Wednesday, October 30, 2013

வைகுண்டம் எவ்வளவு தூரம்?

ன்னன் ஒருவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது.

'வைகுண்டம் என்று சொல்கிறார்களே, அது பூமியிலிருந்து எவ்வளவு தூரம்?' என்பதே மன்னனின் சந்தேகம்.

அவையைக் கூட்டி சபையிலுள்ள பண்டிதர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான். அவர்கள் அவரவர் அறிவுக்கு எட்டிய வரை, வைகுண்டம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதைக் குறிப்பிட்டனர். மன்னன் திருப்தியடையவில்லை.

அப்போது சபையிலிருந்த விதூஷகன் எழுந்து, ''மகாராஜா! வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் உள்ளது'' என்றான்.

''இதற்கு ஆதாரம் என்ன?' என்று மன்னன் கேட்டான்.

உடனே விதூஷகன், ''கஜேந்திரன் எனும் யானையை முதலை பிடித்தபோது, 'ஆதிமூலமே' என்று கூவி அழைத்தது அந்த யானை. அதன் குரல் கேட்டு க்ஷண நேரத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு அங்கே தோன்றி, கஜேந்திரனைக் காப்பாற்றினார். இது உண்மை எனில், வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது என்பதும் உண்மைதானே?'' என்று பதிலளித்தான்.

சபையோர் கரகோஷமிட்டு வாழ்த்தினர். மன்னன் மனமகிழ்ந்து விதூஷகனுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

ஸ்ரீகிருஷ்ணரின் சக்ராயுதம் வசைபாடிய சிசுபாலனின் தலையைக் கொய்தது.

தீபாவளிக்குத் தேவையான துணிமணிகளை வாங்கிக் கொண்டு திரும்பும்போது, அந்த வங்கியின் பெயர்ப் பலகை கண்ணில் பட்டது. 'அட, நம்ம நண்பன் வேலை செய்யும் வங்கியின் கிளையாச்சே'ன்னு மனசுக்குள் சின்னதா ஒரு குதூகலம். அதே நேரம், 'இப்போ போனால் அவனைச் சந்திக்க முடியுமா? அவனுக்கு இடைஞ்சலா இருக்குமா?' என்று தயக்கம்.

அவனுக்கே போன் செய்து கேட்கலாம் என்று முடிவெடுத்தேன். என் குரலைக் கேட்டதுமே உற்சாகமாயிட்டான் நண்பன். உள்ளே வரச் சொன்னான். படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டி ருக்கும்போதே, எதிரில் வந்து அழைத்துச் சென்றான்.

ரிசப்ஷனில் இருந்த சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டி ருந்தோம். அப்போது, பரிதாபமான முகத்துடன் ஒருவர் என் நண்பனை நோக்கி வந்தார்.

''நான் லோனுக்கு அப்ளை பண்ணி ரெண்டு வாரம் ஆயிடுச்சு, சார்! 'நாளைக்கு வாங்க... நாளைக்கு வாங்க'ன்னு தினமும் இழுத்தடிக்கிறீங்க. இத்தனைக்கும் இந்த வங்கியில் நான் பதினஞ்சு வருஷமா கணக்கு வெச்சிருக்கேன். நிறைய டெபாசிட்கூட போட்டு வெச்சிருந்தேன். இப்ப, ஒரு அவசரத்துக்கு நீங்க உதவலேன்னா எப்படி? நீங்க கேட்ட எல்லா பேப்பர்ஸையும் கொடுத்துட்டேனே...'' என்றார் அழாக்குறையாக!

''மிஸ்டர் மகேந்திரன்! ஆனது ஆச்சு... இன்னும் ​ரெண்டே நாள் பொறுத்துக்குங்க. நாங்களும் ரொம்ப பிஸியாத்தான் இருக்கோம். பாக்கறீங்க இல்ல?'' என்றான் நண்பன்.

அந்த பாவப்பட்ட மகேந்திரன், தளர்வுடன் வாசலை நோக்கி நகர்ந்தார். நண்பனின் வார்த்தைகளைவிட, அதை அவன் அலட்சியமாகவும் ஏளனமாகவும் கூறிய விதம் எனக்குப் பிடிக்கவில்லை.  

''என்னடா இது... அவர் ஏதாவது புகார் கொடுத்துடப் போறார்'' என்றேன்.

''யார்கிட்டே கொடுப்பார்? மேனேஜர் கிட்டயா அல்லது ​ரீஜனல் மேனேஜர் கிட்டயா? கொடுக்கட்டும். நோ பிராப்ளம்! ஆனா, இந்த ஆள் ரொம்ப சாது; அந்த அளவுக்கெல்லாம் போகமாட்டார்!'' என்றான் நண்பன்.

எனக்கோ, நிச்சயம் பிராப்ளம் வரக்கூடும் என்றுதான் பட்டது. சிசுபாலனின் கதையும் நினைவுக்கு வந்தது. சுருக்கமாக அதை நண்பனுக்குக் கூறத் தொடங்கினேன்.

சிசுபாலன் என்பவன் சேதி நாட்டு இளவரசன். அவன் தாய் ஸ்ருததேவா. இவள், ஒருவகையில் கண்ணனுக்குச் சகோதரி முறை.

சிசுபாலன் பிறந்தபோது, அவனுடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், மூன்று கண்களுடனும் நான்கு கைகளுடனும் பிறந்திருந்தான். அவன் பிறந்த வேளையில் தீய சகுனங்களும் உண்டாயின. அவனை ஆற்றில் போட்டுவிடலாம் என்றுகூட முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அப்போது ஓர் அசரீரி, 'கவலை வேண்டாம்! குறிப்பிட்ட ஒருவர் இந்தக் குழந்தையைத் தூக்கும்போது, இவனது அதிகப்படியான அவயவங்கள் மறைந்துவிடும். அந்த ஒருவரால்தான் இவனுக்கு மரணம் நிகழும்'' என்று ஒலித்தது.

நாட்கள் நகர்ந்தன. ஒரு முறை, கிருஷ்ண பரமாத்மா சேதி நாட்டுக்கு விஜயம் செய்தார். அவர் குழந்தை சிசுபாலனைத் தூக்கித் தன் மடியில் வைத்துக்கொண்டதுமே, அவனது அதிகப்படியான அவயவங்கள் மறைந்தன. அதைக் கண்டு பெற்றோர் மகிழ்ந்தனர். அதேநேரம், அசரீரி வாக்கு நினைவுக்கு வர... கிருஷ்ணனைக் கைதொழுது வேண்டினாள் சிசுபாலனின் தாய். அசரீரி குறித்து அவரிடம் விவரித்தவள், ''நீ இவனைக் கொல்லக் கூடாது'' என்று கேட்டுக்கொண்டாள்.

உடனே ஸ்ரீகிருஷ்ணர், ''அப்படி எதையும் என்னால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால், உனக்காக ஒரு வரம் அளிக்கிறேன். இவன் எனக்கு எதிராகச் செய்யும் நூறு குற்றங்கள் வரை பொறுத்துக் கொள்கிறேன்'' என்றார்.

காலம் கடந்தது. யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்தார். அப்போது, ஸ்ரீகிருஷ்ணருக்கு முக்கிய மரியாதைகள் செய்யப்பட்டன. தான் விரும்பிய ருக்மிணியை ஸ்ரீகிருஷ்ணர் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதில், ஏற்கெனவே அவர் மீது கோபம் கொண்டிருந்தான் சிசுபாலன். தருணம் வாய்க்கும்போதெல்லாம் ஸ்ரீகிருஷ்ணரை அவமதித்து வந்தான். இப்போது அவருக்கு அளிக்கப்பட்ட மரியாதைகள், அவனது கோபத்தை மேலும் கிளறின.

''ஆடு- மாடு மேய்க்கும் இவனுக்கா இப்படி கௌரவம் அளிப்பது?'' என்று துவங்கி, அடுத்தடுத்துக் கடும் சொற்களால் கண்ணனைச் சாடினான்.

ஸ்ரீகிருஷ்ணரோ பொறுமையாக இருந்தார். சிசுபாலன் அத்தனை பேசியும் ஸ்ரீகிருஷ்ணர் மௌனம் காப்பது ஏன் என்று அங்கிருந்த எவருக்கும் புரியவில்லை. நூறாவது முறையாக சிசுபாலன் வசைபாடி முடித்த மறுகணம், ஸ்ரீகிருஷ்ணரின் சக்ராயுதம் சுழன்று சென்று சிசுபாலனின் தலையைக் கொய்தது.

நான் கதையைச் சொல்லி முடித்ததும், நண்பன் சிரித்தான். ''அந்த வாடிக்கையாளர் என்ன கண்ணபிரானா? அவரொரு மண்புழு. புலம்புவாரே தவிர, எவரிடமும் புகார் சொல்லமாட்டார். அவர்பாட்டுக்குப் புலம்பிவிட்டு நகர்ந்துவிடுவார். இதுதான் ஒவ்வொரு முறையும் நடக்கும்'' என்றான்.

''உனது நடவடிக்கை மிகத் தவறு. அவர் உன் மேலதிகாரியிடம் புகார் சொல்லாமல் போகலாம்; அப்படியே சொன்னாலும், அந்த மேலதிகாரி நடவடிக்கை எடுக்காமல் இருக்க லாம். அதற்காக, அந்த வாடிக்கையாளரைக் குறைத்து மதிப்பிடவேண்டாம். அவரிடமும் சக்ராயுதங்கள் உண்டு. அவர் பொறுமை மீறினால், உங்கள் வங்கியில் உள்ள தனது கணக்கை முடித்துக்கொள்ளலாம். வேறு வங்கியின் வாடிக்கையாளராக அவர் மாறலாம். அதுமட்டுமல்ல, பலரிடமும் உங்கள் வங்கியில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். அதன் விளைவுகளை யோசித்தாயா? வியாபாரம், வங்கிச் சேவை எதுவானாலும் வாடிக்கையாளரின் தேவையை உரிய காலத்துக்குள் முடித்துக்கொடுப்பதே உத்தமம்!'' என்றேன்.

நண்பன் அவசர அவசரமாக தனது செல்போனை எடுத்தான். நிச்சயம் அது, அந்த வாடிக்கையாளரை அழைப்பதற்காகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.

The sky is darkest just before dawn - Inspirational Story


This is the story of two frogs. One frog was fat and the other one was skinny. One day, while searching for food, they accidentally jumped into a pail of milk. They couldn't get out, because the sides were too slippery. So they were just swimming around.

They swam and swam and finally the fat frog said to the skinny frog, "There's no use in swimming any longer. We're just going to drown, so we might as well give up." The skinny frog replied, "Hold on brother, keep paddling. Somebody will get us out of here." And they continued paddling and paddled along for hours.

After a while, the fat frog said, "Brother, there's no use. I'm getting very tired. I can't hold on any longer so I'm just going to stop paddling. I know I will drown but I'm exhausted and I just can't paddle any more. It's Sunday and nobody's working. We're doomed. There's no possible way out of here." But the skinny frog said, "Keep trying. Keep paddling. Don't give up, something will happen, just keep paddling." Another couple of hours passed.

The fat frog said, "I can't go on any longer. There's no sense in doing it because we're going to drown anyway. What's the use?" And the fat frog stopped. He gave up. And he drowned in the milk. But the skinny frog kept on paddling.

A short while later, the skinny frog felt something solid beneath his feet. His constant paddling had churned the milk into butter and he hopped out of the pail.

Moral of the story: We all face difficulties in our lives. Look at any success story out there every one of them has a story of perseverance behind it. Sylvester Stallone at one point sold his dog in order to survive. J.K Rowling faced many rejections before she found a publisher who said "yes" to her manuscript of "Harry Potter". The Beatles were turned down by Decca Records saying, …"We don't like your sound and guitar music is on the way out." So never, ever give up, keep on paddling and remember, the sky is darkest just before dawn.

நம்முள்ளே அடங்கிய சக்தி வெளிப்படும்போது வெற்றி கிட்டுகிறது!

பால் குவளைகளை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள் பால் பண்ணை ஆட்கள். அப்போது, அருகில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் தாவிக் குதித்துக்கொண் டிருந்த இரண்டு தவளைகள், உற்சாக மிகுதியில் கொஞ்சம் அதிகமாகவே எகிறியதில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு  பால் குவளையில் விழுந்துவிட்டன. பால் பண்ணை ஆள் இதைக் கவனிக்காமல் குவளைகளை மூடி சீல் வைத்து வண்டியில் ஏற்றிவிட்டான். தவளைகளின் பயணம் தொடங்கியது.

முதல் குவளையிலிருந்த தவளை, தான் ஒரு குவளையில் அடைக்கப் பட்டுள்ளதை உணர்ந்தது. தப்பிக்கத் துடித்தது. வேகமாக மேல் நோக்கிப் பலமுறை தாவியதில், மூடியில் அதன் தலை பலமாக அடிபட்டு, பாலிலேயே அது தன் உயிரைத் துறந்தது.

இரண்டாவது குவளையில் உள்ள தவளையும் தப்பிப்பதற்காக முதலில் மேலே தாவிக் குதித்தது. அதன் தலை மூடியில் இடித்தபோது அதற்கு வலித்தது. அது வெளியேறும் வழியல்ல என்று சுதாரித்து, வேறு வழியைப் பற்றிச் சிந்தித்தது. தன் பலம் என்ன என்பதை ஆராய்ந்தது. தனக்கு நீந்தும் சக்தி உண்டு என்பதை நினைவுகூர்ந்து, பாலில் நீந்தத் தொடங்கியது. அதன் வேகமான கால் அசைவினால் பால் கடையப்பட்டு, வெண்ணெய் திரண்டு பாலில் மிதக்கத் தொடங்க, தவளை அந்த வெண்ணெய் உருண்டையின் மேல் அமர்ந்து களைப்பாறியது. குவளைகள் கீழே இறக்கப்பட்டு, பண்ணை ஆட்கள் மூடியைத் திறந்ததுமே அந்தத் தவளை தாவி, வெளியே குதித்தது. ஆக... தவளையும் பிழைத்தது. பாலும் பிழைத்தது.

நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ நம்முள்ளே அடங்கியிருக்கும் சக்தி வெளிப்படும்போது, வெற்றி கிட்டுகிறது! 

Tuesday, October 29, 2013

வித்தியாசமாகச் சிந்தித்தவர்களே வெற்றிகளைக் குவித்திருக்கிறார்கள்.

- வெ.இறையன்பு

னம் எப்போதும் பழகியதை இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறது. வழக்கமாய்ச் சிந்திப்பது வசதியாய் இருக்கிறது. புதிய பிரச்னைகளுக்கும், பழைய சவால்களைச் சந்தித்தது போன்றே தீர்வு காண நினைக்கிறது உள்ளம்.  

அறிவு என்பதும், மொழி என்பதும் பல நேரங்களில் வசதியாக இருந்தாலும், சில நேரங்களில் நம்மை வழுக்க வைத்துவிடுகின்றன. அப்போது சமயோசித புத்தி என்கிற ஊன்றுகோல் அவசியம்.

வித்தியாசமாகச் சிந்தித்தவர்களே வெற்றிகளைக் குவித்திருக் கிறார்கள். கற்றவற்றை மட்டுமே உபயோகிக்கத் தெரிந்தவர்களுக்கு தலைமைப் பொறுப்பைத் தருவது, உவர் நிலத்தில் விதை விதைப்பதைப் போன்று பயனற்றது.

நேர்க்கோட்டுச் சிந்தனையை முன்மொழிந்தது, மேற்கு. பக்கவாட்டுச் சிந்தனையைப் பகிர்ந்தளித்தது, கிழக்கு. தர்க்கம் என்பது ஒரு கோணத்தில் சிந்திப்பதால் உருவாவது. சாக்ரடீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில் மூவரும் நேர்க்கோட்டுச் சிந்தனையே சிறந்தது என்று நூறு சதவிகிதம் நம்பினார்கள். அவர்களைப் பொறுத்தவரை, இரண்டும் இரண்டும் எப்போதும் நான்குதான்.  விவாதிப்பதாலும், பிரித்தறிவதாலும், செங்குத்தான சிந்தனையாலும் அத்தனைக் கேள்விகளுக்கும் விடை கண்டுவிட முடியும் என்பதில் அவர்கள் உறுதியாய் இருந்தார்கள்.  

அண்மையில், மேற்கு விழித்துக்கொண்டது. தர்க்கத்துக்கு அகப் படாதவை நிறைய இருக்கின்றன என்பதை அது உணர்ந்து கொண்டது.

தர்க்கமே பெரிதென்று ஒருபோதும் இந்தியச் சிந்தனை மரபு நினைக்கவில்லை. தன்னை எதிர்கொண்டவர்களைத் தர்க்கத்தால் வென்றாலும், வாழ்வியல் உண்மை தர்க்கத்தைத் தாண்டியது என்று சாக்ரடீஸுக்கு முன்பே முன்வைத்தவர் புத்தர். அறிவால் அடுத்தவர் வலியை ஒருபோதும் உணர முடியாது என்பதில் அவருடைய அன்பு மார்க்கம் உருவானது. அதனால்தான் 'கடவுள் இருக்கிறாரா?' என்கிற ஒரே கேள்விக்கு, கேட்பவர்களைப் பொறுத்து வெவ்வேறு விதமாக அவர் விடையளித்தார். விடை வினாவில் இல்லை, விடுப்பவர்களிடமே இருக்கிறது என்பதை அறிந்தவர் அவர். அதனாலேயே விழிப்பு உணர்வு பெற்றவராக அவர் கருதப்படுகிறார்.  

இந்திய இதிகாசங்கள் எத்தனையோ சவால்களுக்குச் சாதுர்யமாக விடை கண்டுபிடிக்கும் வழியை உணர்த்தியிருக்கின்றன. அவற்றை வாசிக்கும்போது, உருவகக் கதை முதல் நகைச்சுவை கதை வரை நீண்டு... செங்குத்தாகச் செல்வதால் மட்டும் விடை கிடைக்காது; வளைய வேண்டிய இடத்தில் வளைவதும், குனிய வேண்டிய இடத்தில் பதுங்குவதும், சவாலில் நீள அகலங்களைத் தாண்டி உள்ளுணர்வைச் செலுத்துவதும் அவசியம் எனக் கிழக்கத்திய மரபு உணர்த்துவதை அறிந்துகொள்ள முடியும்.  

கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி...

அனுமன் சீதை இருக்கும் இடம் அறிந்துவர, கடல் தாவும் படலம். தனியரு நபராகப் புறப்பட்டுச் செல்லும் அனுமனின் வலிமையை அறிவதற்குத் தேவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு சுரசை என்பவளின் உதவியை நாடுகிறார்கள். சுரசை, அகன்று திறந்த வாயோடு அரக்கியின் உருவம் தரித்தாள். அனுமனை விழுங்க வழிமறித்து நின்றாள். வானத்தைத் தலை முட்டும்படி விசுவரூபம் எடுத்து நின்றாள்.  

அனுமனோ, 'ராமனின் செயல் முடித்து வருவேன். அப்போது என்னை விழுங்கிக் கொள்!' என்று விண்ணப்பிக்கிறார்.  அவள் மறுக்கிறாள். உடனே அனுமன், 'சரி, உன் கோரமான பெரிய வாயின் வழியே புகுந்து செல்கிறேன். வல்லமை இருந்தால் என்னை விழுங்கு!' என்கிறார்.

சுரசை, அண்டங்கள் பல புகுந்தாலும் நிரம்பாத அளவுக்குத் தன் வாயை அகலத் திறந்தாள். அனுமனோ, எல்லாத் திசைகளிலும் பரவிய அவள் வாய் கடுகளவே எனும்படி, வானளாவ வளர்ந்து நின்றார். அதற்கேற்ப சுரசை, மேலும் தன் வாயை அகலப்படுத்தினாள். அடுத்த நொடியே, மிகச் சிறிய வண்டின் உருவம் எடுத்து, சுரசை எதிர்பார்க்காத நேரத்தில் அவள் வாயினுள் புகுந்து, அவள் சுவாசிக்கும் முன்னர் காதின் வழியே வெளிவந்தார். தேவர்கள் அசந்துபோனார்கள். 'இந்த அனுமன் எங்களைக் காப்பான்' எனப் பூமாரி பொழிந்தார்கள்.

நீண்டான் உடனே சுருங்கா நிமிர்வாள் எயிற்றின்
ஊண்தான் என உற்று ஓர்உயிர்ப்பு உயிராத முன்னா
மீண்டான் அதுகண்டனர் விண்உறைவோர்கள் எம்மை
ஆண்டான்வலன் என்று அலர் தூஉய்நெடிது ஆசி சொன்னார்

அனுமனின் இந்தப் பக்கவாட்டுச் சிந்தனை, பக்காவான சிந்தனை.

நம் முன்னோர், மரபுவழியில் மட்டும் சிந்தித்தல் பயன் தராது என்பதைக் கதைகள் வழியாகவும், கணக்குகள் வழியாகவும், கவிதைகள் வழியாகவும் எடுத்துச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

ஆன்மிக இலக்கியங்கள் பக்தி செலுத்த மட்டுமல்ல; புத்தி மேம்படவும் தான் என்பது, அவற்றை வாசிக்கும்போது உன்னிப்பாய் உற்றுநோக்கினால் புலப்படும்.  

புதிய முறையில் சிந்திப்பதை, நவீன சிந்தனையாளர்கள் 'பெட்டிக்கு வெளியே சிந்தித்தல்' என்று வரையறுத்தார்கள். 1970-களில் மேலாண்மை நிபுணர்கள், பயிற்சியாளர்களை ஒன்பது புள்ளிகள் கொடுத்து, அவற்றைக் கையெடுக்காமல் நான்கே கோடுகளில் இணைக்கும்படி சவால்விட்டார்கள். இதை, ஜான் அடேர் என்பவர் அறிமுகப்படுத்தியதாகக் குறிப்பிடுவார்கள்.  

இந்த ஒன்பது புள்ளிகளுக்குள்ளேயே அதை இணைக்க முயல்பவர்கள் முடியாமல் தடுமாறு வார்கள். புள்ளிக்கு வெளியே செல்லும்போது தான் இதற்கான விடையை அறிய முடியும்.  

நம் மனம் சதுரத்துக்கும், செவ்வகத்துக்கும் பழக்கப்பட்டது.  எனவே, அந்தப் பாதையிலேயே விடை கண்டுபிடிக்கப் பிரயத்தனப்படும்.  அதைத் தாண்டுகிறபோதுதான் இது சாத்தியம்!  

ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம், ''11 ஆப்பிள்களை 12 சிறுவர்களுக்கு எப்படிச் சரிசமமாகப் பிரித்துக் கொடுப்பீர்கள்?'' என்று கேட்டார். உடனே, மாணவர்கள் நோட்டுப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு, 11-ஐ 12-ஆல் வகுத்து விடை காண முயன்றார்கள். திணறினார்கள். அவர்களைப் பார்த்து, ''ஏன் அத்தனைச் சிரமப்படுகிறீர்கள்? 11 ஆப்பிள்களையும் பழரசமாக்கினால் 12 சமமான குவளைகளில் ஊற்றிப் பகிர்ந்து தரலாமே?'' என்று கேட்டுச் சிரித்தார் ஆசிரியர்.

'பெட்டிக்கு வெளியே சிந்திப்பது' என்பது இதுதான்!  

ஆப்பிள்களைப் பிரிப்பது என்றால், அவற்றின் வடிவத்திலேயே பிரித்துத் தரவேண்டும் என்று நினைக்கிறோம். அதைப் பழக்கூழாக உருவகப்படுத்திப் பார்க்க நமக்குத் தோன்றவில்லை. அதனால்தான் இந்தத் தொல்லை நமக்கு ஏற்படுகிறது.

இது, ஆப்பிள்களைப் பிரிப்பதில் மட்டுமல்ல; ஒரு நிறுவனத்தின் லாபத்தைப் பகிர்ந்து தருவதிலும் சிக்கலை உண்டாக்குகிறது.  நாட்டுக்கான ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டுவதிலும் குழப்பங்களை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், நாம் மூலாதாரங்களை அப்படியே விநியோகிக்கும் வழிமுறைகளில் கவனத்தைச் செலுத்துகிறோமே தவிர, யாருக்கு என்ன தேவை என்பதை வசதியாக மறந்துபோகிறோம்.  

சுஃபி மரபில் ஒரு கதை உண்டு.

ஒரு பெரியவர் வசம் 17 ஒட்டகங்கள் இருந்தன. 'பாதி ஒட்டகங்கள் முதல் மகனுக்கும், மூன்றில் ஒரு பங்கு 2-வது மகனுக்கும், ஒன்பதில் ஒரு பங்கு 3-வது மகனுக்கும் சொந்தம்' என விசித்திரமாக ஓர் உயில் எழுதிவைத்துவிட்டு இறந்துபோனார் அவர்.

பதினேழு ஒட்டகங்களைப் பாதியாகப் பிரிப்பது  எப்படி என்பதிலேயே குழப்பம் ஏற்பட்டது. ஊரில் இருக்கும் கணித மேதை களிடம் உயிலையும் ஒட்டகங்களையும் எடுத்துச் சென்றார்கள் பிள்ளைகள். அனைவருமே, 'வேறு வழியில்லை; கொன்றுதான் பிரிக்க முடியும்' என்று கருத்துச் சொன்னார்கள். அப்போது, பள்ளிப் படிப்பு அதிகம் படிக்காத, ஆனால் அனுபவப் படிப்பில் தேர்ந்த பெரியவர் ஒருவர், ''ஒட்டகங்களைக் கொல்லத் தேவையில்லை. நான் பிரித்துத் தருகிறேன்' என்றார். அவர் எப்படிப் பிரிக்கப் போகிறார் என்பதைப் பார்க்க, ஊரே ஒன்று திரண்டது.

அவர் தன்னிடமிருந்த ஒரு ஒட்டகத்தை அந்த 17 ஒட்டகங்க ளோடு சேர்த்து, எண்ணிக்கையைப் பதினெட்டு ஆக்கினார். முதல் மகனுக்குப் பாதியல்லவா? எனவே, ஒன்பதைக் கொடுத்தார்; இரண்டாம் மகனுக்கு மூன்றில் ஒரு பங்காக 6 ஒட்டகங்களைக் கொடுத்தார்; மூன்றாம் மகனுக்கு ஒன்பதில் ஒரு பங்கென இரண்டைக் கொடுத்தார். எஞ்சியிருந்த தனது ஒரு ஒட்டகத்தைத் திரும்ப எடுத்துக்கொண்டார்.

இதுதான் பெட்டிக்கு வெளியே சிந்தித்தல்!

இன்று நம் முன்னால் பல புதுப் புதுப் பிரச்னைகளும், சவால் களும் காத்திருக்கின்றன. புத்தகங்களை வாசித்தோ, முற்காலத்தில் தீர்த்துவைத்ததைப் போல வழக்கமான அணுகுமுறையில் தீர்வு காண முயன்றோ அவற்றைச் சரிசெய்துவிட முடியாது. முற்றிலும் புதியதொரு அணுகுமுறை தேவை!

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் இரண்டாம் தலைமுறையைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.  அவர்கள் நேரடியாக ஏமாற்றங்களையும், அதிர்ச்சிகளையும் சந்திப்பதில்லை.  மனரீதியாகப் பெற்றோரின் கருவறைக்குள்ளேயே அவர்கள் பத்திரமாக இருக்க விரும்புகிறார்கள். எல்லாவற்றுக்கும் தயாரித்துவைத்த விடைகள் கிடைக்காதா என்று எதிர்பார்க்கிறார்கள். சந்திக்கிற மனிதர்கள் எல்லாம் கணினியைப் போல இயங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.  முதல் முறையிலேயே கணக்கின் விடையைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பது அவர்கள் அவா!

தேர்வு வேறு, வாழ்வு வேறு! புதிய புதிய சிக்கல்களோடு புலப்படுவது தான் வாழ்க்கை. இன்று பல நிறுவனங்களில் முன்னனுபவம் என்பது எதிர்மறையாகக் கருதப்படுகிறது.  அனுபவம் உள்ளவர்கள் ஆபத்துடன் வாழ முயலமாட்டார்கள்;  நிச்சயமற்ற தன்மையை அவர்கள் சந்திக்க பயப்படுவார்கள்;  ரிஸ்க் எடுப்பது அவர்களுக்குக் கடினம் என்பதால், இளைய தலைமுறையினரே அதிகம் தேவைப்படுகிறார்கள்.  

இன்றைய இளைஞர்கள் தங்கள் அறிவைக் கூர்தீட்டிக்கொண்டு, விடைகாணும் பக்குவத்துடன் திகழ்வது அவசியம். இலக்கியங்களி லிருந்தும், இதிகாசங்களிலிருந்தும் இதை நாம் கற்றுக்கொள்ளலாம். சரித்திர நாயகர்களும் அவதார புருஷர்களும் செக்குமாடாகச் சிந்திக்காமல், கட்டவிழ்த்த காளையாகத் தங்களது சிந்தனைகளைத் தட்டிவிட்டதால் மட்டுமே மேலே... இன்னும் மேலே... உயரே... உச்சியிலே சிகரத்தை அடைந்து செம்மாந்திருந்தார்கள்! நம்மையும் அப்பாதையில் பயணப்படச் செய்வதற்காகவே இந்தத் தொடர்.

இத்தொடரில், மரபு வழி இலக்கியங்கள் வாயிலாகவும், கர்ணவழிக் கதைகள் மூலமாகவும், நவீன புதிர்களின் மூலமாகவும் தமிழக இளைஞர்களை மாறுபட்ட கோணத்தில் 'பெட்டிக்கு வெளியே' யோசிக்க வைப்பதே என் நோக்கம்.

வாருங்கள், மாற்றி யோசிப்போம். நம் மரபைப் போற்றி வாசிப்போம். மேலே... உயரே... உச்சியை எட்டுவோம்!

ஸ்ரீகாமாக்ஷி அம்பாளின் மகிமை

ஸ்ரீகாமாக்ஷி அம்பாளின் மகிமை

ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்திரம்

ஸ்ரீ சக்ரமத்யே வசந்தீம் - பூத
ரக்ஷ : பிஸாசாதி துஷ்டான் ஹரந்தீம்
ஸ்ரீ காமகோட்யாம் ஜ்வலந்தீம் - காம
ஹீனைஸ்ஸு காம்யாம் பஜே தேஹிவாசம்

கருத்து: ஸ்ரீசக்ரத்தின் மத்தியில் வசிப்பவளும், பூதம், பிசாசம் முதலான துஷ்ட சக்திகளை அழிப்பவளும், ஸ்ரீகாமகோடியில் ஜொலிப்பவளும், காமம் அற்றவர்களால் எளிதில் அடையக் கூடியவளுமான உன்னை பூஜிக்கிறேன். ஓ காமாக்ஷி... வாக்கு முதலான வரங்களைக் கொடுக்க வேண்டும்.


உலகனைத்துக்கும் தாயாக இருப்பவள் ஸ்ரீகாமாக்ஷி, அவளுடைய குழந்தைகள் தாம் மக்கள் அனைவரும். குழைந்தைகளாகிய நாம் அறியாமையால் மற்ற தேவர்களை வழிபட்டாலும் கூட நாம் அவர்களுக்குச் சொந்தமானவர்களாக ஆக முடியுமா? ஒரு குழந்தை அல்லது பசு மற்றவர் வீட்டில் நுழைந்து விட்டதால் அது அவர்களுடையதாகவோ, அரசுடைமையுடையதாகவோ ஆகுமா? அது தன் தாயைத்தானே சேரும். இதுபோல நாம் எந்த நிலையிலும் ஸ்ரீகாமக்ஷியின் குழந்தைகள்தாம் என்று அம்பாளின் பெருமையை ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் இவ்விதம் இந்த ச்லோகத்தில் கூறுகிறார்.

மௌட்யாதஹம் சரணயாமி ஸுராந்தரம் சேத்
கிம் தாவதா ஸ்வமபி தஸ்ய பவாமி மாத : |
அக்ஞானத : பரக்ருஹம் ப்ரவிசந் பரஸ்ய
ஸ்வத்வம் ப்ரயாஸ்யதி பசு: கிமு ராஜகீய : ||

ஸ்ரீ லலிதா பரமேச்வரியாக விளங்கும் இவளது கருணை ஏற்பட்டு விட்டால் நமக்கு எல்லாவிதமான ஸௌக்யங்களும் கிட்டும். அந்த நற்பயனைப் பற்றி வர்ணிக்கவே முடியாது. எந்தவிதமான ஸாதனங்களும் இல்லாமலேயே உலகை வென்றுவிட முடியும். இதற்கு உதாரணம் மன்மதன். இவனுக்கு உடலே கிடையாது. இவனது வில் பூவால் ஆனது. வண்டுகள்தான் நாண்கயிறு. பானங்கள் மொத்தம் ஐந்துதான். படைபலம் கிடையாது. வஸந்தகாலம் ஒன்றுதான் துணைவன். மலயமலையின் காற்று இவனது தேர். இவ்வாறு இருப்பினும் இந்த மன்மதன் உலகனைத்திலும் வெற்றி கொள்கிறான். பரமசிவனையும் மயக்குகிறான். இதற்குக் காரணம் அம்பாளின் கடைக்கண் அருள்தான் என்று ஆதிசங்கரர் ஸௌந்தர்ய லஹரியில் கூறுகிறார்.

தனு: பௌஷ்பம் மௌர்வி மதுகரமயீ பஞ்ச விசிகா :
வஸந்த: ஸாமந்தோ மலயமருதாயோதனரத : |
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்
அபாங்காத தே லப்த்வா ஜகதிதம் அனங்கோ விஜயதே ||

பரமேச்வரரின் பெருமையும், சிரஞ்ஜீவித் தன்மையும் கூட அம்பாளின் ஸௌபாக்யத்தினால்தான் ஏற்படுகிறது. தேவர்கள் அமிருதத்தை அருந்தியும் கூட விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர். ஆனால் மிகவும் கொடிய விஷமாகிய ஹாலாஹலத்தைப் பருகிக்கூட நீலகண்டரான சிவனுக்குக் காலம் முடிந்தது என்ற பேச்சே இல்லை. இதுவும் அம்பாளின் தாடங்கத்தின் மகிமைதான் என்று ஸௌந்தர்யலஹரி கூறுகிறது.

ஸுதாமப்யாஸ்வாத்ய ப்ரதிபய ஜரா ம்ருத்யுஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதிசதமகாத்யா திவிஷத : |
கராளம் யத் க்ஷ்வேளம் கபளிதவத: காலகலனா
ந சம்போஸ்தன்மன்யே தவ ஜநநி தாடங்கமஹிமா ||

அம்பாள் இவ்வாறு தன் பதிக்குப் பெருமையை வாங்கித்தந்தாலும் கூட அந்தச் சிறப்பு தனக்கே வேண்டும் என்று எண்ணுவதுமில்லை. பெருமையால் வரும் பட்டத்தை சிவனுக்கே சூட்டினாலும் பேசாமல் இருக்கிறாள். மன்மதனை இரண்டு பேருக்கும் பொதுவான (அர்த்தநாரீச்வரரின் நெற்றிக் கண்ணில் அம்பாளுக்கும் பாதி உரிமை உண்டானதால்) நெற்றிக்கண்தானே எரித்தது? சிவன் தான் மட்டுமே "ஸ்மரரிபு:" என்று பெயர் பெறுவது எப்படி ஸரியாகும்? இதுவாவது போகட்டும்! இடது கால் தானே உதைத்து யமனை ஜயித்தது? அதில் அம்பாளுக்குத் தானே முழுபங்கும் உள்ளது. இதிலும் புகழை ஈச்வரன் அடைவது பொருந்தவே பொருந்தாது. அதில் அவருக்கு என்ன பங்கு உள்ளது? என்று வேடிக்கையாக அம்பாளின் பாதிவ்ரத்யத்தை வர்ணிக்கிறார் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர்:

ஸாதாரணே ஸ்மரஜயே நிடிலாக்ஷிஸாத்யே
பாகீ சிவோ பஜது நாம யச: ஸமக்ரம்|
வாமாங்க்ரி மாத்ரகலிதே ஜனனி த்வதீயே
கா வா ப்ரஸக்திரிஹ காலஜயே புராரே: ||

கஷ்டகாலங்களில் ஜகன்மாதாவான அம்பாளைத்தான் நாம் பிரார்த்திக்க வேண்டும். கஷ்டகாலத்திலும் தாய்தான் அழைத்தவுடனே கருணை புரிவாள். நல்ல காலத்தில் நினைக்காமல் கஷ்டத்தில் மட்டும் அழைத்தால் மற்றோர் வஞ்சனையாக எண்ணி விடுவர். தாய் அவ்வாறு இல்லாமல் கருணை புரிவாள் 

தீபாவளித் திருநாளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து, ஸ்ரீகாமாக்ஷி அம்மையைப் போற்றும் ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சர்வ மங்கலங்களும், சம்பத்துக்களும் நம்மை வந்தடையும்.

தீபாவளி திருக்கதை - அசுரன் கேட்ட வரம்!

அசுரன் கேட்ட வரம்!
ருண பகவானின் வெண்குடை, தேவேந்திரனின் குண்டலங்கள் என தேவர்களின் உடைமைகளை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகின் நிம்மதி யும் பறிபோனது நரகாசுரனால். துயரத்தில் தவித்த தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்கள் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் சரண்புகுந்தார்கள்.
சத்தியத்தின் துணையோடு புறப்பட்டார் பகவான். ஆமாம்! சத்யபாமா தேரோட்ட நரகாசுரனின் தலைநகர் ப்ராக்ஜோதிஷபுரத்தை நோக்கிக் கிளம்பினார். கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் ஆகிய கோட்டைகளை அழித்து நகருக்குள்ளும் புகுந்தார். கணப்பொழுதில் நரகனின் படைகள் அழிக்கப் பட்டன. கடைசியில் நரகாசுரனே போர்க்களம் வந்தான். ஆனால், அவனது ஆயுதங்கள் எல்லாம் கண்ணனின் முன்னால் வலுவிழந்து போயின. நரகன் வீழ்த்தப்பட்டான். அப்போது பூமிப்பிராட்டி ''இந்த மரண காலத்தில் இவனுக்கு ஞான உபதேசம் செய்ய வேண்டும்'' என்று வேண்டினாள். அதன்படியே கண்ணனின் கருத்தும் கண்களும் நரகாசுரனின் பக்கம் திரும்பி அருள் மழை பொழிந்தன.
தெளிவு பெற்ற நரகாசுரன், ''பரந்தாமா! நான் மறையும் இந்த நாளை எல்லோரும் நல்ல நாளாகக் கொண்டாட வேண்டும். அன்று எண்ணெயில் லட்சுமிதேவியும், தண்ணீரில் கங்காவும் வாசம் செய்ய வேண்டும். அனைவரும் எண்ணெய் தேய்த்து, புத்தாடை உடுத்தி, விளக்கேற்றி வழிபட்டு, நல்லுணர்வைப் பெற வேண்டும். அவர்களுக்கு எல்லாவிதமான மங்கலங்களையும் நீங்கள் அருள வேண்டும்'' என்று பிரார்த்தித்தான் (இந்த வரத்தை பூமிதேவி கேட்டதாக பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது). கண்ணனும் வரம் தந்தார். நரகாசுரன் முக்தி பெற்ற அந்த நாளே தீபாவளி. நம்மிடம் உள்ள குறைகளை நீக்கி கண்ணன் நம்மை ஆட்கொள்வதையே இந்தக் கதை உணர்த்துகிறது.

தீபாவளி திருக்கதை - பூமாதேவியின் புதல்வன்!

பூமாதேவியின் புதல்வன்!
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போதும் ஏழாம்பொருத்தம்தானே? ஒவ்வொருமுறை போரிடும்போதும், இறையருளால் தேவர்களே ஜெயித்தனர். இந்த நிலையில், 'பூலோகத்தில் நிகழும் யாகங்களும், அந்த யாகங்களில் அளிக்கப்படும் உணவுகளுமே தேவர்களுக்கு பலம் சேர்க்கிறது. எனில், பூலோகத்தை இல்லாமல் பண்ணிவிட்டால் என்ன' என்று விசித்திர எண்ணம் உதித்தது இரண்யாட்சன் என்ற அசுரனுக்கு.
சற்றும் தாமதிக்காமல் பூமிப்பந்தைக் கவர்ந்துகொண்டு கடலுக்கு அடியில் சென்று மறைந்துகொண்டான். தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டார்கள். அவர் வராஹ அவதாரம் எடுத்தார். கடலுக்கு அடியில் சென்று அசுரனுடன் கடும் போரிட்டு, அவனை அழித்து பூமிப்பிராட்டியை மீட்டுவந்தார். இப்படி வராஹ அவதாரம் எடுத்த பெருமாளுக்கும் பூமிப்பிராட்டிக்கும் பிறந்தவனே நரகாசுரன்.
அவன் நலம் வேண்டி, ''ஸ்வாமி, என் மகன் மரணம் அடையாமல் இருக்க வரம் தாருங்கள்'' என்று பிரார்த்தித்தாள். ''அது இயலாத காரியம். அவனது மரணம் என்னால் நிகழும். நீயும் அருகில் இருப்பாய்'' என்றார் ஸ்ரீவிஷ்ணு. அந்த பூமாதேவியின் அம்சமே சத்யபாமா. இன்னொரு தகவலும் சொல்வர். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடம் சாகா வரம் கேட்டான். அப்படியான வரத்தைத் தர இயலாது என்று மறுத்தார் பிரம்மன். ''எனில், எனது மரணம் என் அன்னையால் நிகழ வேண்டும்'' என்று வரம் கேட்டான். பெற்ற தாயே மகனைக் கொல்ல மாட்டாள் என்ற எண்ணத்தில் இந்த வரத்தைக் கேட்டான். பிரம்மனும் வரம் தந்தார். அதன்படியே அவன் முடிவும் அமைந்தது. பூமிதேவியின் மகன் என்பதால்தான் நரகாசுரனுக்கு பௌமன் என்றும் பெயர் உண்டு!

தீபாவளி திருக்கதை - பூமிக்கு வந்த பாகீரதி!

பூமிக்கு வந்த பாகீரதி!
ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவர் சகரன். அவர் ஒருமுறை யாகம் ஒன்று நடத்தினார். யாகக் குதிரை திக் விஜயம் புறப்பட்டது. விரோதிகள் சிலர், அந்தக் குதிரையைக் கவர்ந்து சென்று, கபில முனிவரின் ஆசிரமத்தில் கட்டிவைத்தனர். குதிரையைத் தேடிப் புறப்பட்ட சகர குமாரர்கள், ஒருவழியாக கபில முனிவரின் ஆசிரமத்தில் அதைக் கண்டுபிடித்தனர். கபில முனிவரே குதிரையைக் கவர்ந்து வந்திருக்க வேண்டும் என்று தவறாகக் கருதி, முனிவரைத் தாக்க முயன்றனர். ஆனால், கபில முனிவரின் ஒரு பார்வையிலேயே எரிந்து சாம்பலானார்கள் சகரனின் புதல்வர்கள்.
 
அவர்களுக்குப் பிறகு திலீபன் எனும் அரசன் வரையில் சகர வம்சத்தின் சந்ததியினர் பலரும், கபிலரால் எரிந்து சாம்பலாகிப்போன தங்களின் முன்னோர் நற்கதி அடைவதற்குப் பலவாறு முயற்சித்தனர். ஆனால், அவர்களது எண்ணம் ஈடேறவில்லை. பிறகு திலீபனின் மைந்தனான பகீரதன், கங்கை பூமிக்கு வந்தால் அவள் மூலம் முன்னோருக்கு நற்கதி கிடைக்கும் என்பதை அறிந்து, அவளை நோக்கி தவம் செய்தான். கங்கையும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். ஆனால், பொங்கிப் பாய்ந்து வரும் தன்னைத் தாங்கும் சக்தி பூமிக்கு இல்லை என்பதை பகீரதனுக்கு உணர்த்தி, சிவனாரைக் குறித்து தவமியற்ற அறிவுறுத்தினாள். பகீரதன் சிவனாரைக் குறித்து கடும் தவம் இருந்தான். சிவனார் மனம் கனிந்தார்; பகீரதனுக்கு அருள் புரிந்தார்.
அதன்படி, கங்கையை சடையில் தாங்கி அவளின் வேகத்தை மட்டுப்படுத்தினார். பூமிக்கு வந்த கங்கையால் பகீரதனின் முன்னோர் நற்கதி அடைந்தனர். அவள் பூமிக்கு வரக் காரணம் பகீரதன் என்பதால், கங்காதேவிக்கு 'பாகீரதி' என்றும் ஒரு பெயர் உண்டு!

தீபாவளி திருக்கதை - அன்பெனும் அகல் விளக்கு!

அன்பெனும் அகல் விளக்கு!
முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் ஓரிடத்தில் சேர்த்து, அவர்கள் மூலம் உலகை உய்விக்க எம்பெருமான் திருவுளம் கொண்டார். அதன்படி மூவரும் திருக்கோவிலூர் தலத்தை அடைந்தனர்.
அங்கே, வைணவர் ஒருவரது இல்லத்தில் இருந்த இடைகழியில் தங்கியிருந்தார். பொய்கையாழ்வார். அப்போது பூதத்தாழ்வாரும் அங்கு வந்தார். 'இந்த இடத்தில்  ஒருவர் படுக்கலாம்; இருவர் அமரலாம்' என்று பொய்கையாழ்வார் சொல்ல, இருவரும் அமர்ந்தனர். சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் வந்தார். 'இங்கு இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்' என்று கூறி, மூவரும் நின்றுகொண்டனர். மூவரும் பகவானின் மகிமைகளைப் பேசிக் களித்திருந்தனர். அப்போது நான்காவதாக ஓர் நபர் உட்புகுந்தது போன்று நெருக்கம் ஏற்பட்டது. இருள் சூழ்ந்துவிட்ட அந்த வேளையில் புதிதாக வந்திருப்பது யார் என்று தெரியவேண்டாமா?
எனவே பொய்கையாழ்வார், 'வையம் தகழியா...' என்று துவங்கி தமது பாசுரத்தால், பூமியாகிய தகழியில் கடல் நீரையே நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தாழ்வார், 'அன்பே தகழியா...' எனத் துவங்கி அன்பாகிய தகழியில் ஆர்வத்தை நெய்யாகவும் சிந்தனையைத் திரியாகவும் கொண்டு ஞான தீபம் ஏற்றினார். பேயாழ்வார் 'இந்த இரண்டு ஒளியினாலும் இருள் அகன்றதால் எம்பெருமானைக் கண்டேன்' என்று பாசுரம் பாடுகிறார்.
நாமும் நம் மனத்துள் அன்பெனும் விளக்கேற்றி, மாசுகள் எனும் இருளகற்றி, உள்ளே பரம்பொருளைக் குடியிருத்தி, நாளும் நல்லதே செய்து, உள்ளளி பெருக்கி மகிழ்வோம்!

தீபாவளி திருக்கதை - மன்னர்களும் தீபாவளியும்!

மன்னர்களும் தீபாவளியும்!
மும்பையில் பல பகுதிகளில் தீபாவளி தினத்தை சுவாரஸ்யமாக அனுஷ்டிக்கிறார்கள். அன்று தங்கள் வீட்டு வாசலில் மண்ணாலான சிறிய கோட்டையைக் கட்டுகிறார்கள். கோட்டை கட்டும் இந்த நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமிகள் ஆர்வத்துடன் பங்கேற்பதுதான் இதன் சிறப்பம்சம். ஏன் இந்த மண் கோட்டை கொண்டாட்டம்?
சத்ரபதி சிவாஜி தன் படைகளுடன் சென்று தீரத்துடன் போரிட்டு, பகைவர்களின் கோட்டையைக் கைப்பற்றியது ஒரு தீபாவளித் திருநாளில்தான். இதை ஞாபகப் படுத்தும் விதமாகவே, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் மண் கோட்டை கட்டி வைத்து, வீரசிவாஜியின் வீரதீரத்தை நினைவுகூர்கிறார்கள்.
* அதேபோன்று மௌரியப் பேரரசர் அசோகர் தனது திக்விஜய யாத்திரையை முடித்துக்கொண்டு திரும்பிய நாள் அசோக தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.
* உஜ்ஜயினி மன்னனான விக்ரமாதித்தன் தன்னுடைய பகைவர்களான ஷாகாஸ் என்பவர்களை வென்று, முடிசூட்டிக்கொண்டதும் ஒரு தீபாவளித் திருநாளில்தான்.
* சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு கோவிந்த சிங்கையும், 52 ராஜபுத்ர அரசர்களையும் சிறையிலடைத்தது, அன்றைய மொகலாயப் பேரரசு. குரு கோவிந்த சிங் அந்தச் சிறையிலிருந்து தப்பியதுடன், தன்னுடன் சிறைப்பட்டிருந்தவர்களையும் தப்பிக்கவைத்து காப்பாற்றினார். விடுதலையான அவர்களுக்குப் பொற்கோயிலில் விளக்கேற்றி வைத்து வரவேற்பு கொடுத்ததுடன், வீடுகளிலும் விளக்கேற்றிவைத்துக் கொண்டாடினார்கள் என்கிறது வரலாறு.

தீபாவளி திருக்கதை - குபேர யோகம்!

குபேர யோகம்!
விச்ரவசு என்றொரு முனிவர்; சிறந்த சிவபக்தர். அவர் யாகம் ஒன்று செய்ய விரும்பினார். ஆனால், திருமணம் ஆனவர்களே யாகம் செய்ய முடியும் என்பதால், பரத்வாஜ முனிவரின் மகளை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வைஸ்ரவணன் என்று பெயர் வைத்தார்.
தந்தையைப் போலவே இவனும் பக்திமானாக இருந்தான். ஒருநாள் பெற்றோரிடம் சென்று, தான் பிரம்மனைக் குறித்து தவமியற்றப் போவதாகச் சொன்னான். அவர்களுக்கும் அதில் மகிழ்ச்சியே! அவனை மனதார ஆசீர்வதித்து அனுப்பினர். வைஸ்ரவணன் அமைதியான ஓரிடத்துக்குச் சென்று, தவத்தில் மூழ்கினான். அது சாதாரண தவம் இல்லை. முதலில் ஆகாரமின்றி தண்ணீரை மட்டுமே அருந்தி தவமிருந்த வைஸ்ரவணன், பிறகு தண்ணீரையும் தவிர்த்து வெறும் காற்றை மட்டுமே புசித்தபடி தவத்தைத் தொடர்ந்தான்.
அவனது பக்தி வைராக்கியத்தைக் கண்டு அகமகிழ்ந்த பிரம்மதேவன், அவன் முன் காட்சி தந்தார். ''என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார். ''தங்களைத் தரிசித்ததே பெரும் பாக்கியம். இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?'' என்று பணிவுடன் கூறினான் வைஸ்ரவணன். இதனால் மேலும் மகிழ்ந்த பிரம்மதேவன், அவனை அஷ்டதிக் பாலகர்களில் ஒருவனாகவும், எல்லாச் செல்வங்களையும் பாதுகாக்கும் அதிபதியாகவும் நியமித்தார்.
இப்படி அருள்பெற்ற வைஸ்ரவணனே குபேரன் ஆவார். தீபாவளி தினத்தில் பூஜிக்கவேண்டிய தெய்வங்களில் இவரும் ஒருவர். அன்று இவரை வழிபட, வறுமைகள் அகன்று நமது வாழ்வு வளம் பெறும்.

தீபாவளி திருக்கதை - கிணற்றுக்குள் கங்கை!

கிணற்றுக்குள் கங்கை!
கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ளது திருவிச நல்லூர்.  இந்த ஊரைச் சொன்னதுமே ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் எனும் மகான்தான் ஞாபகத்துக்கு வருவார். இவரது வாழ்வில் ஒரு சம்பவம்.
ஒருமுறை இவரது வீட்டில் சிராத்தம் வந்தது. வீட்டில் அதற்கான சமையல் தயாராகிக்கொண்டிருந்தது. ஐயாவாள் காவிரியில் குளிக்கக் கிளம்பினார். வழியில் ஏழை ஒருவன் பசியால் துடித்துக்கொண்டிருந்தான். அவனை தன் வீட்டுக்கு அழைத்து வந்து உணவிட்டார். ஆனால், அவரைப் பிடிக்காத அந்தணர்கள் சிலர், ஏழைக்கு அவர் உணவிட்டதைக் காரணம் காட்டி அவரை விலக்கி வைத்தனர். அவரது வீட்டுக்குச் செல்வதில்லை என்றும் முடிவெடுத்தனர். அன்றைய சிராத் தத்தை அந்தணர்கள் இல்லாமல் ஒருவாறு செய்துமுடித்தார் ஐயாவாள்.
சிலநாட்களில் மீண்டும் ஒரு சிராத்தம் வந்தது. அதை முறைப்படி செய்ய விரும்பிய ஐயாவாள், அந்தணர்களிடம் சென்று வீட்டுக்கு அழைத்தார். 'தகுந்த பிராயச்சித்தம் செய்யவும் தயாராக இருக்கிறேன்' என்றார். 'எனில் கங்கையில் குளித்து வாரும்!' என்றனர். காசிக்குச் சென்று கங்கையில் நீராடிவர வெகுநாட்கள் ஆகுமே! எனவே, ஸ்ரீதர ஐயாவாள் தனது வீட்டுக் கிணற்றடிக்குச் சென்றார். கங்காஷ்டகம் என்ற ஸ்தோத்திரத்தைப் பாடினார். மறுகணம் அந்தக் கிணற்றில் கங்கை பொங்கிப் பெருகி, வீதியெங்கும் வெள்ளமெனப் பாய்ந்தாள். ஊர்மக்களும் அந்த அந்தணர்களும் தங்கள் தவற்றுக்கு வருந்தி மன்னிப்புக் கோரினர். அதை ஏற்று ஸ்ரீதர ஐயாவாள் மீண்டும் ஒரு ஸ்லோகம் சொல்லி வணங்க, அந்தக் கிணற்றிலேயே கங்கை ஐக்கியமானாளாம். இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் அந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம்!

தீபாவளி திருக்கதை - கங்கை... நம்பிக்கை!

கங்கை... நம்பிக்கை!
தீபாவளி அன்று காலை எண்ணெயில் லட்சுமிதேவியும், தண்ணீரில் கங்காதேவியும் இருப்பதாக ஐதீகம். அதனால்தான் தீபாவளியன்று 'கங்கா ஸ்நானம் ஆச்சா?' என்று பரஸ்பரம் விசாரித்துக்கொள்வது வழக்கம். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நம்பிக்கையும், பாவனையும்தான் முக்கியம். தண்ணீரில் கங்கை எழுந்தருளி இருக்கிறாள் என்று நம்பிக்கையுடன் நீராடினால், நமது பாவங்கள் அனைத்தும் நசித்துப்போகும்.
ஒருமுறை, பார்வதிதேவி ''எல்லோரும் கங்கையில் நீராடி பாவங்களைத் தொலைத்துக் கொண்டால், நரகத்துக்கு அவசியம் இல்லையே'' என்று சிவ பெருமானிடம் கேட்டாள். ''உண்மைதான்! ஆனால் கங்கையால் ஏற்படும் புண்ணியம் எல்லோருக்கும் கிடைத்துவிடாது'' என்ற சிவபெருமான், நாம் இருவரும் கிழத் தம்பதியாக கங்கைக் கரைக்குச் செல்வோம். நீ அங்கு வருபவர்களிடம் என்னைத் தூக்கிச்சென்று கங்கையில் நீராட்டினால், பொன் - பொருள் பரிசு தருவதாகக் கூறு. ஆனால், அப்படி என்னைத் தூக்கினால் எனது பாவங்கள் அவர்களைச் சேரும் என்று கூறு'' என்றார். பார்வதியும் அப்படியே கங்கையில் நீராடி வருபவர்களிடம் மன்றாடினாள். ஒருவரும் முன்வரவில்லை.
கடைசியில் திருடன் ஒருவன் முன்வந்தான். அவனிடம், ''இவரைத் தூக்கினால் இவரது பாவம் உன்னைச் சேருமே'' என்றாள் மூதாட்டியக இருந்த பார்வதி.  அதற்கு முரடன், ''அதனால் என்ன... அப்படியே பாவங்கள் சேர்ந்தாலும் அதைக் கரைப்பதற்குத்தான் கங்கா மாதா இருக்கிறாளே!'' என்றான் நம்பிக்கையுடன். அவ்வளவில் அவனுடைய பாவங்கள் தொலைந்ததுடன் அவனுக்கு சிவ-பார்வதி தரிசனமும் கிடைத்தது. வழிபாட்டில் நம்பிக்கையும், பாவனையும்தான் முக்கியம்.

தீபாவளி திருக்கதை - திருவிளக்கை ஏற்றி வைத்தோம்...

திருவிளக்கை ஏற்றி வைத்தோம்...
தீபாவளி தினத்தில் தீபச்சுடரின் வெளிச்சம் படும் இடங்களில் எல்லாம் லட்சுமிகடாட்சம் நிறைந்திருக்கும் எனச் சொல்லும் ஞானநூல்கள், இதற்குக் காரணமான ஒரு கதையையும் விவரிக்கின்றன.
அரிய வரங்கள் பல பெற்றிருந்த நரகாசுரன் தேவர்களையும் ரிஷிகளையும் பெரிதும் கொடுமைப்படுத்தினான். அவனால் பெரும் துன்பத்துக்கு ஆளான அனைவரும், துவாரகாபதியாம் ஸ்ரீகிருஷ்ணரிடம் வந்து சரண் புகுந்தனர். நரகனை அழித்து தர்மத்தை நிலைநாட்டும்படி வேண்டிக்கொண்டனர். பகவானும் அவர்களுக்கு அடைக்கலம் தந்து, ஆறுதல் கூறியதுடன், சத்யபாமாவின் துணையோடு அதர்மத்தை அழிக்கப் புறப்பட்டார். இதுதான் தக்க தருணம் என்று காத்திருந்த பாணாசுரன் முதலான வேறு பல அசுரர்கள், பாற்கடலில் இருக்கும் திருமகளை எப்படியாவது கவர்ந்து செல்ல திட்டமிட்டார்கள். இதை அறிந்த திருமகள் என்ன செய்தாள் தெரியுமா? அருகிலிருக்கும் தீபச்சுடரில் ஐக்கியமாகிவிட்டாளாம். இந்தச் சம்பவம் நிகழ்ந்ததும் தீபாவளித் திருநாளில்தான். ஆகவே, அன்று திருவிளக்கு முதலாக வீடு முழுவதும் அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றிவைத்து, லட்சுமிதேவியை தீபலட்சுமியாக வழிபடுவார்கள். அப்போது, ஸ்ரீஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தின்
கீழ்க்காணும் பாடலைப் பாடி அலைமகளை வழிபட, நமது வறுமைகள் யாவும் நீங்கி சகல ஐஸ்வரியங்களும் பொங்கிப் பெருகும் என்பது ஐதீகம்.
நமோ (அ)ஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
  நமோ (அ)ஸ்து பூமண்டல நாயிகாயை
நமோ (அ)ஸ்து தேவாதிதயாபராயை
  நமோ (அ)ஸ்து ஸார்ங்காயுத வல்லபாயை

தீபாவளி திருக்கதை - பார்வதியின் விரதக் கதை!

பார்வதியின் விரதக் கதை!
பிருங்கி என்றொரு  முனிவர், சிறந்த சிவபக்தர். சிவபெருமானை மட்டுமே பரம்பொருளாகக் கருதி வழிபடுபவர். ஒருநாள் கயிலைக்குச் சென்றார். அங்கே, ஸ்வாமியுடன் பார்வதியம்மையும் இருந்தாள். 'ஸ்வாமியை மட்டுமே வணங்கிச் செல்லும் பிருங்கி இன்று நம்மையும் வணங்கட்டுமே' என்று, ஸ்வாமிக்கு நெருக்கமாக அமர்ந்துகொண்டாள் அம்மை.
ஆனால், பிருங்கி முனிவர் வண்டின் உருவமெடுத்து, ஸ்ரீபரமேஸ்வரனை மட்டும் வலம் வந்து வணங்கி வழிபட்டார் (இதனால் கோபம் கொண்ட அம்பிகை, பிருங்கி முனிவரின் சக்தியைப் பறித்ததும், அவருக்கு சிவனார் ஊன்றுகோல் கொடுத்து அருளிய கதையும் நாமறிந்ததே).
அம்பிகை மனம் வருந்தினாள். தான் வேறு, சிவம் வேறு இல்லை என்பதை உலக மக்களுக்கு உணர்த்த எண்ணினாள். அதற்காக தவம் செய்ய பூலோகம் வந்தாள். பூமியில் கௌதம முனிவரின் ஆசிரமத்தை அடைந்தவள், முனிவரின் ஆலோசனைப்படி கடும் விரதமும் தவமும் இருந்து சிவனாரை வழிபட்டாள். அதன் பலனாக உமையவளுக்கு ஸ்ரீபரமேஸ்வரரின் திருமேனியில் ஒருபாதி இடம் கிடைத் தது. இந்த அருட்சம்பவம் நிகழ்ந்ததும் ஒரு தீபாவளித் திருநாளில்தான் என்பர்.
அம்பிகை கடைப்பிடித்தது கேதாரீஸ்வர விரதம். இப்போது அம்பிகைக்கும் சேர்த்து கேதாரகௌரி விரதமாகக் கடைப்பிடிக்கிறார்கள். புரட்டாசி மாதம் வளர் பிறை தசமி திதி நாளில் இருந்து துவங்கி ஐப்பசி அமாவாசை வரையிலும் 21 நாட்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. இயலாதவர்கள் கடைசிநாளில் மட்டுமாவது விரதம் இருந்து, அம்மையப்பனை ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர திருவடிவில் தியானித்து வழிபடுவது, சகல நன்மைகளையும் கொண்டு வந்து சேர்க்கும்.

தீபாவளி திருக்கதை - காசியும் வியாசரும்!

காசியும் வியாசரும்!
காசிக்குச் சென்றால் கர்ம வினைகள் தொலையும் என்பது நம்பிக்கை. 'இது எவ்வளவு தூரம் உண்மை?' என்று சோதிக்க நினைத்தார் வியாசர். அதற்காக சீடர்களுடன் காசிக்குப் புறப்பட்டார். ஆனால், அங்கு
அவர்களுக்கு ஒரு வாரமாக உணவு கிடைக்கவில்லை. ஒருநாள் ஓர் இல்லத்தின் முன் நின்று குரல்கொடுத்தார் வியாசர். வெகுநேரமாகியும் கதவு திறக்கப் படவில்லை. பொறுமை இழந்த வியாசர், காசி மக்களைச் சபிக்க முற்பட்டார். அப்போது இல்லத்தின் கதவு திறந்தது. வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்ட பெண்மணி, ''நிறுத்துங்கள்'' என்றாள். சாபமிடுவதற்காகத் தூக்கிய வியாசரின் கை
அப்படியே நின்றுவிட்டது. பின்னர், அந்தப் பெண்மணி வியாசரைப் பார்த்துப் புன்னகைத்ததும்தான் அவரால் கையைக் கீழே இறக்க முடிந்தது.
வியாசர் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, அவர்களை உள்ளே அழைத்துச் சென்று அமரவைத்து எல்லோருக்கும் இலை போட்டாள் அந்தப் பெண்மணி. பின்னர், ''எல்லோரும் சாப்பிடுங்கள்'' என்றாள். வியாசர் திகைத்தார். ''இலையில் எதையும் பரிமாறவில்லையே!'' என்று கேட்டார். தொடர்ந்து ஏதோ சொல்ல அவர் வாயைத் திறப்பதற்குள், இலை முழுதும் விதவிதமான உணவு வகைகள் நிறைந்திருந்தன. வியப்பு மேலிட அனைவரும் சாப்பாட்டை முடித்துக்கொண்டு நிமிர்ந்தால், சாக்ஷ£த் அன்னபூரணியே காட்சியளித்து மறைந்தாள்.
இந்தத் திருவிளையாடல் எதற்காக எனும் கேள்வி வியாசரை துளைத்தெடுத்தது. இதற்கான பதிலை சிவனாரைத் தரிசித்து கேட்டார் வியாசர். ''உங்களில் எவருமே சிரத்தையாக காசிக்கு வரவில்லை. இந்த ஊரைச் சோதிக்க வந்தீர்கள். அதனால் ஏற்பட்டதுதான் இந்த ஒரு வாரப் பட்டினி'' என்றார் சிவபெருமான். உண்மைதான்! நோக்கங்கள் உயர்வாக இருந்தால்தான், அனுபவமும் முறையாக இருக்கும்.

தீபாவளி திருக்கதை - வனவாசம் முடிந்தது!

வனவாசம் முடிந்தது!
குனியின் ஆலோசனையின்படி பாண்டவர்களை சூதாட அழைத்தான் துரியோதனன். அதில் கலந்துகொண்ட தருமர் நாடு, நகரம் அனைத்தையும் இழந்தார். அதன் காரணமாக பாண்டவர்கள் 12 வருடங்கள் வனவாசமும், ஒரு வருடம் அஞ்ஞாத வாசமும் செய்யும் நிலை. பாண்டவர்கள் வனம் செல்ல, அவர்களின் தலைநகரான இந்திரபிரஸ்தத்தின் மக்கள் சோகத்தில் மூழ்கினர். இந்திரபிரஸ்த நகரமே இருண்டு போனது.
காலம் கழிந்தது. பல்வேறு சோதனைகளைக் கடந்து வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் நிறைவு செய்து நாடு திரும்பினார்கள் பாண்டவர்கள். அவர்களது வருகையை அறிந்த இந்திரபிரஸ்த மக்கள் பேரானந்தம் அடைந்தனர்.
அந்த நகரமே விழாக்கோலம் பூண்டது. தென்னை, வாழை, பாக்கு, கமுகு மரங்களால் தோரணங்கள் அமைத்து, வீதியெங்கும் நீர் தெளித்து மாக்கோலம் இட்டு அலங்கரித்தார்கள். எங்கும் மங்கல ஒலி முழங்கின. அதுமட்டுமா? வீட்டுக்கு வீடு தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து மகிழ்ந்தார்கள் மக்கள்.
தீபாவளி கொண்டாட்டத்துக்கு இதுவும் ஒரு காரணம் என்றும், பாண்டவர்கள் நாடு திரும்பியது ஒரு தீபாவளித் திருநாள் என்றும் கூறுவார்கள்.
தீய எண்ணங்களை ஒழித்து, ஆத்ம ஜோதியாகத் திகழ வேண்டும். ஆனால், அதற்கான முயற்சியில் பல்வேறு சோதனைகளைக் கடக்க வேண்டியிருக்கும்; பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டியது வரும். இதை பாண்டவர்கள் மூலம் உணர்த்தி, அவர்கள் துன்பங்களைத் தாண்டி வெற்றி பெற்ற கதையை, தீபாவளித் திருநாளில் நினைவுகூர்வது சிறப்பாகும். அப்போது, நமக்கும் தீமைகளை அணுகாத திடசிந்தையும், கடவுளின் அணுக்கமும் வாய்க்கும்.

தீபாவளி திருக்கதை - மகாபலி பெற்ற வரம்!

மகாபலி பெற்ற வரம்!
க்த பிரகலாதனின் பேரன் மகாபலி. பண்பும் பரிவும் கொண்டவன். ஆனாலும், தான் செய்யும் புண்ணிய காரியங்கள் குறித்து கர்வமும் இருந்தது அவனுக்கு. அதேநேரம், அவன் பெற்றிருந்த வரங்களால் இந்திர பதவிக்கு ஆபத்து வரக்கூடும் என்று தேவர்களும் அச்சத்தில் இருந்தனர். அவர்கள் ஸ்ரீமந்நாராயணனிடம் சென்று முறையிட்டார்கள். மகாபலியை தடுத்தாட்கொள்ள நினைத்த பரம்பொருள் வாமன அவதாரம் எடுத்தார்.
மகாபலி இந்திர பதவி வேண்டி யாகம் செய்துகொண்டிருந்த யாகசாலைக்குச் சென்றார். மகாபலியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டார். 'அவ்வளவுதானே! தந்தால் போச்சு' என்று இறுமாப்புடன் ஒப்புக்கொண்டான் மகாபலி. ஆனால் வந்திருப்பது யார் என்பதை அறிந்த அசுரகுரு சுக்கிராச்சாரியர் மகாபலியைத் தடுத்தார். ஆனால், மகாபலி அவர் கருத்தை ஏற்கவில்லை. வாமனருக்கு மூன்றடி நிலம் தானமாகக் கொடுப்பதாகக் கூறி, தாரை வார்த்துக் கொடுத்தான். மறுகணம் வாமனர் திரிவிக்கிரமனாக விஸ்வரூபம் எடுத்தார். முதல் நாள், தம் ஒரு திருவடியால் பூமியை அளந்தார். அடுத்த நாள், தம் மற்றொரு திருவடியால் விண்ணை அளந்தார். 3-வது நாள், இன்னும் ஓர் அடியை எங்கே வைப்பது என்று பகவான் கேட்க, மகாபலி தன் தலையைக் காட்ட, பகவான் அவன் தலைமீது மூன்றாவது அடியை வைத்தபடி, ''என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார்.
மகாபலி 'நான் தங்களுக்கு தானம் கொடுத்த மூன்று தினங்களில் நடுவில் வரும் சதுர்த்தசி திதியில் மக்கள் எல்லோரும் அதிகாலையில் எழுந்து, ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து, வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றிக் கொண்டாட வேண்டும்' என்று வரம் கேட்டான். பகவானும் அப்படியே அனுக்கிரஹம் செய்தார். இது, மகாபலிக்கான தீபாவளித் திருக்கதை!

தீபாவளி திருக்கதை - திருமகளின் திருமண நாள்!

 திருமகளின் திருமண நாள்!
மிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும், மந்தர மலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்த திருக்கதை நமக்குத் தெரியும். அப்போது, முதலில் ஆலகால விஷம் வந்தது. உலகையும் உயிர்களையும் காக்கும் பொருட்டு, அந்த விஷத்தை சிவபெருமான் ஏற்று திருநீலகண்டன் ஆனார்.
தொடர்ந்து பாற்கடல் கடையப்பட்டது. அதன் பலனாக அடுத்தடுத்து ஐராவதம், உச்சைச்ரவஸ் எனும் குதிரை, காமதேனு, கற்பக விருட்சம், சந்திரன், மூதேவி ஆகியோர் தோன்றினர். பின்னர் பேரெழில் பெட்டகமாக, கோடி சூரிய பிரகாசத்துடன் திருமகள் தோன்றினாள். அவளை மணந்துகொள்ள அனைவரும் போட்டி போட்டனர்.
ஆனால் திருமகள் சலனமோ, ஆசைகளோ இல்லாமல் இருந்த திருமாலே தனக்குக் கணவனாக வர வேண்டும் என்று விரும்பி, தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தாள். அப்போது மூத்தாள், 'நானே முதலில் தோன்றியவள் என்பதால், எனக்கே முதலில் திருமணம் நடைபெற வேண்டும்' என்று வாதிட்டாள். ஆனால், அவளை மனைவியாக ஏற்க ஒருவரும் முன்வரவில்லை.
அப்போது அங்கு வந்த உத்தாலகர் என்ற முனிவர், மூத்தாளை தான் ஏற்றுக்கொள்வதாகவும், தமது தவ வலிமையால் அவளைப் பரிசுத்தப்படுத்து வதாகவும் கூறி மூத்தாளை மணந்துகொண்டார்; திருமகளை திருமால் மணந்தார்.
இருள் போன்ற மூதேவியை ஏற்றுக்கொண்ட உத்தாலகரின் தியாகத்தைப் போற்றும் வகையிலும், திருமகளின் திருமண நாளைக் கொண்டாடும் வகையிலும் வரிசையாக தீபங்கள் ஏற்றி தீபாவளி கொண்டாடப்படுகிறது என்பார்கள்.