Monday, August 31, 2015

கூந்தல் பராமரிப்பு

குளித்த பின் தான் எண்ணெய் தடவ வேண்டும்! 


தலைமுடி தொடர்பான அடிப்படை சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும், 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, சென்னையைச் சேர்ந்த டிரைக்காலஜிஸ்ட் மருத்துவர் எஸ்.முருகசுந்தரம்: 


தினமும் எண்ணெய் தடவுவதால் முடி வளரும் என்பது, ஆண்டாண்டு காலமாக வளர்த்து விடப்பட்டிருக்கும் தவறான நம்பிக்கை. நம் மண்டை ஓட்டில் இயல்பிலேயே, எண்ணெய் சுரப்பி இருக்கிறது என்பதால், எண்ணெய் வைக்கத் தேவையில்லை.


எண்ணெய், இயற்கையான கண்டிஷனர் என்பதால், முடிக்கு மட்டும் பயன்படுத்தலாம். 


குளிப்பதற்கு முன் எண்ணெய் தடவி விட்டுக் குளிப்பது தவறு. குளித்த பின் தான் எண்ணெய் தடவ வேண்டும்.


எல்லா ஷாம்புகளுமே, சோடியம் லாரைல் சல்பேட் என்ற தவிர்க்க முடியாத கெமிக்கல் தன்மை கொண்டவைகளாக உள்ளன. எனவே, வாசனையும், வீரியமும் குறைவாக இருக்கும், 'மைல்டு' ஷாம்புவாகப் பார்த்துப் பயன்படுத்தலாம். 


அதேபோல், ஹேர் டிரையரை கையில் வைத்துப் பயன்படுத்தாமல், அதை சுவரில் மாட்டி விட்டு, 2 அடி இடைவெளி விட்டு நின்று பயன்படுத்தலாம். 


ஈரமான கேசத்தில் டிரையர் பயன்படுத்தினால், ஹேர் மாலிக்யூல்ஸ் பாதிப்படைந்து முடி உடைந்து விட வாய்ப்புகள் அதிகம். 


அத்துடன், டிரையரில், 'ஹாட் ஏர்' பயன்படுத்தாமல், நார்மலான, 'ரூம் டெம்பரேச்சர் ஏர்' பயன்படுத்தலாம். இத்தனை சிக்கல்கள் இருப்பதால், என்றாவது அவசியத் தேவைக்கு ஹேர் டிரையர் பயன்படுத்தலாம்; வாடிக்கையாக உபயோகிக்க வேண்டாம். 


முடியைச் சுற்றிப் படர்ந்துள்ள, 'இன்டக்ரல் லிபிட் லேயர்' என்ற எண்ணெய் படலம் பாதிக்கப்படுவதாலும், இதன் எதிர்விளைவாக முடியைப் பாதுகாக்கும், 'கியூட்டிக்கிள்' பாதிக்கப்படுவதாலும், முடியின் நுனிப் பகுதியில் பிளவு ஏற்படுகிறது.


முடி வறட்சியைத் தவிர்க்க, கண்டிஷனர் பயன்படுத்தலாம். விலை மலிவான, சிறந்த இயற்கை கண்டிஷனர் எண்ணெய் தான். இதுதவிர, தலைக்கு குளிக்கும்போது, ஷாம்பு பயன்படுத்திய பின் கண்டிஷனர் பயன்படுத்துவதும், முடியை, 'சாப்ட்' ஆக்கும்.ரசாயன கண்டிஷனர்களை விட, முட்டை வெள்ளைக்கரு, ஊற வைத்து அரைத்த வெந்தய விழுது போன்ற இயற்கை கண்டிஷனர்களைத் தேர்வு செய்யலாம்.


மேலும், வீட்டில் உள்ள அனைவரும் தனித் தனியாக சீப்பு பயன்படுத்துவது தான் நல்லது. பொடுகு, ரேஷஸ் என்ற ஒருவரின் பிரச்னை மற்றவருக்குத் தொற்றாமல் இது தவிர்க்கும்.


முடி அதிகமாக கொட்டுவதற்கு, 'ப்ரீ ஹேர்' மட்டுமே காரணம் கிடையாது. எண்ணெய்ப் பிசுக்கு, சுற்றுப்புற மாசு, பொடுகுத் தொல்லை, வறட்சி என தலைமுடியை லுவிழக்க, பல காரணங்கள் உள்ளன.