Saturday, September 24, 2016

அந்த வெண்ணெயை நான் சாப்பிட்டா என்ன கிருஷ்ணர் சாப்பிட்டா என்ன

 
'அந்த வெண்ணெயை நான் சாப்பிட்டா என்ன கிருஷ்ணர் சாப்பிட்டா என்ன'ன்னு கேட்டார் பெரியவா.

('மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்'னு பெரியவா நமக்கு போதிக்கறா மாதிரி இல்லையா?)

.
'குருமகிமை' என்ற தம் சொற்பொழிவில் பி.சுவாமிநாதன் (தீபம் ஆன்மீக இதழ்

காஞ்சி மடத்துல மகா பெரியவா இருந்த சமயத்துல ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் மகா பெரியவாளுக்கு வாய்ல புண்ணு வந்து அவரால பேசவே முடியாத நிலை. காஞ்சிபுரத்துலேயே இருந்த ஒரு மாமி இப்படி பெரியவா வாய்ல புண்ணோட கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கறத பார்த்துட்டு, வீட்டுக்குப் போயி பாலை காய்ச்சி அதுலேர்ந்து வெண்ணெயை எடுத்து வந்து பெரியவாகிட்ட கொடுத்தா. 

பெரியவா, 'என்ன விசேஷம் இன்னிக்கு கிருஷ்ண ஜயந்தி இல்லையே… எதுக்கு வெண்ணெய்?'னு கேட்டார். 'நீங்க வாய் புண்ணோட கஷ்டப்பட்டுண்டு இருக்கீங்க. இந்த வெண்ணையை நீங்க வாய்ல வெச்சுண்டா போதும், உங்க வாய்ப் புண் சரியாயிடும்னு வெண்ணெய் பண்ணி கொண்டு வந்தேன்'னு சொல்லி மாமி தொன்னையோட இருந்த வெண்ணெய பெரியவா முன்னாடி வெச்சா.

அப்போ திடீர்னு ஒரு குழந்தை ஒன்றரை வயது இருக்கும். ஓடி வந்து பெரியவாளை பார்த்து சிரிச்சது. பெரியவா 'என்ன வேணும்'னு அந்தக் குழந்தைகிட்ட கேட்டதும், 'அந்த வெண்ணெய் வேணும்'னு சொல்ல, பெரியவா அப்படியே தொன்னையோட குழந்தைக்கிட்ட கொடுத்துட்டார்.

வெண்ணெய் கொண்டு வந்த மாமிக்கு கோபம், வருத்தம் எல்லாம் வருது. அங்க இருந்த சிப்பந்திகளுக்கும் கோபம், குழந்தை கேட்டா கொஞ்சமா கொடுத்திருக்கலாமேன்னு. அந்த குழந்தை பெரியவா கொடுத்த வெண்ணையை சாப்பிட்டு விட்டு ஓடியே போய்விட்டது. எங்கே போச்சுன்னு யாருக்கும் தெரியல.

அடுத்த நாள் அதே மாமி சாயந்திரமா மடத்துக்கு வந்தா. பெரியவா மாமியை பார்த்து, 'என் வாய் புண் சரியாயிடுத்து, இப்போ எனக்கு நன்னா பேச முடியறதுன்னு' சிரிச்சிண்டே சொன்னார். 'அந்த வெண்ணெயை நான் சாப்பிட்டா என்ன கிருஷ்ணர் சாப்பிட்டா என்ன'ன்னு கேட்டார் பெரியவா. 

'மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்'னு பெரியவா நமக்கு போதிக்கறா மாதிரி இல்லையா?