Thursday, August 4, 2016

" கதை நேரம் - " தூரத்து உறவு

கதை நேரம் - தூரத்து உறவு
✍🏿வைரமுத்து

✈```எரிமேடையில் கிடத்தப்பட்டிருந்த அப்பாவின் உடலைக் கடைசியாகப் பார்க்க அமெரிக்காவிலிருந்து பறந்து வந்தான் சிவராமன்.....```

👤 எனக்கு உயிர் தந்த உடல், நேற்று வரை அப்பா ஓர் உயிர்; இன்று உடல்; நாளை வெறும் சொல்....

😩 அப்பாவின் மரணத்திற்கு அழமுடியாத அழத்தெறியாத ஒரு தலைமுறை தயராகிவிட்டது.

📲 மயானத்தில் மனைவியின் குரல் கைபேசியின் மூலம் ஒலித்தது. சடங்குகளில் தள்ளி நல்லுங்கள் 'இன்ஃபெக்க்ஷன்' வந்து தொலைக்கப் போகுது.

♨ வெந்து தணிந்தது கூடு

👲🏽 மொட்டையடிப் பதை மறுத்து நீ........ண்ட யோசனைக்குப் பிறகு மீசையை மட்டும் தியாகம் செய்தான்

😭 உடைந்த குரலில் கதறி அழுதாள் அம்மா........

😭 அவரை பொழைக்க வைக்க வேண்டாம்; சாகும்போது பக்கத்துல கூட இல்லையே......

🗣 என்னம்மா பண்றது...? தூரம்!

😭 "ஆமாப்பா....... எல்லாமே தூரமாப்போச்சு"

வாரம் கடந்தது........

🏛 ஒரு இடம் பாத்திருக்கிறேன்மா? பெத்த தாய் மாதிரி உன்னக் கவனிச்சுக்குவாங்க "பழத்தோட்டம்னு" ஒரு முதியோர் இல்லம்.

🏤 அப்ப வீடு........?

🏤 நீயே இல்லாதபோது இந்த வீடு எதுக்கு? வித்திடலாம்மா

😠 மகனே சிவராமா? எனக்கு ஒரே ஒரு ஆசை என்றாள் அம்மா.

🏤 அப்பா கிடத்தப்பட்டிருந்த தரையில் விழுந்தாள். உருண்டாள். கண்ணீரால் நனைந்தாள்;

🏛 "கவலையே படாதீங்க இனி உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் இவங்க அம்மாதான்" என்றான் பழத்தோட்டத்தின் காப்பாளர்.

✈ நியூயார்க் சென்றான் சிவராமன்; மனைவி வரவேற்க காத்திருந்தாள்

🛬 அமெரிக்காவில் இறங்கியதும் அம்மா இறந்த செய்தியை மனைவி கூறினாள்.

🖥 மறுநாள் அதே நேரம் அம்மாவின் உடல் மின்மயானத்தில் கொண்டு செல்வதை கணினித் திரையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

♨ 13412 கி.மீ தூரத்தில் "ஸகைப்பில்" எரிந்து கொண்டிருந்தாள் அம்மா.

முற்றும்........