Tuesday, January 31, 2017

ஒரு குழந்தை விளையாடினா என்னலாம் நல்லது நடக்கும் தெரியுமா?

விளையாடும் குழந்தைகள்

ன்றைய பெற்றோர்களின் முக்கிய நோக்கமே, தன் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். 'ஓடி விளையாடு பாப்பா' என்று சொன்ன பாரதியார்தான் 'உடலினை உறுதி செய்' என்றார். இன்றைய மாணவர்களுக்கு ஓடி விளையாடுவதற்கான நேரமோ, களமோ இல்லை என்பதுதான் பெற்றவர்கள் தரப்பில் இருந்து சொல்லப்படுகிற காரணங்களாக இருக்கின்றன. 

விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்:

*ஓடியாடி விளையாடுவதால் உறுதியான தசைகள், எலும்பு வளர்ச்சி, நரம்பு வளர்ச்சி சீராக இருப்பதோடு அனைத்து உறுப்புகளும் சிறப்பாக செயல்படும்.

*விளையாட்டின்போது அதிகளவில் ஆக்ஸிஜன் மூளைக்கு செல்வதால், நுறையீரல் ஆரோக்கியமாக இருப்பதோடு மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். இதனால் படிப்பில் கவனம், மெமரி பவர் அதிகரிக்கும்.

* விளையாடுவதால் பசி எடுக்கும். நாம் கேட்காமல்.. கெஞ்சாமல் உணவு தானாக உள்ளே போகும்.

* உடலில் உள்ள கழிவு உப்புக்கள் வியர்வையாக வெளியேறும். அதிக வியர்வை வெளியேறும் போது உடல் வெப்பம் சீராகி, உடல் குளிர்ச்சியடையச் செய்கிறது.

* சேர்ந்து விளையாடுவதால் மனிதநேயம் ஏற்படுவது மட்டுமல்லாமல், நட்புணர்வும் வளரும்.

* விளையாட்டின் மூலம் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம், விட்டுக் கொடுக்கம் மனப்பான்மை, ஒழுக்கம், தன்னம்பிகை, புதுமையான செயல் திறன்கள் வளரும்.

* மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். எப்படி ஒரு பிரச்னையை கையாள வேண்டும், என்ன செய்தால் இந்த சிக்கலான பாதையில் இருந்து வெளி வரலாம் என்கிற எண்ணங்கள் தோன்றும். அந்த பலன் வாழ்க்கையிலும் பிரபலிக்கும்.

செல்போன், வீடியோ கேம்ஸில் மூழ்கும் குழந்தைகளுக்கு வரும் பாதிப்புகள்...

* சுறுசுறுப்பு இல்லாமல் போதல், சிந்திக்கும் திறனை இழத்தல். ஒரே நேர்க்கோட்டில் பயணித்தல் ஆகியன ஏற்படும்.

* ஒரே திரையை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் நாளடைவில் கண் பார்வை பாதிப்புக்குள்ளாதல், கண்ணில் நீர் வற்றிப் போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

* சக நண்பர்களிடம் எப்படி பழகுவது, பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் போன்ற மரியாதை பண்புகள் தெரிந்து கொள்ள முடியாமல் போகும்.

* படிப்பில் கவனக்குறைவு, வீடியோ கேம்ஸில் உள்ள வன்முறை மனதில் பதிவது, மன அழுத்தம் போன்ற ஏற்படுதல்.


பெற்றோர் கவனத்துக்கு:

*ஒரு நாளில் அரை மணிநேரத்துக்கு மேல் வீடியோ கேம்ஸ், டிவி, செல்போன் போன்றவற்றை பார்க்க அனுமதிக்காதீர்கள்.

*தினமும் அல்லது வாரத்தில் ஒரு மணி நேரமாவது மற்றவர்களுடன் சேர்ந்து உங்கள் குழந்தைகளை விளையாட விடுங்கள். அப்படி முடியவில்லை என்றால், விளையாட்டு (கிரிக்கெட், ஃபுட்பால், ஷட்டில்காக், டென்னிஸ்) வகுப்புகளில் போட்டிக்காக இல்லாமல் மனதை சமன்படுத்த, உடல் வளர்ச்சியடைய போன்ற காரணங்களுக்காக சேர்த்து விடுங்கள்.

*புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகரியுங்கள்.

சிறுநீரக பாதிப்பு... அடையாளம் காட்டும் 10 அறிகுறிகள்..!

நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தைக் காக்க பல வகைகளில் துணைபுரிவது சிறுநீரகம். "இந்தியாவில் ஒரு மில்லியன் நபர்களில் 800 பேருக்காவது நாட்பட்ட சிறுநீரக நோய் பிரச்னையால் அவதிபடுகிறார்கள்" என்கிறது சுகாதார துறை அமைச்சகம். இதில் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால், பலர் தங்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு அடைந்துள்ளது என்பதையே அறியாமல் இருக்கிறார்கள்; நோய் முதிர்ச்சியடையும் நிலையில்தான் தெரிந்துகொள்கிறார்கள். இது, வளரவிடக் கூடாத பிரச்னை. வளர்ந்தால் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை என பல பெரிய சிகிச்சைகளைச் செய்யவேண்டிய அளவுக்கு முற்றிவிடும். 

 

சிறுநீரக பாதிப்பு

 

சிறுநீரகத்தில் பிரச்னை இருக்கிறது என்பதை சில அறிகுறிகளே காட்டிக் கொடுத்துவிடும். அந்த அறிகுறிகளில் சில...

சிறுநீர் பிரச்னை  
  
நுரைபோன்ற சிறுநீர் வருவது, இயல்பைவிட அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, சிறுநீர் தொற்று ஏற்படுவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருந்தாலும் சிறுநீர் கழிக்க முடியாமல் போவது மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படுவது.    

வீக்கம் / அதைப்பு 

உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நீரை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாமல் போகும்போது கணுக்கால், கால், பாதம், கைகள் குறிப்பாக முகத்தில் வீக்கம் அல்லது அடைப்பு ஏற்படும்.

சோர்வு / ரத்தசோகை

சிறுநீரகம் எரித்ரோபோய்டின் (Erithropoietin) எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. இது, ஆக்சிஜன், ரத்த சிவப்பு அணுக்களைக் கொண்டு செல்வதற்கு உதவுகிறது. சிறுநீரகம் பாதிப்படையும்போது எரித்ரோபோய்டின் ஹார்மோனின் அளவு குறையும். இதனால் ரத்த சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் அளவும் குறையும். இதனால்தான் சோர்வும் ரத்தசோகையும் ஏற்படுகின்றன.

 

அறிகுறிகள் அறிகுறிகள்


தடிப்பு 

சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது உடலில் கழிவுகள் அதிகமாகச் சேரும். இதனால் தோல்களில் அதிகமான வெடிப்பு மற்றும் தடிப்புகள் உண்டாகும்.

மூளையின் குறைந்த செயல்பாடுகள்

மூளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு,  மறதி, கவனமின்மை, தலைசுற்றல் ஆகியவை உண்டாகும்.

குளிர்

ரத்தசோகை காரணமாக அடிக்கடி குளிர்வது போன்ற உணர்வு தோன்றும். சிலருக்கு வெயில் சுட்டெரிக்கும் நேரத்திலும் தாங்க முடியாத அளவுக்கு குளிர் எடுக்கும்.

மூச்சுத்திணறல் 

சிவப்பு ரத்த அணுக்களில் ஆக்சிஜனின் அளவு குறைவதாலும், தேவையற்ற திரவம் குடலிலேயே தங்கிவிடுவதாலும் மூச்சுத்திணறல் ஏற்படும்.

முதுகுவலி 

பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை உள்ளவர்களுக்கு முதுகுவலி அடிக்கடி ஏற்படும். இன்னும் சிலருக்கு சிறுநீரகத்துக்கு அருகிலேயே வலி தோன்றும். இந்த அறிகுறி வெகு சிலருக்கு மட்டுமே  தெரியும்.

முதுகுவலி

 

குமட்டல் 

சிலருக்கு அடிக்கடி குமட்டல் வரும். அதிகப்படியான காய்ச்சல் இருந்து குமட்டல் வந்தால், சிறுநீரகங்களில் கற்கள் இருக்கின்றன என்று அர்த்தம்.

சுவாசத்தில் வாடை

சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போகும்போது ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாகும். இந்த யூரியா எச்சிலில் அமோனியாவாக உடையும். இது மூச்சுக்காற்றை கெட்ட வாடையாக மாற்றும்.

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கு அடிக்கடி தோன்றினால், உடனே சிறுநீரக சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். சிறுநீரகம் காப்பது, நம் ஆரோக்கியம் காப்பதின் அவசியமான முதல் படி!

Saturday, January 28, 2017

பாக்கெட் பாலால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாமா?

பாக்கெட்பாலால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாமா? என்பது போன்று அநேக ஆன்மிகக் கேள்விகள் நம் மனதில் தோன்றியவண்ணம் உள்ளது. காரணம்.நவீனமயமாக்கல் என்ற பெயரில் நம்முடைய பார்ம்பர்ய வாழ்க்கை முறை ரொம்பவே மாறிவிட்டது. கூட்டுக்குடும்பமாக இருந்தவரையில் அனைத்திலும் தெளிவு பெற்றிருந்த நாம், இன்று பணியின் நிமித்தமாக புலம் பெயர்ந்து செல்வதாலும், தனிக்குடித்தன வாழ்க்கையாக மாறிவிட்ட காரணத்தாலும், அர்த்தமுள்ள நம்முடைய சாஸ்திர சம்பிரதாயங்கள் பலவற்றை நாம் மறந்தே போய்விட்டோம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சாஸ்திரங்கள் தொடர்பாகவும், ஆன்மிகம் தொடர்பாகவும் பல சந்தேகங்கள் நமக்கு ஏற்படுவதும் இயல்பே. அப்படியான நம்முடைய சந்தேகங்களை அகற்றி நமக்கு தெளிவை ஏற்படுத்த ஆன்மிகப் பெரியோர்களும் துறை சார்ந்த பண்டிதர்களும்  இருக்கிறார்கள். நம்முடைய சந்தேகங்களுக்கு அவர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.

பாக்கெட் பாலால் அபிஷேகம்


பாக்கெட் பாலால் அபிஷேகம் செய்யலாமா என்பதைப் பார்ப்பதற்கு முன்பு இறைவனை எந்தெந்தப் பொருளால் அபிஷேகம் செய்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றிய விளக்கம் உங்கள் பார்வைக்கு...

* வலம்புரிச் சங்கு அபிஷேகம்:  நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்.
* சொர்ணா (தங்க) பிஷேகம்: வியாபாரம் வளரும்; எதிர்பார்த்த லாபம் பெருகும்.
*  பன்னீர் கலந்த சந்தனக் குழம்பு:  இல்லத்தில் லட்சுமி கடாட்சம் உருவாகும்.
*  விபூதி: போகத்தையும் மோட்சத்தையும் தரும்.
*  சந்தனத் தைலம்: சுகத்தையும், இல்லத்தில் சுபிட்சத்தையும் தரும்.
*  திருமஞ்சனப் பொடி:  கடன் மற்றும் நோய் தீரும்.
*  கரும்புச் சாறு: நோய்களைத் தீர்க்கும்.
*  எலுமிச்சைப்பழச்சாறு: பகையை அழிக்கும்.
*  இளநீர்: இன்பமான வாழ்வு தரும்.
*  பஞ்சாமிர்தம்: உடல்-உள்ளம் இரண்டும் வலிமை பெறும்.
*  தேன்: குரலுக்கு இனிமையைக் கொடுக்கும்.
*  நெய்: முக்தியைத் தரும்.
*  தயிர்: நல்ல குழந்தைகளைப் பெறலாம்.
*  பால்: பிணிகள் நீக்கும்; நீண்ட ஆயுள் கொடுக்கும்.
அவரவர் விரும்பும் பலனுக்கு உண்டான அபிஷேகப் பொருட்களை பிரதான பொருளாகக் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடலாம். கோயிலாக இருந்தால், அர்ச்சகரிடம் கொடுத்து அபிஷேகம் செய்யச் சொல்லவேண்டும். 

பாலாபிஷேகம்


சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்வதென்றால், தூய்மையான பசும்பாலில்தான் பாலாபிஷேகம் செய்யவேண்டும்.  அபிஷேகத்துக்கு உரிய பால் என்றால், பசு கன்றை ஈன்று 16 நாட்கள் ஆகி இருக்க வேண்டும். அதன் பிறகு கறக்கப்படும் பாலில் இருந்துதான் அபிஷேகம் செய்யவேண்டும்.  அபிஷேகத்துக்கு பால் கறப்பதற்கு முன்பாக அந்தப் பசுவும் பால் கறப்பவரும் குளித்து நீராடி தூய்மையாக இருக்க வேண்டும் என்பது விதி. இப்படிக் கிடைக்கும் பாலைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்தால்தான் முழுப்பலன் கிடைக்கும். ஆனால், தற்போதுள்ள நமது வாழ்க்கைச் சூழலில் பாக்கெட் பாலால் அபிஷேகம் செய்கிறோம். தவறில்லை. ஆனால்,  இதற்கு மத்திம பலன்தான் கிடைக்கும்.  
முன்னதாக நாம் கவனிக்க வேண்டிய சிலவற்றைப் பார்ப்போம். முடிந்த அளவு, நமது தெருவிலோ அடுத்தத் தெருவிலோ கறந்த பாலை விற்பனைசெய்பவர்களிடம் சொல்லிவைத்து, நாம் பூஜை செய்யச் செல்லும் நாளில் மட்டுமாவது அதை வாங்கிச்செல்லாம். அப்படியும் கிடைக்காவிட்டால், பாக்கெட் பாலை வாங்கி பூஜைக்கு உரிய செப்புப் பாத்திரத்திலோ, புதிய  எவர்சில்வர் பாத்திரத்திலோ எடுத்துச்செல்வது நல்லது.  அப்படிச் செய்யும்போது, அந்தப் பாத்திரத்தை மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. இதை விடுத்து சிலர் பால் பவுடர் கலந்து  பாலை தயாரித்து விற்பனை செய்கிறார்கள். அப்படிப்பட்ட பாலை வாங்கி பயன்படுத்துவது அதம பலனைத்தான் தரும்" 

Monday, January 23, 2017

குழந்தைகள் விரும்பும் பெற்றோராக, செய்ய வேண்டியவை!

  குழந்தைகளின் நல்ல செயல்கள் ஒவ்வொன்றையும் பாராட்டுங்கள். 'வாவ் என் தங்கமா இவளோ சூப்பரா செஞ்சிருக்கு.. கங்கிராட்ஸ்" என்று குழந்தைகள் மகிழ ஆச்சர்யப்படுங்கள்.  

* பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பாடமாக எடுப்பதைவிட, வெளியிடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். அங்கே அவர்கள் என்ன தவறு செய்தார்கள், அதை எப்படி செய்திருக்க வேண்டும் என்பதை விளக்கி சொல்லுங்கள்.  

* எலெக்ட்ரானிக் சாதனங்கள் என்பது இக்காலக்கட்டத்தில் குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றுதான். அதற்காக அவர்கள் அதிலேயே மூழ்கிவிட பெற்றோர்களான நீங்கள் காரணமாக இருக்க வேண்டாம். ஒன்றை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தும் நமக்கு, அச்சாதனங்களை அவர்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்லி கட்டுப்படுத்தவும் செய்ய வேண்டும்.

* ஒரு வயதில் இருந்து குழந்தைகளுக்கு புத்தகங்களை வாசித்து காண்பியுங்கள். தினமும் இரவு படுக்கசெல்லும் முன் சில பக்கங்களையாவது வாசித்து காண்பிப்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். புத்தகம் விசாலமான அறிவை பெறச் செய்யும் என்பதை அவர்கள் உணர வையுங்கள்.

*  தினமும் ஒரு புது வார்த்தை கற்றுக் கொடுங்கள். அவர்களுடைய வேலைகளை அவர்களாக செய்ய பழக்குங்கள். இதில் ஆண்-பெண் பேதம் தேவையில்லை. பள்ளி முடிந்து வந்தவுடன் டிபன்பாக்ஸை எடுத்து சிங்கில் போடுவது, ஷூக்களை கழட்டி உரிய இடங்களில் வைப்பது, சாப்பிடும் முன் அதற்கான பொருட்களை பெற்றோர்களுடன் சேர்ந்து எடுத்து வைப்பது போன்ற வேலைகளை பகிர்ந்து கொள்ள பழக்குங்கள். 

* உறவுகளை அறிமுகப்படுத்துங்கள். சித்தி, சித்தப்பா, மாமா என்று உங்கள் குடும்பத்தில் இருக்கும் உறவுகளை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துங்கள். நேரில் பார்ப்பது, போனில் பேசுவது என எது சாத்தியமோ அதை செய்ய வையுங்கள். அப்போதுதான் குழந்தைகளின் வானம் விரிவடையும். 

* குழந்தைகள் முன் உபயோகிக்கும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். அவை ஃபேஷனாக, இதுவரை நீங்கள் உபயோகித்து வந்த அர்த்தமில்லாத வார்த்தைகளாக இருக்கலாம். உடனே சுதாரியுங்கள். இல்லையெனில் அவை நம் குழந்தைகள் மூலமாக வெளிப்படும்போது அவர்களை மட்டுமல்லாது அவை நம்மையும் சேர்த்தே பாதிக்கும் என்பதை உணருங்கள். 

* குழந்தைகளிடம் பெற்றோர்கள் எந்த சூழலிலும்  கடுமையான மனப்பாங்குடன் நடந்துகொள்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் தெரிந்தோ, தெரியாமலோ ஏதேனும் ஒரு தவறை செய்தாலும்கூட, அந்த தவறை இனி அடுத்த முறை குழந்தைகள் செய்யாத வகையில் பக்குவமாக எடுத்துக்கூற வேண்டும். 

* மற்றொரு மாணவரை உதாரணத்துக்கு எடுத்துச் சொல்லலாம் தவிர, இன்னொரு மாணவருடன் உங்கள் குழந்தைகளை ஒப்பீடு செய்து, குற்றம் சாட்டுவது மிகவும் தவறு.

* குழந்தைகளின் கெப்பாசிட்டியை தெரிந்து கொள்ளுங்கள். அதை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளுங்கள். அதற்குபதில் கடல் தாண்ட சொல்லாதீர்கள். அப்போதுதான் அவர்களால் வெற்றியை அடைய முடியும்.

Friday, January 20, 2017

விலங்குகள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

னிதன் சமூகமாக வாழத் தொடங்கியது முதலே, வன விலங்குகளை வீட்டு விலங்குக ளாகவும், செல்லப் பிராணிகளாகவும், வளர்க்கத் தொடங்கினான். நாடோடியாக இருந்தபோது, துணையாக நாய் வளர்த்தவன், விவசாய சமூகமாக மாறியபோது பசு, ஆடு உள்ளிட்ட விலங்குகளை வளர்க்க ஆரம்பித்தான்.நாகரிகம் வளர வளர பூனை, கிளி, லவ்பேர்ட்ஸ், மீன், முயல் என வளர்ப்புப் பிராணிகளின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது. வெளிநாட்டில், பாம்பு முதல் ஆமை வரை பல விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர். 

செல்லப் பிராணிகளை வளர்க்க ஆர்வம் இருக்கும் நமக்கு அவற்றைப் பராமரிப்பது எப்படி, கடித்துவிட்டால், நகத்தால் பிராண்டினால் என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரிவதில்லை.

செல்லப்பிராணிகள் கடித்தவுடன் செய்யவேண்டியவை...

வீட்டில் வளர்க்கும் நாய், பூனை கடித்தாலும், பறவைகள் கொத்தினாலும், முதலில், குழாயைத் திறந்துவிட்டு வேகமாக வரும் தண்ணீரின் அடியில் கடித்த பகுதியை வைத்து, சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். குறைந்தது 5 - 10 நிமிடங்கள் வரை தண்ணீரில் கழுவுவது நல்லது. 

காயத்தின் மீது சோப் அல்லது கிருமிநாசினி போட்டு அந்த இடத்தை நன்றாகக் கழுவிவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

எந்த ஒரு விலங்கு கடித்தாலும் முதலில், டி.டி (Tetanus vaccine) தடுப்பூசி போட வேண்டும். நாய்க்கடியாக இருந்தால், பிறகு, ஆன்டி-ரேபிஸ் ஊசியின் வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். ஒருமுறை தரப்படும் ஊசிமருந்தின் அளவு ஒரு மி.லி. இது, புஜத்தில் போடப்படும். முதல் நாளே ஊசி போடப்படும். அதில் இருந்து 3, 7, 14, 28ம் நாள் என மொத்தம் ஐந்து ஊசிகள் போட வேண்டும். நாய்க்கடி போலவே பூனைக்கடி, குரங்குக்கடி, வெளவால் கடி போன்றவற்றுக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படும். எனவே, இந்த விலங்குகள் கடித்தாலும் டாக்டர் பரிந்துரைத்தால், தடுப்பூசி போட வேண்டியது அவசியம். ஏனெனில், உயிர்க்கொல்லியான ரேபிஸ் நோய்க்கு மருந்து இல்லை. தடுக்க மட்டுமே முடியும்.

எலி கடித்தால், எலியின் கழிவுகளை மிதித்தால் லெப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis) என்னும்  எலிக் காய்ச்சல் வரும். இதைத் தடுக்க, தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். 

நாம் வீட்டில் வளர்க்கக்கூடிய பறவைகளின் இறகு, எச்சம், கழிவு மூலமாக நிமோனியா நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவற்றால், இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். 

செய்யக்கூடாதவை!

விலங்குகள் கடித்த இடத்துக்கு மேலும் கீழும் கயிறு அல்லது துணியை இறுக்கமாகக் கட்டி ரத்த ஓட்டத்தைத் தடுக்கக் கூடாது. இவ்வாறு செய்வது நரம்பு மண்டலத்தைப் பாதித்து, சிகிச்சையில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

கடித்தால் மட்டும்தான் பிரச்னையா?

செல்லப் பிராணிகள் கடிப்பதால் மட்டும் நோய் வருவது இல்லை. அவற்றின் உடலில் உள்ள வெட்டுக் காயம் மூலமாகவும் உண்ணிகள் மூலமாகவும் நமக்கு நோய்கள் வரலாம். சொறி, சிரங்கு, லைம் (Lyme) போன்ற தொற்றுநோய்கள் ஏற்படும். இதைத் தடுக்க, வருடத்துக்கு ஒருமுறை வளர்ப்புப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம்.

மருத்துவரின் அறிவுரைப்படி, பிராணிகளின் எடைக்கு ஏற்றபடி, மூன்று மாதத்துக்கு ஒருமுறை குடல் புழு மருந்து (De-worming) கொடுக்க வேண்டும். மருத்துவர் குறிப்பிட்ட, கால இடைவெளியில் தடுப்பூசியைத் தவறாமல் போட வேண்டும். உண்ணிகள், பேன்கள் போன்றவை வராமல் இருக்க மருந்துகள் போட்டு, சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். இது போன்ற வழிமுறைகளைப் பின்பற்றினால், நோய்களில் இருந்து நம்மையும் நம் செல்லப்பிராணிகளையும் காக்கலாம்.கவனிக்க...

* எந்தப் பிராணியாக இருந்தாலும், அதைத் தூக்கிக் கொஞ்சினாலும், விளையாடினாலும் உடனடியாக கண்டிப்பாகக் கைகளை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். 

* அலர்ஜி பிரச்னை இருப்பவர்களுக்கு நாய், பூனை ரோமம் உதிர்வால், உடல் உபாதைகள் ஏற்படலாம். எனவே, மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.

* எல்லா விலங்குகளுக்கும் தடுப்பூசிகள், புழு அழிப்பு மாத்திரைகள் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாடாப்புழு வரும். அதனால், செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்க்கும் உடலில் பிரச்னைகள் ஏற்படும்.

* விலங்குகளுக்கு இறைச்சியைச் சமைக்காமல் கொடுக்கக் கூடாது. செல்லப் பிராணிகளின் கூண்டு, தங்கும் இடம் ஆகியவை விசாலமாக இருக்க வேண்டும். அவற்றை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.

தீடீர் நெஞ்சுவலி முதலுதவி என்ன?


தய நோய்கள்... உயிரைப் பறிக்கும் தொற்றா நோய்களில் முதலிடத்தில் இருக்கும் பிரச்னை. முன்பு எல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட இதய நோய்கள், இப்போது இளைஞர்களுக்குக்கூட ஏற்படுகின்றன. `பெண்களுக்கு ஹார்மோன் பாதுகாப்பு இருப்பதால் இளம் வயதில் இதய நோய்கள் ஏற்படுவதில்லை' என்று சொல்லப்பட்டாலும், மெனோபாஸுக்குப் பிறகு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற காரணங்களால் 40 வயதைக் கடந்த பெண்களுக்கும் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இதயத்தில் ஏற்படும் இரண்டு மிக மோசமான பாதிப்புகள், மாரடைப்பு மற்றும் திடீர் இதயத் துடிப்பு முடக்கம். இந்த இரண்டுமே, உயிரைப் பறிக்கும், உடனடி சிகிச்சை பெற வேண்டிய பாதிப்புகள். ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? திடீர் இதயத்துடிப்பு முடக்கத்துக்கு என்ன முதலுதவி என்று பார்ப்போம். 

மாரடைப்பும் திடீர் இதயத்துடிப்பு முடக்கமும்

`ஹார்ட் அட்டாக்' எனப்படும் மாரடைப்பும், `சடர்ன் கார்டியாக் அரெஸ்ட்' எனப்படும் திடீர் இதயத்துடிப்பு முடக்கமும் வேறு வேறு பிரச்னைகள். இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து ரத்தக்குழாய் குறுகுவது, இதய ரத்தக் குழாயில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுவதால், இதயத்தசைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, இதயத்திசுக்கள் உயிரிழப்பதை மாரடைப்பு என்கிறோம். 

உடல் முழுவதும் ரத்தம் பாய, இதயம் துடிக்க வேண்டும். இதயம் திடீரென்று துடிப்பதை நிறுத்துவதை திடீர் இதயத்துடிப்பு முடக்கம் என்கிறோம். இதற்கு, இதயத்துக்கு வரும் மின்னோட்டத்தில் மாறுபாடு ஏற்பட்டு (Fluctuations) இதயம் திடீரென தன் செயல்பாட்டை நிறுத்துவதுதான் காரணம். இந்த இரண்டுக்குமே இரண்டு வெவ்வேறு முதலுதவிகள் உள்ளன. அறிகுறிகளைச் சரியாகக் கணித்து, அதற்கு ஏற்ற முதலுதவியைச் செய்துவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதன் மூலம் உயிரிழப்பைத் தவிர்க்கலாம்.

திடீர் இதயத்துடிப்பு முடக்கம்

திடீரென பேச்சு, மூச்சு இல்லாமல் மயங்கி விழுந்துவிடுவார்கள். உடலில் எந்த அசைவும் இருக்காது. சுயநினைவு இருக்காது. ஏற்கெனவே  மாரடைப்பு வந்தவர்கள், வராதவர்கள் யாராக இருந்தாலும், இப்படி மயங்கிவிழுந்தால் அவர்கள் கன்னத்தைத் தட்டி சுயநினைவு இருக்கிறதா எனப் பரிசோதிக்க வேண்டும். 

இதயத்தில் காதைவைத்துக் கேட்க வேண்டும். தொடர்ந்து சில விநாடிகள் எந்த அசைவும் இல்லை என்றால் உடனடியாக, அவரின் மார்பின் நடுப்பகுதியில், மார்பு எலும்புகள் முடிவடையும் இடத்தில் நம் இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, ஒரு நிமிடத்துக்கு 30 முறை வேகமாக அழுத்த வேண்டும். பிறகு, அவர் வாயில் நம் வாய் வைத்து, வேகமாக காற்றை ஊத வேண்டும். 30 அழுத்தத்துக்கு இரண்டு முறை மூச்சை ஊதுதல் என மாறிமாறிச் செய்ய வேண்டும். இந்த முதலுதவியை சி.பி.ஆர் (Cardiopulmonary Resuscitation - CPR) என்பார்கள். 

சி.பி.ஆர் முதலுதவி செய்யும்போது, சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும். கும்பலாகச் சுற்றி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். மயங்கி விழுந்தவர்களுக்கு தண்ணீர், சோடா, ஜூஸ் போன்ற எதையும் புகட்ட முயற்சிக்கக் கூடாது. இதனால், தண்ணீர் நுரையீரலுக்குச் சென்று பிரச்னை பெரிதாக வாய்ப்புகள் அதிகம்.

திடீர் இதயத்துடிப்பு முடக்கத்துக்கு, `டீஃபிரில்லேஷன்' (Defibrillation) எனும் மின்னோட்ட சிகிச்சை தர வேண்டியது அவசியம் என்பதால், இதய நோய்க்கு சிகிச்சை தரும் அளவு வசதி உள்ள மருத்துவமனைக்குத் தாமதம் இன்றி கொண்டு செல்ல வேண்டும்.

மாரடைப்பு

நெஞ்சு பாரம், தோள்பட்டை வலி, அதிக அளவு வியர்வை வெளியேறுதல், கீழ்த்தாடை முதல் தொப்புள் வரை ஏதாவது ஒரு சில இடங்களில் ஏற்படும் வலி (உதாரணம், தொண்டை வலி) ஆகியவை இதன் அறிகுறிகள். 15 நிமிடங்களுக்கு மேல் நெஞ்சுப் பகுதியில் வலி நீடித்தால் கட்டாயம் மருத்துவ உதவியைப் பெற வேண்டும்.

மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு ஓரளவு சுயநினைவு இருக்கும். `நெஞ்சு வலிக்கிறது' என சைகையிலோ, வார்த்தைகளிலோ சொல்ல முயல்வார்கள்.

முதலில் அவர்களைக் காற்றோட்டமான இடத்தில் அமரவைக்க வேண்டும்.

தண்ணீர், சோடா, பழச்சாறு போன்றவற்றைத் தர வேண்டாம். இதனால், புரையேறி திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்படக்கூடும்.

ஆஸ்பிரின் 325 மி.கி மாத்திரை ஒன்றை உடனடியாகத் தர வேண்டும். இது ரத்தம் உறைதலைத் தடுக்கும். இதைக் கடித்து மென்று அல்லது சிறிதளவு தண்ணீரில் விழுங்கச் செய்யலாம். 

ஒருவேளை மாரடைப்பு ஏற்பட்டவர் சுயநினைவை இழந்துவிட்டால், இதயத்துடிப்பு நின்றுவிட்டால் அவருக்கு சி.பி.ஆர் முதலுதவி அளிக்கலாம். இதயத்துடிப்பு மீண்டும் வந்ததும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

- வெ.வித்யா காயத்ரி


இதய நோய்களுக்கான காரணங்கள்

* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளாமலோ அல்லது சர்க்கரை அளவை அறிந்துகொள்ளாமலோ இருப்பது.

* புகைபிடித்தல்

* உயர் ரத்த அழுத்தம்

* உடல் பருமன்

* மனஅழுத்தம்

* தேவையற்ற கொழுப்பு


மாரடைப்பைத் தவிர்க்க

யாருக்கு வேண்டுமானாலும் மாரடைப்பு ஏற்படலாம். அதைத் தவிர்ப்பதற்கான காலம் கடந்து போய்விடவில்லை. ஏற்கெனவே, மாரடைப்பு வந்திருந்தாலும் மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. இன்றே இதற்கான முயற்சியை எடுப்பதன் மூலம் மாரடைப்பைத் தவிர்க்கலாம். மருத்துவரை அணுகி எளியப் பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பைக் கண்டறியலாம். வர வாய்ப்பு உள்ளது என்றால், தவிர்ப்பதற்கான மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைப்பார். இவற்றைத் தவறாமல் எடுக்க வேண்டும். மேலும், புகையிலையைத் தவிர்ப்பது, உடல் பருமனைத் தவிர்த்து சரியான பி.எம்.ஐ அளவைப் பராமரிப்பது, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைப்பது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம், மாரடைப்புக்கான வாய்ப்பைத் தவிர்க்கலாம்.

ட்ராஃபிக் அப்டேட்ஸ் கூகுள் மேப்ஸில் தெரிவது எப்படி?சோக் நகர்ல இருந்து கோடம்பாக்கம் பத்து நிமிஷம் தான்னு நினைச்சு கிளம்பிட்டு டிராபிக்னால‌ ஆபீஸ்க்கு லேட்டா போயிருக்கீங்களா? ஆபீஸ்ல ஒருத்தன் கூகுள் மேப்ஸ்ல டிராபிக் பாத்துட்டு சீக்கிரம் கெளம்பிட்டேன் என சொல்லி வெறுப்பேத்துவான்? அதெல்லாம் இருக்கட்டும், கூகுல் மேப்ஸ்ல‌ ரூட் வர்றது கூட ஒகே. ஆனா டிராபிக் அப்டேட்லாம் எப்படி வருது னு யோசிக்கிறீங்களா? உங்க குழப்பத்துக்கு பதில் இதோ....

2009-ம் ஆண்டுவரை டிராபிக் சென்சார்ஸ் என்று கூறப்படும் CCTV கேமராக்கள் மற்றும் டிராபிக் கண்காணிப்பு கருவிகள் மூலம் கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் சேவையில் டிராபிக் பற்றிய தகவல்களை பகிர்ந்து வந்தது. இந்த டிராபிக் கண்காணிப்பு கருவிகள் ராடார் அல்லது இன்ஃப்ரா ரெட் கதிர்வீச்சுகள் மூலம் வாகனங்கள் எவ்வளவு வேகமாக நகர்கின்றன என்பதை கணித்து வந்தன‌. இவ்வகை கருவிகளை அரசு, தனியார் என பல தரப்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தன. அந்நிறுவனங்களிலிருந்து கூகுள் தகவல்களை பெற்று வந்தது.

கூகுள்

ஆனால் இந்த தகவல்களை அறிவதில் சிலநடைமுறை சிக்கல்கள் இருந்து வந்தன‌. கருவிகள் பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படும் சாலைகளிலேயே பொருத்தப்படும். மேலும், தகவல் சென்றடையும் நேர இடைவெளி அதிகம். எனவே, அதிகம் பயன்படுத்தப்படாத சாலைகளை பயன்படுத்தும் போது, எதிர்பாராத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் தகவல் பெறுவது  கடினமாக இருந்து வந்தது. 

2009-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் Crowdsourcing என்று கூறப்படும் தொழில்நுட்பத்திற்கு மாறியது. அதாவது மக்களிடமிருந்தே தகவலை பெற்று அதனை சீர் செய்து மக்களுக்கே திரும்பி அளிக்கும் முறை. இதற்கு முதல் தேவை மக்களின் மொபைல் போனில் "லொக்கேஷன்" வசதி ஆன் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் எங்கு இருக்குறீர்கள், எந்த வேகத்தில் நகர்கிறீர்கள் என்பது குறித்த தகவல் கூகுளை சென்றடையும். அது மட்டுமின்றி ஒரே இடத்திலிருந்து பல வாகனங்களின் லொக்கேஷன் வந்து சேருமாயின் அந்த இடத்தில் எத்தனை வாகனங்கள் இருக்கின்றன, என்ன வேகத்தில் நகர்கின்றன என்ற தகவல்களை கூகுள் எளிதாக பெறும்.

நீங்களும், உங்கள் முன்னால் இருக்கும் வாகனமும், அதற்கு முன்னால் இருக்கும் வாகனமும் என பல பேர் ஒரே நேரத்தில் தகவல்களை பகிர்வீர்கள். இது மட்டுமின்றி மெதுவாக அனைத்து வாகனமும் நகர்வது போக்குவரத்து நெரிசலை குறிக்கும். இங்கே கூகுள் நிறுவனம் செய்யும் வேலை என்னவென்றால், எத்தனை வாகனங்கள் இருக்கின்றன, எவ்வாறு நகர்கின்றன என்பதனை வைத்து போக்குவரத்து நெரிசலில்லை, சிறிய அளவு நெரிசல், மிக நெரிசல் என கணக்கிடுவது தான். ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களின் ஓட்டுனர்கள் எப்பொழுதும் தங்கள் லொக்கேஷனை ஆன் செய்து வைக்கின்றனர். இது கூகுளுக்கு பெரிய உதவியாக இருக்கின்றது.

நீங்கள் எங்கு இருக்குறீர்கள் என்பதை ஒருவர் பார்த்துக்கொண்டே இருக்கிறாரா என்பது குறித்த அச்சம் உங்களுக்கு தேவை இல்லை என்று கூறுகிறது கூகுள். நீங்கள் யார் என்பதை மேற்பார்வை இடாமல் தான் தங்களின் லொக்கேஷன் பயன்படுத்தப்படுகிறதாம். இவற்றின் துல்லியத்தன்மை பெருமளவில் ஒத்துப்போவதுதான் இதன் வெற்றிக்கு காரணம். இப்போ நீங்க லொக்கேஷன் ஆன் பண்ணி வண்டி ஓட்டினா அது யாரோ ஒருத்தருக்கு உதவியா இருக்கும்ணு சொல்லுது கூகுள்...

கூகுள் மேப்ஸில் ட்ராஃபிக்கை பார்ப்பது எப்படி?

maps.google.com என்ற தளத்தில் உள்ள Menu-வை க்ளிக் செய்து Traffic-ஐ தேர்ந்தெடுக்கவும்.

Thursday, January 19, 2017

உஷார்... ஜி-மெயில் யூசர்ஸ்

பிஷ்ஷிங்

ங்கள் ஜி-மெயில் கணக்கிற்கு ஒரு புதிய ஆபத்து வரவுள்ளது. கூகுள் பயனாளர்களின் ஜி-மெயில் கணக்கை குறிவைத்து தற்போது புதுவகையான பிஷ்ஷிங் தாக்குதல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. உண்மையான இணையதளம் போன்றே தோற்றம் அளித்து, உங்கள் இணையதள கணக்குகளின் பாஸ்வேர்டுகளை திருடுவதுதான் இந்த பிஷ்ஷிங் மோசடி. போலியான லிங்க்குகளை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி, அதன் மூலமும் உங்களை கணக்கு விவரங்களை ஹேக்கர்கள் கைப்பற்றுவார்கள். எப்படி மீன் பிடிக்க தூண்டிலில் புழுவை வைத்து, ஏமாற்றுகிறோமோ அதைப்போலவே உங்களை ஈர்க்கும் செய்திகள், விஷயங்களைக் கொண்டு உங்களை ஏமாற்றுவதுதான் இந்த பிஷ்ஷிங்..

இதுமாதிரியான தாக்குதல்கள் மற்றும் தகவல் திருட்டு ஆகியவை நீண்ட நாட்களாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் தற்போது பரவிவரும் இந்த புதுவிதமான பிஷ்ஷிங் தாக்குதல், விவரம் தெரிந்தவர்களை கூட ஏமாற்றி விடும்படி இருக்கிறது. இதனை முதன்முதலில் கண்டறிந்து கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் வோர்ட்ஃபென்ஸின் நிறுவனர் மார்க் மௌண்டர்.

எப்படி நடக்கிறது இந்த தாக்குதல்?

முதலில் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு, உங்கள் நண்பர்களிடம் இருந்தோ, அல்லது உங்கள் தொடர்பில் இருக்கும் ஏதேனும் ஒரு முகவரியில் இருந்தோ, ஒரு படத்துடன் கூடிய மின்னஞ்சல் வரும். இந்த மின்னஞ்சலில் நீங்கள் நம்பும்படியான செய்திகளே இடம் பெற்றிருக்கும். உதாரணமாக நீங்களும் உங்கள் நண்பரும் சமீபத்தில் பேசிய விஷயங்கள், உரையாடல் தொடர்பான செய்திகள் அடிப்படையிலேயே அந்த மின்னஞ்சல் இருக்கும்.

இதைப் பார்த்ததும் நீங்கள் அதனை உண்மையென நம்பி திறந்து விடுவீர்கள். பிறகு அந்த மின்னஞ்சலில் இணைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பார்ப்பதற்காக க்ளிக் செய்வீர்கள். உடனே நீங்கள் அந்த படத்திற்கான Preview வரும் என நினைப்பீர்கள். ஆனால் அதற்கு பதிலாக புதிதாக ஒரு Tab திறந்து, வழக்கமான கூகுள் லாக்-இன் பக்கம் போல ஒரு பக்கம் திறக்கும்

ஜி மெயில்

அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டு விவரங்களை கேட்கும். அதில் நீங்கள் கொடுத்து விட்டால் உங்களது தகவல்கள் ஹேக்கர்கள் கைக்கு சென்றுவிடும்.

உங்களது மின்னஞ்சலில் உள்ள தகவல்கள், நண்பர்கள் விவரங்கள், மின்னஞ்சலோடு இணைக்கப்பட்டுள்ள மற்ற சேவைகள் அனைத்தையும் அவர்களால் இயக்க முடியும். உதாரணமாக நீங்கள் ரயில்வே, ஷாப்பிங், வங்கி போன்ற சேவைகளை மின்னஞ்சல் மூலம்தான் பயன்படுத்துவீர்கள். இந்த கணக்குகளை அவர்களால் இயக்க முடியும் என்பதுதான் ஆபத்து. 

இந்த தாக்குதல் மூலம் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்ட பின்பு, உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ள மற்ற நண்பர்களுக்கும் இதே மின்னஞ்சல் உங்கள் முகவரியில் இருந்து செல்லும். இப்படி தொடர்கிறது இந்த தாக்குதல்.

எப்படி கண்டுபிடிப்பது?

அட்ரஸ் பார்

கூகுள் அக்கவுன்ட்டை லாக்-இன் செய்யும்போது அட்ரஸ் பாரில், தவறான முகவரி இருந்தால் உஷார் ஆகிவிட வேண்டும். இந்த தாக்குதல் மூலம் திறக்கும் அட்ரஸ் பாரில், data:text/html எனத் துவங்குகிறது. அதற்கு பிறகு accounts.google.com என்ற எழுத்துக்களும் இருப்பதால், இதனை உண்மையான இணையதளம் என நம்பி ஏமாந்து விடுகின்றனர். ஆனால் நிஜமான கூகுள் முகவரி https://accounts.google.com என்றுதான் துவங்கும். ஒருவேளை நீங்கள் இதனால் பாதிக்கப்பட்டவர் என்றால் உங்கள் பாஸ்வேர்டை உடனே மாற்றிவிடுங்கள் எனக் கூறுகிறார் மார்க்.

ஜி-மெயில் கணக்கை பாதுகாக்க சில யோசனைகள்!

1. உங்கள் மின்னஞ்சல் கணக்கின் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றுவது நல்லது. எப்போதும் ஒரே கணினி மற்றும் மொபைல் போன் என இல்லாமல், வெவ்வேறு டிவைஸ்களில் இருந்து உங்கள் மின்னஞ்சலை இயக்க வேண்டியிருந்தால் கண்டிப்பாக இதனைப் பின்பற்றுங்கள். உங்கள் பாஸ்வேர்டு நிச்சயம் வலிமையானதாக, எளிதில் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும்.

2. போனில் ஜி-மெயில் பயன்படுத்துபவர்கள் ஜி-மெயில் ஆப்ஸ்-ஐ எப்போதும் அப்டேட் செய்வது நல்லது.

3. பாஸ்வேர்டு மூலம் மட்டும் பாதுகாப்பதை விட, உங்கள் மொபைல் எண் உதவியுடன் கூடிய 2 - ஸ்டெப் வெரிஃபிகேஷன் முறையை செயல்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் பாஸ்வேர்டு உதவியுடன் மட்டுமே யாரும் உங்கள் கணக்கை திறந்துவிட முடியாது. ஒருவேளை உங்கள் கையில் போன் இல்லையென்றாலும் கூட, இதனை பயன்படுத்த முடியும். இதற்கென Backup codes-களையும் கூகுள் வழங்குகிறது. இதற்கான லிங்க் இதோ...

ஜி மெயில் 2 step verification

4. பொது வைஃபை, பிரவுசிங் சென்டர் போன்ற இடங்களில் உங்கள் மின்னஞ்சலை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், incognito Tab-ஐ திறந்து அதில் பயன்படுத்தலாம்.

5. போலி இ-மெயில்கள், தேவையற்ற விளம்பரங்களில் இருந்து எப்போதும் ஒதுங்கியிருங்கள்.

6. ஜி-மெயில் அல்லது கூகுள் அக்கவுன்ட்களில் லாகின் செய்யும் போது, உங்கள் அட்ரஸ் பாரில் https என்னும் மற்றும் பாதுகாப்பானது என்பதைக் குறிக்கும் பூட்டு சின்னம் ஆகியவை இருக்கிறதா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Prayer List for Shirdi Sai Spiritual Group Prayers on Thursday after Dhoop Aarati – 18:30 hrs on 19th January 2017


Prayer List for Shirdi Sai Spiritual Group Prayers on Thursday after Dhoop Aarati – 18:30 hrs on
​1
​9​
th January 2017
.

 

Dear Sai Brothers and Sisters,

When our prayers from all parts of the world focusing on a specific day & specific time (on ALL Thursdays at 18:30 hrs after Dhoop Aarati) with a single object and total concentration on praying for others, with our noble intention of getting help from Shri Sai Baba for those known and unknown to us, praying selflessly for the benefit of all global Sai families, certainly this divine vibrations from all participating devotees all over the world energize and elevate our subconscious mind with powerful spiritual vibrations, that our group prayers shall have the capability to release divine guidance, divine protection, averts disaster, very powerful divine impact and more importantly all participants witness powerful answers to our prayers.

All prayer requests received from online, Whatsapp, Prayer Request Drop Box at Mandir up to Madhyan AArati will be placed under Baba's Lotus Feet, after Dhoop Aarati all devotees present at Mandir will pray for you. We request Sai devotees all over the world to pray for our Sai Brothers and Sisters and ask Shirdi Sai Baba to accomplish all their wishes and desires as soon as possible.

Om Sai Sri Sai Jaya Jaya Sai.


Prayer for child peace problems solve

Please pray for conceiving this month surely.my bp tension fear pain infection has to go.marriage is not good.he is cheating and interest and performance for child is not good.he has to get punished for troubled me.I have to get child.miracle has to happen.sai has Bron for me.please pray for my father and athai for good […]

Posted in ​Others | January 19, 2017 at 4:11 pm

please shower ur blessings on us

Dear Sai, please make sure everything falls in place regarding my husband's job……u know we dont have anyone other than you to ask for…….we are really counting on this time……things are really not good at our end…..you are all knowing….My Lord!!! please dont test us anymore and dont leave us halfway.We pray to you to […]

Posted in Prayer for job​, business​ | January 19, 2017 at 5:47 am

Prayers

Plzz pray for me to solve my problem within a short period..also to make my job permanent…om sai ram

Posted in Prayer for job​, business​ | January 18, 2017 at 9:24 pm

Help for Marriage

Om sai ram.Please baba help our daughter Alina's marriage early.Om Sai ram

Posted in Prayer for family ​welfare | January 18, 2017 at 9:22 pm

Prayers

Om Sai Ram. It's baba's grace and blessings that your friend has succeeded in the exam.

Posted in Prayer for Education | January 18, 2017 at 9:21 pm

Prayers

Thanku so much sai maa..my friend has passed in exam..with the help.of sai ma only

Posted in Prayer for Education | January 18, 2017 at 9:20 pm

Prayer For Peace And Mercy

Dear Baba, Please protect and save YOUR daughter from all the crooked ways of the vicious people around her at work and in personal life. Give her YOUR strength to perform well and put up with all the ill behaviors. Take care of her widowed mother's ill health. OM SAI RAM. Moumita, Hyderabad.

Posted in Prayer for health, happiness and peace | January 18, 2017 at 9:12 pm

Prayers

Om Sai Ram Baba I am left behind the world in all matters I am undergoing great backlog in all matters You are the only hope I got now, you can change every body destiny in a day towards bright future Why not me and my family members? Please take care of me and my […]

Posted in Prayer for health, happiness and peace | January 18, 2017 at 8:09 pm

Prayers

Plzz pray for me to solve my problem within a short period..also to make my job permanent…om sai ram

Posted in Prayer for job​, business​ | January 18, 2017 at 4:55 pm

Prayers

Pranam Baba, Please shower wealth on me, I am not finding any outcome since almost three years now.Thank you, Baba.

Posted in Prayer for resolving financial problem | January 18, 2017 at 3:59 pm

love marriage with my my family members

om sai baba i truly and deeply love saravanan please i want to mary saravanan please help me i trust sai baba i hope sai baba will join my love with my family members acceptance i love saravanan but my family members not accepting my love please saibaba talk to my parents and arrange for […]

Posted in prayers | January 18, 2017 at 11:29 am

Amar Chakri

Baba, please amar chakri ta tomar deen thursday deen obdi koriye dao. Aamra dujonei bhalo mone badi jete chai. Purono company te sob settle kore, notun company's offer letter nebar pore 21st january 2017 e tomar permission niye badi jete Lucknow hoye badi jete chai. Baba tumi to sob jaano. Please amar aar butur mono […]

Posted in ​Others | January 18, 2017 at 2:40 am

Bless my brother

My brother is suffering from severe cough from past 3 months. Any kind of medication is not helping him. Please cure him.

Posted in Prayer for health, happiness and peace | January 17, 2017 at 9:01 pm

prayer

om shree sai nathaya namah….plz baba help me..u know everything baba….plz heal my mother's illness…

Posted in Prayer for health, happiness and peace | January 17, 2017 at 4:50 pm

our new born baaby is not keeping well and Job transfer

Sai baba aapko sat sat naman,Aapki wajah se humlog dossari baar father and mother ban gaye hai.aapka bahut bahut dhanywaaf.But My child is not well .he is suffering with jaundice where level is increasing day by day.We are worried . Please help us sai baba. Aur dosari baat mera job bhi thik nahin mera trasnfer […]

Posted in Prayer for health, happiness and peace | January 16, 2017 at 10:05 pm

prayers

plz baba help me ,u know my wish. Always bless my family.om sairam

Posted in prayers | January 15, 2017 at 7:17 pm

Mrs.

Dearest Baba, Have I hurt you in some way?? I am scared. Please please forgive me. You are my strength, support everything. Please be with me always. Come home. Please don't go away from me.

Posted in prayers | January 15, 2017 at 11:19 am

return of avisekh ray

Shree shirdi Sai baba, you know everything baba, please Sai baba bless me

Posted in Prayer for family ​welfare | January 15, 2017 at 1:27 am

for my son suvam

Jai Shree Sai, Saibaba please I am waiting for my son Suvam , please Sai baba bless me baba, I need your bless urgently, everything is possible for you baba, help me baba

Posted in prayers | January 14, 2017 at 9:42 pm

Marriage

Kindly pray for my marriage with mukil and live happily

Posted in prayers | January 14, 2017 at 1:59 pm

Prayer for Job

Pls pray for to work as a Project Co-ordinator. To get projects from US/UK & other clients & get it done by smaller companies or to freelancers with perfect quality accuracy & on time. Pls include me in the prayers. Thank u

Posted in Prayer for job​, business​ | January 13, 2017 at 9:42 am

Please answer my prayers

Dear SAI, Please help me to get projects from US/UK & other countries and also good contacts with smaller companies here in India or very good & best freelancers who will be able to complete the projects with best quality and within the TAT.I need ur help greatly.As said without ur grace not even a […]

Posted in Prayer for job​, business​ | January 12, 2017 at 2:56 pm

UNIVERSAL PRAYER – May Everybody Be Happy !!!

Universal Prayers – May Everybody Be Happy !!!   Sadguru Sainath Maharaj, May the wicked turn good; May the good attain peace; May the peaceful be freed from all bondage and May the liberated redeem others. May everybody be happy; May everybody be free from disease; May everybody have good luck; May none fall on […]

Posted in Prayer for health, happiness and peace | August 19, 2016 at 8:31 am

 

​​
CONFIDENTIAL PRAYERS SUBMITTED BY:

Honey M

Selva Kumar

​​
​U I Sd T