Sunday, February 23, 2014

அமைதியாக ஆறுதல் அடைவோம் - இதுவே வாழும் வழி!

​அவரவர் மனத்தளவில் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் ஞானமே! அந்த ஞானத்தைப் பெற்றுவிட்டால், நாம் எல்லோரும் ஆனந்தமாக வாழலாம்.
 

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை. ஏன் வெவ்வேறு மாதிரி அமைகிறது என்ற கேள்விக்கு அறிவியலால் எந்த பதிலும் தர இயலவில்லை. ஆனால், 'கர்மவினையே காரணம்' என்று ஒரு பதில் தருகிறது ஆன்மிகம்.

 

விதி என்பதை ஆங்கிலத்தில் ஃபேட் (fate) என்கிறோம். உண்மையில், விதி என்பது ஃபேட் (fate) அல்ல; அது ரூல் (rule) என்றே கொள்ளப்பட வேண்டும். ஆமாம், யாராலும் மாற்ற இயலாத சட்டம் அது.

 

ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச்செயல் இருக்கிறது என்கிறது பௌதிகம் சார்ந்த நியூட்டனின் மூன்றாம் விதி. இந்த விதி மனித வாழ்க்கைக்கும் பொருந்தும். நாம் இப்பிறவியிலோ முற்பிறவியிலோ செய்த ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை கட்டாயம் உருவாகும். அதையே கர்மவினை என்கிறோம். இப்படியோர் ஆன்மிக விதி இயங்குகிறது என்பதை உணர்ந்துகொண்டால், பல தீர்க்கமுடியாத பிரச்னைகள் குறித்து நம் மனம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், அமைதியுறும்.

 

ஒருவருக்கு ஆட்டிஸம் குறையுடன் பிள்ளை பிறக்கிறது. என்ன செய்வது இப்போது? வாழ்நாள் முழுதும் அதைப் பற்றிப் புலம்பிக்கொண்டே வாழ்வதா? அல்லது, சவாலாக ஏற்று, அந்தக் குழந்தையை இயன்றவரை சிறப்பாக வளர்ப்பதா?

 

நண்பர் ஒருவர் அத்தகைய மகனைப் பெற்றவர். நண்பரின் மனைவியிடம் அந்த மகனைப் பற்றிக் கனிவோடு விசாரித்தபோது, அவர் சொன்னார்... ''சூது வாது அறியாதவன் என் மகன். அவனை 20 வருடங்களாக வளர்த்து வருகிறேன். அவன்தான் என் கடவுள். சொர்க்கத்தைவிட்டு, கடவுள் என் வீட்டில் வந்து பிறந்திருப்பதாகவே உணர்கிறேன். அவனைக் குளிப்பாட்டும்போது, கடவுளுக்கு அபிஷேகம் செய்வதாக நினைத்துக்கொள்கிறேன். சோறூட்டும்போது இறைவனுக்கு நிவேதனம் செய்வதாக உணர்கிறேன். என் தெய்வம் சாப்பிடுவதாக பாவனை காட்டாது; நிஜமாகவே சாப்பிடும்!''

 

சொல்லிவிட்டு, நெகிழ்ச்சியுடன் விழிகளைத் துடைத்துக் கொண்டார் அவர். மகனை இறுக அணைத்துக் கொண்டார். தன் குறையை நிறையாக்கிக்கொண்டு, வாழ்க்கையைப் பிடிப்புள்ளதாக, அர்த்தமுள்ளதாக அவர் மாற்றிக்கொண்டுவிட்டார்.

 

''ஒருவேளை, போன பிறவியில் இவனது உழைப்பை எந்த விலையும் கொடுக்காமல் நான் வாங்கிக்கொண்டேனோ என்னவோ? அதற்காகத்தான் இந்தப் பிறவியில் இவனுக்குச் சேவை செய்து அந்தக் கடனைத் தீர்க்கிறேனோ, யாருக்குத் தெரியும்? ஆனால், இந்தப் பிறவியில் இவன் இல்லாமல் எனக்கு வாழ்வே இல்லை!'' என்று அந்த அம்மாள் சொன்னது, ஆழ்ந்து யோசித்துப் பார்க்க வேண்டிய ஒன்று.

 

96 வயதுவரை வாழ்ந்த தன் கணவரைப் பரிவோடு  பராமரித்து வந்தார் 85 வயது மூதாட்டி. கணவர் காலமானபின்பு அவர் சொன்னார்... ''கடந்த இரண்டு மூன்று ஆண்டுகள் அவர் குழந்தை போல் மாறிவிட்டார். பல் அத்தனையும் போய்விட்டது. தலைமுடி உதிர்ந்துவிட்டது. குளிப்பாட்டுவது முதல் உணவூட்டுவது வரை எல்லாம் நான்தான் என் கணவருக்குச் செய்யவேண்டியிருந்தது. இதனால் என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைத்ததாக உணர்ந்தேன். அவர் போனபின்பு அந்தப் பணிவிடைகளுக்கு இனி வாய்ப்பில்லை. இப்போது என் வாழ்வு வெறுமையானதாக உணர்கிறேன். என் நேரத்தை என்ன செய்வதென்று தெரியாமல், ராம நாமத்தை ஜபித்துக் கொண்டும், அவருக்குப் பணிவிடை செய்த காலங்களை மனத்தில் அசைபோட்டுக்கொண்டும் எஞ்சிய வாழ்வைக் கழித்துவருகிறேன்!''

 

ஒருவருக்கு மனநிலை சரியில்லாத மனைவி. கணவர் சற்றும் அலுப்படையவில்லை. குளிப்பாட்டிவிடுவது, கூந்தலைப் பின்னி விடுவது, உணவூட்டிவிடுவது என ஒரு குழந்தையைப்போல் இப்போதும் அவரைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொள்கிறார்.

'வேறு பெண் மனைவியாகக் கிடைத்திருந்தால் தேவலாம் என்று நினைத்ததுண்டா?' என்று கேட்டதற்கு, அவர் மிக நெகிழ்வோடு சொன்னார்...

 

''என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி இது? இவள்தானே என் மனைவி? பிறகு, வேறு பெண் என்ற சிந்தனை எதற்காக? வேறு ஒரு பெண்மணி என் அம்மாவாக இருந்திருந்தால் தேவலாம் என்று நினைப்போமா நாம்? தானே அமைவதுதானே அம்மா, சகோதரி, மகள் என்கிற உறவெல்லாம்? அதுபோல், நான் தேர்வு செய்திருந்தாலும், இவள் என் மனைவியாக எனக்கு அருளப்பட்டவள்.

 

இவளுக்குச் செய்யும் பணிவிடைகளை நான் சேவையாகக் கருதவில்லை; இது என் கடமை. என்னையே சார்ந்திருக்கும் இவள் சில நேரங்களில் என் கையை இறுகப் பற்றிக்கொண்டு தன் அன்பைத் தெரிவிப்பாள். அந்த நேரங்களில் என் கண்களில் நீர் வழியும். இவ்வளவு அன்பை எந்த மனைவியும் தன் கணவனிடம் செலுத்தியிருக்க முடியாது என்று தோன்றும். ஒரு மனைவிக்கு இத்தகைய பணிவிடைகளைச் செய்யும் வாய்ப்பு பெற்ற என்னைப் போன்ற பாக்கியசாலி உலகில் வேறு யார் இருக்கமுடியும்?''

 

இப்போது புரிகிறதா? அவரவர் வாழ்க்கையை அவரவர் மனத்தளவில் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் உண்மையான ஞானம். அந்த ஞானத்தை அடைய முயல்வதே ஆனந்தத்தின் அடிப்படை. புத்தர், வள்ளலார் போன்றோரெல்லாம் மறைந்துவிடவில்லை. இப்படி நம்மிடையே வேறுவேறு வடிவங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

 

திருவண்ணாமலை, ஆரணி அருகே அடையபலம் என்ற கிராமத்தைச் சார்ந்த மகான், அப்பய்ய தீட்சிதர். அவருக்கு ஒருநாள் ஒரு விசித்திர எண்ணம் தோன்றியது. தான் சுயநினைவில்லாமல் ஆகிவிட்டாலும், தெய்வத்தையே நினைத்துக்கொண்டிருக்க முடியுமா என்று பரிசோதிக்க ஆசைப்பட்டார்.

 

அதன் பொருட்டு, ஊமத்தங்காயைத் தின்று, சிறிது காலம் தன்னைப் பைத்தியமாகவே ஆக்கிக் கொண்டு விட்டார். அந்த நிலையிலும் அவர் சிவனை மறக்கவில்லை. அந்தக் காலத்தில் அவர் சிவனைக் குறித்து எழுதிய சுலோகங்கள்தான் 'உன்மத்த பஞ்சசதி' என்று போற்றப்படுகின்றன.

அவருக்கு அடிக்கடி தாள முடியாத வயிற்றுவலி வருவது உண்டு. அது அவர் முன்வினைப் பயன். அவ்விதம் வயிற்றுவலி வந்த நேரத்தில், அவரைச் சந்திக்க வடக்கிலிருந்து வந்தார் ஒரு மகான். ஆன்மிக சந்தேகங்கள் சிலவற்றை அப்பய்ய தீட்சிதரிடம் கேட்டுத் தெளிவுபெறுவதே அவர் நோக்கம். விரைவில் ஸித்தி அடையும் முடிவில் இருந்தார் அவர்.

 

வயிற்றுவலி காரணமாக மகானைச் சந்திக்க மறுத்தால், அவர் வருத்தப்படுவாரே என்று யோசித்தார் தீட்சிதர். தன் சீடர்களிடம் மூன்று பலகைகளைக் கொண்டுவரச் சொன்னார்.

ஒன்றில், மகானை அமரச் சொல்லி விட்டு, இன்னொன்றில் தான் உட்கார்ந்து கொண்டார். பின்பு, அருகில் இருந்த மூன்றாவது பலகையில் கை வைத்தார் தீட்சிதர். அவரின் வயிற்றுவலியைப் பலகை வாங்கிக்கொண்டது. எனவே, அது வலியால் நெளிந்து துடிக்கத் தொடங்கியது.

துடிக்கும் பலகையை ஓரமாக நகர்த்தி வைத்த தீட்சிதர், மகானின் கேள்விகளுக்கு பதில் சொன்னார். அதன்பின்பு, வயிற்றுவலியைத் திரும்பவும் வாங்கிக்கொள்ளும் உத்தேசத்தில் பலகையில் கைவைத்தார்.

 

சட்டென்று அவரின் கையைப் பிடித்துத் தடுத்தார் மகான். ''உங்கள் வயிற்றுவலியைப் பலகையில் எப்படி இறக்கிவைப்பது என்றுதான் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே! பிறகென்ன, வயிற்றுவலி அதிலேயே இருக் கட்டுமே! நீங்கள் நிம்மதியாக இருங்களேன்!'' என்று வேண்டினார். அப்பய்ய தீட்சிதர் கடகடவென்று நகைத்துவிட்டுச் சொன்னார்...

 

''என் வயிற்றுவலி என் கர்மவினையால் எனக்கு வந்தது. அதை அனுபவித்துத்தான் கழிக்கவேண்டும். பலகையில் இறக்கிவைத்த இந்தக் கொஞ்ச நேர வயிற்றுவலியை நான் இந்தப் பிறவியிலோ மறுபிறவியிலோ அனுபவித்தே ஆகவேண்டும். அதுதான் விதி.

ஆனால், இதை அனுபவிப்பதற்காக நான் இன்னொரு பிறவி எடுக்கவேண்டுமா? இந்தப் பிறவியிலேயே அனுபவித்து என் வினையைக் கழித்துவிட்டுப் போகிறேனே!''

ராமகிருஷ்ண பரமஹம் சருக்கும், ரமண மகரிஷிக்கும், யோகி ராம்சுரத்குமாருக்கும் புற்றுநோய் வருவானேன்?

 

ஒன்று, அடியவர்களின் பாவங்களைத் தாங்கள் ஏற்றதால், அது வந்திருக்க வேண்டும்; அல்லது, முன்செய்த கர்மவினையாக அது இருக்க வேண்டும். முற்றும் துறந்த முனிவர்களையே கர்ம வினை பீடிக்குமானால், சாதாரண மனிதர்களை அது வருத்தாதா? கண்டிப் பாக வருத்துமல்லவா? ஆனால், அந்த வருத்தத்திலிருந்து மீள்வதற்கு, அவரவர் வாழ்க்கையை அவரவர் எப்படி எதிர் கொள்வது என்பதைக் கற்க வேண்டும்.

 

நம்மால் முடியக்கூடிய விஷயங்களில் எல்லாம், நாம் என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும். மனித முயற்சியை இறை சக்தி எதிர்பார்க்கிறது. மனிதர்கள் சும்மா இருக்கவேண்டும் என்பது இறை சக்தியின் திட்டமானால், அது மனிதர்களுக்குக் கை கால்களைக் கொடுத்திருக்காது.

 

ஆனால், நம்மால் முடியாத செயல்கள் என்றும் சில உண்டு. நெருங்கின உறவினரின் மரணம், மருத்துவம் பார்த்தும் தீராத நோய் போன்ற துயரங்கள் அப்படிப்பட்டவை. அவற்றை முன்வினைப் பயன் என்றறிந்து, அமைதியாக எதிர்கொள்ளச் சொல்கிறது நம் ஆன்மிகம்.

வற்றாத அன்பு, தொண்டு மனப்பான்மை இவற்றின் மூலம் முன்வினைப் பயன்களின் துயரைக் குறைக்க முடியும். பக்தியினாலே இந்தப் பாரினில் எய்தும் மேன்மைகளைப் பட்டியலிடுகிறார் மகாகவி பாரதி. பக்தி ஒன்றுதான், நம்மால் தீர்க்கமுடியாத கஷ்டங்களை நாம் தாங்கிக்கொள்ளும் வலிமையைத் தரும்.

 

துயரங்களைப் புறந்தள்ளி, பிரதிபலன் கருதாத சேவையால் நமது வாழ்க்கையை ஆனந்தமாக மாற்றிக்கொள்வோம். நம்மால் தீர்க்கமுடிந்த விஷயங்கள் அனைத்தையும் தீர்ப்பதற்கு அதிகபட்ச முயற்சி எடுத்துக் கொள்வோம்.

 

தீர்க்கமுடியாத சிக்கல்களை முன்வினைப் பயன் என்றறிந்து, அமைதியாக எதிர்கொண்டு ஆறுதல்  அடைவோம். இதுவே வாழும் வழி!  

Thursday, February 20, 2014

It Will Be Okay

Bob Butler lost his legs in a 1965 land mine explosion in Vietnam. He returned home a war hero. Twenty years later, he proved once again that heroism comes from the heart.

Butler was working in his garage in a small town in Arizona, USA on a hot summer day; when he heard a woman's screams coming from a nearby house. He began rolling his wheelchair toward the house but the dense shrubbery wouldn't allow him access to the back door. So he got out of his chair and started to crawl through the dirt and bushes.

"I had to get there", he says. "It didn't matter how much it hurt". When Butler arrived at the pool there was a three-year-old girl named Stephanie Hanes lying at the bottom. She had been born without arms and had fallen in the water and couldn't swim. Her mother stood over her baby screaming frantically. Butler dove to the bottom of the pool and brought little Stephanie up to the deck. Her face was blue, she had no pulse and was not breathing.

Butler immediately went to work performing CPR to revive her while Stephanie's mother telephoned the fire department. She was told the paramedics were already out on a call. Helplessly, she sobbed and hugged Butler's shoulder.

As Butler continued with his CPR, he calmly reassured her. Don't worry, he said. "I was her arms to get out of the pool. It'll be okay. I am now her lungs. Together we can make it".

Seconds later the little girl coughed, regained consciousness, and began to cry. As they hugged and rejoiced together the mother asked Butler how he knew it would be okay. The truth is, "I didn't know", he told her. "But when my legs were blown off in the war, I was all alone in a field. No one was there to help except a little Vietnamese girl. As she struggled to drag me into her village, she whispered in broken English, 'It okay. You can live. I be your legs. Together we make it' ". Her kind words brought hope to my soul and I wanted to do the same for Stephanie.

Monday, February 17, 2014

Children - God made himself through us....

Children - God made himself through us….

We all love and strive to be a better parent each and every moment of our life. 
 
All our hard work & the result of which, the gathered wealth are all for our children……but,  during this course of our busy day to day schedule do we concentrate on how well are we parenting them?
 
 We set benchmarks, targets and KPI s (Key performance indicators) in our corporate work culture.  Do we analyze our self how well we score as parents?  Any KPI, targets or benchmarks for that? How to measure parenting?

 
The below questionnaire will help you to analyze where you stand in parenting?
 

o   Do you take parenting as a celebration OR your punishment?

o   Is your intention towards your children is positive OR negative? – What is your parental intention?

o   Are you concentrating more on their academics & less in grooming them with good values & personality?  What values you concentrate on?

o   Do you know what your child is good at? (it can be in academics or extra curriculum or both)

o   Are you giving them versatile exposure for them to absorb the world around and grow?

o   Do you spend valuable time & do issue less communication with them? OR Is you communication is like hostel warden with lots of rules of do’s and don’ts?

o   Do you give enough and truthful info to your children’s queries? OR often ignore or lie to his queries and doubts?

o   Do you give enough room for your child for open communication to easily communicate his / her mistakes to you OR he / she hide his/her mistakes from you?

o   Do you often encourage the positives within him/her OR dent his/ her negatives?

o   Are you morally right first to advise your children? OR just keep doing with what you wish than what is right for them to follow you?

o   Are you interested in leaving moral inheritance to children OR intend to leave them only with materialistic inheritance?

o   Do you wish them to have the rootedness with you with enough freedom OR ignore you as they grow up?  What do you do to emphasize that rootedness & freedom is intact?

o   Do you give them enough love by touching them OR orthodox & believe that words and wishes are enough for them to have your love?
 
If your answers are positives – color them blue & if your answers are negative, color them red. 
 
Whether you stand in blue or red, we always have room for enhancement & parenting is an ongoing challenge. 
 
Mahatria gives an exclusive speech purely on parenting addressing all the above points with living examplesand explanations to add more tips to your parenting skills.
 
I believe none of us will ignore this opportunity of becoming a better parent and shall listen to the below link tohelp ourselves. The time for hearing the speech is worth spending, believe us.
 
 

Saturday, February 15, 2014

சிறுநீரகத்தில் கற்கள்

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப் படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர்.

இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல்சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளன வாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.

பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.

எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி (Lemonade therapy) என்று பெயர்.

தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீ ரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.

இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.

சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.

பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டு தான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.

சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?

சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம்.

இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், "கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு
வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.

இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.

ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் - ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.

கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ்
நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட் ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laserlithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.

இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.

ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத் தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்" என்கிறார் ரோஜர் சர்.

சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தெரபியை முயற்சித்துப் பாருங்களேன்.

Wednesday, February 12, 2014

காதலுக்கு இது போதாத காலம்.

காதலுக்கு இது போதாத காலம். இளவரசன் - திவ்யா காதலின் துயர முடிவு, கடந்த ஆண்டின் கசப்பான வரலாறு. எனினும், அந்தக் கசப்பு அத்துடன் முடிந்துவிடவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காவல் நிலையங்களில் தஞ்சம் அடையும் காதல் ஜோடிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கின்றன. 'இனி சென்னை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது' என்ற அறிவிப்பு வெளியானதும் முதலில் திகீர் அதிர்ச்சி அடைந்தது... காதலர்கள்தான்!

சாதி, வர்க்கம், இனம், மதம்... போன்ற பெருஞ்சுவர்களை ஒரே தாவலில் தாண்டத் துணியும் காதலை மனம் நிறைய பாராட்டத் தோன்றும்போதே, 'அந்த இளம் பருவ முதிராக் காதல் நீடித்திருக்குமா?' என்ற சந்தேகமும் வருகிறது. வாழ்வின் யதார்த்தம் அறியாத, சினிமா வசனங்களைப் போல வாழ்க்கையை நினைத்திருக்கும் அவர்கள், வாழ்வெனும் பெரும் சூறாவளிக்கு முன்பு தாக்குப்பிடித்து நிற்பார்களா? அத்தகைய மனத் திண்மை அவர்களுக்கு இருக்கிறதா?.. என்ற கவலைகளும் எழுகின்றன. மறுபக்கம் சாதி என்னும் கொடும் மிருகம், அந்த இளஞ்ஜோடிகளை எந்தவிதக் கரிசனமும் இல்லாமல் கடினமாகக் கையாள்கிறது. அடி, உதை, வீட்டுச் சிறை, சித்ரவதை, கொலை முயற்சி... என வகை, வகையாக சித்ரவதைக்கு உள்ளாக்க, வேறு வழியே இல்லாமல்தான் அவர்கள் வீட்டைவிட்டு வெளியேற நேர்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். அல்லது குடும்பம் தங்கள் காதலை முதிர்ச்சியுடன் அணுகாது என்பதை உணர்ந்து அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர்.

இந்த நிலையில், இந்தக் காதல் ஜோடிகளை நாம் எப்படி மதிப்பிடுவது? இவர்களுடைய காதலை 'முதிராக் காதல்' என்று சொன்னால், உறவினர்களின் வெறிபிடித்த அணுகுமுறை முதிர்ச்சியானதா?

சங்க காலம் முதல் ஷங்கர் காலம் வரை காதலைப் பிரதானப்படுத்தியே தமிழ்ச் சமூகம் இயங்கிக்கொண்டிருக்க... இளைஞர்கள் மட்டும் இவற்றில் இருந்து அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பு, எப்படிச் சரியானதாக இருக்க முடியும்?

அண்மைக் கால காதல் உதாரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்...

அரூர் பக்கம் கொக்கிரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்கிற தலித் இளைஞரும், இடைநிலை சாதியைச் சேர்ந்த கவிதாவும் வீட்டைவிட்டு வெளியேறி பெருமாள் கோயிலில் திருமணம் செய்துகொள்கிறார்கள். கடத்தல் வழக்கில் காதல் ஜோடி இருவரையும் அழைத்து வந்த போலீஸார், சில பல மணி நேரம் காவல் நிலையத்தில் வைத்து பஞ்சாயத்து பேசுகிறார்கள். இறுதியில் கவிதா, பிரகாஷைப் பிரிவதாகச் சொல்லி பெற்றோருடன் செல்கிறார்.

தருமபுரி அருகே உள்ள பறையப்பட்டியைச் சார்ந்த நிரோஷாவுக்கு இன்னும் குழந்தைக் குரலே உடையவில்லை. ஆனால், இடுப்பில் தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நிற்கிறார். காதலித்தபோதே கர்ப்பமான நிரோஷாவை, உயர்சாதி காதலனான விஸ்வநாதன் கருக்கலைப்புக்கு நிர்பந்தித்தார். அதற்கு நிரோஷா மறுத்துவிட, காதலன் தப்பியோடிவிட்டார். விஸ்வநாதன் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டிருக்கும் நிலையில், அந்தக் குழந்தைக்கு இப்போது வயது இரண்டு.

முள்ளிப்பட்டி ரமேஷ், அருந்ததியர் சாதியைச் சார்ந்தவர். கல்லூரியில் படித்துக்கொண்டே அரிசி ஆலை ஒன்றில் வேலை பார்த்து வந்த ரமேஷ§க்கும், அரிசி ஆலை முதலாளியின் மகள் சங்கீதாவுக்கும் காதல். கடந்த வருடம் மத்தியில் வீட்டைவிட்டு வெளியேறிய சங்கீதாவை, சல்லடை போட்டுத் தேடியது அவரது குடும்பம். ஆட்கொணர்வு மனுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை ரமேஷ்-சங்கீதா இருவரும் எங்கு இருக்கிறார்கள், என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. சங்கீதாவின் உறவினர்களும் தங்கள் தேடுதல் வேட்டையை நிறுத்திவிட்டனர்.

இவை, மிகச் சொற்ப உதாரணங்கள் மட்டுமே. இப்படி ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான காதல் பிரச்னைகள் தமிழகத்தில் முளைத்துக் கிளைக்கின்றன. புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வோர் மிகச் சிலர். 'உனக்கும் எனக்கும் ஒட்டு, உறவு இல்லை' என்று எழுதி வாங்கிக்கொண்டு சாபம்விட்டுச் செல்வோர் ஒரு சிலர். இவற்றைத் தாண்டி ஆயுதம் தூக்கும்போதுதான் சிக்கல் வருகிறது.

காதலை எரிக்கும் சா'தீ'!

சாதியோடு பொருளாதாரப் போராட்டத்தையும் எதிர்கொள்ளும் திராணியும் பெரும்பாலான கிராமப்புற இளம் தலைமுறைக்கு வாய்க்காததால் ஊரார்/உற்றாரின் அழுத்தங்களுக்கு அஞ்சிப் பிரிந்துவிடுகிறார்கள் அல்லது தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்த நெருக்கடிகளைப் பயன்படுத்திக்கொள்ளும் சாதி வெறியர்கள்... ஒன்று, காதல் ஜோடிகளைக் கொலை செய்கிறார்கள் அல்லது சட்டபூர்வமான உதவியோடு பிரித்துவிடுகிறார்கள்.

''தமிழகம் முழுக்க சாதி கலப்புத் திருமணத்துக்கு எதிர்ப்பு இருக்கிறது என்றபோதிலும், இளவரசன் மரணத்துக்குப் பின்னர் வட மாவட்டங்கள் முழுக்கக் காதல் திருமணங்களுக்கு எதிரான கொந்தளிப்பு காணப்படுகிறது. இந்தப் பகுதியில் பெரும்பான்மை சாதியைச் சார்ந்தவர்கள் கிராமங்களைக் கட்டுப்படுத்தும் இடத்தில் இருக்கின்றனர். இவர்கள்தான் பஞ்சாயத்துத் தலைவர்கள். இவர்களை மீறிக் காதலிப்போர் தப்பிப் பிழைப்பது மிகக் கடினம். மற்றபடி தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள், சாதியை ஒழிக்க வேண்டும் என்று எண்ணி, மேல்சாதிக்காரர்களாகத் தேடிப் பிடித்துக் காதலிப்பது இல்லை. அந்த வயதில், பருவத்தில் காதல் வருகிறது, அவ்வளவுதான்'' என்கிறார் தருமபுரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வேடியப்பன்.

இளவசரன்-திவ்யா விவகாரத்துக்குப் பிறகு, வட மாவட்டங்களில் காதல் என்பது கெட்ட வார்த்தையாக மாற்றப்பட்டுள்ளது. வட மாவட்ட  கிராமம் ஒன்றின் கார்த்தி - மீனா தம்பதியினரே இதற்கு உதாரணம். (தம்பதியரின் எதிர்கால நலன் கருதி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

''மீனா, தலித் சமூகத்தைச் சார்ந்தவர். எங்கள் காதலை என் வீட்டில் ஏற்றுக்கொண்டனர். ஆனால், மீனா வீட்டில் எதிர்ப்பு. அதையும் மீறி 2010-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டோம் ஒரு வருடத்துக்குள் எல்லோரும் சமாதானம் ஆனார்கள். சொந்த ஊரிலேயே எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்துவந்தோம். ஆனால், திவ்யா - இளவரசன் காதல் பரபரப்புக்குப் பிறகு, எங்களை அவர்கள் எதிர்கொள்ளும் பார்வை மாறியது. இளவரசன் மரணத்தின்போது, எங்களைச் சத்தம் இல்லாமல் ஊரில் இருந்து ஒதுக்கினார்கள். கோயில் திருவிழாவுக்கு எங்களிடம் மட்டும் வரி வாங்கவில்லை. 'ஏன்?' என்று என் பெற்றோர் கேட்கப்போனபோது, 'உங்க மகன் தலித் பெண்ணை கல்யாணம் கட்டியிருக்கான். அந்தப் பொண்ணோட டி.சி-யைக் கொண்டாந்து பஞ்சாயத்து கமிட்டிக்கிட்ட காட்டுங்க. தலித்தா இருந்தா அந்தப் பொண்ணை வெட்டிவிடணும். மற்ற எந்தச் சாதியாக இருந்தாலும் பிரச்னை இல்லை' என்று ஊர்ப் பஞ்சாயத்து தீர்ப்புச் சொன்னது.

அவர்களை மீறி ஊரில் வாழமுடியாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு வழக்குத் தொடர்ந்தேன். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு போலீஸும் காவலுக்கு இருக்கிறது. ஆனால், அந்தப் போலீஸாரே எங்களுக்கு எதிராக வழக்குப் போடுவதோடு, சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நடக்கிறார்கள். அன்றாடம் கோர்ட்டுக்கும் கேஸுக்கும் அலைவதாலும், பாதுகாப்பு இல்லாததாலும் என்னால் வேலைக்கே செல்ல முடியவில்லை. ஆனால், என்ன ஆனாலும் என் மனைவியை நான்  கைவிடுவதாக இல்லை'' என்ற கார்த்திக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.

பெற்றோரின் அரசியலும், காதலர்களின் பொறுப்பின்மையும்!

மிக இளம் வயதினரிடையே உண்டாகும் காதல், திருமணம் என்ற எல்லையை எட்ட முடியாமல் போவதில் பெற்றோரின் பங்கு குறித்துப் பேசுகிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ். ''இளம் காதலர்கள் தோல்வி அடைவதற்கு, இரு தரப்புப் பெற்றோர்களின் ஆதரவின்மைதான் காரணம். வருமானத்துக்கு வழி இல்லாமல் பெற்றோர்களின் ஆதரவும் இல்லாதபோது இந்தத் திருமணங்கள் முறியக்கூடிய நிலை ஏற்படுகிறது. இதற்கான பின்புலமாகப் பெரும்பாலும் இருப்பது சாதி உணர்வுதான். சாதி மீறிய காதல் பெற்றோர்களுக்குத் தெரியவரும்போது உயர் சாதிப் பெற்றோர்கள் உடனடியாகத் தங்களின் பெண்ணுக்கு வேறு ஒருவருக்குத் திருமணம் செய்ய முயல்கிறார்கள். இந்தச் சூழலில்தான் இளம் காதலர்கள் தப்பியோட வேண்டியுள்ளது. இதுபோன்ற சாதி மீறிய காதலைப் பொறுத்தமட்டில், இரண்டில் எது குறைந்த சாதியோ, அந்தச் சாதியைச் சார்ந்தவர்களின் ஆதரவு காதலர்களுக்குக் கிடைத்துவிடுகிறது. ஆனால், ஆதிக்க சாதியினர் இதற்கு எதிராக ஒரு வன்முறையை உருவாக்கும்போது தற்கொலை அல்லது கொலையில் முடிந்துவிடுகிறது. இளம் வயது காதல், தோல்வியில் முடிவதில்கூட சாதி ஒரு முக்கியமானப் பங்கு வகிக்கிறது!'' என்கிறார்.

அதே நேரம் இளம் பருவக் காதல்களின் தோல்விக்கு அவர்களின் ஆளுமையின்மையும் ஒரு காரணம். இதற்கான சமூக - அரசியல் கோணத்தை விவரிக்கிறார், சாதி மறுப்பு காதல் திருமணங்கள் தொடர்பான வழக்குகளில் ஆஜரான, மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு.

''சாதியை மீறிக் காதலித்து வீட்டைவிட்டு வெளியேறி உயிர் அச்சுறுத்தலோடு தஞ்சம் அடைந்த சிலரின் வழக்குகளில் நாங்களே ஆஜராகி அவர்களைப் பாதுகாத்திருந்தாலும்கூட, இது தொடர்பாக சில கருத்துகளைச் சொல்லியாக வேண்டியுள்ளது.

இன்றைய இளம் பருவக் காதல்களில் பல தோல்வியில் முடிய காரணம், அவர்களின் பொறுப்பின்மைதான். இதில் காதல் என்ற உணர்வும் செல்போனும் பெரும்பங்காற்றுகின்றனவே தவிர, அறிவுக்கோ உழைப்புக்கோ இடம் இல்லை. அதன் விளைவாகத் தங்களுடைய காதலை சாதிக்கோ மதத்துக்கோ எதிரான ஒரு கலாசாரக் கலகமாக இவர்களால் மாற்ற முடியவில்லை. அந்த எண்ணமே இவர்களிடம் இல்லை. பெரும்பாலும், ஓடிப்போகும் பெண்ணின் கழுத்தில் கிடக்கும் நகைகள் தீரும் வரை வாழ்கிறார்கள். காதல் என்பது இயல்பான ஓர் உணர்வு என்பது மாறி, அது இன்றைய தாராளமயக் கலாசாரத்தில் ஒரு நுகர்வு வெறியாக மாறிக்கொண்டிருக்கிறது. இது எப்படிப் பார்த்தாலும் கேடுதான். பள்ளிகளில் சமூக ஒழுக்கம் சார்ந்து மாணவர்களுக்குப் போதிப்பதன் மூலம் இதை ஓரளவு சரிசெய்ய முடியும்'' என்கிறார்.

எல்லாவற்றிலும் நுனிப்புல்!

ராஜு சொல்வது போல, காதலர்களின் பொறுப்பற்றத் தன்மையும் அது தோல்வியில் முடிவதற்கு முக்கியமானப் பங்கு வகிக்கிறது. இன்றைய இளைஞர்களும் யுவதிகளும் காதலில் மட்டும்தான் இப்படி ஆழமின்றி மேலோட்டமாக இருக்கிறார்கள் என்பது இல்லை. அவர்களின் மொத்தச் சிந்தனைப்போக்கும் வாழ்க்கைமுறையும் அப்படித்தான் இருக்கின்றன. எதற்கும் மெனக்கெடாத, எதிலும் நிதானம் இல்லாத, எல்லாவற்றிலும் அவசரப்படும் தன்மை அவர்களின் ஒவ்வொரு செயலிலும் நிரம்பியுள்ளது.

குறிப்பிட்ட ஒரு விஷயத்தின் விளைவுகள் குறித்து தீர்க்கமாகச் சிந்தித்து முடிவு எடுக்கும் ஆற்றல் அவர்களிடம் இல்லை. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எதைப் பற்றியும் ஆழமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இல்லை. வீட்டில் ஒரு பிரச்னை என்றால், அதை எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் இல்லை. சொன்னதைச் செய்து, சொல்லிக்கொடுத்ததை மனப்பாடம் செய்யும் வெறும் கிளிப்பிள்ளைகளாக வளர்கிறார்கள். இந்தப் புரிதலில் இருந்துதான் இவர்களின் காதலையும் நாம் மதிப்பிட வேண்டும். அதாவது, காதலில் மட்டும் அல்ல... இவர்களின் மொத்த சிந்தனையுமே முதிரா நிலையில்தான் இருக்கிறது.

இது எதிர்மறைப் பார்வையாகத் தோன்றலாம். நவீன இளைஞர்களின் தொழில்நுட்பத் திறமைகள் குறித்த சிலாகிப்புகள் நாள்தோறும் வந்துகொண்டிருக்கும் நிலையில், அவர்களின் 'சிந்தனை மந்தம்' குறித்த இந்தக் கருத்து உண்மையற்றதாக எண்ண வைக்கலாம். உண்மை என்னவெனில், அத்தகைய திறமைக்கார இளைஞர்களும் இருக்கிறார்கள்தான். ஆனால், அவர்கள் எண்ணிக்கையில் மிக, மிகச் சொற்பம்.

நாம் பேசும் பெரும்பான்மை இளைஞர்கள், 1990-களில் வந்த புதிய தாராளமயக் கொள்கையின் விளைவாக, கடந்த 20 ஆண்டுகளில் உருவான புதிய நடுத்தர வர்க்கத்தின் வாரிசுகள். அந்த நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை நகல் எடுத்து வாழ முயற்சிக்கும், அதற்கும் கீழ் உள்ள அடுக்கின் மக்களைப் பற்றியே நாம் பேச வேண்டும். இன்று வீதிகள்தோறும் வளைய வருபவர்கள் இவர்கள்தான். இவர்களுக்குப் போராட்டம் என்றால் மெழுகுவத்தி ஏந்துவது, சமூகப் பொறுப்பு என்றால் ஊழலுக்கு எதிராக 'மிஸ்டு கால்' கொடுப்பது, வேலையெனில், கேம்பஸில் தேடிவந்து தரப்படுவது, மகிழ்ச்சி என்பது வார இறுதிக் குடி, விளையாட்டு எனில் வீடியோ கேம்ஸ், அறிவு என்பது கூகுள் ஆப்ஸ்... இவ்வளவுதான் இவர்களின் உலகம். இத்தகைய எண்ண ஓட்டமும் வாழ்க்கைமுறையும் உள்ள இருவர் சேர்ந்து செய்யும் காதல், அடிப்படையிலேயே ஆழம் இன்றி இருப்பதில் வியப்பு இல்லை.

இந்தப் பின்னணியில் இவர்கள், வீட்டைப் பகைத்து, உறவுகளைப் பகைத்து செய்யும் காதல் திருமணம் தோல்வியில் முடிந்தால், அது அவர்களின் சொந்தப் பிரச்னையாக மட்டும் முடிவது இல்லை. காதலுக்கு எதிரான பிரசாரத்துக்கு இத்தகைய தோல்விகள் வலுசேர்க்கின்றன. அது மேலும் சாதியை இறுக்கமாக்குவதுடன், பெண்கள் மீதான வீட்டாரின் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கின்றன. ஆகவே, முன் எப்போதையும்விட நிதானமாகவும்,  கவனமாகவும், பொறுப்புடனும் காதலர்கள் நடந்துகொள்ளவேண்டிய காலம் இது. அவர்களை அவ்வாறு சுதந்திரச் சிந்தனை உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.

இனிவரும் காலத்தில் பெற்றோர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பெரும்பாலான இளைஞர்கள் காதல் திருமணம்தான் செய்யப்போகிறார்கள். இதை எந்தப் பெற்றோராலும் அணைபோட்டுத் தடுத்துவிட முடியாது. காலத்தைப் பின்நோக்கி நகர்த்த முடியாது. இந்த நிலையில் பிள்ளைகளின் சிந்தனையை ஒழுங்குபடுத்தினால் அவர்கள் தேர்வுசெய்யும் வாழ்க்கைத் துணையும் சரியானவர்களாக இருப்பார்கள். மாறாக நகை, பணம், வரதட்சணை என்று பெற்ற பிள்ளையை ஒரு ரியல் எஸ்டேட் முதலீடு போல நினைத்தால், கடைசியில் அவர்கள் ஒரு பெண்ணையோ, பையனையோ காதலித்து உங்கள் முதலுக்கே வேட்டு வைப்பார்கள்.

இதைத் தடுக்கவே முடியாது!

Monday, February 10, 2014

They Don't Have to Stay Long

They don’t have to stay long

 
Being a veterinarian, I had been called to examine a ten-year-old Irish Wolfhound named Belker. The dog’s owners, Ron, his wife, Lisa, and their little boy, Shane, were all very attached to Belker and they were hoping for a miracle.

I examined Belker and found he was dying. I told the family we couldn’t do anything for Belker and offered to perform the euthanasia procedure for the old dog in their home.

As we made arrangements, Ron and Lisa told me they thought it would be good for six-year-old Shane to observe the procedure. They felt as though Shane might learn something from the experience.

The next day, I felt the familiar catch in my throat as Belker’s family surrounded him. Shane seemed so calm, petting the old dog for the last time, that I wondered if he understood what was going on. Within a few minutes, Belker slipped peacefully away.

The little boy seemed to accept Belker’s transition without any difficulty or confusion. We sat together for a while after Belker’s death, wondering aloud about the sad fact that animal lives are shorter than human lives. Shane, who had been listening quietly, piped up, “I know why.”

Startled, we all turned to him. What came out of his mouth next stunned me. I’d never heard a more comforting explanation.

He said, “People are born so that they can learn how to live a good life — like loving everybody all the time and being nice, right?” The six-year-old continued, “Well, dogs already know how to do that, so they don’t have to stay as long.”

 

_Author Unknown

 

ஜெயமுண்டு பயமில்லை மனமே!

நம் நாட்டு இளைஞர்களுக்கு எல்லாத் திறமைகள் இருந்தும் மற்ற நாட்டு இளைஞர்களைப்போல முன்னேற முடியவில்லை. இதற்கு முக்கியக் காரணம், நம் மனதில் பரிபூர்ணமாக நிறைந்திருக்கும் பயம். உலகப் போருக்குப் பிறகு நிர்மூலமாகிப்போன ஜப்பான் பயமே இல்லாமல் எழுந்து நடந்து அதிநவீன நாடாக உலகத்தை வலம் வருகிறது.

பயம்தான் ஒருவரைத் தப்புச் செய்யத் தூண்டுகிறது. கல்லூரியில் அசைன்மென்ட் எழுதாமல் போகிறோம். பேராசிரியர் கேட்டால், சார், உடம்புச் சரியில்லை என்று பொய்ச் சொல்கிறோம். ஏன் இந்தப் பொய்? பேராசிரியர் திட்டுவார் என்கிற பயம்.

அற்ப காரணத்துக்காக ஆபீஸில் லீவு போடுகிறோம். ஏன் என்று கேட்டால், சார், பயங்கரத் தலைவலி என்று பொய்ச் சொல்கிறோம். உண்மையைச் சொன்னால், மேலதிகாரி திட்டுவார் என்கிற பயம்தான் இப்படி ஒரு பொய்யைச் சொல்லவைக்கிறது.

இப்படி ஒவ்வொரு விஷயத் திலும் நாம் பயப்படுவதால், அதுவே நம்முடைய பெரிய பலவீனமாகி விடுகிறது. பயம் என்பது ஒரு மனரீதியான உணர்வுதான். கோபம், அழுகை, சந்தோஷம், ஏக்கம், துக்கம், சிரிப்புப் போன்றதுதான் அது. மற்ற உணர்வுகள் ஏற்படும்போது உடல் எவ்வாறு 'ரியாக்ட்' செய்கிறதோ, அதைப் போன்று பயம் ஏற்படும்போதும் உடலில் சில மாற்றங்கள் உண்டாகும். அதைக் கட்டுப்படுத்துவதற்கான மனப் பயிற்சி நமக்கு இருந்தால், எளிதில் அதிலிருந்து வெளியே வந்து நம்மால் பல சாதனைகளைச் செய்யமுடியும்.

பயம் ஏன் உண்டாகிறது? இதற்கு  முக்கியமான நான்கு காரணங்கள்.

1. சிறு வயது அனுபவங்கள்!

சின்ன வயதில் நாய்க் கடித்திருக்கும். அப்போதிலிருந்தே நாயைப் பார்த்தால், அரண்டு ஓடுவோம்.

2. பிறருடைய அனுபவங்களின் பாதிப்பு!

நமக்குத் தெரிந்த நண்பர்களுக்கோ, நம்முடைய சகோதரர்களுக்கோ ஏதாவது நடந்தால் நமக்கும் அதுமாதிரி நடந்துவிடுமோ என்கிற பயம்.

3. நம்பிக்கைகள்!

சில நம்பிக்கைகள் எங்கே இருந்து பிறந்ததுன்னு தெரியாமல் நமக்குள்ளேயே இருக்கும். பூனைக் குறுக்கே போனால் அபசகுனம் என்று நினைத்துப் பயப்படுகிறவர்கள் எத்தனையோ பேர்.

4. காரணமற்ற பயம்!

நாம் எந்த முயற்சியும் எடுக்காமல், ஒரு காரியத்தில் தோற்றுப் போய்விடுமோ என்கிற பயம். உதாரணத்துக்கு, பரீட்சைக்குப் படிக்காமலேயே, ஃபெயிலாகி விடுவோமோ என்கிற பயம்.

இத்தகைய பயங்களுக்கு நாம் மதிப்பளிக்கத் தொடங்கிவிட்டால், அதுவே நமக்கு ஒரு தடையாகிவிடும். அதன்பிறகு, நம்மால் எந்தவொரு விஷயத்தையும் நம்பிக்கையுடன் செய்ய முடியாது. எந்த விஷயத்தைச் செய்தாலும் அதில் ஒரு சந்தேகம் நமக்கு இருந்துகொண்டே இருக்கும். இந்தப் பயம் ஒருகட்டத்தில் எல்லை மீறிப்போய், பயம் என்பதே இல்லாத ஒரு மனநிலை நமக்கு வந்தாலும் ஆச்சர்யமில்லை. இந்த அதீதமான  மனநிலையிலும் ஒருவர் தவறு செய்வதற்கே நிறைய வாய்ப்பு உண்டு.


உங்களிடம் உள்ள பயங்கள் பற்றி நீங்கள் புரிந்துகொள்ளச் சில எளிய வழிகள்.

 உங்களுடைய பயங்கள் என்னென்ன என்பதை எழுதுங்கள். உதாரணத்துக்கு, 'தன்னம்பிக்கை இல்லாமை' ஒரு காரணம்.

 ஒவ்வொரு பயத்திலிருந்தும் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங் களையும், அதிலிருந்து நீங்கள் மீள முயற்சித்ததையும் எழுதுங்கள்.

 உங்களுக்கு ஏற்படும் வெற்றிகளை நினைத்து சந்தோஷப்படுங்கள்.

 உங்களுக்கு உண்மையென்று புலப்பட்ட நம்பிக்கைகளை வரிசைப்படுத்துங்கள்.

 வெற்றிபெற்ற மனிதர்கள் எப்படி யோசித்து, பயத்திலிருந்து வெளியில் வந்தார்கள் என்று பார்த்தால், சில வழிகள் நமக்குத் தெரியும்.

1. எதற்கெடுத்தாலும் நெகட்டிவ்வாக யோசிக்காமல் இது நடக்காதோ என்ற தேவையற்ற கவலைகள் இல்லாமல் இருப்பது.

2. நம்மால் கண்டிப்பாக இதைச் செய்யமுடியும் என்கிற தன்னம்பிக்கையோடு இருப்பது.

3. வாழ்க்கையில் குறிக்கோளோடு வாழ்கிறோம் என்ற உறுதியோடு இருப்பது.

4. நாம் உண்டு, நம் வேலை உண்டு என்றே இருந்து நமக்குள்ளேயே ஒரு வட்டம் வரைந்துகொண்டு இருக்காமல், மற்றவர்களோடு சகஜமாகப் பழகுவது.

5. உலகத்தில் யாரோ ஒருவருக்குத் தவறாக நடந்த விஷயம் நமக்கு நடந்துவிடுமோ என்று பயப்படாமல் இருப்பது.

உலகத்தில் எந்த ஒரு சம்பவத்தையோ அல்லது ஜெயித்தவர்களையோ உதாரணமாக எடுத்துக்கொண்டால், அவர்களின் தைரியம்தான் அவர்களைத் தனிமனிதராக  எழுச்சியடைய வைத்திருக்கும்.

ஒல்லிக்குச்சியான காந்தி ஒரு பேரரசையே மிரட்டக் காரணம், அவரிடம் இருந்த தைரியம்தான். நெல்சன் மண்டேலாவிடம் இருந்த தைரியம்தான் தென் ஆப்பிரிக்காவின் அடக்குமுறை அரசை எதிர்த்துப் போராட வைத்தது

.

பயமில்லாமல் ஜெயிக்க  என்னதான் செய்ய வேண்டும்?

 உங்களைவிட மேலான சக்தி ஒன்று உள்ளது என்று நம்புங்கள்.

  நல்லதே நடக்கும் என்றே நினைக்கப் பழகுங்கள்.

 உலகில் படைக்கப்பட்ட பொருட்கள் யாவும் நம் நண்பர்கள் என்று பழகுங்கள்.

   உங்கள் மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள்.

 உங்கள் திறமைகளை நீங்கள் முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். தோல்வி மனப்பான்மை வேண்டாம். தாழ்வு மனப்பான்மையைத் தவிருங்கள்.

எதற்காக நாம் பயப்படுகிறோமோ, அதனைக் கொஞ்சம்

கொஞ்சமாகப் பழகிக்கொள்ளுங்கள். உதாரணமாக, தண்ணீர் பயம் என்றால் மற்றவர்கள் துணையுடன் நீச்சல் பழகுங்கள்.

வீணான குழப்பத்தைத் தவிருங்கள்.

8. பயம் என்பது ஒரு நினைப்பே. அது எந்தவிதப் பாதிப்பையும் உண்டு பண்ணுவதில்லை என்று அழுத்தமாக மனதில் பதியுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்று உணருங்கள்.

பயந்து பயந்து பதுங்கி வாழ்ந்தால், இருப்பதையும் இழந்துவிடுவோம்! பயமில்லாமல் இருந்தால் பாற்கடலும் நமக்குச் சொந்தமாகும்! ஜெயமுண்டு பயமில்லை!

Sunday, February 9, 2014

தேவையான பொருளை வாங்கிக்கொண்டு வருவதற்கு பத்து வழிகள்..!

எல்லாப் பொருட்களையும் வாங்கவேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை? ஏதோ ஒரு பொருளை வாங்க சூப்பர் மார்க்கெட்டில் நுழைவோம். வாங்க நினைத்த பொருளோடு,  வாங்க நினைக்காத நான்கைந்துப் பொருட்களை வாங்குவோம். கடையைவிட்டு வெளியே வந்தபிறகு ஏன் இத்தனை பொருட்களை வாங்கினோம் என்று தெரியாமல் முழிப்போம். இதற்குப் பெயர்தான் 'இம்பல்ஸ் பையிங்'. அதாவது, நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், கண்ணுக்குப்பட்டதை எல்லாம் வாங்க நினைக்கிற மனநிலை. இந்த மனநிலையைத் தூண்டி, தங்கள் குவித்து வைத்திருக்கிற பொருட்களை விற்பதற்கான அத்தனை வேலைகளையும் பெரிய மால்களும், சூப்பர் மார்க்கெட்களும் பக்கவாகச் செய்கின்றன. இந்த வலையில் சிக்காமல், தேவையான பொருளை மட்டும் வாங்கிக்கொண்டு வெளியே வருவதற்கு இதோ பத்து வழிகள்..!


1. கிரெடிட் கார்டு வேண்டாம்!

பெரிய மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களுக்கு ஷாப்பிங் செல்லும்போது கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைத் தவிர்க்கப் பாருங்கள். ஏனெனில், கிரெடிட் கார்டுதான் இருக்கிறதே என்று பொருட்களை வாங்கிக் குவிக்கும் மனநிலைக்குச் சட்டென வந்துவிடுவீர்கள். எனவே, முடிந்த மட்டும் ரொக்கமாக பணம் தந்து பொருளை வாங்குங்கள்.

 2. தேவையான பொருள் மட்டும்..!

நீங்கள் ஷாப்பிங் செல்லும்முன், உங்களுக்கு என்னென்ன பொருள் தேவை என்று பட்டியல் போடுங்கள். எது உடனடியாகத் தேவையோ, அது மட்டுமே ஞாபகத்துக்கு வரும். சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தவுடன் அந்தப் பொருட்களை மட்டும் வாங்குங்கள். அதுதவிர்த்து கண்ணில்படும் பொருட்களை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். பிற்பாடு தேவைப்பட்டால் வாங்குங்கள்.


3. டைம்பாஸ் ஷாப்பிங்!

வீட்டில் போரடிக்கிறது, ஷாப்பிங் போனால் பொழுதுபோறதே தெரியாது என்று நினைத்து ஷாப்பிங் போகாதீர்கள். ஷாப்பிங் போனால் பொழுதுபோகும்; கூடவே பர்ஸும் காலியாகும். எனவே, உங்கள் ஷாப்பிங்கை அதிகபட்சம் மாதம் இருமுறை மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள்.

 4. ஆஃபர் வலை!

இது வாங்கினால் அது ஃப்ரீ, அது வாங்கினால் இது ஃப்ரீ என ஆஃபர்கள் சூப்பர் மார்க்கெட்களில் அடிக்கடி போடப்படும். இந்த ஆஃபர் இன்னும் சிலநாட்கள் மட்டுமே என்பார்கள். இந்த ஆஃபரை நாம் சுதாரிப்போடு கேட்காவிட்டால், அதில் நாமும் சிக்கி, தேவை இல்லாத பொருட்களை வாங்குவோம். தினம் ஆஃபர் சேல்ஸ் இருக்கும்! அவசரப்பட வேண்டாம்!

5. விளம்பர மாயை!

50% தள்ளுபடி, 60% தள்ளுபடி என்கிற மாதிரியான அதிரடி விளம்பரங்களைப் பார்த்து ஷாப்பிங் செல்லாதீர்கள். விளம்பரங்கள் சொல்கிறமாதிரி 50%, 60% தள்ளுபடி சில பொருட்களுக்கு மட்டுமே  இருக்கும். குறைந்த எண்ணிக்கையில் எந்த சாய்ஸும் இல்லாமல் தரத்திலும் குறைவானதாக அந்தப் பொருட்கள் இருக்கும். கடைக்குப் போய் வெறுங்கையோடு திரும்ப மனமில்லாமல், வேறு ஏதேதோ பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்புவோம். அதேபோல்இணையதளத்தில் அதிரடி ஆஃபர் விளம்பரங்களை நீங்கள் பார்க்க நேரிடும். அதுபோன்ற சமயங்களில் கட்டுப்பாடு கட்டாயம் தேவை.  

 6. மளிகைக் கடைகளே பெஸ்ட்!

உங்கள் வீட்டுக்கு அருகில் மளிகைக் கடைகளில் உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குங்கள். அங்குதான் ஆளை விழுங்கும் ஆஃபர்கள் அடிக்கடி இருக்காது. எனவே, ஆஃபருக்காகத் தேவையில்லாத பொருளை வாங்கவேண்டிய எந்த நிர்ப்பந்தமும் இருக்காது. பணமும் அதிகம் செலவழியாது.

 7. சரியான விலை தாருங்கள்!

நீங்கள் வாங்கப்போகும் பொருளுக்கான விலையை முதலில் உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கடைகளில் விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். பெரிய கடைகளில் அதைவிடக் குறைந்த விலையில், ஆனால் அதே அளவு எடையில், அதே அளவு தரத்தில் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்.  ஆஃபர் என்கிற பெயரில் விலை குறைந்த ஒரு பொருளோடு, தேவையில்லாத வேறொரு பொருளை நீங்கள் வாங்குவதைவிட, கொஞ்சம் அதிக விலை தந்து உங்களுக்குத் தேவையான பொருளை வாங்கிவிடலாமே!

 8. அவசரம் வேண்டாம்!

பெரிய கடைகளுக்குப் போய் அவசர அவசரமாக ஷாப்பிங் செய்யாதீர்கள். இந்த அவசரம் நமக்கான  தேவை மற்றும் பட்ஜெட் ஆகியவற்றைப் பற்றி சிந்திக்கவிடாமல், நஷ்டத்தில் நம்மை வாங்கவைத்துவிடும். அதேபோல, மிக நிதானமாகவும் ஷாப்பிங் செய்யவேண்டாம். ஒவ்வொரு பொருளையும் அதிகநேரம் பார்த்துக்கொண்டே இருந்தால், அதை வாங்காமல் வெளியே வரமாட்டோம்.

9. செல்ஃப் ஆடிட்டிங் தேவை!

அதிரடி ஆஃபரில் இதுவரை நீங்கள் உங்களுக்குத் தேவையான சரியான பொருளைத்தான் வாங்கி இருக்கிறீர்களா? எந்தெந்தப் பொருளைத் தேவையில்லாமல் வாங்கி இருக்கிறீர்கள்? அதனால் உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் என்ன? என்பதை என்றைக்காவது வீட்டில் ரிலாக்ஸ்டாக இருக்கும்போது உங்களுக்கு நீங்களே ஆடிட் செய்துபாருங்கள்! நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது உங்களுக்கே புரியும்!

10. தேவை, உடன் ஒருவர்!

நீங்கள் ஷாப்பிங் செய்யப்போகும் முன்பு உங்களைப் பற்றி நன்கு அறிந்த, உங்கள் நலனில் அக்கறைகொண்ட ஒருவர் (உங்கள் கணவரையோ/மனைவியையோ) உடன் இருந்தால், தேவையில்லாத பல பொருட்களை நாம் வாங்கத் துணிய மாட்டோம். நம் பர்ஸும் எப்போதும் கனமாகவே இருக்கும்!

Saturday, February 8, 2014

முடிவெடுக்கத் தெரியாத நிலையிலும் 'ஐ லவ் யூ’ சொல்லிவிட்டாள்.

வீட்டில், 13 வயது தீபா மட்டுமே தனியாக இருக்கிறாள். கதவைத் தட்டி, 'ஐ லவ் யூ' சொல்லி 'பொக்கே' கொடுத்தபடி உள்ளே நுழைகிறான்... 35 வயது ஆனந்த். ஏதோ புது உலகத்தில் புகுந்த மாதிரி அவனை அப்படியே வாரியணைத்து முத்தமழை பொழிகிறாள் தீபா!

பெங்களூரில் இருக்கும் பிரபல ஷாப்பிங் மால் ஒன்றில், மொபைல் ஷோரும் வைத்திருப்பவன் ஆனந்த். அவனை, 'ஹான்ஸ்... ஹான்ஸ்' என்றுதான் செல்லமாக அழைப்பாள் தீபா!

'அதெல்லாம் கிடக்கட்டும்... காதலிக்கிற வயதா இது..?' என்று கேட்கத் தோன்றுகிறதுதானே!

'அவதான் விவரமில்லாத சின்னப்பொண்ணு... ஏழு கழுதை வயசாயிட்ட அவனுக்குக்கு கூடவா அறிவில்ல?' என்று கோபம் பொங்குகிறதுதானே!

இதையெல்லாம் அடக்கிக் கொண்டுதான், தீபாவின் கதையை நான் கேட்டு முடித்தேன்!

அக்கா மற்றும் தங்கை என இரண்டு பூக்களுக்கு நடுவில் பூத்தவள் தீபா. அப்பாவுக்கு, கைநிறைய சம்பளத்துடன் தனியார் கம்பெனியில் வேலை. சம்பாத்தியம் முழுவதையும் மகள்களுக்கே செலவு செய்தார். மூத்த மகளுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துவிட, கையிருப்பு முழுவதும் அதற்கே கரைந்துபோனது. இதனால், குடும்பத்தின் பணத் தேவைகளுக்கு தடுமாற ஆரம்பித்தார் அப்பா.

தந்தையின் நிலையைப் புரிந்துகொள்பவளாக இருந்தாள் மூத்த மகள். கடைசி மகள் 8 வயது சிறுமி என்பதால், அவளாலும் பெரிதாகப் பிரச்னை இல்லை. ஆனால், இரண்டுங்கெட்டான் வயதில் இருந்த தீபாவுக்கு... அப்பாவின் சூழல் புரிந்தாலும், சகதோழிகள் வாங்கிக் குவிக்கும் பொருட்களைப் பார்க்கும்போதும்... அவர்களின் ஆடம்பரச் செலவுகளைப் பார்க்கும்போதும்... அழுகை அழுகையாக வந்தது. தோழிகள் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸுக்குள் படையெடுக்கும் போதெல்லாம் கையில் பணமில்லாமல் கூனிக் குறுகியே நடந்தாள்.

ஆடம்பரத்தை சொல்லித் தந்த அளவுக்கு, குடும்பத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்களைப் பற்றியும்... அதையெல்லாம் சமாளிக்கும் பக்குவத்தைப் பற்றியும் தீபாவுக்கு பெற்றோர் சொல்லித் தரவில்லை. விளைவு..? ஆடம்பர வாழ்க்கையைத் தேடி தீபாவின் மனம் அலைபாய்ந்தது.

ஒரு நாள், பள்ளித் தோழிகளுடன் பிரபல ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் சென்றபோதுதான், ஆனந்தை சந்தித்தாள். அடிக்கடி ஷாப்பிங்... ஆனந்துடன் பேசுவது என்று சில மாதங்கள் உருண்டன. தீபா, அடிக்கடி தொட்டுத் தொட்டுப் பார்த்து ரசித்து வாங்க முடியாமல் ஏங்கிப் போன புதுமாடல் 'ஐ போனை' ஒரு நாள் பரிசாகக் கொடுத்து 'ஐ லவ் யூ தீபா' சொன்னான் ஆனந்த். போனை வாங்கிக் கொண்டவளால், அத்தனை எளிதாக காதலை வாங்கிக்கொள்ள முடியவில்லை. 'யோசித்து சொல்கிறேன்...' என்று வீட்டுக்கு ஓடிவிட்டாள்.

தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் காட்டப்படும் 'காதல்' காட்சிகள் திரும்பத் திரும்ப அவள் மனத்திரையில் ஓட ஆரம்பித்தன. காதல் குறித்து தீவிர ஆராய்ச்சி செய்யவேண்டும் போல் இருந்தது தீபாவுக்கு. 'காதல்னா என்ன... காதல் வந்தா என்ன நடக்கும்... ஹான்ஸை காதலிச்சா அப்பா, இதுநாள் வரைக்கும் வாங்கித் தந்ததெல்லாம், இனி நமக்கு கிடைக்குமா?'

- சிறுமி தீபா, சிறுமியாகவே யோசித்தாள். ஒரு முடிவெடுக்கத் தெரியாத நிலையிலும், ஆனந்துக்கு 'ஐ லவ் யூ' சொல்லிவிட்டாள். பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொண்டு, அவனுடன் சுற்ற ஆரம்பித்தாள். மகளின் கல்வி குறித்தோ... அவளின் நடவடிக்கைகள் குறித்தோ... பெற்றோர் கண்டுகொள்ளாமலிருந்தது, ஆனந்துக்கும் வசதியாக போய்விட்டது. தொடுவதும் உரசுவதுமாக அவளை வேறு ஒரு உலகத்துக்கு கொண்டு போனான்.

தீபாவின் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வுக்காக குடும்பமே சென்னை வந்துவிட, தீபா மட்டும் பள்ளியில் முக்கிய தேர்வு இருப்பதாக வீட்டிலேயே தங்கிவிட்டாள். 'தனியாக இருக்கிறேன்' என்பதை ஆனந்திடம் அவள் சொல்ல, இதற்காகவே காத்திருந்தவன், சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறான். அதுதான்...  அந்த 'பொக்கே சந்திப்பு'!

கட்டிப் பிடித்து... முத்தம் கொடுத்து என்று தீபாவை அவன் உணர்ச்சிவசப்பட வைத்துக் கொண்டிருக்க... திடுதிப்பென்று வந்து கதவைத் தட்டுகிறார் தீபாவின் உறவுக்காரர் ஒருவர். தீபா - ஆனந்த் இருவருமே அதிர்ச்சியில் உறைய... ஆனந்துக்கு தர்ம அடி விழுகிறது... அதேநேரம், அவனுடைய இன்னொரு முகமும் வெளிச்சத்துக்கு வருகிறது. ஏற்கெனவே திருமணமான அவனுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தையும் இருக்கிறது.

'தீபா தனியா இருக்கா... முடிஞ்சா ஒரு கண் வெச்சுக்கோங்க' என்று பட்டும்படாமலும் பெற்றோர் சொல்லிச் சென்றிருந்தாலும், அக்கறையுடன் அந்த உறவுக்காரர் எட்டிப் பார்த்ததால், அவனுடைய கோரப் பிடியில் இருந்து தப்பினாள் தீபா. ஆனால், விஷயம் ஊருக்கே பரவிவிட, குடும்பமே ஊரை காலி செய்துவிட்டு கண்காணாத இடத்தில் தற்போது தஞ்சம் புகுந்திருக்கிறது!

ஒரு குடும்பமே நடுத்தெருவில் வந்து நிற்க காரணம் தீபாவா... சரிவர கண்காணித்து வளர்க்காத பெற்றோரா?

ஆனந்த்துகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் ஒரு அநியாய சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது இங்கே யாருக்கும் தெரியாத ரகசியமல்ல. இப்படிப்பட்ட சூழலில், பெற்றோர்கள்தானே, தீபாக்களை காப்பாற்ற வேண்டும். குழந்தையின் மீது அக்கறையும் அன்பும் காட்டியிருந்தால்... தீபாவுக்கும், குடும்பத்துக்கும் இந்தக் கொடுமைகள் வந்து சேர்ந்திருக்காதே!

காதல்... யாரோ ஒருவரின் அச்சுறுத்தலுக்காக வரக்கூடியதா.. அப்படி வந்தால், அந்தக் காதலின் நிலை என்னவாக இருக்கும்

Friday, February 7, 2014

முதல் உதவி இதுதான்

''அம்மா... விளையாடுறப்ப விழுந்துட்டேன்... முட்டியில ரத்தம் வருது!'' என்று உங்கள் செல்லக் குழந்தை ஓடிவரும்போது, ''சொன்னாக் கேட்டாத்தானே... எங்கே அந்த டெட்டால் பாட்டிலை எடு... இங்கே கத்தரி இருந்துச்சே... யார் எடுத்தது? பிளாஸ்டர் தீர்ந்துபோச்சா... அடடா!'' என்று அம்மாக்கள் டென்ஷனாகும் காட்சிதான் பல வீடுகளில் அரங்கேறும். குழந்தைகள் இருக்கும் வீடோ, பெரியவர்கள் இருக்கும் வீடோ... பொதுவாக எல்லோர் வீடுகளிலும் இருக்க வேண்டிய முக்கியமான விஷயம் - முதல் உதவிப் பெட்டி.

முதல் உதவி என்பது, சின்னக் காயம் பட்டவர்களுக்கு மருந்து போடுவதில் தொடங்கி, பெரிய விபத்தில் சிக்கியவர்களுக்கு உயிர் காப்பது வரை மிக உன்னதமான விஷயம். ஆரோக்கியத்தில் அக்கறை இருக்கும் ஒவ்வொரு மனிதரும் தெரிந்துகொள்ள வேண்டிய, செய்ய வேண்டிய சிறந்த உதவி, முதல் உதவி!

சிறு காயம் முதல் விபத்து வரை அனைத்துப் பாதிப்புகளுக்கும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கு முன், 'முதலில் என்ன செய்ய வேண்டும்?' என்பது மிக முக்கியம். 'என்ன செய்ய வேண்டும்' என்பதைவிட, சில சூழ்நிலைகளில் என்ன செய்யக் கூடாது என்பதையும் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான வழிகாட்டலை டாக்டர் விகடனின் இந்த இணைப்பிதழ் உங்களுக்கு முழுமையாகத் தந்திருக்கிறது.

அவசர காலத்தில் கைகொடுக்கும் இந்தக் குறிப்புகள் அனைத்தையும் வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள். இதை எப்போதும் உடன்வைத்திருந்தால், ஆபத்துக் காலத்தில் கைகொடுக்கும். எதிர்பாராமல் நேரும் காயங்கள், விபத்துக்கள், விஷக்கடி மற்றும் பல பிரச்னைகளுக்கு நீங்களே முதல் உதவி செய்யலாம். அதன் பிறகு மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்.

அவசர காலங்களில் செய்ய வேண்டிய முதல் உதவிகள் குறித்து, சென்னை திருவல்லிக்கேணியில் இயங்கும் அவசர கால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின், டாக்டர் அட்லின் திவ்யா இஸ்ரேல், டாக்டர் அபிஷாந்த் பிரபு, டாக்டர் கே. சுந்தர்ராஜன், டாக்டர் பாபுலால் சௌத்ரி மற்றும் டாக்டர் வெங்கட கிருஷ்ண ரெட்டி ஆகியோர் விவரிக்கின்றனர்:

நெஞ்சு வலி போன்ற மிகத் தீவிரமான பாதிப்பு ஏற்படும்போது, 'கோல்டன் ஹவர்ஸ்' எனப்படும் அந்தச் சில மணித்துளிகளுக்குள் மருத்துவரிடம் கொண்டுசெல்ல வேண்டும். அதற்குள், அவருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், முதல் உதவி செய்யப்பட வேண்டும்.

முதல் உதவியின் முக்கியமான அடிப்படைக் கொள்கைகள் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். இவை எல்லா அவசர சிகிச்சைகளுக்குமே பொதுவான விதிகள்.

விதி 1:

பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ... நம்மால் எந்த ஊறும் நேர்ந்துவிடக் கூடாது. 'உதவி செய்கிறோம்' என்று போய், நம்மை அறியாமல் அவர்களுக்கு எந்தக் கூடுதல் கஷ்டத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது. சாதாரண எலும்பு முறிவாக இருந்தது, கூட்டு எலும்பு முறிவாக மாறிவிட நாமே காரணமாக இருந்துவிடக் கூடாது.

உதாரணத்துக்கு, ஒரு வாகன விபத்தில் அடிபட்டவரின் ஹெல்மெட்டைக் கழற்றும்போது கூட, மிக மிகக் கவனமாகக் கழற்ற வேண்டும். ஏனெனில், கழுத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல், நிலையாக இருப்பது முக்கியம். அதேபோல் கட்டடத்தின் உயரத்திலிருந்து ஒருவர் விழுந்துவிட்டால், அவரைத் தூக்கும்போது கழுத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

விதி 2: பாதுகாப்பு மிக முக்கியம். எந்த ஒரு அவசரகட்டத்திலும் மூன்று நபர்கள் இருப்பார்கள். அதாவது, பாதிக்கப்பட்டவர், உதவச் செல்லும் நாம், நமக்கு அருகில் இருப்பவர்கள்... இந்த மூன்று பேருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

விதி 3: பொது அறிவு முக்கியமாகத் தேவை. அங்கே உடனடியாகக் கிடைக்கும் அல்லது இருக்கும் வசதிகளைவைத்து எப்படி உதவலாம் என்ற சமயோசித புத்தியுடன் சாமர்த்தியமாகச் செயல்படும் வேகமும் வேண்டும்.

ரத்தக்காயம் / வெட்டுக்காயம்:

குழந்தைகள் விளையாடும்போதும் சாதாரணமாக நடக்கும்போதும் கீழே விழுந்து அடிபடுவதும் ரத்தம் வருவதும் சகஜம். அப்போது, காயம்பட்ட இடத்தை, குழாயிலிருந்து வரும் சுத்தமான நீரால் (running water) கழுவ வேண்டும். சோப் போட்டுக் கூடக் கழுவலாம்.

காயம்பட்ட இடத்தில் ரத்தம் வந்தால், சுத்தமான துணியால் அழுத்திக் கட்டுப்போட வேண்டும். பவுடர், சந்தனம், மஞ்சள், காப்பித் தூள் என்று எந்தப் பொருளையும் காயத்தின் மீது போடக் கூடாது.

சமீபத்தில் 'டெட்டனஸ் டெக்ஸாய்டு' தடுப்பூசி போடப்பட்டிருந்தால், திரும்பவும் அது போடத் தேவை இல்லை. இப்போதெல்லாம் எல்லோருமே தொடர்ந்து தடுப்பூசிகள் போட்டு வருவதால், 10 வருடங்களுக்கு ஒருமுறை 'டி.டி' போட்டால் போதும்.

குழந்தைகளுக்கு உடலில் வலுக்குறைவு என்பதால், வெட்டுக்காயம், பூச்சிக்கடி போன்ற என்ற விபத்தாக இருந்தாலும், அவர்களால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே முதல் உதவிக்குப் பிறகு, உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது.

ரத்தக் கசிவு:

சிறிய காயம், கத்தி அல்லது பிளேடால் ஏற்பட்ட வெட்டுக் காயம், கீழே விழுந்து அடிபட்டது என ரத்தக் கசிவு எப்படி ஏற்பட்டாலும், எங்கிருந்து ரத்தம் வருகிறது என்பதை முதலில் கண்டறிந்து, ரத்தம் வருவதை நிறுத்த வேண்டும். வாய், மூக்கு, கை, கால், நெற்றி என எங்கிருந்து ரத்தம் வந்தாலும் சுத்தமான துணியைவைத்து அழுத்தி, ரத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ஒருவேளை ரத்தம் மூக்கிலிருந்து வந்தால், அவரை முன்னோக்கிக் குனியச்செய்து, மூக்கின் மென்மையான முன்பகுதியை, விரல்களால் பிடித்துக் கொண்டு, வாயால் மூச்சுவிடச் செய்ய வேண்டும். மூக்கிலிருந்து வரும் ரத்தத்தை அவர் விழுங்கிவிடக் கூடாது. அதனால்தான் முன்னால் குனியச் சொல்கிறோம். தலையைப் பின்பக்கமாக சாய்த்துவிடக் கூடாது. அப்படி சாய்த்தால், ரத்தம் வாய்க்குள் போய், நுரையீரலுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே நிமிரவே கூடாது. மூக்கு சிந்தச் செய்யவும் கூடாது.

காதிலிருந்து ரத்தம் கசிந்தால், சுத்தமான துணியைவைத்து ரத்தத்தை நிறுத்த வேண்டும். காதுக்குள் எதையும் போட்டுக் குடையக் கூடாது.

குறிப்பு: ரத்தக் கசிவு அல்லது காயத்தின் மீது துணி போட்டால், அதை அப்படியே விட்டுவிட வேண்டும். ரத்தம் நின்றுவிட்டதா என்று பார்க்க, அதைத் திரும்பவும் எடுத்து எடுத்துப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால், நின்றிருந்த ரத்தம் மீண்டும் வர ஆரம்பித்துவிடும். முதலில் போட்ட துணி, ரத்தத்தால் நனைந்துவிட்டால், அதன் மேலேதான் அடுத்தடுத்த துணி அல்லது டிரெஸ்ஸிங் பஞ்சைப் போட வேண்டுமே தவிர, முதலில் போட்ட துணியை எடுத்துவிட்டுப் போடுவது தவறான செய்கை.

வெட்டுப்படுதல்:

கை, கால் விரல் அல்லது கை போன்ற உறுப்புகள் ஏதேனும் விபத்தில் துண்டிக்கப்பட்டுவிட்டால், துண்டிக்கப்பட்ட உறுப்பை, சுத்தமான ஈரத்துணியில் சுற்றி, ஒரு பாலித்தீன் கவரில் போட்டு, அதை ஐஸ்கட்டிகள் நிரம்பிய பெட்டியில் போட்டு உடனடியாக மருத்துவமனைக்கு, பாதிக்கப்பட்டவருடன் எடுத்துச்செல்ல வேண்டும். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, துண்டிக்கப்பட்ட உறுப்பை நேரடியாக ஐஸ்கட்டிகளுக்குள் போடக் கூடாது. சுற்றிலும் ஐஸ் இருக்கும் பையில் வைத்து, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டுசெல்ல வேண்டும்.

காது / மூக்கினுள் ஏதேனும் பொருளைப் போட்டுக்கொண்டால்:

காதுக்குள் ஏதாவது பொருள் போய்விட்டாலும், எடுக்க முயற்சிக்க வேண்டாம். குச்சி, 'பட்ஸ்' போன்றவற்றால் எடுக்க முயற்சித்தால், செவிப்பறை பாதிப்படைய வாய்ப்பு உண்டு. அதனால் காது கேட்காமலே கூடப் போய்விடலாம். எனவே, உடனே காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் போய்விடுவது நல்லது.

காதுக்குள் ஏதேனும் பூச்சி போய்விட்டால், டர்பன்டைன் எண்ணெய் சில துளிகள் விடலாம். பூச்சி இறந்துவிடும். பிறகு அதுவே வெளியே வரவில்லை எனில், டாக்டரிடம் போய் எடுத்துவிட வேண்டும்.

குழந்தைகள் விளையாடும்போது, ஏதேனும் சிறு மணிகள் அல்லது சிறு பயறுகள் போன்றவை மூக்கினுள் போய்விடக்கூடும். சில பெண்கள் மூக்குத்தியைக் கழற்றும்போது, திருகாணி கூடப் போய்விட வாய்ப்பு உண்டு. அப்படிப் போய்விட்டால், 'அதை எடுக்கிறேன் பேர்வழி' என்று அந்தப் பொருளை இன்னும் கொஞ்சம் உள்ளே தள்ளி, 'எமர்ஜென்சி' ஆக்கிவிடாமல், உடனடியாக டாக்டரிடம் போய்விட வேண்டும். மூக்கைச் சிந்த வைக்கவும் கூடாது.

குழந்தை ஏதேனும் விழுங்கிவிட்டால்:

குழந்தைகள் தவறுதலாக ஏதேனும் விழுங்கிவிட்டாலோ அல்லது சாப்பிடும்போது ஏதேனும் உணவுத் தொண்டையில் எக்குத் தப்பாகச் சிக்கிக்கொண்டாலோ, கையை விட்டு எடுக்கவோ, விரலை விட்டு எடுக்கவோ, கண்டிப்பாக முயற்சிக்கக் கூடாது.

தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டால், அதை எடுப்பதற்கு, 'ஹீம்லிக் மெனுவர்'  ( HEIMLICH MANEUVER) என்ற செய்முறை இருக்கிறது. இந்த முதல் உதவி சிகிச்சை முறைப்படி தெரிந்தவர்கள், அதை உபயோகித்துப் பொருளை எடுக்கலாம். இல்லையெனில் உடனடியாக மருத்துவமனைக்குப் போய்விட வேண்டும். ஏனென்றால், விழுங்கிய எட்டு நிமிடங்களுக்குள் அந்தப் பொருளை வெளியே எடுக்க வேண்டும். எனவே ஒவ்வொரு நொடியும், தங்க நொடிதான். எட்டு நிமிடங்களுக்குப் பிறகும் ஆக்ஸிஜன் மூளைக்குச் செல்லவில்லை என்றால், விளைவு விபரீதம் ஆகிவிடும். இப்போது பள்ளிகளிலேயே இந்த முறை கற்றுத்தரப்படுகிறது.

தீக்காயம்:

முதலில் பாதிக்கப்பட்டவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். உடலில் துணி ஏதேனும் இருந்தால், அதைப் பிடித்து இழுக்காமல், கத்தரியால் கவனமாக வெட்டி, முழுமையாக அப்புறப்படுத்திவிட வேண்டும். நகைகள் இருந்தாலும் அப்புறப்படுத்திவிட வேண்டும்.

தீக்காயம் பட்ட இடத்தில், குழாய்த் தண்ணீர் படும்படி 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கலாம். எந்தக் களிம்பும், ஆயின்மென்ட்டும் தடவக் கூடாது.

கம்பளி, ஜமக்காளம் போன்ற தடிமனான துணிகளைப் போர்த்தி தரையில் உருளச் செய்யும்போது, அந்த வெப்பத்தில் திசுக்கள் வெந்துவிட வாய்ப்புள்ளது. ஒருவர் ஆடையில் தீப்பற்றிவிட்டால், உடனடியாகத் தண்ணீரை அவர் மேல் ஊற்றி, தீப் பரவாமல் அணைக்கலாம். தண்ணீர் ஊற்ற வழி இல்லை என்னும்போது, கம்பளி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், கம்பளியை நீண்ட நேரம் உடலில்வைத்திருக்கக் கூடாது.

தலை மற்றும் கழுத்தில் தீக்காயம் இருப்பின், வாய் வழியே குடிக்கவோ, சாப்பிடவோ எதையும் கொடுக்கக் கூடாது.

கொப்புளங்கள் தோன்றினால், அதை உடைத்துவிடக் கூடாது. காயத்தைக் கையால் தொடவே கூடாது. மிகப் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

தீக்காயம் அடைந்தவரைக் காப்பாற்றச் சென்றவர்களே தீக்காயம் அடைந்ததாகப் பலமுறை படித்திருப்போம். எனவே, தீ விபத்தில் காப்பாற்றச் செல்பவர், தன்னுடைய முன்புறத்தில் கம்பளியைப் பாதுகாப்பாகக் கட்டிக் கொண்டு பாதிக்கப்பட்டவரை அணுகும்போது, தீக்காயம் ஏற்படாமல் பாகாப்பாக இருக்கலாம்.

ரசாயனம் அல்லது ஆசிட் போன்றவற்றால் காயம் ஏற்பட்டாலும், தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு அந்த இடத்தை ஓடும் தண்ணீரால் கழுவ வேண்டும்.

விஷக்கடி:

குளவி போன்ற விஷப்பூச்சிகள் கடித்தால், அதன் கொடுக்கு ஒட்டியிருந்தால், அதை மிகக் கவனமாக அப்புறப்படுத்த வேண்டும். ஏனெனில், அதில்தான் விஷம் இருக்கும். நாம் நேரடியாகப் பிடுங்கி எடுத்தால், அதில் இருக்கும் விஷம் இன்னும் உள்ளே இறங்க வாய்ப்பு உண்டு. அப்படியே சாய்வாக ஒரு கத்தியால் சீய்ப்பது போல, கொடுக்கைச் சீவி விட வேண்டும்.

தேள் கொட்டினால், டாக்டரிடம் போய்விட வேண்டும். நாம் எதுவுமே செய்ய முயற்சிக்கக் கூடாது. ஏனெனில் விஷம் ரத்தத்தில் பரவும் வாய்ப்பு உண்டு.

பாம்புக்கடி என்று நிச்சயமாகத் தெரிந்தால், அது நிச்சயம் தீவிர சிகிச்சை தேவைப்படும் பிரச்னை. கடிவாயில் வாயைவைத்து உறிஞ்சுதல், கடித்த இடத்துக்கு மேலே இறுக்கிக் கட்டுதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. இவற்றால் ரத்த ஓட்டம் தடைபட்டு, விஷம் வேகமாகப் பரவ வாய்ப்பு இருக்கிறது. உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். பாதிக்கப்பட்டவர் மயக்கம் ஆகாமல் இருந்தால், அவரிடம் பேசி, 'ரிலாக்ஸ்' செய்யலாம்.

கை அல்லது காலில் பாம்பு கடித்திருந்தால், அதை அசைக்கக் கூடாது. அப்படியே, எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் செல்கிறோமோ, அவ்வளவு நல்லது.

எந்த விஷக்கடி என்றாலுமே, குடிக்கத் தண்ணீர் கொடுக்கக் கூடாது. அரை மயக்கத்தில் இருப்பவருக்கு தண்ணீர் கொடுத்தால், அது நுரையீரலுக்குள் சென்று விடும்.

நாய்க்கடி என்றால், அந்த இடத்தை சோப் தண்ணீரால் நன்றாகக் கழுவ வேண்டும்.

எந்தக் கடியாக இருப்பினும் ஐஸ் அல்லது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கக் கூடாது.

வலிப்பு:

மூளையில் திடீரென ஏற்படும் உந்துதல் அல்லது திடீர் விசை காரணமாக ஏற்படுவதுதான் வலிப்பு. அந்தச் சமயத்தில் அவர்களின் கை, கால் வேகமாக உதறும்போது, நாம் அவர்களைப் பிடிக்கவோ, அசைவைக் கட்டுப்படுத்தவோ முயற்சிக்கக் கூடாது. ஏனெனில் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே அந்த இயக்கம் இருக்காது. அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும்.

அவர்களைச் சுற்றிலும் மேசை, நாற்காலி போன்ற பொருட்கள் இருந்தால், வலிப்பு வந்தவர் இடித்துக்கொள்ளாமல் அப்புறப்படுத்திவிட வேண்டும். ஏதாவது கூர்மையான பொருட்களோ, கூர் முனையுள்ள பொருட்களோ அருகில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எதிலும் இடித்துக்கொள்ளாமல் / காயப்படுத்திக்கொள்ளாமல் இருப்பதற்காக, சுற்றிலும் தலையணைகள் போடலாம். தலைக்கு அடியிலும் ஒரு தலையணைவைக்க வேண்டும்.

வலிப்பு வந்தவரிடம் சாவிக்கொத்து அல்லது மற்ற இரும்புச் சாமான்கள் கொடுப்பது தவறு. அதனால் அவர்கள் காயம்பட வாய்ப்பு உண்டு.

நாக்கைக் கடித்துக்கொள்ளாமல் இருப்பதற்கு, சுத்தமான துணியைச் சுருட்டி பற்களுக்கு இடையில் வைக்கலாம்.

வலிப்பு நின்ற பின், மயக்க நிலையில் இருக்கும் அவர்களை, ஒருபக்கமாகத் திருப்பிப் படுக்கவைக்க வேண்டும். அப்போதுதான், வாந்தி எடுத்தால் கீழே போய்விடும். இல்லையென்றால், உள்ளேயே போய்விடும் அபாயம் உண்டு.

அவரைச் சுற்றிக் கூட்டம் போடாமல், நிறையக் காற்று வருவது போல விலகி நிற்க வேண்டும். கண்டிப்பாகத் தண்ணீர் கொடுக்கக் கூடாது.

கண்ணுக்குள் ஏதாவது விழுந்துவிட்டால்:

கண்ணுக்குள் ஏதேனும் தூசி, குச்சி, கண்ணாடித் தூள் போன்ற பொருள் விழுந்துவிட்டால், 20 நிமிடம் தொடர்ந்து கண்ணில் தண்ணீரை அடித்தபடி இருக்க வேண்டும்.

பெரிய சிரிஞ்ச் இருந்தால், அதில் தண்ணீரை நிரப்பித் தொடர்ந்து அடிக்கலாம். இல்லையென்றாலும், பரவாயில்லை; கைகளால் தண்ணீரை அள்ளி அள்ளித் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கண்ணில் அடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

கையால் கண்ணைக் கசக்கக் கூடாது. விரலை விட்டு எடுக்க முயற்சிக்கக் கூடாது.

கண்களில் கண்ணாடி போன்ற கூர்மையான பொருள் குத்தியிருந்தால், கையை விட்டு எடுக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி எடுத்தால், கண்ணில் ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனடியாக கண் நல மருத்துவரை அணுக வேண்டும்.

நேரடி வெளிச்சம், தூசி கண்களில் படாதவாறு, இரண்டு கண்களிலும் சுத்தமான துணி வைத்து, அதன் மேல் பிளாஸ்திரி போட்டு மூடிவிட வேண்டும்.

ஒரு கவர் அல்லது பேப்பர் கப் வைத்துக்கூட, கண்களை மூடலாம். அப்படியே கண் மருத்துவரிடம் போய்விட வேண்டும்.

பலத்த காயம் / அடிபடுதல்:

உயரமான மரம் அல்லது கட்டடத்திலிருந்து யாரேனும் விழுந்துவிட்டால், உடனே ரத்தம் வருகிறதா என்று பார்க்க வேண்டும். ரத்தம் வந்தால், முன்னே சொல்லியது போல, ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த வேண்டும். ரத்தம் வெளியே வராவிட்டாலும் உள்ளே ரத்தக் கசிவு இருக்கலாம். அப்படி இருந்தால் மயக்கம் வரும். குளிரும். அவரைக் கீழே படுக்கவைத்து, கால்கள் இரண்டையும் மேலே சிறிது உயரமாகத் தூக்கிவைக்க வேண்டும். அவரைத் தூக்கும்போதும், கழுத்தின் நிலையைக் கவனமாகப் பார்த்துத் தூக்க வேண்டும், ஏனெனில், தண்டுவடம் பாதிக்கப்பட்டால், பிறகு ஆயுள் முழுவதும் பிரச்னையாகிவிடும்.

கால்களை மடக்கியபடி விழுந்திருந்தால், காலை நீட்ட முயற்சிக்க வேண்டாம். உட்காரவைக்காமல், படுத்த நிலையில்தான் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

வாயில் ரத்தம் வந்தால், துப்பச் சொல்லலாம். விழுங்கக் கூடாது.

விழுந்தவர் பெண்ணாக இருந்தால், அவர் கர்ப்பிணியா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

விஷம் / ஆசிட் குடித்தால்:

என்ன குடித்தார்கள், எவ்வளவு குடிக்கப்பட்டது என்ற விவரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

வாந்தி எடுக்கத் தூண்டக் கூடாது. விரலை உள்ளே விட்டோ, சாணம் அல்லது உப்புக் கரைசலைக் கொடுத்தோ, வாந்தி எடுக்கச் செய்யக் கூடாது.

அவராகவே வாந்தி எடுத்தால், இடது பக்கமாக ஒருக்களித்துப் படுக்கவைக்கலாம். வாந்தி உள்ளே போய், மூச்சுக்குழல் அடைபடாமல் இருக்க இது உதவும்.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

நெஞ்சு வலி:

நெஞ்சு வலி வந்தவரை உட்காரவைத்து, முன்புறமாகச் சாய்த்து, நன்கு மூச்சை இழுத்து விடச் சொல்ல வேண்டும்.

ஏற்கெனவே நெஞ்சுவலிக்கான மாத்திரை எடுப்பவராக இருந்தால், டாக்டர் சொன்னபடி அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நெஞ்சுவலி வந்தால், அதை, 'சாதாரண வாய்வுக் குத்து' என்று அலட்சியமாக விடவே கூடாது. இதய வலி எனில், யானை ஏறி மிதிப்பது போல், வலி பயங்கரமாக இருக்கும். மூச்சு விடச் சிரமமாக இருக்கும். வியர்த்துக் கொட்டும். சிலருக்குத் தாடை வரை வலி வரும். சிலருக்கு இடது கை வலிக்கும். சில சமயங்களில் முதுகு, வயிறுக்குக் கூட வலி பரவும்.

ஆனால், சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இவற்றில் எந்த அறிகுறியும் இருக்காது. அதனால் அவர்கள் எந்த மாதிரியான நெஞ்சுவலியாக இருந்தாலும், அதை 'மாரடைப்பு' போலவே கருதி, டாக்டரிடம் போய்விடுவது நல்லது. சும்மா சோடா குடித்தால் வலி போய்விடும் என்று சொல்லித் தவிர்க்கக் கூடாது. தாமாக மாத்திரை வாங்கிப் போடுவதும் மிக ஆபத்து.

நெஞ்சுவலி வந்துவிட்டால், நேரம் என்பது மிக முக்கியம். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து. அருகில் இருக்கும் மருத்துவமனையில், இதய நோய்க்கான சிகிச்சை உபகரணங்கள் (ஈ.ஸி.ஜி. போன்றவை) இருக்கும் இடமாகச் செல்வது நல்லது.

மாரடைப்பு என்றால், மார்புப் பகுதியில் அழுத்துவதுபோன்ற கடுமையான வலி இருக்கும். அதிகம் வியர்வை மற்றும் மயக்கம் வருவதுபோல் இருக்கும்.

இதில் எந்த வகையாக இருந்தாலும், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வது நல்லது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது பாதிக்கப்பட்டவருக்கு ஆஸ்பிரின் மாத்திரை கொடுக்க வேண்டும். இது ரத்தம் கட்டியாவதைத் தடுக்கிறது.

மயக்கம்:

மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபடுவதால்தான் மயக்கம் ஏற்படுகிறது.

மயக்கம் வருவதைக் கொஞ்சம் முன்கூட்டியே தெரிந்துகொண்டோமானால், அவர் கீழே விழுவதற்குள், தாங்கிப் பிடித்து, அடிபடுவதில் இருந்து காப்பாற்றிவிடலாம்.

மயங்கியவரை, கீழே படுக்கவைத்து, கால்கள் இரண்டையும் சிறிது உயரத்தில் இருக்குமாறு மேலே தூக்கிவைக்கவும்.

காற்றோட்டம் தேவை. தண்ணீரால் முகத்தைத் துடைக்கலாம். சோடா போன்றவற்றைப் புகட்ட வேண்டாம்.

மூச்சுத்திணறல்:

ஏற்கெனவே 'வீஸிங்' பிரச்னை இருப்பவர் என்றால், அவர் எடுத்துக்கொள்ளும் இன்ஹேலரை எடுத்துக்கொள்ளச் சொல்லலாம்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டவரை உட்காரவைத்து, மெதுவாக மூச்சுவிடச் செய்ய வேண்டும்.

ஸ்ட்ரோக் (பக்கவாதம்):

முகம் கோணுதல், பேச்சில் குழறல், கைகள் உதறுதல், வாயில் எச்சில் ஒழுகுதல் போன்றவை ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள்.

பாதிக்கப்பட்டவருடன் பேச்சுக் கொடுத்து, அவரை ஆசுவாசப்படுத்த வேண்டும். அவரால் பேசவோ, உங்களுக்குப் பதில் சொல்லவோ முடியாவிட்டாலும், நீங்கள் சொல்வதைக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் முடியும்.

காய்ச்சல்:

உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது, 'ஸ்பாஞ்ச் பாத்' எனப்படும் ஈரத்துணியால் ஒற்றி எடுக்கும் முறை மிகவும் சிறந்த முதல் உதவி. இது, வெப்பநிலையையும் குறைக்கும்.

நான்கு வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு, கண்டிப்பாக மருத்துவமனைக்கு வரும் வரையிலும், ஈரத்துணியை நெற்றியில், அக்குளில் போட்டுப் போட்டு எடுத்தபடி இருக்க வேண்டும். இல்லையென்றால் அது வலிப்பாகவோ, ஜன்னியாகவோ மாறிவிடும் அபாயம் உள்ளது.

சர்க்கரையின் அளவு குறைதல்:  

ஏற்கெனவே சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு, திடீர் கோபம், எரிச்சல் போன்றவை ஏற்பட்டால் அல்லது எதற்கெடுத்தாலும் அவர்கள் சத்தம் போட்டுக் கத்தி டென்ஷன் ஆனால், அவர்களின் சர்க்கரை அளவு குறைந்துள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். உடனே ஒரு சாக்லேட் அல்லது ஒரு ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டுக்கொள்ளச் செய்தால், சிறிது நேரத்தில் அந்த சுபாவம் மாறிவிடும். ஆனால், இது சுயநினைவுடன் இருப்பவர்களுக்கான முதல் உதவி.

சர்க்கரையின் அளவு குறைந்து, மயக்கம் ஆகிவிட்டால், உடனே அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதே சிறந்தது.

பாலியல் பலாத்காரம்:

பாதிக்கப்பட்டவருக்கும் முதலில் உளவியல் ரீதியான ஆதரவு தேவை.

காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் முன், அவருடைய ஒப்புதலைப் பெற்றுவிட்டுச் செய்ய வேண்டும்.

ரத்தக்கறை படிந்த உடைகள் அல்லது பொருள்கள் கிடந்தால், அவற்றை ஆதாரத்துக்காகப் பாதுகாக்க வேண்டும்.

மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன், முடிந்தவரை குளித்தல், சிறுநீர் கழித்தல், பல் துலக்குதல், உடைகளை மாற்றுதல் என்று எதையும் செய்யாமல் இருப்பது நல்லது.

வாகன விபத்து:

விபத்து நடந்த இடத்தில், அடிபட்டவரைச் சுற்றிக் கூட்டமாக நிற்பதைத் தவிர்த்து, காற்றோட்டமான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

இடிபாடுகளுக்குள் அல்லது இரண்டு வாகனங்களுக்கு இடையே சிக்கி இருந்தால், மிக மிகக் கவனமாக, தலையில் கழுத்தில் அடிபடாமல் அவரை மீட்க வேண்டும்.

சுவாசம் எப்படி இருக்கிறது என்பதைப் பரிசோதிக்க வேண்டும். இதயத் துடிப்பு இருந்து, மூச்சு வரவில்லை என்றால், ஒரு கையை நெஞ்சின் மேல்வைத்து, மறு கையால் அதன் மேல் வைத்து அழுத்திக்கொடுத்தால், தடைபட்ட சுவாசம் வந்துவிடும்.

அடிபட்டவர் வாந்தி எடுத்தால், வாயைத் துடைத்துவிட்டு ஒருபக்கமாகத் திருப்பிப் படுக்கவைக்க வேண்டும்.

குடிக்க எதுவும் தர வேண்டாம். முக்கியமாக சோடா கொடுக்கவே கூடாது. முகத்தில் தண்ணீர் தெளிக்கலாம். துணியைவைத்து அழுத்தி, ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த வேண்டும்.

அடிபட்டவருக்கு நினைவு இருக்கிறதா என்று பார்க்க, பேச்சுக் கொடுக்க வேண்டும். நினைவு இல்லையெனில், நரம்பியல் மருத்துவர் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வது நல்லது.

எல்லாவற்றையும் மிக வேகமாக, அதேசமயம் பதற்றமின்றிச் செய்ய வேண்டும். தண்டுவடத்தில் அடிபட்டது போலவே யூகித்துக்கொண்டுதான் கையாள வேண்டும்.

கவனமாகப் படுக்கவைத்து, தலையை ஒரு பக்கமாகத் திருப்பிவைத்து, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

முதல் உதவிப் பெட்டியில் இருக்க வேண்டிய பொருட்கள்:

ஒரு ஜோடி சுத்தமான கையுறைகள், டிஸ்போஸபிள் ஃபேஸ் மாஸ்க், ஸ்டெரிலைஸ்டு காட்டன் ரோல், ஸ்டெரிலைஸ்டு டிரெஸ்ஸிங் துணி, ரோலர் பேண்டேஜ், நுண்ணிய துளைகள் கொண்ட, ஒட்டக்கூடிய டேப், தரமான ஆன்டிசெப்டிக் லோஷன் (ஸாவ்லான், டெட்டால் போன்றது), பெட்டாடைன் (Betadine) ஆயின்மென்ட், துரு இல்லாத கத்தரிக்கோல், குளுகோஸ், எலெக்ட்ரால் போன்ற நீர்ச் சத்துக்கான பவுடர் பாக்கெட்டுகள், பாரசிட்டமால் மாத்திரை, வலி நீக்கும் மாத்திரை மற்றும் அவரவர் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையைப் பொருத்து, ரத்த அழுத்தத்துக்கான மாத்திரை, அன்டாஸிட் ஜெல் போன்றவை.

கவனம்...!

முக்கியக் குறிப்புகள்:

முதல் உதவிப் பெட்டியோ, மற்ற மருந்துகளோ... குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பார்க்கக்கூடிய இடத்தில் முதல் உதவிப் பெட்டி இருக்க வேண்டும். சிவப்பு நிறத்தில் 'ப்ளஸ்' குறியிட்ட பெட்டி என்றால், யாருமே பார்த்ததும் எடுக்க முடியும்.

அதைப் பூட்டிவைக்கக் கூடாது. எமர்ஜென்சி சமயத்தில் சாவியைத் தேடுவதால், வீண் டென்ஷனும் கால விரயமும் உண்டாகும்.

உபயோகித்த மருந்துகள் மற்றும் பொருள்களுக்குப் பதிலாக மீண்டும் வாங்கிவைத்துவிட வேண்டும்.

காலாவதி ஆன மருந்துகளை, தேதி பார்த்து உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.

குடும்ப மருத்துவர், அவசர சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் தொலைபேசி எண்களை ஒரு சீட்டில் குறித்து அந்தப் பெட்டிக்குள்ளேயே வைத்திருப்பது அவசியம்.

கற்கலாம் முதல் உதவி:

FRT (First Responder Training program)

ஓர் ஆபத்தையோ விபத்தையோ பார்க்கும்போது, ஓடிப்போய் உதவி செய்வது மனித இயல்பு. முதலில் விபத்தைப் பார்க்கும் நபர்தான் 'First responder'. அவர் செய்யும் முதல் உதவிதான் அங்கே முக்கியமானது. அந்த முதல் உதவி சிகிச்சைகளையே முறைப்படி கற்றுக்கொண்டு செய்யும்போது, உயிர் காக்கும் முயற்சி இன்னும் அர்த்தமுள்ளதாகும்.

முதல் உதவி செய்வதற்கு யார் வேண்டுமானாலும் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். அதற்கான ஒரு நாள் பயிற்சி அளிக்கிறது, அவசர கால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். விபத்து மற்றும் அனைத்து அவசர காலப் பிரச்னைகளுக்குமான முதல் உதவிகளை, இங்கே செய்முறைப் பயிற்சியுடன் கற்றுத்தருகிறார்கள். சான்றிதழுடன் கூடிய இந்த ஒரு நாள் பயிற்சிக்குக் கட்டணம் ரூ. 608. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் நிர்வாகம் விரும்பினால், இவர்கள் அங்கேயே சென்று பயிற்சி அளித்தும் வருகின்றனர்.