Sunday, March 27, 2016

ஏமாற்றும் வித்தைகள்... தப்பிக்கும் உத்திகள்!
புத்தகத்தின் பெயர்: த கான்ஃபிடன்ஸ் கேம் ( The Confidence Game)

ஆசிரியர்: மரியா கொன்னிகோவா

பதிப்பாளர்: Viking

சிலர் பார்ப்பதற்கு ஜென்டில்மேன்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், நம்மை முழுமையாக நம்ப வைத்து பின்னர் கழுத்தை அறுத்துவிடுவார்கள். இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் எப்படி நம்ப வைத்து பலி தருகிறார்கள் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லும் புத்தகம்தான் மரியா கொன்னிகோவா என்ற பெண்மணி எழுதிய 'த கான்ஃபிடன்ஸ் கேம்'.

ஒரு நாட்டின் போர்க் கப்பலில் திடீரென 19 பேருக்கு காயம் ஏற்பட உடனுக்குடன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. ஜோசப் சிர் எனும் கப்பல் படை டாக்டர் ஒருவர் உடனே வரவழைக்கப்பட்டார். 

முதலுதவி மற்றும் சிறு சிறு அறுவை சிகிச்சைகளை அவர் செய்ய 19 பேரும் காப்பாற்றப்பட்டு அவர்களுடைய நாட்டின் துறைமுகத்தில் இருந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். காயம்பட்டவர்களைக் காப்பாற்றிய டாக்டர் குறித்து செய்திகள் வெளியானது.       இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா!

கப்பலுக்கு வந்தவர் ஒரு டாக்டரே அல்ல. அவருக்கு ஆபரேஷன்கள் எதுவும் செய்யத் தெரியாது. தான் ஒரு டாக்டர் என்று ஊரையே (ஊரை என்ன, ராணுவத்தையே!) ஏமாற்றியவர். இது தெரியாத பலரும் ஜோசப் சிர் என்கிற நிஜமான டாக்டரை புகழ்ந்து தள்ளினார்கள்.

நிஜ டாக்டரோ, ''அய்யோ நான் அவனில்லை. நான் அந்த கப்பலுக்கே போகலை'' என்றார். 

அப்படியானால் டாக்டர் என்று சொல்லி வந்துபோனது யார் என்று விசாரிக்க, 19 பேரைக் காப்பாற்றிய போலி டாக்டரின் புகைப்படத்தைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர், சிறு வயது முதலே டாக்டரை பற்றி நன்கு அறிந்துவைத்திருக்கும் அவரது நண்பர்தான் என்று தெரிய வந்தது. 

டாக்டர் அல்லாத ஒருவரால் எப்படி 19 பேருக்கு மருத்துவம் பார்க்க முடிந்தது என்று விசாரித்தபோது, கப்பலில் இருக்கும் டாக்டர் இல்லாதபோது முதலுதவிக்காக செய்ய வேண்டியது என்ன என்கிற தலைப்பில்  நிஜ டாக்டர் வைத்திருந்த கையேட்டை  போலி டாக்டர் படித்துவிட்டுத் தான் வைத்தியம் பார்த்தார் என்கிற விவரம் தெரிய வந்தது. பார்த்தீர்களா, போலி டாக்டர் எப்படி ஏமாற்றி இருக்கிறார் என்று?

டாக்டர் அல்லாத ஒருவர் டாக்டரைப் போல் நடித்து பல உயிர்களையும் காப்பாற்றியிருக்கிறார் என்றால் எந்த அளவுக்கு சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவர் நடந்துகொண்டிருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியை. அவரை அந்த நாட்டின் ராணுவம் சத்தம் போடாமல் பணியிலிருந்து விடுவித்துவிட்டதாம். ஏன் அவருக்கு தண்டனை இல்லை என்றால், வெட்கக்கேடான விஷயத்தை எப்படி வெளியே சொல்வது என்பதுதான் காரணம் என்கிறார் ஆசிரியை.

இது போன்ற போலி பேர்வழிகள் ஒவ்வொரு முறையும் அத்தியாவசியத் தேவை ஏற்படும்போது மட்டுமே வெளிப்பட்டு சுலபத்தில் ஏமாற்றிவிடுகிறார்கள் என்கிறார் ஆசிரியை. 

டாக்டர், ஜெயிலர் (மிகவும் கொடூரமான குற்றவாளிகளை அடைத்து வைத்திருக்கும் செல்லுக்குள் ஜெயிலர்களே போக பயப்படும்போது நான் போகிறேன் என ஒரு போலி ஜெயிலர் உலகின் மிகக் கடுமையான பாதுகாப்பு விதிகள் கொண்ட ஜெயிலுக்குள் போனாராம்), பொன்ஸி ஸ்கீம் நடத்தும் திறமையான ஃபண்ட் மேனேஜர் என பலவகை நபர்களும் அந்த வகை நபர்களுக்கான தேவைகள் அதிகரிக்கும்போதே உருவாகின்றனர் என்கிறார் ஆசிரியை.

பல்வேறு விதமான பித்தலாட்ட நபர்களைப் பற்றி நாம் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் பார்த்த பின்னருமே ஏமாறுகிறோமே, அது எதனால், ஏமாற்று குறித்து ஆராய்ச்சிகள் சொல்வது என்ன என்று பார்த்தால், ஆராய்ச்சிகள் சொல்வது பல விஷயங்களை. மேஜிக் செய்து காட்டும் நபர்கள்கூட ஒரே மேஜிக்கை தொடர்ந்து பலமுறை செய்து காட்டுவதில்லை. 

ஏனென்றால் எதிர்பார்ப்பு குறையும்போது அதிலுள்ள ட்ரிக் தெரிந்துவிடும் என்பதனால்தான். ஆனால், உலகில் இருக்கும் நவீன ஏமாற்றுக்காரர்களோ தொடர்ந்து பலமுறை ஒரே ட்ரிக்கை செய்து மக்களை ஏமாற்றவே செய்கின்றனர். ஏமாற்றுபவர்களை விடுங்கள். ஏமாறுபவர்கள் ஏன் கண்ணிருந்தும் கிணற்றில் விழுகின்றனர் தெரியுமா? 

சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் அந்த சூழ்ச்சிவலைகள் பின்னப்படுவதே என்கிறார். பெரிய பொன்ஸி ஸ்கீமை நடத்திய மெடாப், இருபது வருடம் அதனை வெற்றிகரமாக நடத்திவந்துள்ளார். தொடர்ந்து பணம் வந்துகொண்டேயிருந்தால், அவர் நல்ல ஃபண்ட் மேனேஜராகவே இருந்திருப்பார். 

ஒருவேளை அவர் சாகும் வரை தொடர்ந்து பணம் அவருடைய திட்டத்தினை நோக்கி வந்துகொண்டே இருந்திருந்தால் என்னவாகியிருக்கும்? அவர் கடந்த நூற்றாண்டின் நாயகனாக திகழ்ந்திருக்கக்கூட வாய்ப்புள்ளதே என்று கிண்டலடிக்கிறார் ஆசிரியை.

அதே போல், நாம் அவசரத்தில் இருக்கும்போது ஏமாற்றப்படுகிறோம். அமெரிக்காவில் ஒரு நபர், ஏர்லைன் நிறுவனங்கள் தரும் ஃப்ரீ மைலேஜ் பாயின்ட்டுகளை (ஒவ்வொரு முறை ப்ளைட்டில் பயணிக்கும்போது கிடைக்கும் இலவச பாயின்ட்டுகள்) வாங்க இன்டர்நெட்டில் முயற்சித்திருக்கிறார்.

 அங்கே  கையில் ஃப்ரீ மைலேஜ் வைத்திருப்பவர் கள் குறைந்த விலைக்கு மற்றவர்களுக்கு விற்பார்கள். அதை வாங்கி பயணத்துக்கான டிக்கெட்டாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு மாதத்துக்கு பின்னால் செல்லவேண்டிய பயணத்துக்காக ஃப்ரீ மைலேஜ் குறைந்த விலையில் கிடைக்கிறதா என்று நெட்டில் தேடியுள்ளார் ஒருவர்.

ஒரு பைலட், தன்னிடம் ஃப்ரீ மைலேஜ் நிறைய இருப்பதாக சொல்லி இவருக்கு மெயில் அனுப்பியுள்ளார். பேரம் பேசி முடித்தாயிற்று. பணம் அனுப்ப அக்கவுன்ட் எண் சொல்லுங்கள் என கேட்டு மெயில் அனுப்பினால், பதில் இல்லை. பத்து நாளாயிற்று, பதினைந்து நாளாயிற்று பைலட்டிடம் இருந்து பதில் இல்லை. அட, இன்னும் பதினைந்து நாளில் பயணம் போகனுமே என நினைத்து, மீண்டும் இன்டர்நெட் தேடுதலை தொடங்க தற்போது வேறு ஒரு நபர் ஃப்ரீ மைலேஜ் பாயின்ட்டுகளை விலைக்குத் தருகிறேன் என்கிறார். 

பணத்தை என் சூப்பர் மார்க்கெட் கார்டுக்கு ரீசார்ஜ் செய்துவிடுங்கள் என்று சொல்ல, ரீசார்ஜும் செய்துவிட்டு பாயின்ட் வரும் வரும் என்று சொல்ல காத்திருந்தால் வரவேயில்லையாம். மீண்டும் பைலட்டிடம் இருந்து மெயில் வந்ததாம். 'சாரி, நான் வெளிநாடு போய்விட்டேன். நீங்கள் இன்னமும் மைலேஜ் வாங்காமல் இருக்கிறீர்களா?' என்று. தேவைப்படும் நபரோ, 'அய்யோ, எனக்கு அவசரம் சாமி' என்று சொல்ல, என் வங்கிக் கணக்கு எண் இதுதான். பணத்தை அனுப்புங்கள். மைலேஜை உடனுக்குடன் மாற்றுகிறேன் என்றாராம். அவசரப்பட்டு ஒருவரிடத்தில் ஏமாந்துவிட்டோம். பேசாம பைலட்டுக்காக காத்திருந்திருக்கலாம் என்ற எண்ணத்துடன் பணத்தை அனுப்ப மைலேஜ் வரவேயில்லையாம். 

இது என்ன உத்தி என்கிறீர்களா? இரண்டு தடவையும் ஒரே ஆள்தான் ஏமாற்றியுள்ளார். நாட்களை கடத்தி அவசரத்தை உண்டாக்கி அதன் மூலம் ஏமாற்று வேலையை இரண்டு முறை செய்துள்ளார்.

பெரும்பாலான ஏமாற்றுக்காரர்கள் நம்முடைய உணர்வுகளைத் தூண்டிவிடுவதன் மூலம் அவர்களுடைய காரியத்தை சாதித்துக்கொள்கின் றனர். உணர்வுகளை கண்மூடித்தனமாக நம்பவைக்கிற அளவில் மாற்றியமைக்கின்றனர். அதிலும் நாம் கஷ்டத்திலும், நஷ்டத்திலும் இருக்கும்போது சரியான உணர்வுத் தூண்டுதல்களை செய்யவல்ல இந்த வகை ஏமாற்றுக்காரர்கள் நம்மிடம் இருக்கும் மிச்சசொச்ச பணத்தையும் பிடுங்கிவிடுகிறார்கள்  என்கிறார் ஆசிரியை.

இதில் இன்னுமொரு பிரச்னை, நானெல்லாம் ஏமாறுவேனா என்ற தெனாவெட்டுடன் திரிபவர்களே சுலபத்தில் ஏமாற்றுதல்களுக்கு உள்ளாகின்றனர். ஏனென்றால், நம்முடைய ஏமாறும் திறன் குறித்து (நம்மைப் பற்றி) நாமே மார்க் போட்டுக் கொள்ளும்போது கொஞ்சம் அதிகமாக போட்டுக்கொள்வது இயல்புதானே என்கிறார் ஆசிரியை.

புத்தகம் முழுவதுமே பல்வேறு விதமான நூதன ஏமாற்றுக்காரர்கள் மற்றும் அவர்களிடம் ஏமாந்தவர்கள் குறித்த கதைகளே தரப்பட்டுள்ளது. என்ன செய்தால் இதுபோன்ற ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து தப்பிக்கலாம்?

சிறுபிள்ளையாக இருக்கும்போது நம் கையிலொரு பொம்மை இருக்கின்றது. வேறொரு பொம்மையை நாம் விரும்பி கேட்கிறோம். அது கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வோம்?

கிடைக்காத பொம்மை ஒன்றும் பெரிதல்ல. என் கையில் இருப்பதே பெரிது என்று சொல்லி அதை வைத்து விளையாடுவோம் அல்லவா? அதே போல்தான். நம்மிடம் இருப்பது சிறந்தது என்பதை மனதில் கொண்டே உலகத்தில் இருக்கும் அத்தனை விஷயங்களையும் செய்யவேண்டும் என்கிறார் ஆசிரியை.

ஏமாற்றுகள் நிறைந்த இந்த உலகில் எப்படி ஏமாற்றுக்காரர்கள் நம்பிக்கையை பெறும் வண்ணம் செயல்படுகிறார்கள் என்பதை பல்வேறு உதாரணங்களுடன் சொல்லும் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை கட்டாயம் படிக்கலாம்."The Confidence Game: Why We Fall for It . . . Every Time" by Maria Konnikova 
2016 | EPUB | 352 pages | ISBN: 0525427414 | English | 0.4 MB

"It's a startling and disconcerting read that should make you think twice every time a friend of a friend offers you the opportunity of a lifetime."
—Erik Larson, #1 New York Times bestselling author of Dead Wake and bestselling author of Devil in the White City

Think you can't get conned? Think again. The New York Times bestselling author of Mastermind: How to Think Like Sherlock Holmes explains how to spot the con before they spot you.

A compelling investigation into the minds, motives, and methods of con artists—and the people who fall for their cons over and over again.

While cheats and swindlers may be a dime a dozen, true conmen—the Bernie Madoffs, the Jim Bakkers, the Lance Armstrongs—are elegant, outsized personalities, artists of persuasion and exploiters of trust. How do they do it? Why are they successful? And what keeps us falling for it, over and over again? These are the questions that journalist and psychologist Maria Konnikova tackles in her mesmerizing new book.

From multimillion-dollar Ponzi schemes to small-time frauds, Konnikova pulls together a selection of fascinating stories to demonstrate what all cons share in common, drawing on scientific, dramatic, and psychological perspectives. Insightful and gripping, the book brings readers into the world of the con, examining the relationship between artist and victim. The Confidence Game asks not only why we believe con artists, but also examines the very act of believing and how our sense of truth can be manipulated by those around us.

EPUB:


Audio Book: