Saturday, September 17, 2016

நீங்கள் உடுத்தும் சேலை, ஓர் உடையே இல்லை!!!


நீங்கள் உடுத்தும் சேலை, ஓர் உடையே இல்லை!!!

மேலே உள்ள தலைப்பை பார்த்து பயப்பட வேண்டாம். இப்படி கூறியது ஓர் ஜெர்மானியர்...
"This is not a dress... This is a song". "நீங்கள் உடுத்துவது ஒரு உடையல்ல... அது ஒரு கவிதை"...

ஆம் காஞ்சிபுரத்தை சுற்றி பார்க்க வந்த ஒரு ஜேர்மனி நாட்டு அறிஞர் ஆரல்பக்பீயும் அவரது மனைவியும் பார்த்தது - ஒரு தமிழ் பெண் குடத்தை ஏந்தி நடந்து போனாள், குடத்தை படியில் வைத்துவிட்டு குளத்தில் இறங்கினாள். அவள் உடுத்தியிருந்த சேலையை பார்த்த அந்த அறிஞர் "இந்த பெண் அணிந்துள்ள தமிழ்நாட்டு கவுன் எவ்வளவு அழகாக இருக்கிறது" என்று தன் மனைவியிடம் கேட்டார். மனைவி சொன்னார் "இந்த தமிழ்நாட்டு தையல்காரன் கெட்டிக்காரன் மடிப்பு மடிப்பாக எத்தனை தட்டுகள் வைத்து இந்த கவுனை தைத்து இருக்கிறான்".

சிறுது நேரம் கழித்து படிகாட்டில் அமர்ந்து நாகரிகமாக தன் சேலையை தண்ணீரின் மேல்பரப்பில் ஓடவிட்டாள். பிறகு தான் அந்த தம்பதிகள் அது கவுன் அல்ல அது சேலை என்று கண்டு எவ்வளவு கலை நுணுக்கத்தோடு மடித்து உடுத்தி இருக்கிறாள் என்று திகைத்துப்போய் " this is not a dress,this is a song" என்றனர்.

இந்த அறிஞர் போவதற்கு முன் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார், "மேலைநாட்டவராகிய எங்களை பின்பற்றுவதாக நினைத்து எதோ புதிய பழக்கங்களை நீங்கள் பின்பற்ற தொடங்கி இருக்கிறீர்கள். அதனால் உங்கள் அடையாளங்களை, கலை செல்வங்களை இழப்பீர்கள். உங்களுடைய கலைகள் எல்லாம் ஒப்பற்ற கலைகள்... உங்கள் பெண்கள் புடவை அணிந்து கொள்கிறது அரிய கலையாகும். எதனை இழந்தாலும் இந்த உடை செல்வத்தை இழந்துவிடாதீர்கள்!! உங்கள் சேலை உடை ஒரு கவிதை!!!" என்றார்.