Saturday, June 20, 2015

217 இந்திய ஸ்நாக்ஸ்களுக்கு அமெரிக்கா தடை!

217 இந்திய ஸ்நாக்ஸ்களுக்கு அமெரிக்கா தடை!
 
மேகி நூடுல்ஸ்-ல் அதிகப்படியான நச்சுத்தன்மை கலந்திருப்பது இத்தனை வருடம் கழித்தே நமக்குத் தெரிய வந்திருக்கிறது.

ஆனால், கடந்த ஐந்து மாதங்களில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான 217 நிறுவனங்களின் பல்வேறு நொறுக்குத் தீனிகளைத் தடை செய்திருக்கிறது, அமெரிக்காவின் 'ஃபுட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்.டி.ஏ)'.

நொறுக்குத் தீனி மற்றும் இனிப்புக்குப் பெயர் போன 'ஹால்டிராம்ஸ்' தயாரிப்புப் பொருட்களை அமெரிக்காவில் உள்ள இந்தியக் கடைகளில் மட்டுமல்ல, அமெரிக்காவில் விற்கவே தடை விதித்திருக்கிறது எஃப்.டி.ஏ. தவிர, அது தடை விதித்த நிறுவனங்களின் பட்டியலில், சென்னையின் மிகப் பிரபலமான ஒரு ஸ்வீட் ஸ்டாலும் அடக்கம்.

தடைக்கு எஃப்.டி.ஏ சொன்ன காரணம் இதுதான்: இந்த ஸ்நாக்ஸ்களில் அதிகப்படியான பூச்சுக்கொல்லி மருந்துகள் கலக்கப்பட்டிருக்கின்றன!

''உணவைப் பாதுகாக்க நாங்கள் பயன்படுத்தும் பிரிசர்வேட்டிவ்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. இதைத்தான் 'அதிகப்படியான பூச்சுக்கொல்லி' என்கிறது எஃப்.டி.ஏ!'' என்று விளக்கம் அளித்திருக்கிறது 'ஹால்டிராம்ஸ்' நிறுவனம்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் 217 ஸ்நாக்ஸ் அயிட்டங்களில், பாதி இந்தியாவிலேயே தயாராகுபவை. அமெரிக்காவில் உள்ள இந்திய ஸ்டோர்களில் விற்கத் தடை செய்யப்பட்டுள்ள பொருட்களில், பிரிட்டானியா பிஸ்கெட்டும் ஒன்று என்பது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.

2015ம் ஆண்டில் எஃப்.டி.ஏ தடை செய்துள்ள உணவு பொருள் நிறுவனங்களின் பட்டியல் அறிய, இந்த லிங்கை க்ளிக் செய்து பார்க்கவும்:

http://www.accessdata.fda.gov/scripts/importrefusals/ir_byProduct.cfm?DYear=2015&DMonth=5