Wednesday, August 31, 2016

மனைவி தினம் இன்று- ஆகஸ்ட் 30 :

Wife's day - 30th August :

மனைவி தினம் இன்று-
ஆகஸ்ட் 30 :

பாதியில் வந்து, 
என்னில்
பாதியும் ஆனவளே;

இல்லத்தில் 
புகுந்து, 
உள்ளத்திலும்
வாழ்பவளே!

வாழ்வில், 
பரிசாய் வந்து, 
இரு மழலைகளை
பரிசாய் தந்தவளே!

கணவனின் 
காய்ச்சலுக்கு, 
மனைவியின்
அன்பு கவனிப்பே
அருமருந்து
என்றறியாத
ஆஸ்பத்திரிக்கைகள் ஆயிரம்! 

உலகத்தில்,
நட்பு,
குடும்பம்,
பொழுதுபோக்கு
இவற்றோடு
தன் மனைவியையும்
மனதார
நேசிப்பவன்
கணவன்;
ஆனால்,
கணவனை மட்டுமே,
உலகமாய் 
நினைத்து சுவாசிப்பவள்,
மனைவி! 

எல்லா 
நேரத்தையும்
குடும்பத்திற்காகவே
செலவிடும்
உனக்காக,
ஆன்ட்ராய்டு போனில் 
நேரத்தை அடகு
வைத்துக்கொண்டிருக்கும் இச்சூழலில்
தினம் 
ஒருமணிநேரமாவது 
செலவிட வேண்டியது 
கணவனின் கடமையன்றோ?!

உன் பணிக்கு 
நீ வைத்துக்கொண்ட
பெயர்
கடமை!

நான் வைக்கும் நற்பெயரோ சேவை!!

நட்பிலும்
சிறந்தவளே;
எனக்காக
பிறந்தவளே;
இந்நாளில்
மட்டுமல்ல,
எந்நாளும்
வாழ்த்துகிறேன்
வாழ்க நலமுடன்!

No comments: