Saturday, November 24, 2012

ஏமாற்றங்களை ஏமாற்றுவது எப்படி?‏

*ஏமாற்றங்களை ஏமாற்றுவது எப்படி?‏*

* *

எவ்வளவுதான் 'அலர்ட்' ஆக இருந்தாலும், பல சமயங்களில் எல்லோரும் ஏமாற்றத்துக்கு
உள்ளாவார்கள். நமது முறை வரும்போது பஸ் பாஸ் கவுன்ட்டரில் 'உணவு இடைவேளை' என்று
போர்டு விழுவது,

அத்தனை பேர் தப்பும் தவறுமாகச் செய்து இருக்கும்போது நமது ரெக்கார்ட் நோட்
குளறுபடிகளை மட்டும் புரொஃபஸர் கண்டுபிடித்துத் திட்டுவது,

மனதுக்குப் பிடித்தவளிடம் காதலைச் சொன்னதும், 'என்னை உனக்குப் பிடிக்காதுன்னு
நினைச்சேன். அதான் போன மாசம் அருண் புரபோஸ் பண்ணப்போ, 'ஓ.கே' சொல்லிட்டேன்!'
என்று அவள் கண்ணைக் கசக்குவது.

சிறிதும் பெரிதுமாகத் தினமும் நம்மை ஏமாற்றங்கள் கடந்துகொண்டுதான் இருக்கின்றன.
அப்போதெல்லாம் நீங்கள் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்?

1. 'எனக்கு மட்டும் ஏன் இப்படி எப்போதும் கெட்டதாகவே நடக்கிறது?' என்று
உள்ளுக்குள் புழுங்குவேன்! - இப்படி நினைத்து சுய பச்சாதாபத்தை
வளர்த்துக்கொள்வதன் மூலம், அந்தப் பிரச்னையைச் சரிசெய்வதற்கான எந்த ஓர்
உருப்படியான செயலிலும் உங்கள் மனம் கவனம் செலுத்தாது!

2. 'அது எனது தப்பு அல்ல!' என்று பழியை அடுத்தவர் மீது சுமத்துவதும் ஒரு விதத்
தப்பிக்கும் மனோநிலைதான். அது உங்கள் தப்பாக இல்லாவிட்டாலும், அடுத்து என்ன
செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நீங்கள்தானே!

3. 'இதில் இருந்து நான் என்ன பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்?' என்று உங்களுக்குள்
நீங்கள் கேட்டுக்கொண்டால்... சபாஷ்! இதுதான்

மேற்கொண்டு அதுபோன்ற ஒரு தவறு நிகழாமல் தடுக்கும் மனோநிலை.

நமது ஒவ்வொரு ஏமாற்றமும், கல் மேல் விழும் உளி செதுக்கல் என்று
நினைத்துக்கொண்டால், *நம்மை நாமே செதுக்கி எடுக்கலாம்.* தண்டிக்கப்படுவதற்காக,
நாம் இந்த உலகத்தில் அவதரிக்கவில்லை *என்பதை எப்போதும் நினைவில்கொள்ளுங்கள்!***