Friday, August 19, 2016

மூன்று குணங்களையும் கடந்த நிலை

சத்வம்,ரஜஸ்,தமஸ் ஆகிய மூன்றும் இயற்கையில் தோன்றியது. ரஜஸ் என்பது விலக்கும் சக்தி, தமஸ் என்பது கவரும் சக்தி,சத்வம் என்பது இரண்டையும் சமநிலைபடுத்தும் சக்தி.

இயற்கையில் அனைத்து இடங்களிலும் இந்த மூன்று சக்தியும் தொடர்ந்து இயங்கிவருகின்றன.

சூரியன் தன்னை சுற்றிவரும் கிரகங்களை தன்னை நோக்கி இழுக்கிறது.மற்ற கிரகங்கள் சூரியனை விட்டு விலகி செல்ல முயற்சிக்கின்றன.ஆனால் இரண்டையும் சமநிலையில் இயங்க ஒரு சக்தி செயல்படுகிறது.

ஒரு அணுவை எடுத்துக்கொண்டால் எலக்ட்ரான்கள்,
புரோட்டான்கள், நியூட்ரான்கள் என்ற மூன்று துகழ்களிலும் முன்று சக்திகள் இங்கிவருகின்றன.

மனித குணத்தை எடுத்துக்கொண்டால் விருப்பு,வெறுப்பு,விருப்புவெறுப்பற்ற நிலை என்ற மூன்று குணங்கள் இயங்கிவருகின்றன.

வெளிப்பார்வைக்கு ஒருவன் எவ்வித வேலையும் செய்யாதவனாக இருந்தாலும்,அவனது உடலில் எப்போதும் செயல் நடந்துகொண்டே இருக்கிறது.இந்த செயல்களுக்கு அவனே பொறுப்பு.

தியானத்தின் மூலம் ஏற்படும் சமாதிநிலையில் மட்டுமே உடலின் இயக்கங்கள் நிற்கின்றன.அப்போது மூன்று குணங்களையும் கடந்த நிலையை ஒருவன் அடைகிறான்.