Sunday, October 16, 2016

தேங்காய் எண்ணெயின் 8 பலன்கள்!

தேங்காய் எண்ணெய், நம் பண்பாட்டின் அடையாளம். உடலுக்கு உள்ளும் வெளியிலும் செயல்படும் ஃபங்ஷனல் ஃபுட்களில் தேங்காய் எண்ணெய் முக்கியமானது. தேங்காய் எண்ணெயின் நற்பலன்கள் இதோ...

தலைமுடியைப் பராமரிக்க

தலைமுடியின் வளர்ச்சிக்கும் பளபளப்புக்கும் உதவுகிறது தேங்காய் எண்ணெய். குளியலின்போது, சிறந்த கண்டிஷனராகச் செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட முடிகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. புரதச்சத்தை வழங்கி, சேதமடைந்த முடிகளுக்குச் சிகிச்சை அளிக்கிறது.

தோல் பராமரிப்புக்கு

அனைத்து வகையான சருமத்துக்கும் தேங்காய் எண்ணெய் சிறந்தது. தோலுக்கு ஈரப்பதத்தையும், பளபளப்பையும் தரவல்லது.

இதயநோய் நீங்க

தினமும் உணவில் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்வது நல்லது. இதில் உள்ள கொழுப்பு அமிலத்தில், 50 சதவிகிதம் லாரிக் அமிலம் என்பதால், நுண்ணுயிர்க் கிருமிகளை அழிக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

சளி எதிர்ப்பானாக


குளிர் அல்லது காய்ச்சல் ஏற்படும்போது, காலையில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைத் தேநீரில் கலந்து குடிக்கும்போது, உடலில் சூடான தட்பவெப்பத்தை ஏற்படுத்துகிறது.

எடை குறைய


இதில் இருக்கும் சில அமிலங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. இதை உணவில் சேர்ப்பதால், எளிதில் செரிமானம் ஆகும்.  தைராய்டு உட்பட நாளமில்லா சுரப்பிகளின் ஆரோக்கியத்துக்கும் இது மறைமுகமாக உதவுகிறது. கணையத்தின் மீதான அழுத்தத்தைக் குறைத்து, உடலின் எடையைக் குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தாய்ப்பால் சுரக்க

இளம் தாய்மார்கள் தங்கள் உணவில், லாரிக் அமிலம் இருக்கும் பொருட்களை அதிகம் எடுத்துக்கொண்டால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

செரிமானம் சீராக

உடலின் செரிமான அமைப்பைச் சீராக்கி, வயிற்றுப்பிரச்னை மற்றும் எரிச்சல் கொண்ட குடல்நோய் ஆகியவற்றைத் தடுக்கிறது.

சுவை அதிகரிப்பானாக

உணவுப்பொருட்களில் இதைச் சில துளிகள் சேர்த்தால், உணவின் சுவை  இன்னும் மெருகேறும்.