ன உயரும். ஜாக்கிரதை! ஒரு இட்லி சாப்பிட்டால் குறைவாக ஏறும் சர்க்கரையின் அளவு, ஒரு சாக்லேட் சாப்பிட்டால் தடாலடியாக ஏறும்.
உணவுடன் சேர்த்துப் போட்டுக்கொள்ளும் மாத்திரை எடுக்கும்போது, மென்பானங்களோ, இனிப்புப் பண்டங்களோ எடுக்கக் கூடாது.

(Courtesy: Doctor Vikatan, 16 Nov 2014)