Sunday, May 31, 2015

பொது இடங்களில் இலவச வைஃபை... தகவல்கள் ஜாக்கிரதை!

ன்றைய நிலையில் முக்கியமான ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், நட்சத்திர விடுதிகள் என அனைத்து இடங்களிலும் இலவசமாக வைஃபை இணைய வசதியானது கிடைக்கிறது. இணையப் பயன்பாடு அதிகமுள்ள இந்தக் காலகட்டத்தில் இலவச வைஃபை கிடைப்பது நல்ல விஷயம்தான் என்றாலும், இதை பயன்படுத்துபவர்களின்  மெயில் விவரங்கள், வங்கி சார்ந்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள் போன்றவற்றை திருடுவதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது. சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு சம்பவமே இதற்கு சிறந்த உதாரணம்.

இந்த இலவச வைஃபையை பயன்படுத்தும்போது நாம் பிரச்னையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக எடுத்துச் சொன்னார் இம்பைகர் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் அண்ட் சிஸ்டம் பிரிவின் தலைமை மேலாளர் லட்சுமி நரசிம்மன். அவர் கொடுத்த தெளிவான விவரங்கள் இங்கே உங்களுக்காக...

ஆன்டெனாவுக்குள் டெக்னிக்கல் குறைபாடு!

"இன்றைய நிலையில் பொது இடங்களில் உள்ள வைஃபையை பயன்படுத்துகிறவர்கள் பலரின் செல்போனில் வைத்திருக்கும் முக்கிய பல விஷயங்கள் திருடு போவது வழக்கமான விஷயமாகி விட்டது. வைஃபை ஆன்டெனாவுக்குள் இருக்கும் ஏதேனுமொரு டெக்னிக்கல் குறைபாடுகளைக் கண்டுபிடித்து, அதனுள் எளிதாக ஹேக்கர்கள் உள்நுழைந்துவிடுகிறார்கள். அதன்பிறகு அந்த வைஃபை முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவதால், அதைப் பயன்படுத்துபவர்களின் தகவல்கள் எளிதாகத் திருடப்படுகின்றன.

பொது இடங்களே இலக்கு!

ஹேக்கர்கள் ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற பொது இடங்களில் உள்ள வைஃபைகளைக் குறி வைப்பதற்கான காரணம், அந்த இடங்களில்தான் மக்கள் நடமாட்டமும், செல்வாக்குமிக்கவர்களின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். தவிர, பொது இடங்களில் உள்ள வைஃபை மேலாண்மை பாதுகாப்பு (அ) பராமரிப்பு குறைவாகவே இருக்கிறது. மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் இந்த இடங்களில் தினமும் பல ஆயிரம் பேர் நடமாடுவதால், இந்தத் திருட்டு வேலைகளை யார் செய்தார்கள், எப்படி செய்தார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். இதை எல்லாம் நன்றாக தெரிந்து கொண்டுதான் ஹேக்கர்கள் களத்தில் இறங்கி தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொள்கிறார்கள்.

வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் வைஃபை ஆன்டெனாக் களில் உள்ள குறைபாடுகளால் மட்டும்தான் தகவல்களைத் திருடமுடியும் என்பதில்லை. நம்மிடம் இருக்கும் லேப்டாப், ஸ்மார்ட் போன்களை வைத்தும் பொது இடங்களில், அந்த இடம் சார்ந்த பெயர்களிலேயே புதிதாக வைஃபை ஹாட்ஸ்பாட்களை உருவாக்கி பொறி வைப்பதன் மூலம் அதில் விழும் நூற்றுக்கணக் கானவர்களின் தகவல்களைத் திருட முடியும்.

செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை!

கூடுமானவரை பொது இடங்களில் இலவச வைஃபைகளைப் பயன்படுத்து வதைத் தவிருங்கள். இலவச வைஃபைக்கு ஆசைப்பட்டு, மதிப்புமிக்க தகவல்களை இழக்காதீர்கள்.

பொது இடங்களில் உள்ள இலவச வைஃபைகளை பயன்படுத்தி ஃபைனான்ஷியல் செயல்பாடுகள், அதாவது ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்குப் பணப் பரிமாற்றம் செய்வது, ரயில்/விமான நிலையங்களுக்குள் அமர்ந்துகொண்டு பயண டிக்கெட்டுகளை நெட்பேங்கிங் சேவையைப் பயன்படுத்தி முன்பதிவு செய்வது போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த வசதியைப் பயன்படுத்த நேர்ந்தால், இணைய வசதி தேவைப்படும் நேரத்துக்கு மட்டுமே தங்களின் லேப்டாப் மற்றும் இதர கேட்ஜெட்டுகளை வைஃபை மூலம் இணைத்துக் கொள்ளுங்கள். தேவை முடிந்ததும் வைஃபை-ஐ உடனே துண்டித்துவிடுவது நல்லது.

இலவச வைஃபையில் https என்கிற புரோட்டோகால் (Protocol) கொண்ட வலைதளங் களை மட்டுமே பயன்படுத்துங்கள். வங்கிகள் சார்ந்த இணைய தளங்கள், ஜிமெயில், யாஹூ போன்ற மெயில்கள் https கொண்டதாகத்தான் இருக்கும். ஆனால், எல்லா வலைதளங்களும் பாதுகாப்பு அதிகமுள்ள இந்த வகை புரோட்டோகால் அல்லாமல் http என்ற புரோட்டோகால் கொண்டதாக இருக்கும். இந்த வகை புரோட்டோகால்களில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதால், இந்த போர்ட்டல் மூலமாக இயங்கும் வலைதளங்களை இலவச வைஃபைகளைப் பயன்படுத்தும் போது தவிர்த்து விடுங்கள்.

இலவச வைஃபை வசதியை  பொழுதுபோக்குவதற்காக, இணையம் வழியாக வீடியோக்களைப் பார்ப்பது, செய்திகளைப் படிப்பது, பாடல்களைக் கேட்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் கள். இலவசமாக வைஃபை கிடைக்கும்போது பயன்படுத்தி னால் என்ன தப்பு என்று நினைப்பதே இவர்களின் மனநிலையாக இருக்கிறது.  ஆனால், அது நம்பகத்தன்மை உடையதா என்பதைப் பார்ப்பது இல்லை. இந்த மனநிலை எல்லாத் தரப்பு மக்களிடமும் இருக்கிறது.

இதுபோன்று பொது இடங்களில் உள்ள போலியான அல்லது பாதுகாப்பு குறைந்த இலவச வைஃபை இணையத் துடன் கேட்ஜெட்டுகள் தொடர்ந்து இணைந்திருப்பின் முக்கியமான, முக்கியமில்லாத அனைத்து விஷயங்களும் களவாடப்படும்.

வெகுதூர பயணத்துக்குத் தயாராகிறீர்கள் என்றால், அந்தப் பயணத்துக்குத் தேவையான உடைமைகளை எடுத்துவைத்துக் கொள்வதுபோல, பாக்கெட் இன்டர்நெட் வசதியையும்    கேட்ஜெட்டுகளுக்கு போட்டு வைத்துக்கொள்ள மறக்க வேண்டாம்.

அலுவலக வேலையாக அல்லது சொந்த வேலையாக ஓரிரு வாரங்கள் வெளியூரில், வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கும் சூழ்நிலை உருவானால், அங்கு கிடைக்கும் வைஃபை குறித்த பாதுகாப்பை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். இதுபோன்ற சூழலில் அங்குள்ள வைஃபை இணையத்தைப் பயன்படுத்தும் போது VPN (Virtual Private Network) என்கிற பாதுகாப்பான டெக்னாலஜி மூலமாகவே பயன்படுத்துங்கள். இப்படி செய்யும்போது யாராலும் தகவல்களை அவ்வளவு எளிதாகத் திருடிவிட முடியாது.

இப்போது ஜிமெயில் முதற்கொண்டு நெட்பேங்கிங் வரை OTP (One Time Password) சேவை இருப்பதால், இந்தச் சேவையை உங்களது செயல்பாடு களுக்காக உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த பாஸ்வேர்டு எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்டு, வலைதளங்களில் பதியப் படுவதால் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

இன்றைய நிலையில் ஒவ்வொரு நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்களுக்கு அப்ளிகேஷன்களை வழங்க ஆரம்பித்திருக்கின்றன. அதனால் வலைதளங்களைப் பயன் படுத்தாமல், இலவச வைஃபைகளைப் பயன்படுத்தி ஆப்ஸ்களை இயக்கும்போது, ஆப்ஸ் போலி இல்லாமல் பாதுகாப்பானதாக இருக்கும் பட்சத்தில் தகவல்கள் திருடு போக வாய்ப்புகள் குறைவே. காரணம், அந்த ஆப்ஸ் மீதான பாதுகாப்புக்கு அந்தந்த நிறுவனங்கள் அதிக அக்கறையைச் செலுத்தும்.

Intrusion Detection System (IDS) சாஃப்ட்வேர்களை லேப் டாப்பிலும், Intruder Detection அப்ளிகேஷன்களை ஸ்மார்ட் போன்களிலும் வைத்திருப்பது அவசியமாகும். இந்த சாஃப்ட்வேர் மற்றும் அப்ளி கேஷன்கள் பொது இடங்களில் புதிதாக ஒரு வைஃபை ஹாட்ஸ்பாட் கேட்ஜெட்டுகளை ஸ்கேன் செய்ய நினைத்தால், அதை உடனே நமக்கு குறுஞ் செய்திகளாக அனுப்பும் வேலைகளைச் செய்கின்றன.

எனவே, பொது இடங்களில் வைஃபை வசதியை எச்சரிக்கையாக கையாளுங்கள்!

Saturday, May 30, 2015

நல்லதையே கேட்போம்; நமக்கது உதவும்!

உத்தமர்களின் வாய்ச்சொல், சத்திய மார்க்கத்தையே உரைக்கும்; அதன் வழி நடந்தால் நல்லதையே அடைவோம்.

அரசர் ஒருவர், தேவேந்திரனை நோக்கி, பல காலம் தவம் இருந்தார். அவருடைய தவத்திற்கு இரங்கிய தேவேந்திரன், கற்பக மரத்தையே அரசருக்குக் கொடுத்து விட்டார்.

கேட்டதை மட்டுமல்ல, நினைத்ததை எல்லாம் கொடுக்கக் கூடிய கற்பக மரம் கிடைத்ததும், தலை கால் புரியாமல் மனம் போனபடி வாழ்ந்தார் அரசர்.
அரசரைப் பற்றி அறிந்த தத்தாத்திரேயர், 'தவசீலரான இந்த அரசன் கற்பக விருட்சத்தை பெற்றதும், கடைந்தேறும் வழியைப் பற்றி எண்ணாது, உலக இச்சைகளில் உழன்று கொண்டிருக்கிறானே... இவனுக்கு நல்லறிவு புகட்ட வேண்டும்...' என நினைத்தார்.

ஒரு நாள், அரண்மனைக்குள் நுழைந்த தத்தாத்திரேயர், 'விடு விடு' வென்று நடந்து போய், அரசருக்கு மட்டுமே உரித்தான உயர் ரக இருக்கையில் அமர்ந்தார்.
சேவகர்களால் அவரைத் தடுக்க முடியவில்லை.

தகவல் அறிந்த அரசர் வேகமாக வந்து பார்த்தார். 'யார் நீ... என்ன தைரியம் இருந்தால், என் இருக்கையில் அமர்வாய்... போ வெளியே...' என்றார்.

'மன்னா... கோபப்படாதே... இந்தச் சத்திரத்தில், நீ தங்கி இருப்பதைப் போலத் தான், நானும் தங்கியிருக்கிறேன். இதற்குப் போய் கோபப்படுகிறாயே...' என்றார்.
'இது ஒண்ணும் சத்திரமல்ல; என் அரண்மனை. போ வெளியே...' என்று கோபத்துடன் கூறினார்.

'ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இங்கு வசித்து வருகிறாயோ...' என்றார் தத்தாத்திரேயர்.

'இல்லை... நான் பிறந்தது முதல், இங்கு தான் வாழ்ந்து வருகிறேன்...' என்று மன்னர் சொல்ல, 'உனக்கு முன் இங்கு இருந்தது யார்?' எனக் கேட்டார் தத்தாத்திரேயர்.
மன்னர் பொறுமை இழந்து, 'எனக்கு முன் என் தந்தை; அவருக்கு முன், என் தாத்தா; அதற்கு முன் என் கொள்ளுத் தாத்தா... இப்படிப் பல பேர் இங்கு தான் இருந்திருக்கின்றனர்...' என்றார்.

'ஆக, இங்கு யாருமே நிரந்தரமாகத் தங்கவில்லை. ஒருவர் வர, ஒருவர் போக என்று தான் இருந்துள்ளனர். அப்படி என்றால், இது சத்திரம் தானே? இதைப் போய் அரண்மனை என்கிறாயே... அதுவும் உன் அரண்மனை என்கிறாய். இது எப்படி?'' என, அமைதியாக கேட்டார் தத்தாத்ரேயர்.

மன்னருக்கு, 'சுருக்'கென்றது. தத்தாத்திரேயரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, உபதேசம் பெற்று உயர்ந்தார் அரசர்.

நல்லதையே கேட்போம்; நமக்கது உதவும்!

வாழ்க்கை என்னும் பரமபதம்!

பரமபத சோமபான படம். விவரம் தெரிந்த நாளிலிருந்தே பரமபதம் விளையாடி இருக்கேன். சோழிகளை உருட்டி, விழும் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டங்களில் நகர்த்தி, சிறு ஏணியில் உயரே ஏறும் போது, மகிழும் அதே வேளையில், இறுதி நிலையைத் தொடும் முன் இருக்கும் பெரிய பாம்பின் தலையில் அமர்ந்து, 'ஐயோ...' என, தலையில் கை வைத்து, மறுபடி பழைய நிலைக்கே வந்ததும், சிலருக்கு, ஏனோ வாழ்க்கையே வெறுத்துப் போனது போல இருக்கும்.

பெரிய  பாம்பின் தலையை நெருங்க நெருங்க, நெஞ்சு படபடக்கும். எல்லா கடவுள்களும் கண்முன் வருவர்.

இத்தகைய அனுபவத்தை, விவரமறியா விடலைப் பருவத்தில் கடந்து வரலாம்; ஆனால், இந்த வயதிலுமா?


வாழ்க்கையே பரமபதம் தான். பலர் வாழ்க்கையில், சாண் ஏறினால், முழம் சறுக்குகிறது. சிலர் வாழ்க்கையிலோ எழுந்திருக்கவே முடியாதவர்களாக ஆகிப் போகின்றனர். அப்படி வாழ்க்கை சுனாமியால் அடித்துச் செல்லப்படுவோர், 'ஓரோண் ஒண்ணு, ரெண்டோன் ரெண்டு...' என்று மறுபடி வாழ்க்கையை துவங்க வேண்டியது தான்.


எப்படி பரமபதத்தில் திரும்ப திரும்ப விளையாடி, பாம்புகளுக்கு நடுவே ஏணிகளும் இருந்து நமக்கு உதவினவோ, அப்படி தேடிவரும் மறு வாய்ப்புகளை பயன்படுத்தத் தான் வேண்டும். சளைத்து, களைத்து விட்டால் எழுந்திருக்கவே முடியாது.


ஆற்றில் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்து கரையிலிருந்தவன், 'அட முட்டாளே... இந்த வேகமான ஆற்றில் எதிர்நீச்சல் போடுகிறாயே... உன்னால் ஓரடியாவது முன்னேற முடியுமா... உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு...' என்றானாம். அதற்கு நீச்சலடித்துக் கொண்டிருந்தவன், 'நான் நீச்சலடிப்பதை நிறுத்தினால், இப்போது இருக்கும் இடம் கூட இருக்காது; ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டு விடுவேன்...' என்றான்.


இதுதான் வாழ்வின் நிலையும்! முயற்சிகளை விடாது செய்கிறவன், இருக்கிற இடத்தையாவது, தக்க வைத்துக் கொள்கிறவன், முன்னேற வாய்ப்பு உண்டு. போராட்டத்தை நிறுத்திக் கொள்கிறவனோ, முடங்கிப் போகிறான்.
ஒருவர், துணி துவைக்கும் இயந்திரத்தில் போடப்படும் சோப்பிற்கு பதிலாக, சிறு சிறு பாக்கெட்டுகளில், திரவ வடிவில் பயன்படுத்தும் அமெரிக்க தொழில் நுட்பத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக இறங்கினார். செய்து கொண்டிருந்த நல்ல வேலையை உதறி, அமெரிக்காவிற்கும் பறந்தார். 'இந்தியாவில் இதை அறிமுகப்படுத்தும் பெருமை தனக்கே சேரப் போகிறது...' என்று, ஏகப்பட்ட பணத்தை முதலீடு செய்ததுடன், கடனும் வாங்கினார்.


எனக்கும் மாதிரி தந்தார். வீட்டில் கொடுத்தேன். 'வேலைக்கு ஆகாது...' என்று இரண்டே நாளில் சான்றிதழ் தந்தனர். அவர் தொழிலுக்கு நேர்ந்த கதியும் இதுதான்!


ரொம்ப நாளா ஆளையே காண முடியவில்லை. மனிதர் அடங்கிப் போனார் என்றே எண்ணினேன். ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பின் பார்த்த போது, 'நல்ல முதலீட்டாளர் ஒருவர் கிடைத்தார். நான், பணி பங்குதாரர். சூரிய ஒளி சார்ந்த தயாரிப்புகளை தருவித்து, விற்றுக் கொண்டிருக்கிறேன். நல்லாப் போகுது...' என்றார். கூடவே, 'வாயில் கதவு அடைக்கப்பட்டால் என்ன; ஜன்னல் கதவு திறந்து இருக்கிறதே!' என்ற வசனத்தையும் சொன்னார்.
இன்று பலருக்கும் தேவைப்படும் வசனம் இது! 

லேனா தமிழ்வாணன்

Thursday, May 28, 2015

மனைவியால் யோகம் யாருக்கு ?

ற்காலத்தில் விலைவாசி உயர்வு காரணமாக கணவன் மனைவி இருவரும் சம்பாதித்தால்தான் ஓரளவாவது குடும்பத்தை நடத்த முடியும் என்கிற நிலை! திருமணத்துக்குக் குடும்பத்தாருடன் சென்று பெண் பார்க்கும்போதே, 'பெண் வேலைக்குப் போவாளா?' என்று மணமகன் கேட்கும் நிலை அமைந்துவிட்டது. மேலும், குடும்ப வறுமை காரணமாகவும், ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவும் பெண்கள் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம்! 

கணவரின் ஜாதகப்படி, அவருக்கு அமையப்போகும் மனைவி, வேலைக்குச் செல்வாரா என்பதை அறிந்துகொள்ளாலாம்.

கணவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 7ம் இடம் மனைவியைக் குறிக்கும் ஸ்தானம் ஆகும். அந்த 7ம் வீட்டில் இருந்து 10ம் இடம் கணவரின் ஜாதகத்தில் 4ம் இடம் ஆகும். இந்த 4ம் வீட்டுக்கு அதிபதியான கிரகம் வலுத்திருந்தால், மனைவி வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் யோகம் அமையும்.

4ம் வீட்டோன் ஆட்சி, மூலத் திரிகோணம், உச்சம் ஆகிய நிலைகளில் இருக்கும்போது, அந்த ஜாதகரின் மனைவிக்கு உயர் பதவி யோகம் கிடைக்கும்.

4ம் வீட்டோன் லக்னம் 7, 10 ஆகிய இடங்களில் இருந்தாலும், 5, 9 ஆகிய இடங்களில் இருந்தாலும், மனைவி வேலைக்குச் சென்று பொருள் திரட்டுவாள்.

7ம் வீட்டோனும் லக்ன அதிபதியும் ஒன்றுகூடி 4, 10 ஆகிய இடங்களில் வலுப்பெற்று இருந்தால், கணவனும் மனைவியும் கூட்டாகத் தொழில் செய்து பொருள் திரட்டும் யோகம் உண்டாகும்.

4ம் வீட்டில் சூரியன் அதிபலம் பெற்று இருந்தால், மனைவிக்கு உயர் பதவி, யோகம் அமையும்.

களத்திரகாரகன் சுக்கிரன் ஆவார். அவர் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோண பலம் பெற்று வலுத்திருப்பாரானால், மனைவியால் யோகம் கூடும். பண வரவு உண்டாகும். சொத்துக்களும் சேரும்.

சுக்கிரன் பலம் பெற்று 7ம் வீட்டோனுடன் கூடி 4ம் இடத்தில் இருந்தால், மனைவியால் வீடு, நிலம், மனை, வாகன யோகம் உண்டாகும். சுகமும் கூடும். சொத்துக்களால் வருவாயும் கிடைக்கும். இருவரும் சேர்ந்து தொழில் புரிந்து அதிக செல்வம் திரட்ட வாய்ப்பு உண்டாகும்.

உதாரணமாக, ஒருவருக்கு மேஷ லக்னம் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு 7ம் வீட்டுக்கு அதிபதி சுக்கிரன் ஆவார். 7ம் வீட்டுக்கு 10ம் வீடான 4ம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்து அவருடன் 4ம் வீட்டோன் சந்திரனும், 9ம் வீட்டோன் குருவும் கூடி இருந்தால், வேலைக்குச் செல்லும் மனைவி அமைவாள்.

மனைவியால் சொத்துக்களும் சேரும். மனைவியுடன் கூட்டு சேர்ந்து பொருள் திரட்டும் யோகமும் உண்டாகும். சுக அனுபவம் கூடும். மன மகிழ்ச்சி உண்டாகும். சந்தோஷமாக வாழ வாழி பிறக்கும்.

கடக லக்னத்தில் பிறந்த இன்னொரு ஜாதகரை எடுத்துக்கொள்வோம். இவருக்கு 7ம் வீட்டோன் சனி ஆவார். சனி துலாத்தில் தன் உச்ச ராசியில் வலுத்திருப்பாரேயானால், வேலைக்குச் செல்லும் மனைவி அமைவாள்.

கன்னி லக்னத்தில் பிறந்தவருக்கு 7ம் வீட்டோன் குரு ஆவார். குரு 4ல் தனுசில் தன் ஆட்சி, மூலத்திரிகோண ஸ்தானத்தில் வலுத்திருப்பதால், வேலைக்குப் போகும் மனைவி அமைவாள். கௌரவமான பதவி கிடைக்கும். சொத்தும், சுகமும் சேரும். வாகன யோகமும் உண்டாகும். தெய்வ பக்தி மிகுந்தவள் ஆவாள். நல்ல குணம் அமையும்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவருக்கு 7ம் வீட்டுக்கு அதிபதி செவ்வாய் ஆவார். அவர் 4ல் இருந்தால், வேலைக்குச் செல்லும் மனைவி அமைவாள். சிம்மச் செவ்வாய்க்கு தோஷம் இல்லை. செவ்வாயுடன் சூரியன் ஒன்று சேர்ந்து இருப்பாரானால், மனைவிக்கு உயர் அதிகாரம் உள்ள அரசுப் பதவி கிடைக்கும். நிலங்களும் சொத்துக்களும் சேரும்.

துலா லக்னத்தில் பிறந்தவருக்கு 7ம் வீட்டோன் செவ்வாய் ஆவார். செவ்வாய் 4ல் தன் உச்ச ராசியில் இருப்பாரானால், மனைவி வேலைக்குச் சென்று பொருள் திரட்டும் யோகம் உண்டாகும். செவ்வாய் பூமிகாரகன் என்பதால், வீடு, மனை நிலங்கள் சேரும்.

பொதுவாக ஆணின் ஜாதகத்தில் 4க்கு உரிய கிரகம் வலிமை பெற்றுக் காணப்பட்டால், மனைவியால் அந்த ஜாதகருக்கு யோகம் உண்டு.

என்னை நீ எரித்தால், உன்னை நான் எரிப்பேன்

''என்னை நீ எரித்தால், உன்னை நான் எரிப்பேன்.'' 

- எரிந்துகொண்டு இருக்கும் சிகரெட்டைக் கூர்ந்து பார்க்கும்போது எல்லாம் இந்தக் கவிதை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடிவது இல்லை!

'சும்மா ஒரு கிக்... ஒரு த்ரில்' என்றுதான் ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில், 'மாப்ள தம் அடிக்காம இருக்க முடியலைடா...' என அடிமையாகிற அளவுக்குப் பற்றிப் படர்ந்துவிடும். தெரிந்தே நுரையீரலுக்குத் தினமும் கொள்ளி வைக்கும் கொடிய புகைப் பழக்கத்தில் இருந்து எப்படி விடுபடுவது?

''புகையிலையில் கலந்துள்ள நிகோடினின் அபாயம் மட்டும்தான் வெளியே தெரியும். ஆனால் வெடி உப்பு, கார்பன் மோனாக்சைடு, அமோனியா ஆர்செனிக், மீத்தேன், பிரஸ்லிக் அமிலம், ஃபார்மிக் அமிலம், கிரிஸால், பைரால், ரூபிடின், மெதிலின் பர்பரோல், பைக்கோலின், பார்வோலின், ஒட்டிடைப், சல்புரேடட் ஹைட்ரஜன், சப்பரிடேட், லூனைன், விரிடைன், மைதிலைமின், பார்மால் டிரையுட், பார்பிக் ஆல்டிஹைட், மரிஜூவானா, அக்ரோலின், மார்ங்காஸ், கொரிடீன் போன்ற 4,000 விதமான அமிலங்கள் சிகரெட்தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. விஷ வாயுக் கூண்டுக்குள் உங்களை நீங்களே தள்ளுவது எவ்வளவு பெரிய துயரம்'' என அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார் டாக்டர் ஆல்வின் விஜய்.

'புண்பட்ட மனதைப் புகைவிட்டுத் தேற்றுகிறோம்' எனச் சொல்பவரா நீங்கள்? ஒரு நிமிடம்... டாய்லெட்டுகளில் பயன்படுத்தும் அம்மோனியா ஆசிட் என்கிற ஃபினாயில், நெயில் பாலிஷ் ரிமூவர், இறந்த உடல்களைப் பதப்படுத்தும் ஃபார்மலின் போன்ற அமிலங்களின் கலவையும் சிகரெட்டில் இருக்கின்றன. இத்தகைய நச்சுக்களைக்கொண்டுதான் உங்களின் மனதைத் தேற்றப்போகிறீர்களா?

''சுவாசக் குழாயில் சளி ஏற்பட்டு 'லொக், லொக்' என்று அடிக்கடி இருமல் படாத பாடுபடுத்தும். குடல் புண், வாய்ப் புண், தொண்டை எரிச்சல், நாக்கு சுவை உணர்வை இழத்தல், கண் பார்வை மங்குதல், தோல் சுருக்கம், கை கால் நடுக்கம், புற்றுநோய், நுரையீரலில் சளி கோத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத 'சி.ஓ.பி.டி.' என்கிற நாள்பட்ட நுரையீரல் சுவாசக் குழாய் சுருக்கம் வரை இது கொண்டுபோகும்.

ரத்தத்தில் பிராண வாயுவின் அளவைக் குறைப்பதால், ரத்தத்தில் பித்தம் அதிகரித்து இரும்புச் சத்து குறைந்துவிடும். இதனால், ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பு ரத்த நாளங்களில் ஒட்டிக்கொண்டு ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். இதன் விளைவாக அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டு, இதய நோய் உருவாகி மாரடைப்பு உண்டாகும். காச நோய்க்கு எவ்வளவு சிறப்பாக சிகிச்சை அளித்தாலும் புகையிலைப் பழக்கம் உள்ள நோயாளிகளில் 70 சதவிகிதத்தினரின் இறப்பைத் தவிர்க்க முடிவது இல்லை. மேலும், ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படவும் புகையிலை ஒரு காரணம். மூளைப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு என உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் பயங்கரமானவை'' என்கிறார் டாக்டர் ஆல்வின் விஜய்.

பணத்தையும் கரைத்து, உயிரையும் குடிக்கும் புகையிலையை எப்படிக் கைவிடுவது என்பதற்கு சில யோசனைகளை முன்வைக்கிறார் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் புகையிலைத் தடுப்புப் பிரிவின் துறைத் தலைவராக இருக்கும் டாக்டர் விதுபாலா.

''ஆல்கஹாலைவிட, கஞ்சாவைவிட நிகோடினுக்கு மனிதனை அடிமைப்படுத்தும் தன்மை அதிகம். இதனால் புகையிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுகிறேன் என்பது நடக்காத காரியம். அதனால், ஒரு நிமிடத்திற்குள் ஆரம்பித்த புகைப் பழக்கத்தை ஒரே நொடியில் விட்டுவிட முடிவு செய்ய வேண்டும். முதலில் புகையிலைப் பழக்கத்தினை நிறுத்த ஒரு தேதியினை முடிவுசெய்யுங்கள்.

மனதை இறுக்கத்தில் இருந்து தளர்த்தும் யோகா, நடைப்பயிற்சி, தியானம், நடனம் போன்றவற்றைத் தினமும் தவறாமல் செய்யுங்கள். புகையிலையால் புண்பட்ட உங்களை, அந்தப் பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டுவர இவை உங்களுக்குக் கை கொடுக்கும்.

புகையிலையால் உங்கள் பொருளாதாரத்துக்கும் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் எத்தகைய பாதிப்புகளை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.

புகையிலையை நிறுத்த ஆரம்பித்த முதல் ஏழு நாட்கள் கோபம், எரிச்சல் தோன்றலாம். மாரடைப்பு, புற்றுநோயைவிட... கோபமும் எரிச்சலும் சமாளிக்க முடியாத பிரச்னை  இல்லை. இந்த மாதிரியான நேரங்களில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவது, உடற்பயிற்சி செய்வது புகைப் பழக்க எண்ணத்தைக் குறைக்க உதவும்.

எப்போது எல்லாம் புகையிலை, பான் போன்றவை உங்களின் நினைவுக்கு வருகிறதோ... அப்போது எல்லாம் உட்கார்ந்த நிலையில் உங்களின் மூச்சினை நன்றாக இழுத்துவிட முயற்சி செய்யுங்கள். ஏலக்காய் அல்லது கிராம்பினை வாயில் போட்டு மெல்லுங்கள். இந்த வாசனைக்கு சிகரெட் குடிக்கும் எண்ணத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை அதிகம்.

சிகரெட்டை விட்டவர்கள் கேரட், வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிடுங்கள். புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தால்கூட, இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் அதை தடுக்கும். சிகரெட்டைவிட சிகிச்சை முறையும் உள்ளது. படிப்படியாக இந்தப் பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டுவருவோம்'' என்கிறார் விதுபாலா.

மே 31-ம் தேதி புகையிலை எதிர்ப்பு நாள். சிகரெட் பழக்கத்தில் இருந்து நீங்கள் விடுபட அல்லது உங்களுக்கு நெருக்கமானவரை விடுவிக்க... இன்னும் ஒரு வாய்ப்பு!

புகைத்தலை கைவிடுங்கள்...

புகைத்தலை கைவிடுங்கள்...

புகையிலையின் பயன்பாடு மற்றும் புகைத்தலின் பாதிப்புகள் இந்தியாவில்,சிகரெட், சுருட்டு, பீடி, சிம்லி எனப் பல வகைகளில் புகையிலை புகைக்கப்படுகிறது.பான், வெற்றிலையுடன் சேர்த்து புகையிலை சேர்த்து மெல்லப்படுகிறது.இது தவிர, குட்கான, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களில் புகையிலை பயன்படுத்தப்படுகிறது.

உலக அளவில் தவிர்கக்கூடிய மரணங்கள் நிகழ்வதற்குப் புகையிலை முன்னணி காரணமாக இருக்கிறது.ஒரு சிகரெட் புகைக்கும்போது, வாழ்வில் தோராயமாக 11 நிமிடங்களை இழக்கின்றனர்.ஒவ்வொரு ஆறு நொடிக்கும் ஒருவர், புகையிலை தொடர்பான பிரச்னை காரணமாக உயிரிழக்கிறார்.புகைப் பழக்கம் இல்லாதவர்களைக் காட்டிலும், புகைப்பவர்களின்  இறப்பு விகிதம் 60- 80 சதவிகிதம் அதிகம்.
ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் இந்தியர்கள் புகையிலை காரணமாக உயிரிழக்கின்றனர். பீடி, சிகரெட் என, எந்த ஒரு புகையிலைப் பழக்கம் உள்ளவர்களும், பழக்கம் இல்லாதவர்களைக் காட்டிலும் 6-10 ஆண்டு முன்னதாகவே உயிரிழக்கின்றனர்.
நிகோடின் புகையிலையில் நிகோடின் என்ற ரசாயனம் உள்ளது. இது போதைக்கு அடிமைப்படுத்தும் தன்மை கொண்டதும், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியதுமாகும். சிகரெட் புகைக்கும்போது, அதில் இருந்து வெளிப்படும் நிகோடினை, நம்முடைய நுரையீரல்கள் மிக வேகமாக ஈர்த்துக்கொள்ளும். அது மூளையை மிக வேகமாக 8 விநாடிகளுக்குள் சென்று சேரும்.

நிகோடின் மூளையைச் சென்று அடைந்ததும், அங்கு சில ரசாயனங்களைச் சுரக்கத் தூண்டுகிறது. உடன் மூளையும் அதைச் செய்கிறது. இதனால், மிகவும் அருமையாக இருப்பது போன்ற மனநிலை ஏற்படுகிறது. இந்தச் செயல்பாடானது, நிகோடின் அளவு மூளையில் குறையத் தொடங்கியதுமே குறைந்துவிடும். இதனால், உடனடியாக அடுத்த சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். மூளை எப்போதும், ரம்யமான அல்லது அருமையான மனநிலையைத் தக்கவைக்க வேண்டும் என்பதற்காக, புகைத்தல் பழக்கத்தை ஏற்கிறது.

புகைத்தலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்

உடல் முழுவதும் பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படும்.

மூளை: பக்கவாதத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

கண்கள்: ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, கண்களில் ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படுத்துகிறது. இதனால்,  பார்வை இழப்பு ஏற்படும்.

வாய்: ஈறுகள் நிறம் மாறும். சுவை மற்றும் வாசனை நுகரும்தன்மை குறையும்.

தோல்: சுருக்கங்கள், சருமம் உலருதல், நிறம் மாறுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

முடி: முடியின் நிறம் மாறுதல் மற்றும் முடி உதிர்தல்.

கைகள்: சிகரெட் பிடிக்க பயன்படும் விரல்கள், நகங்களின் நிறம் மாறும்.

நுரையீரல்: நுரையீரல் வளர்ச்சி குறையும், சுவாசப் பாதை குறுக ஆரம்பிக்கும். நுரையீரல் புற்றுநோய் ஏற்பட 
மிக முக்கிய அல்லது முன்னணி காரணம் சிகரெட் புகைத்தல்தான்.

இதயம்: ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு விகிதம் அதிகரிக்கும். ரத்தக் குழாய்களின் தன்மை கடினமாகும்.
எலும்பு: எலும்பு அடர்த்திக் குறைவு ஏற்படும்.

புகைத்தல் பழக்கத்தை நிறுத்த வழிகள்...

இன்றைய காலக்கட்டத்தில் புகையிலை புகைப்பதை நிறுத்த ஏராளமான வழிகளும் வாய்ப்புகளும் உள்ளன. இவை, அதிகப்படியான பக்கவிளைவுகள் இன்றி சிகரெட்  பழக்கத்தை நிறுத்தவல்லன என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில், நிகோடின் ரீப்பிளேஸ்மென்ட் தெரப்பி (என்.ஆர்.டி) மற்றும் நான்-நிகோடின் டிரக் தெரப்பியும் அடங்கும்.

நிகோடின் ரீப்பிளேஸ்மென்ட் தெரப்பி (என்.ஆர்.டி)

என்.ஆர்.டி-யில் நிகோடின் இருக்கும். ஆனால், சிகரெட்டில் உள்ள அளவுக்கு  இல்லாமல் மிகக்சிறிய அளவில் இருக்கும். என்.ஆர்.டி- மிகக் குறைந்த அளவிலான நிகோடினை அளிக்கிறது. இது, நிகோடின் அளவு குறைவாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக நிகோடினே இல்லை என்ற நிலையை உடல் அடைய பெரிதும் உதவியாக இருக்கும். இதன்மூலம், ஒரு கட்டத்தில் புகைப்பதை முற்றிலுமாக நிறுத்த முடியும். என்.ஆர்.டி-யானது கம்ஸ், பேட்ச்சஸ், இனிப்பு, மூக்கில் நுகரும் ஸ்பிரே. மாத்திரை, இன்ஹேலர் எனப் பல வடிவங்களில் கிடைக்கிறது. இவைகளில், நிகோடின் கம் அனைவராலும் விரும்பப்படும் வடிவம் ஆகும்.

நிகோடின் கம்

1984-ம் ஆண்டு உலகச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. நிகோடின் கம் தற்போது இந்தியாவில் 2 மி.கி மற்றும் 4 மி.கி அளவுகளில் கிடைக்கிறது. சிகரெட் புகைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்போது இதை எடுத்துக்கொண்டால், அந்த உணர்வு மறையும். இதன் வெற்றி விகிதம் 50 - 70 சதவிகிதம்.

2 மி.கி கம்மானது, ஒரு நாளைக்கு 20 அல்லது அதற்கு கீழ் புகையிலை புகைப்பவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. 4 மி.கி ஒரு நாளைக்கு 20  மேல் புகைப்பவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. 4 மி.கி நிகோடின் கம் மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

நிக்கோடின் இல்லா  மருந்து தெரப்பிஇதில், புப்ரோபியன்  (Bupropion) மற்றும் வாரெனிக்லைன் (Varenicline)  என்ற அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் சிகரெட் புகைப்பதை நிறுத்த புகைப்பவருக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.
எப்படிக் கைவிடுவது?

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நீங்கள் செய்யும் மிக நல்ல காரியம், புகைப்பதை கைவிடுவதுதான். ஆனால், இதற்கு மிக அதிக அளவில் மன உறுதி தேவைவப்படும். இதற்கு புகைப்பவரும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் இணைந்து சரியான பாதையில் பயணிப்பது அவசியம். புகைப்பதைக் கைவிட விரும்புகிறவர்கள், ஒரு வல்லுனரின் ஆலோசனைப் பெற்று அதன்படி செய்யலாம்.

புகைப்பதை நிறுத்தும்போது கவனத்தில்கொள்ள வேண்டியவை:

மன உறுதியுடன் இருக்க வேண்டும். என்னால் புகைப்பதை நிறுத்த முடியும் என்று மனப்பூர்வமாக நம்ப வேண்டும்.

ஏன் கைவிட வேண்டும் என்று முதலில் பட்டியல் தயாரித்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு... நல்ல ஆரோக்கியம், நமக்கு நெருக்கமானவர்களின் நலன் என்று... இதைத் தினமும் படித்துப் பார்க்க வேண்டும். இது, உங்களின் சிகரெட் பழக்கத்தைக் கைவிட தூண்டுதலாக இருக்கும்.

குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் என அனைவரிடமும் உங்கள் திட்டத்தைப் பகிர்ந்துகொண்டு, அனைவரது ஒத்துழைப்பையும் பெறுங்கள்... உங்கள் முயற்சி வெற்றிபெற உங்களை ஊக்குவிக்க அவர்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

உங்கள் மருத்துவரிடம் இதுபற்றி பேசுங்கள். அவரது ஆதரவையும் வழிகாட்டுதலையும் பெற்று, மிகவும் ஆரோக்கியமான பாதுகாப்பான முறையில் புகைத்தலை கைவிடுங்கள்.

உங்கள் வீடு, வாகனம், வேலை செய்யும் இடம் என எல்லா இடத்தில் இருந்தும் சிகரெட்டைத் தூக்கிஎறியுங்கள். சிகரெட் புகைக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்திடுங்கள்.

என்.ஆர்.டி உதவியை நாடுங்கள். சிகரெட்டுக்கு மாற்றாக நிகோடின் ரீப்பிளேஸ்மென்ட் தெரப்பி சுயிங்கம்மைப் பயன்படுத்துங்கள்.

சிகரெட் பிடிக்காததால் ஏற்படக்கூடிய எரிச்சல், சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற தூண்டுதல், ஓய்வீன்மை போன்றவற்றை என்.ஆர்.டி மூலம் தவிர்த்திடுங்கள். இந்த அறிகுறிகள் சிகரெட் நிறுத்திய முதல் இரண்டு வாரங்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.

ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக இருங்கள்.

ஏன் நிறுத்த வேண்டும்?

புகைப்பதை நிறுத்துவதன் மூலம் உங்கள் மற்றும் உங்களுக்கு பிரியமானவர்களின் ஆரோக்கியத்தைக் காக்கறீர்கள். புகைப்பதை நிறுத்திய அடுத்த நிமிடத்தில் இருந்தே மாற்றங்கள் நிகழத் தொடங்கிவிடுகின்றன.

உடனடியாக: உங்களைச் சுற்றியுள்ள காற்று மண்டலம் உங்களுக்கும் மற்றவர்களுக்கு ஆபத்தில்லாததாக மாறுகிறது.

20 நிமிடங்ககளில்: ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு விகிதம் இயல்பு நிலைலக்குத் திரும்புகிறது. உங்கள் கைகள் மற்றும் பாதங்களின் வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.

8 மணி நேரத்தில்: ரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு இயல்பு நிலைக்குத் திரும்புகிறது48 மணி நேரத்தில்: நரம்புகளின் முடிவு பகுதிகள் மறுவளர்ச்சி அடைய ஆரம்பிக்கின்றன. இதனால், சுவைத்தல் மற்றும் வாசனை நுகருதல் தன்மை மீண்டும் அதிகரிக்கிறது.

2-12 வாரங்களில்: சுவாம் மற்றும் ரத்த ஓட்டம் சீராகிறது. நடைப் பயிற்சி எளிமையாகிறது.

1-9 மாதங்களில்: இருமல், சைனஸ் பிரச்னைகள், சுவாசித்தலில் ஏற்பட்ட சிரமம் போன்றவை குறைய ஆரம்பிக்கின்றன.

1 ஆண்டில்: புகைப்பவர்களைக் காட்டிலும் உங்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பாதியாகக் குறைகிறது.

5 ஆண்டுகளில்: பக்கவாதம், வாய், தொண்டை, உணவுக் குழாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு, புகைக்காதவர்களுக்கு உள்ள நிலையை அடைகிறது.

10 ஆண்டுகளில்: புகைபழக்கமே இல்லாதவர்களுக்கு இணையாக வாழ்நாள் நீட்டிக்ககப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்பு புகைப்பவர்களைக் காட்டிலும் பாதியாகக் குறைகிறது. உடலில் ஏற்கனவே இருந்த புற்றுநோய் தோற்றுவிக்கும் செல்கள் அகற்றப்படுகின்றன.

வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள்... சிகரெட்டை அல்ல!!

(Sponsored by Nicotex, Cipla)
பத்ம ஸ்ரீ பேராசிரியர் ஆர் குலேரியா,
எம்.டி., டி.எம் (நுரையீரல் மற்றும் உயிர் காக்கும் மருந்து)
பேராசிரியர் மற்றும் தலைவர், நுரையீரல் மருத்துவம் & ஸ்லீப் திரட்டு துறை,
எய்ம்ஸ்

Wednesday, May 27, 2015

ALMS GIVING WITH STRAIGHT FORWARDNESS.

ALMS GIVING WITH STRAIGHT FORWARDNESS.

 

Baba: Nana, I will give you one more lesson.

 

N.G. Chandorkar: Very good.

 

Baba: Nana, if any one begs of you anything, if that be in your hand or power, and if you can grant the request or get it granted, do so. Do not say "No". If you have nothing to give, then, give a suave negative. Do not mock or ridicule the applicant nor get angry with him. If you do not like to part with what you have, do not say falsely that you have nothing . Decline to give it in polite terms and say circumstances or your desire stand in the way. Will you remember this lesson or forget it?

 

N.G. Chandorkar: What is difficulty in this? I shall remember.

 

Baba: This lesson is not quite so easy as it may seem.

 

N.G. Chandorkar: I will keep it in mind.

 

Sometime later, Nana, who had promised to pay Rs.300/- for charity to be done at the Kopergaon Datta temple did not bring the money and therefore avoided a visit to the temple, which was on his way to Shirdi. He, with the approval of his friend, took a detour through a very thorny path, as a result of which he and his friend ran thorns in their bodies. When they reached Shirdi, Baba would not talk to them.

 

N.G. Chandorkar: Why don't you talk with me?

 

Baba: Nana, when a man says he will remember the lessons I taught him but really does not, how can I talk to him?

 

N.G. Chandorkar: Baba, I remember all your lessons.

 

Baba: You gentleman, you evade seeing 'sircar' (God Datta) and take a detour. Why? Because the saint will ask for Rs.300/- is this the way to remember my lesson? If you have not the money, if it was not easy to arrange to get it, you have only to tell him that fact. Will the saint eat you? But what device is this, to avoid the temple of God for fear of the saint demanding money? Well then, have not thorns pierced your feet and body and the posterior part of your sapient friend? How can I talk to such a person?


(from Baba's Charters and Sayings, No. 306)

Guruvaar Prarthna

Guruvaar Prarthna


Our Beloved Sadguru Sainath, please accept our humble prayers on this Holy day of Guruvaar. Baba, what a great world this is!!! You are with us and guiding us in our life. You are showing right path in this wrong world, yet a small ray in our mind tries to jump out to the attractions of ills and malicious things. Make our eyes not to see sideways but straight to Your Lotus Feet. Let our accumulated sin not to increase, but to dissolve in Your stream of grace to us. On this holy day we start our prayers by reading Your divine words in Shri Sai Samartha Satcharita.


"Before the mind, the intellect and other senses enjoy their objects, remember me first so that they become an offering to me, slowly. 

The senses can never remain without their objects; but if these objects are first offered to the Guru, the attachment for them will naturally vanish. 

If you desire anything, desire me only! If you are angry vent your anger on me only! Offer me your pride and obstinacy. Be devoted only to me. 

Whenever desire, anger, pride arise strongly make me the object towards which to direct them. 

In this way, one by one, the Lord will help you in eradicating all the 'Vrittis'. The Lord (Govinda) will certainly calm the strong waves of these three venomous qualities. 

In fact, this disturbed mental state would be absorbed in my form or would become one with me. A state of peace will be yours at my feet". 

If you practise this, desires will become weak, on their own, and with the passage of time will be destroyed from their very roots. The mind will be free from all such tendencies. 

Knowing and believing that the Guru is close by, such a person would never be disturbed by such tendencies.

Once such a good habit takes firm root, the bondage of the world will loosen. The Guru's form will be seen in every desirable object. Thus desire itself becomes the form of the Guru. 

If there is the slightest desire for the enjoyment of the objects, and you think that Baba is close by, the question whether the object is fit to be enjoyed or not will at once arise. 

The object that is not fit to be enjoyed will be easily shunned. In this way, the devotee's vicious addictions will disappear and an aversion towards the undesirable will develop. 

He will be ready to obey the rules for the control of the senses, as mainly stated in the Vedas. Then, the enjoyment of the objects will be as per the rules and there will be no indiscriminate indulgence. 

When such a habit is developed, the thoughts about enjoyment of the sense objects are weakened. The desire for the worship of the Guru arises and pure knowledge will sprout.

 

When pure knowledge grows, the bondage of body-consciousness will break and the intellect will be merged in spirit consciousness, leading to infinite bliss.

I bow down to Sree Ganesh

I bow down to Sree Saraswati

I bow down to the Guru

I bow down to the Family Deity

I bow down to Sree Sita-Ramachandra

I bow down to Sree Sadguru Sainath.


 

-(from Shri Sai Samartha Satchrita, Chapter  24, Ovi 46 - 59)

http://babaprayers.blogspot.in/

Monday, May 25, 2015

எங்கெங்கும் நிம்மதி நிலவ...‘எம்பதி’!

எங்கெங்கும் நிம்மதி நிலவ...'எம்பதி- EMPATHY'!

''கல்யாணமாகி ரெண்டு வருஷம் ஆகுது. நானும் என் மனைவியும் சண்டை போடாத நாளே இல்லை. காதலிச்சப்போ நான் எது செஞ்சாலும் ரசிச்சவ, இப்போ என்ன சொன்னாலும் புரிஞ்சிக்காம சண்டைபோடுறா. எதையும் என் நிலைமையில இருந்து யோசிக்கவே மாட்டேங்கிறா. வெறுத்துப்போச்சு!''

- ஆண் வாசகர் ஒருவர் மெயில் மூலமாகப் புலம்பித் தீர்த்தார். அவரையும், அவர் மனைவியையும் நேராக வரவழைத்து... அவர்களுக்கு இடையிலான பிரச்னைகளைக் களைய நுட்பமான யோசனை ஒன்று சொன்னேன். அதுதான், அடுத்தவர் நிலையில் இருந்து யோசிக்கும் 'எம்பதி' (Empathy). கணவர் சொல்வதை, கணவரின் நிலையில் இருந்து மனைவி புரிந்துகொள்வதும், மனைவி சொல்வதை, மனைவியின் நிலையில் இருந்து கணவர் புரிந்துகொள்வதும் சிறு சச்சரவுகூட எழாத இல்லறம் அமைய வழிவகுக்கும்.

எம்பதி என்பது, தம்பதிகளுக்கு இடையில் மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய அடிப்படை மனிதாபிமானப் பண்பு. தன் மகனால் தேர் ஏற்றிக் கொல்லப்பட்டு இறந்துபோன கன்றுக்குட்டியின் பிரிவால் துடித்த தாய்ப்பசு, மனுநீதிச்சோழனிடம் நியாயம் கேட்டு மணி அடிக்க, சோழன், 'கன்றுதானே இறந்தது' என்று விட்டுவிடாமல், பிள்ளையைப் பிரிந்து துடிக்கும் தாய்ப்பசுவின் நிலையில் இருந்து யோசித்து, தன் மகன் என்றும் பாராமல் தேர் ஏற்றிக் கொன்ற கதை, எம்பதிக்கு சிறந்த உதாரணம்.

நம் நிலையில் இருந்து மற்றவர்களின் பிரச்னையைப் பார்த்து, அவர் மேல் பரிதாபப்படும் குணம்... சிம்பதி (Sympathy). இதிலிருந்து இன்னும் ஒரு படி உயர்ந்து நிற்கும் பண்பு, எம்பதி. அதாவது, அவர் நிலையில் இருந்தே அவர் அனுபவிக்கும் வேதனையைப் புரிந்துகொள்வது. இந்தக் குணம், யார் மீதும் நமக்குக் கோபம் தராது. மாறாக, புரிதலையே வளர்க்கும்.

உங்கள் கணவர், உங்கள் பிறந்தநாளுக்குப் பரிசளித்த வளையல் பற்றி உங்கள் மாமியாருக்கு அவ்வளவாக சந்தோஷமில்லை. சொல்லப்போனால், வருத்தம்கூட உண்டு. 'எனக்கு அவர் வளையல் வாங்கிக் கொடுத்ததுல என் மாமியாருக்கு அவ்வளவு பொறாமை, எரிச்சல், கடுப்பு, கோபம். என் புருஷன் எனக்கு வாங்கிக் கொடுக்கிறாரு, இவங்களுக்கு என்னவாம்?' என்று உங்களுக்கு ஆற்றாமை பொங்கலாம். ஆனால், கொஞ்சம் உங்கள் மாமியாரின் இடத்தில் இருந்து இதை யோசித்துப் பாருங்கள். வறுமையிலும், வைராக்கியத்திலும் உங்கள் கணவரை வளர்த்தெடுத்த தாயாக அவர் இருக்கலாம். அவரின் இளவயதில், புதுப்புடவை, சுற்றுலா என சின்னச் சின்னப் பொருளாதார ஆசைகளைக்கூட தியாகம் செய்துவிட்டு, உங்கள் கணவரைக் குறையில்லாமல் வளர்த்திருக்கலாம். இன்று அவர் கைநிறைய சம்பாதிக்க அன்று அவரைக் கடன்பட்டுப் படிக்க வைத்திருக்கலாம். அப்படியிருக்க, அதே வீட்டில் இருக்கும் தன்னை விட்டு, உங்களுக்கு அவர் மகன் வளையல் வாங்கிக் கொடுக்கும்போது, அவருக்கு வருத்தம் வரத்தான் செய்யும் என்பதை, அவர் நிலையில் இருந்து 'எம்பதடிக்'காக யோசிக்கும்போது உங்களுக்கும் புரியும்.

'எல்லா பெண்களையும் போலத்தான் என் மருமகளும் ஆசைப்படுவா. இதுல குற்றம் கண்டுபிடிக்க என்ன இருக்கு?' என்று உங்கள் நிலையில் இருந்து 'எம்பதடிக்'காக உங்கள் மாமியார் யோசித்துவிட்டால், வீடு சொர்க்கமாகிவிடும்.

அலுவலகத்தில், 'ஞாயித்துக்கிழமைக் குள்ள இதை முடிச்சிடணும்' என்று சொல்லும் பாஸ் மீது, 'ஞாயித்துக்கிழமையும் வேலை பார்க்கச் சொல்றாரே' என்று எரிச்சல் வரலாம். ஆனால், 'ஞாயித்துக் கிழமை இதை முடிச்சாதானே திங்களன்று அதை அவர் மீட்டிங்கில் பிரசன்ட் பண்ண முடியும்?' என்று அவர் நிலையில் இருந்து யோசித்தால், வேலை பாரமாகத் தெரியாது. அதேபோல, 'என் டீம் மெம்பர்ஸ் எல்லாரையும் ஞாயிறும் ஆபீஸ் வரச் சொன்னா, அத்தனை குடும்பங்களோட வீக் எண்ட் பிளானும் டிஸ்டர்ப் ஆகுமே? இதுக்கு ஒரு மாற்று வழி கண்டுபிடிக்கணும்' என்று பாஸும் மற்றவர்களின் நிலையில் இருந்து யோசித்தால்... அது ஒரு ஹேப்பி ஆபீஸ் ஆகிவிடும்.

இப்படிப் பெரிய விஷயங்களுக்கல்ல, சின்னச் சின்ன விஷயங்களையும் எம்பதியுடன் நோக்கினால், டென்ஷன் குறையும். குழந்தைக்கு மருந்து கொடுத்தால், அழுது, தவித்து அதைத் துப்பிவிடும். 'எப்பவுமே மருந்து கொடுத்தா இந்தப் பாடுதான் படுத்துது. அப்படியென்ன பிடிவாதம்?' என்று அதை ரெண்டு மொத்து மொத்தும், கத்தும் அம்மாக்கள் இங்கு அதிகம். ஆனால், அந்தக் குழந்தையின் நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள். அது மருந்து, அதைக் குடித்தால் உடலுக்கு நல்லது, துப்பக்கூடாது என்பதெல்லாம் தெரியாத மனம் அதற்கு. கசப்பை உணரும் நாக்கை மட்டுமே அது அறியும். அந்தக் கசப்பைத் தாங்கமுடியாமல் துப்புகிறது. அவ்வளவுதான். இது புரிந்தால், எரிச்சலுக்குப் பதிலாக, மருந்தில் தேன் சேர்த்துக் கொடுப்பது என்ற எளிய வழி புலப்படும்.

மற்றவர்களின் நிலையில் இருந்து யோசிக்கும் இந்த எம்பதி பண்பு, உறவு, நட்பு மேலாண்மை தவிர்த்து தனிப்பட்ட வகையிலும் ஒருவரின் குணத்தை ஆரோக்கியமாக கட்டமைக்க உதவும். யாரையுமே குற்றமாக நினைக்க வைக்காத இந்தப் புரிதல் உள்ள ஒருவரை அனைவரும் மதிப்பார்கள்; அவருக்கும் தன்மீதே மிகப்பெரிய மரியாதை வரும். ஆனால்... எம்பதி இன்மை, அனைவரிடமும் குற்றம் கண்டுபிடிக்க வைத்து, கோபப்பட வைத்து, உங்கள் நிம்மதியையும், உங்களால் குற்றமாகப் பார்க்கப்படுபவரின் நிம்மதியையும் கெடுத்துவிடும்.

இனி உங்கள் முன் ஒரு பிரச்னை எழும்போது, அதைப் பிரச்னைக்குரியவர் நிலையில் இருந்து பாருங்கள். தீர்வு எளிதாகும்; உறவு, நட்பு பலப்படும்!

- ரிலாக்ஸ்...


 - டாக்டர் அபிலாஷா

பிளே ஸ்கூல்... பெற்றோர்கள் கவனத்துக்கு!

பிளே ஸ்கூல்... பெற்றோர்கள் கவனத்துக்கு!

மே மாதம்... சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில், பெற்றோர் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் மாதம். 'ஹன்ட்டிங் எ குட் ஸ்கூல்' என்பது, நல்ல மாப்பிள்ளை தேடுவதைவிட சவாலான விஷயமாக மாறிவருகிறது. `கல்வியை முதன் முதலில் குழந்தைக்கு அறிமுகப்படுத்தும் பள்ளி எப்படி இருக்க வேண்டும்... பள்ளியைத் தேர்வு செய்யும்போது பெற்றோர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்ன' என்பவை பற்றி நம்மிடம் பேசினார், சென்னை சிட்லபாக்கத்தில் 'கேலக்ஸி மான்டிசோரி அகாடமி' நடத்தி வரும் சந்திரபிரபா. 3 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கான மான்டிசோரி முறை கல்வியில் பல வருடங்கள் அனுபவம் பெற்றவர் இவர்.

''உணவு, உடை, பொம்மை, பொழுது போக்குன்னு எல்லாத்திலும் குழந்தைகளுக்குச் சிறந்ததைக் கொடுக்கும் பெற்றோர்கள், கல்வி விஷயத்திலும் கொஞ்சம் பலமா யோசிக்கணும். எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரியான இயல்புகளும் திறமைகளும் கொண்டவங்க இல்லை. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அவங்களுக்கேத்தபடி பள்ளியும் கல்வியும் இருக்கணும். சில குழந்தைங்க கொஞ்சம் சப்போர்ட் தேவைப்படறவங்களா இருப்பாங்க. அவங்களுக்கு 10 சதவிகிதம் உதவியும் வழிகாட்டலும் இருந்தாலே போதும்; நல்லா வந்துடுவாங்க. அதைக் கொடுக்கத் தவறும்போது அவங்களுடைய அந்த 10 சதவிகிதத் தேவை கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சு, பிரச்னை பெரிசாகுது. அப்போ, பெற்றோர்கள் அதைச் சமாளிக்க முடியாம திணறுறாங்க. பள்ளியைத் தேர்ந்தெடுக்கிறப்போ, நம்ம குழந்தையின் மேம்பாட்டுக்குத் தேவையானது எல்லாம் இருக்கான்னு பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டியதும் அவசியம். சரியா பேச்சு வராத குழந்தைகளுக்குப் பேச்சுப் பயிற்சி, பயப்பட்டு அழற குழந்தைகளை அரவணைக்கும் அன்பான சூழல்... இப்படி எல்லாமே தேவை. எல்லா குழந்தைகளுக்கும் ஒரே கல்வியைப் புகட்டலாம். ஆனா, ஒரே முறையில் கொடுக்க முடியாது. குழந்தையின் கத்துக்கிற திறன், உள்வாங்கும் சக்தி, ஞாபகசக்தி... இப்படி குழந்தைகளின் அடிப்படை விஷயங்களுக்குக்கேற்பத்தான் ஸ்கூல் செலக்‌ஷன் இருக்கணும்.

'தி பெஸ்ட்' என்பது, பள்ளியின் கட்டமைப்பு மட்டும் இல்லை. ஏ.சி கிளாஸ்ரூம், வெளிச்சுவரில் கலர் கலராக கார்ட்டூன் பெயின்ட்டிங்ஸ், டெக்னாலஜி வசதிகள்... இவை மட்டுமே 'தி பெஸ்ட்'டுக்கான தகுதிகள் இல்லை. குழந்தைகளுக்கு அந்த வசதிகள் எல்லாம் எந்த வகையில் உபயோகப்படுதுன்னு பார்க்கணும். குழந்தைகளுக்கு இயற்கையாகவே கத்துக்கிற திறன் இருக்கு. அதுக்கு உதாரணம், எந்த வகுப்பும் இல்லாம, பேசிப் பேசியே நம்ம தாய்மொழியை அவங்க கத்துக்கிறதில்லையா? குழந்தைகளை நல்லா பேசவிடணும். பேச ஆரம்பிக்கும்போதே, 'ஷட் அப்!'னு அதட்டினா, அந்தக் குழந்தை எப்படிப் பேசும்? கருத்துப் பரிமாற்றத்துக்கு, நல்லா பேசவிடணும். அப்போதான், பெரிய பசங்களா வர்றப்ப, க்ரூப் டிஸ்கஷன்ல அந்தக் குழந்தையால் பேச முடியும். ஆரம்பத்திலேயே அதை முறிக்கும் பள்ளியால், எப்படி தன்னம்பிக்கை கொடுக்க முடியும்? குழந்தைகளின் அந்த உற்றுநோக்கும் - உள்வாங்கும் திறனை அடிப்படையாகக் கொண்டுதான் கல்வி இருக்கணும்.'' என்ற சந்திரபிரபா, பள்ளிகளில் கவனிக்க வேண்டிய அடிப்படைத்  தேவைகளைப் பட்டியலிட்டார்...

''குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கப் போகும்போது, பள்ளி நிர்வாகத்தின் அனுமதியோடு, தயங்காமல் உள்ளே போய் டாய்லெட் சுத்தமா இருக்கா, குழந்தைகளுக்கு வசதியான அமைப்புல இருக்கானு பார்க்கணும். சில பெற்றோர் டயாப்பர் போட்டே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புறாங்க. அதைக் கண்டிப்பா தவிர்க்கணும். குழந்தைக்கு இரண்டரை வயதில் அட்மிஷன் கொடுக்கும் பள்ளிகள், டாய்லெட்டிங்குக்கும் பொறுப்பெடுத்துக்கணும். குழந்தை எப்போதெல்லாம் டாய்லெட் போகிறது என்பதைத் தெரிஞ்சுகிட்டு, பெற்றோர்களின் உதவியோடு குழந்தைகளைப் பழக்கணும்.

வேலைக்குச் செல்லும் பெற்றோர்... பள்ளியும், டே கேர் வசதியும் ஒரே இடத்தில் இருக்கும் பள்ளிகளைக் கூடியவரை தவிர்க்கணும். குழந்தைக்குள் அது பெரிய குழப்பத்தை உண்டாக்கும். காலை 9 முதல் 12 வரை பள்ளி மாதிரி விதிகள்... அதுக்கப்புறம் வீடு மாதிரி சுதந்திரம்... ஆனா, ஒரே நபர்தான் பார்த்துக்குவாங்க. இது குழந்தையைப் பாதிக்கும்.

சில பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடலைன்னா, ஆசிரியைகள் ஊட்டிவிடறாங்க. இதைப் பழக்கப்படுத்திடக் கூடாது. அவங்களே தனியா, தங்களோட பசிக்குத் தேவையானதை எடுத்துச் சாப்பிடப் பழக்கணும். அதுக்கு சில முறைகளை பயன்படுத்தலாம். எங்க பள்ளியில் 'நான் கதை சொல்றேன்.. நீங்க கேட்டுக்கிட்டே சாப்பிட்ருவீங்களாம்!'னு சொல்லி சாப்பிட வைப்போம்.

பெற்றோர்களும் குழந்தை சாப்பிடும் அளவைப் பொறுத்து, அளவாக உணவை அனுப்பணும். டப்பாவை நிறைச்சு அடைச்சு, 'ஸ்கூல்ல மிரட்டி சாப்பிட வெச்சிடுவாங்க'ன்னு நினைக்கக் கூடாது.

பெண்களின் பாதுகாப்பு... இனி விரல்நுனியில்!

பெண்களின் பாதுகாப்பு... இனி விரல்நுனியில்!

ந்த ஆப்ஸ் யுகத்தில், பெண்களின் பாதுகாப் புக்கான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் 'மித்ரா'-வை (MITRA - Mobile Initiated Tracking and Rescue Application)' கண்டுபிடித்துள்ளார், புதுவை பல்கலைக்கழகத்தின் கணினித்துறை இணைப்பேராசிரியர் சிவசத்யா.

'' 'மித்ரா'வின் சிறப்பம்சம், எளிமைதான். ஒரு மெசேஜ் அனுப்பும் செலவில் இதை இயக்கலாம். இந்த அப்ளிகேஷனை இலவசமாக டவுன்லோட் செய்து, அதில் நம் பெயர் மற்றும் பாஸ்வேர்டை பதிவு (register) செய்துகொண்டு, பின்னர் அதில் யாராவது மூவரின் செல்போன் நம்பரை பதிவு செய்துகொள்ளலாம். இந்த நம்பர்களை மாற்றிக்கொள்ள வும் முடியும். இப்போதைக்கு இதில் புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலைய தொலைபேசி எண் மற்றும் மகளிர் விடுதி எண்கள் தரப்பட்டுள்ளன'' என்ற சிவசத்யா, அதன் செயல்பாட்டை விளக்கினார்.

''ஏதாவது ஆபத்துனா, மொபைல்ல இருக்கிற வால்யூம் பட்டனை ஒரு லாங் பிரஸ் பண்ணினா போதும். நாம பதிந்து வைத்திருக்கிற அந்த மூன்று எண்களுக்கும் 
`I AM IN DANGER, PLS HELP ME' என்ற மெசேஜ் போயிடும். அதுமட்டுமில்லாம, இதில் இருக்கும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம், நாம் இருக்கும் இடத்தை துல்லியமா சொல்லிடும். ஒருவேளை தவறுதலா வால்யூம் பட்டனை அழுத்திட்டாலும், 'decline' என்ற ஆப்ஷன் மூலமா ஒரு 'ஸாரி' மெசேஜ் அனுப்பிடலாம்'' -  சபாஷ் சொல்ல வைத்த சிவசத்யா, இந்த ஆப் உருவாக்கத்தில் அவருக்கு உதவியாக இருந்த அவர் மாணவர் ஜெயராஜுக்கும், இந்த அப்ளிகேஷனை செயல்பட வைக்க ஒத்துழைப்பு தந்த காவல்துறை சிறப்பு டாஸ்க் அலுவலர் பாஸ்கரனுக்கும் நன்றி சொல்லித் தொடர்ந்தார்.

''முதல் கட்டமா, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இதை தமிழ்நாடு முழுக்க இயக்க முடிவு செய்திருக்கோம். பெண்கள் மட்டுமில்லாம, வீட்டில் தனியா இருக் கும் முதியவர்கள், இளைஞர்கள், ஆண்கள்னு ஆபத்தில் இருப்பவர்களும் இதைப் பயன்படுத்தலாம். இன்னொரு பக்கம், கல்லூரி வளாகத்தில் நடக்கும் ராகிங்கை தடுக்கும் வகையில், இதே ஆப்ஸை புதுவை பல்கலைக்கழக மாணவர்களுக்காக பிரேத்யேகமா டிசைன் செய்திருக்கேன்!''

- உற்சாகம் சிவசத்யா குரலில்!

Saturday, May 23, 2015

தவறு செய்தவர்கள் தப்பவே முடியாது

உயிருக்கோ, வேலைக்கோ பாதுகாப்பு இருக்கிறது என்றால், யாராக இருந்தாலும் ஆட்டம் போடுவர். அதுவும், பெரிய இடத்தால், தனக்கு துன்பம் நேராது என்பது தெரிந்துவிட்டால், ஆட்டம் எல்லை மீறி போகும்.

ஒரு சமயம், கோபாலச் சிறுவர்களுடன், கண்ணனும், பலராமனும் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த பனங்காட்டில், தேனுகாசுரன் என்பவன், கழுதை வடிவில் வாழ்ந்து வந்தான். அவன், யாரையும் காட்டிற்குள் நுழைய விடுவதில்லை. அவனிடம் இருந்த பயத்தால், அக்காட்டிற்கு அருகில் கூட யாரும் போவதில்லை.

அன்று, அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில், பனம் பழ வாசனை காற்றில் தவழ்ந்து, மூக்கைத் துளைத்தது. அவற்றை உண்ண விரும்பிய கோபாலச் சிறுவர்கள், 'பலராமா... கண்ணா... இந்த பனங்காட்டில், ஏராளமான பனம் பழங்கள் இருக்கின்றன; ஆனால், தேனுகாசுரன் அவற்றை எடுக்க விடாமல் அட்டூழியம் செய்கிறான்...' என்றனர். 'அப்படியா... வாருங்கள் இப்போதே அங்கே சென்று பனம் பழம் சாப்பிடலாம்...' என்று கூறினான் கண்ணன்.

பலராமனும், கண்ணனும் மரத்தில் ஏறி பழங்களை உதிர்த்தனர்.

சத்தம் கேட்டு, ஓடி வந்தான் தேனுகாசுரன்.

பெரிய கழுதை உருவில், கோபாவேசத்தோடு வந்தவனைக் கண்டு, கோபாலச் சிறுவர்கள் பயந்து நடுங்கினர்.

தான் என்ன அக்கிரமம் செய்தாலும், கண்ணன் தன்னைக் கொல்ல மாட்டார் என்ற விஷயம் தேனுகாசுரனுக்கு தெரியும் என்பதால், அவன், கோபாலச் சிறுவர்களை விரட்டியதுடன், பலராமன் மார்பில், தன் பின்னங்கால்களால் உதைத்தான்.
உடனே, அவனின் பின்னங்கால்கள் இரண்டையும் பிடித்து, 'கரகர'வெனச் சுழற்றி வீசினார் பலராமன்.

'ஆ' வென்று அலறியபடி கீழே விழுந்து உயிரை விட்டான் அசுரன்.

அவனைப் போன்ற கழுதை வடிவம் கொண்ட அசுரர்கள் பலர் ஓடி வந்தனர். வந்த வேகத்திலேயே இறந்தும் போயினர். கோபாலச் சிறுவர்கள் சந்தோஷமாக பனம் பழங்களை உண்டனர்.

பனங்காடு தேனுகாசுரனுடையது அல்ல; அவன், பலாத்காரத்தால் அதை ஆக்கிரமித்து, தன் வசப்படுத்தி வைத்திருந்தான்.

இதனால் தான், பொதுச் சொத்தை ஆக்கிரமித்து, தன்வசப்படுத்துவோரை, அடுத்த பிறவியில் கழுதையாக பிறப்பர் என்று சொல்வதுண்டு.

'இனி உன் வம்சத்தினர் யாரையும் கொல்ல மாட்டேன்....' என, பிரகலாதனிடம், பரவாசுதேவனான கண்ணன் கூறியிருந்தார்.

பிரகலாதன் பரம்பரையில் வந்த தேனுகாசுரனுக்கு இத்தகவல் தெரியும். அந்தத் தைரியத்தில், அட்டூழியங்கள் செய்து வந்தவனை, கண்ணன், தான் கொல்லாமல், பலராமரை விட்டுக் கொல்ல வைத்தார்.

தவறு செய்தவர்கள் தப்பவே முடியாது! 

Facebook misuse is a serious thing and should not be taken lightly

While Facebook is a powerful tool that helps us connect and communicate with people across the globe, there is also a dark side to it which can lead to a lot of Facebook misuse.

This misuse happens a lot amongst teenagers and even employees. Even some employers are misusing Facebook.

When this happens, it can give off the wrong impression.

For example, if an employer is not using Facebook correctly, their employees may take this as a sign that it is ok for them to misuse Facebook as well.

This same thing holds true with teenagers.

If they see their friends posting embarrassing photos, they might think that is ok to post them without thinking about the potential repercussions such as being made fun of or some of the more dire consequences, such as having your personal information compromised.

Know what you should and should not share on Facebook

While social networks like Facebook can work great for business and help us to stay connected, you have to be careful about what you share on your Facebook Profile and who you are sharing it with.

If you're not sure about what  you should and should not share on Facebook, I recommend checking out these tips on what not to share on Facebook before you share anything.

If you're still not convinced that there is a lot of misuse on Facebook, I suggest checking out some of these stats about Facebook misuse along with the full infographic on alarming Facebook misuse stats. They could surprise you.

 • 29% of teens have posted mean information about someone on Facebook 
 • 22% of teens have been cyber pranked 
 • 46% of companies believe employees misuse social media 
 • 75% of employees check Facebook at least once per day 
 • 45% of companies admit to not having a social media policy 

Alarming Facebook misuse stats

Facebook misuse stats

Statistics on Facebook misuse by teens and employees. [Source: MobiStealth]

Wrap-up on misuse

Facebook misuse is a serious thing and should not be taken lightly.

Facebook ஆல் வாழ்க்கையை தொலைத்த , கஷ்டங்களை அனுபவித்த பெண்கள் பலர்

இன்று மிக பெரிய சமுக வலைத்தளம் என்றால் அது Facebook தான். தினம்தோறும் பலர் அதில் இணைத்து வருகின்றனர். தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் , தனது பழைய நண்பர்களை தேடி கண்டுபிடிக்கவும் , தனது ரசனையுடன் ஒத்துபோகும் நண்பர்களை கண்டுபிடிக்கவும் இது உதவுகிறது. இதில் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் உள்ளது .

குறிப்பாக பெண்கள் இந்த Facebook இல் படும்பாடு சொல்லிமாலாதது .Facebookஆல் வாழ்க்கையை தொலைத்த , பல கஷ்டங்களை அனுபவித்த பெண்கள் பலர் உள்ளனர் . சமுகத்திற்கு பயந்து அவர்கள் சொல்லுவதில்லை . பிறரால் நீங்கள் கஷ்டப்பட்ட கூடாது என நினைத்தால் , உங்களுக்காக சில யோசனைகள் ...

 1. தயவு செய்து உங்கள் புகைப்படங்களை பதிவேற்றாதிர்கள் . அந்த படங்கள் சில சமுக விரோதிகளால் ஆபாச படமாக மாற்ற வாய்ப்புள்ளது .
 1. எக்காரணத்தை முன்னிட்டும் உங்கள் உண்மையான முகவரி ,தொலைபேசி எண்ணை கொடுக்காதீர்கள் .
 1. குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் உங்கள் கடவு சொல்லை(Password) மாற்றி கொண்டே இருங்கள் .
 1. கடவு சொல் எளிதில் யூகிக்க முடியாததாக வையுங்கள் . உங்கள் பிறந்த நாள் , மொபைல் நம்பர் , பெற்றோர் பெயரை வைக்காதீர்கள் .
 1. என்ன நெருங்கிய உறவினராக இருந்தாலும் , நன்பர்களாக இருந்தாலும்கடவு சொல்லை கொடுக்காதீர்கள் . திருமணம் நிச்சயமான பெண்கள் கூட கொடுக்காதீர்கள் .
 1. நன்றாக தெரிந்தவர்களின் Friend Request மட்டும் Accept செய்யுங்கள் .
 1. உங்கள் நண்பர்கள் புகைப்படங்களில் உங்களை Tag செய்வதை தடுங்கள். அப்படி Tag செய்தாலும் அது உங்கள் அனுமதி கிடைத்த பின்தான் உங்கள் Wall இல் தோன்ற வேண்டும் என Setting கில் மாற்றம் செய்யுங்கள் .
மாற்றம் செய்ய :Home -> Privacy setting ->Timeline and Tagging 

 1. தவறான படங்கள் அல்லது ஆபாசமான Status போடும் நண்பர்களை உடனே Unfriend செய்யுங்கள் .
 1. உங்கள் கணக்கில் Mobile Notification option ஐ Enable செய்யுங்கள் .
Enable செய்ய : Home -> Account setting ->security setting -> login notification

 1. மற்றவருடன் Chat செய்யுன் போது உங்களின் உண்மை தகவல்களை சொல்லவேண்டாம் . அதுபோல உங்களின் பலவினங்களை சொல்லாதீர்கள் .
 1. இதையும் மீறி எதாவது தவறு வந்தால் உடனடியாக உங்கள் Account ஐ அழித்துவிடுங்கள் .

ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கபடுவதால் இந்த பதிவு .

Making of Saibaba’s Idol

Sai Baba's Statue in Shirdi, which has become the most mesmerizing divine image of Baba, was installed on 7th October`1954, Vijayadashami Day – 36 years after Baba's Mahasamadhi.

Balaji Vasanth Talim

Balaji Vasanth Talim

Balaji Vasanth Talim was born in 1888 in Hyderabad. His father Vasanth Rao was a building contractor for the Nizam of Hyderabad. His father died early, leaving behind his wife Saraswathi, and three small children who migrated to Mumbai.

After primary education Balaji joined the J.J School of Art to learn sculpture. He won the "Dolly Khurshatjee" scholarship thus enabling him to complete his education. Balaji was a brilliant sculptor and painter, portraits being his speciality. In 1918 'Thalim's Art Studio' was established. He won many prestigious awards, gold medals, and accolades. Balaji was a highly spiritual, religious, philosophical and a man of principles.

The statue, which has become such a famous and well-loved image of Baba, was not installed until 1954, and there is an intriguing story behind it. Some white marble arrived from Italy at the Bombay docks, but nobody seemed to know anything about it – who it was for, or why it had come. In the absence of a claimant, the dockyard auctioned it and the purchaser offered it to the Shirdi Sansthan (temple authorities). Impressed by the quality of the marble, they wanted to use it for an image of Baba and gave the commission to Balaji Vasant Talim.

However, Balaji Vasant Talim had only one black-and-white photo of Baba to use as his model and was struggling to get the likeness. One night Baba came to him in a dream, remarked on his difficulties and then showed him his face from various angles, encouraging Talim to study it thoroughly and remember it well. This gave Talim the fillip he needed and after that the work flowed easily and the result exceeded all expectations.

saibaba idol

Making of Saibaba Idol

Shri.Balaji Talim testified about this to Sri Sai Narayan Baba, as to how Baba himself had directed the Sculpting of the Statue and how at every stage, he could very clearly hear the divine voice of Baba guiding him.

The Shirdi Sai Sansthan immediately approved this Mud Statue of Baba, on the basis of which the present Italian Marble Statue of Sai Baba was carved and installed in the Samadhi Shrine.

In 1954, while working with his workers at the finishing stages of Sculpting the almost ready Marble Statue of Sai Baba, Shri.Balaji Talim found an Air Pocket in a small additional portion below the Left Knee of Baba's Statue, which had to be removed. It seemed dangerous, as in removing an Air Pocket from a Finished Statue, there was every risk of the entire portion coming down, thus leaving the Statue Khandit (Broken), which therefore could not be worshiped at all.

So the work stopped and Shri.Balaji Talim hesitated to strike and chisel out the additional portion.He feared that the entire Statue might get destroyed and all his labour & time would go waste.He became nervous and prayed to Baba, "Baba have mercy on me. Your Murti is ready. Please Baba have mercy on me." Just then he then heard a voice within saying "Balaji, Carry on".

So Balaji instructed his workers to carry on and chisel out the additional portion, but the workers refused to do so fearing that the entire knee portion would just drop out.

Making of saibaba idol

naking of saibaba idol

Eventually & quite nervously, Shri.Balaji Talim took the chisel & hammer himself and while praying "Baba, help me" gave a small stroke, touching the additional portion of the marble below the Left Knee. And to his great surprise, only the additional portion of the marble came down leaving the rest of Baba's Statue intact. Seeing this, tears rolled down his eyes and he prostrated before Baba, started dancing and distributing sweets to all.As, he experienced such a wonderful miracle of Sai Baba.

The 5′ 5″ finished Idol of Sai Baba was taken throughout the village with pomp & ceremony.Baba's Idol was so Life like that devotees like Swami Sri Sai Saranananda & Laxmibai, who had personally been with Baba, felt as if Baba had come back alive in the form of his Idol.

On 7th October`1954, Vijayadasami Day, this lifelike Marble Statue of Sai Baba was installed on the platform of the Samadhi Shrine's western side behind Baba's Samadhi and the due formalities of Prana Pratistha were done by Swami Sri Sai Saranananda who had met Baba before His Mahasamadhi.

saibaba-idol

saibaba idol

At the time of preparation of Baba's Statue, one day Baba gave Darshan to Shri.Balaji Talim and said, "Finish the work and you will not do any other Idol in future." So Talim did not prepare any other Idol since then and finally at the age of 82 on 25th December`1970 he breathed his last.

- SHRI B.V.TALIM SCULPTING BABA'S IDOL -