Thursday, June 25, 2015

சீமந்தம் எதற்காக...?

சீமந்தம் எதற்காக...?
 
ரிக் வேதத்தில் உள்ள சீமந்த கல்யாணம் பற்றிய குறிப்பு, அதன் பழைமைக்கும் பெருமைக்கும் எடுத்துக்காட்டு. 'உலகில் தோன்றிய முதல் நூல் ரிக் வேதம்' என்று வெளி நாட்டவர்களும் பாராட்டுவார்கள். 'தேவ மாதா அதிதிக்கு சீமந்தம் செய்து அவளின் வம்சத்தை என்றும் சிரஞ்ஜீவியாக நிலை நிறுத்தினார் பிரஜாபதி. அதைப் போல் கர்ப்பமுற்ற என் மனைவிக்கு சீமந்தம் செய்து அவளின் பரம்பரையைச் செழிப்புடன் _ அதாவது பிள்ளை, பேரன், கொள்ளுப்பேரன் என்ற வரிசையில் அவள் குலத்தை சிரஞ்ஜீவி ஆக்குகிறேன்' என்ற மந்திரம் ரிக் வேதத்தில் இருப்பதைக் கவனிக்க வேண்டும் ( யேனாதிதே: ஸீமானம் நயதி ப்ரஜாபதிர் மஹதே ஸெளபகாய ).

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் உறுப்புகள் படிப்படியாக வளர்ச்சி அடைந்து அதன் இதயம், இன்ப துன்பங்களை அறியும் தன்மை யைப் பெற்றுவிடும். அவள் இதயத்துடன் குழந்தையின் இதயத்துக்குத் தொடர்பு இருக்கும். அவள் இரு இதயங்களைப் பெற்றவள் த்வி ஹ்ருதயாம்ச தௌர்ஹ்ரிதினீமாசக்ஷதே என்று ஆயுர்வேதம் கூறும். அவள் இதயத்தின் மூலம் குழந்தையின் இதயத்தைச் சுத்தப்படுத்த வேண் டும். அவளது எண்ணங்கள் குழந்தையின் மன தில் வேரூன்றிவிடும். ஆகையால், அவளின் மன நிறைவு, குழந்தையிடம் மன நிறைவை ஏற் படுத்தும் என்ற தகவலை ஆயுர்வேத அறிஞர் சுஸ்ருதரின் நூலில் காணலாம்.

பத்து மாதம் கருவறையில் இருந்து வெளிவரும் குழந்தை, தன் சிந்தனையில் தன்னை முழுமையாக்கிக் கொள்ளும் திறனை இந்த சீமந்த சம்ஸ்காரம் உண் டாக்கிவிடும். ஒருவனது உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவன் மனம் முக்கியக் காரணம். மன ஏவ மனுஷ் யானாம் காரணம் பந்த மோக்ஷயோ:

நமது தொடர்புகள், புலன்களால் ஈர்க்கப்படும் விஷயங்கள் அத்தனையையும் மனம் வாங்கிக் கொண்டு இன்ப துன்பங்களாக மாற்றி நம்மை உணர வைக்கிறது. சுத்தமான மனம், உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொண்டு நம்மை மகிழ்விக்கும். கலக்கமுற்ற மனம், தவறாகப் புரிந்து கொண்டு தப்பாகச் செயல்பட வைத்துத் துன்பத்தை அனுபவிக்கச் செய்துவிடும். குழந்தையின் மனதை ஆரம்பத்திலேயே அதாவது முளையிலேயே செம்மையாக்கும் தகுதி சீமந்தத்துக்கு உண்டு. தற்காலச் சூழலில் பல ஆசாபாசங்களில் சிக்கி அல்லல்பட்டு வெளிவரத் தெரியாமல் தவிக்கும் மக்கள் ஏராளம். அவர்கள் மனதின் பலவீனம் அவர்களை அறியாமையில் ஆழ்த்துகிறது. அந்த பலவீனத்தை அகற்றி வீரனாக மாற்ற வேண்டும் என்று சீமந்தம் வலியுறுத்துகிறது.

கர்ம வினையின் தாக்கம், குழந்தையின் மனதில் பிரதிபலிக்கும். 'கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு முன்ஜென்ம வாசனை தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு' என்பதை ஆதிசங்கரர் சுட்டிக் காட்டுகிறார். 'கர்ம வினையின் பயனாக ஏற்பட்டது என் கர்ப்ப வாசம். மலம், மூத்திரம், புழு ஆகியவை கலந்த சூழலில் நான் வேதனை அடைகிறேன். அது தவிர, தாயின் பசியின் வெப்பம் என்னை சுட்டெரிக்கிறது. மனதுக்குத் துன்பத்தை விளைவிக்கும் கர்ப்ப வாசத்தை எனக்கு மீண்டும் கொடுக்காதே ஆதௌ கர்ம ப்ரஸங்காத் கலயதிகலுஷம் மாத்ரு குªக்ஷளஸ்தி தம்மாம்' என்று அவர் கடவுளை வேண்டுகிறார்.

நமது சித்தத்துக்கும் சிந்தனைக்கும் எட்டாத விஷயங்களை வேதத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கையோடு வேதக் கருத்துகளை வரவேற்பது தவிர, வேறு வழி இல்லை. நம் முன்னோர் நம்மையும் நம் சிந்தனைகளையும் அளந்து பார்த்தவர்கள். நம்மை வாழ்வாங்கு வாழ வைக்க சம்ஸ்காரத்தை வகுத்துத் தந்தது அவர்களது கருணை உள்ளம். தந்தையின் உபதேசம் பிரகலாதனை மாற்றவில்லை. விபீஷணனின் நல்லுரைகள் ராவணனை மாற்ற வில்லை. தூய்மையான உள்ளம் கலக்கமுறவில்லை. கலங்கின மனம் தெளியவில்லை. பிரக லாதன் மனதில் ஆண்டவன் குடிகொண்டிருந்தான். ராவணனின் மனதில் அகங்காரம் குடியிருந்தது. இந்த வித்தியாசம் இடையில் வருவதல்ல. கர்ப்பத்தில் இருக் கும்போதே நீறு பூத்த நெருப்பு போல் உறங்கிக் கிடந்தவை. சந்தர்ப்பம் வரும்போது விழித்து எழுந்து கொள்கின்றன.

குழந்தையின் மன இயல்பு தாய், தந்தையிடம் இருந்து வந்தது என்று கூற இயலாது. அவனது கர்ம வினை இயல்பாக மாறுகிறது. வாழ்க்கைக்கு இடையூ றான கர்ம வினையை அகற்ற வேண்டும். அதற்கு ஒத்துழைப்பது சீமந்தம். ஆயுள், கர்மம் (செயல்பாடு), பொருளாதாரம், அறிவு, மரணம் இவை ஐந்தும் பிறக்கும் போதே நிச்சயிக்கப்படுகிறது. ஆயு: கர்ம வித்தம் ச என்று ஜோதிடம் சுட்டிக் காட்டும். அதில் கர்ம வினையும் சேர்ந்து இருப்பதால் முன்ஜென்ம வினையை அகற்ற முந்திக் கொள்ள வேண்டும்.