Monday, August 1, 2016

"குறையொன்றுமில்லை" என்னும் நூலிலிருந்து.

முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் 
"குறையொன்றுமில்லை" என்னும் நூலிலிருந்து.


காருண்யம் 
பகவானிடதிலே நாம் எல்லாவற்றையும் கொடுத்தாலும், ஒரு எழும்மிச்சம்பழத்தைக் கொடுத்துவிட்டு ராஜ பதவியை கேட்கிற மாதிரிதான்.
நாம் எது பண்ணினாலும் அவனுடைய காருண்யத்துக்கு முன்பு அது விலை செல்லாது.


வேதம் 
வேத கோஷம் நம்மை ஈர்த்து உட்கார வைக்கிறது. பாராயணம் முடியும் வரை உட்கார்ந்து கேட்க்கும் எண்ணம் யாருக்கு வருகிறதோ, அவரை பகவான் நிச்சியம் பார்ப்பான்.

தாயார் 
பொறுமையே உருவானவள் பூமி பிராட்டி. நாம் எவ்வளவுதான் தப்பு செய்தாலும் அதை பகவானிடத்தில் சொல்லமாட்டாள். நாம் ஒரு துளி நல்லது செய்தல் கூடஅதை பெரிதுபடுத்தி அவனிடத்திலே சொல்லுவாள். அவ்வளவு காருண்யம் நம்மிடத்திலே அவளுக்கு.

அதிதி தேவோ பவ
கிரஹத்துக்கு வரக்கூடிய அதிதிகளிடத்திலே எம்பெருமான் இருக்கிறான். அதனால் தான் எம்பெருமானை வேதம் சொல்கிறபோது 'மாத்ரு தேவோ பவ ! பித்ரு தேவோ பவ ! ஆச்சார்ய தேவோ பவ ! அதிதி தேவோ பவ ! என்கிறது. அதிதியை தெய்வமாக நினைக்க வேண்டும். ஏனென்றால் பகவானே நமக்கு இவன் அன்னமிடுகிறானா என்று அதிதியாய் பார்க்க வருவான். ஆகையினாலே, அதிதிகளாய் வரக்கூடியவர்களை உடனே வரவேற்று உபசரிக்க வேண்டும்.


அன்னமயகோசம் 
அன்னத்தைக் குறைதால்தான் அன்னமய கோசத்தில் சுத்தி ஏற்படும். வேதமானது அன்ன சூக்ததிலேயே சொல்கிறது. "எவன் என்னை நிறைய சாபிடுகிறானோ அவனை நன் சாப்பிடுகிறேன்" என்று அன்னமே சொல்கிறது.

"யோ புங்தே அஹமேவ புங்தே"

ஆகையால் அன்னத்தை நிறைய சாபிட்டால் தான் பலம் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. அன்னத்தை குறைத்து அனுபவித்தால், அன்னமய கோசத்தில் சுத்தி ஏற்படுகிறது. வியாதி எல்லாம் நீங்குகிறது.