Friday, October 25, 2013

சித்தர்கள் நீரிழிவு நோயை விரட்ட குறிப்புகளை கொடுத்துள்ளனர்.


 

 

நம் முன்னோர்கள்,சித்தர்கள் நீரிழிவு நோயை விரட்ட பல்வேறு குறிப்புகளை நமக்கு கொடுத்து சென்றுள்ளனர்.அதன்படி நடந்தால் சக்கரை நொயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்..விரட்டியும் அடிக்கலாம்...

 

ஒரு சித்தர் பாடல் கீழ்க்கண்டவாறு சொல்கிறது;

 

''நல்ல மணிச்சம்பா

நாடுகின்ற நீரிழிவைக்

கொல்லும் மிகுந்த சுகங்

கொண்டளிக்கும் -மெல்லப்

பசியளிக்கும் மூத்தோரைப்

பாலர்களை நாளும்

முசியாமலே நன்கு

வளர்க்கு முன்'' - எனக் குறிப்பிடுகிறது.

 

மணிச் சம்பா அரிசியானது நீரிழிவைக் கொல்லும்;அதி மூத்திர ரோகத்தை நீக்கும்.தேகத்திற்கு நல்ல சுகத்தை தரும்.கிரமமான பசியை உண்டாக்கும்.இனி அரிசி சாதத்தை விடுங்க.சம்பா அரிசியை பொங்கி சாப்பிடுங்க..! நிறைய நடங்க...நடைப்பயிற்சி அவசியம்...தியானம்,யோகா முயற்சி செய்யுங்க..சும்மா இருந்ததால்தான் சக்கரை நோய் வந்தது...

 

இனியும் சும்மா இருந்தால் மிகுந்த வேதனைதான்..

இனிச் சம்பா இருந்தால் மிகுந்த மகிழ்ச்சி. 

 

கோதையர் கலவி, போதை,

கொழுத்தமீ னிறைச்சி, போதைப்

பாதுவாய் நெய்யும் பாலும்

பரிவுட ணுன்பீ ராகில்

சோதபாண் டுருவ மிக்க

சுக்கில பிரமே கந்தான்

ஒதுநீ ரிழிவு சேர

உண்டென வறிந்து கொள்ளே' (அகத்தியரால் 1200)

 

அதாவது பலருடன்/அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல், மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவுவகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி. அதற்கேற்ப உடல் உறவு மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போதும் மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது.

 

நமது உடலில் ஏழு உடல் தாதுக்கள் உண்டு. அவை சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை மற்றும் சுக்கிலம்/ சுரோணிதம் ஆகும். அதாவது நாம் உண்ணும் உணவானது செரித்தபின் "சாரம்"' எனப்படும். இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு "செந்நீர்"' ஆகிறது. பின் இது "ஊன்" எனப்படும் மாமிசமாக மாறும். மேலும் உறிஞ்சப்பட்ட சத்துகள் "கொழுப்பாக"' உடலில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் எனப்படும் ஆண் மற்றும் பெண்ணின் இனப் பெருக்கத்திற்கான சக்தியாக மாறும்.

 

இந்த மாறுதல்கள் நம் அனைவருக்கும் முன்னோக்கி நடைபெறுகிறது. ஆனால் மதுமேகம் உடையவர்களுக்கு இது ஒன்றன் பின் ஒன்றாகக் குறைவுபட்டு உடல் எடை குறைகிறது. மதுமேகத்தினால் உடலில் 10 விதமான அவஸ்த்தைகள் தோன்றுகின்றன.

 

 

 

 

நீரிழிவு நோய்க்கு மருந்து: 

 

 

1.வெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சக்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும். 

2.
தக்காளி: நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சக்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் 

3.
பாதாம்: தினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சக்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும். 

4.
தானிய வகைகள்: தானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங் கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட தோன்றினால், அதனு டன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள் ளவும். 

5.
பால்: பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால் இது ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது. 

6.
காய்கறிகள்: அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைக்க உதவும். 

7.
பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் ரத்த குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது. 

8.
ஒமேகா3: ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பினி போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது. கனோலா எண்ணெய், சணல் எண்ணெய், கொழுப்பு மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் இயற்கையாகவே இந்த கொழுப்புகள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கொழுப்பு அளவு குறைவாகவே இருக்கும். 

9.
பழங்கள்: அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சக்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் இதை அதிகமாக உண்ணக் கூடாது. 

10.
உணவு முறை: அதிகமாக உண்ணுவதால் ஒருவரின் உடலில் உள்ள ரத்த சக்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சிறிய அளவு உணவை போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சக்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்துள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். 

11.
முக்கியமான உணவுகள்: சக்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட், அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம், வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவை உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள பண்டங்களை உண்ணக் கூடாது. போதிய இடைவேளையில் (5 வேளை) சிறிய அளவில் உணவை உட்கொள்ள வேண்டும். 

12.
இயற்கை இனிப்பு: சக்கரை நோயாளிகள், கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் சக்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனை கலந்து கொள்ளலாம். 

13.
தண்ணீர் மற்றும் மதுபானம்: நிறைய தண்ணீர், காய்கறி மற்றும் பழச்சாறுகளை பருகவும். மேலும் மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். 

14.
அசைவ உணவு: அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆனால் ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும். 

15.
உணவு பழக்கம்: இந்தியர்களுக்கான சக்கரை நோய் கட்டுப்பாடு உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக நிற்கும். 

 

16. வெந்தயம் – 50 கி, கருஞ்சீரகம் – 25 கி, ஓமம் – 25 கி, சீரகம் – 25 கி, இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும். (வறுத்தபின் மிக்‌சியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்). தினமும் காலை சிறிய ஸ்பூன் -ல் 1 ஸ்பூன் அளவு எடுத்து வாயில் போடவும். கசப்பாக இருக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட்டால்
மேலும் நல்லது. ( தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம்).

 

17. வறக் கொத்தமல்லி-அரை கிலோ, வெந்தயம் -கால் கிலோ, தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேளைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும். இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

 

18.  நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.அதி காலையில் வெறும் வயிற்றில், மூன்று முதல் நான்கு காயைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வரநன்குகுணம் கிடைக்கும். இதன் விதைகளைப் பொடி செய்து சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம்.பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும். பாகற்காய் நமது நாவுக்குத்தான்கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது! பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாகஇருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாகஇருப்பதைக் கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள். பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்துச் சாப்பிடலாம். புளியுடன்சேர்த்து, பாகற்காயைச் சமைப்பது சிறந்தது.

 

 

 

அனைத்து வகையான பாகற்காயிலும் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் கசப்புத் தன்மையுடைய வேதிச்சத்துக்கள் ஏராளமாக காணப்படுகின்றன.


பழுக்காத காய்களிலுள்ள கசப்பான மொமார்டிக்கோசைடுகள், அமினோ அமிலங்கள், ஹைட்ராக்சிக்டிரிப்டமைன்கள், கரான்டின், டையோஸ்ஜெனின், லேனோஸ்டீரால், குக்கூர்பிட்டேசின் போன்ற கசப்பான சத்துக்கள் சர்க்கரை அளவை குறைக்கின்றன. இவை விலங்குகளிலிருந்து எடுக்கப்படும் இன்சுலினிற்கு இணையானவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன

.

இளங்காய் மற்றும் லேசாக பழுத்த பாகற்காய்களை எடுத்து, நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பின் சிறு, சிறு துண்டுகளாக மைய வெட்டி, நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின் அதே நீருடன் மிக்சியில் போட்டு மைய அரைத்து, பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை 60 முதல் 120 மிலி வாரம் ஒரு முறை குடித்து வரலாம்.

சித்த மருந்து உட்கொள்பவர்கள் பாகற்காயை தவிர்க்க வேண்டியுள்ளதால் பாகற்காய்க்குப் பதிலாகப் பிஞ்சு பாகலை உட்கொள்ளலாம். இது பத்தியத்திற்கு ஏற்றதாகும். சர்க்கரை நோயாளிகள் ஏற்கனவே தாங்கள் உட்கொள்ளும் மருந்துகளுடன் பாகற்காய் கசாயம் அல்லது பாகற்காய் சாறை சேர்த்துக் கொள்ளலாம்.


வாரம் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ பாகற்காய் சாறு 10 முதல் 20 மில்லியளவு அதிகாலை வெறும் வயிற்றில் குடித்து வர, இரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிக்கும். அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து வர, கணையம் இன்சுலினை நன்று சுரக்க ஆரம்பிக்கும். நிலப்பாகல் அல்லது மிதிப்பாகலை நாம் உணவுடன் சேர்த்து உட்கொள்ளலாம்

 

19. நாவல் பழத்தில் உள்ளஆன்தோசயனின் மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகச் செயல்பட்டுசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். நாவல் பழ கொட்டையும் நல்லது.

 

20. சக்கரை நோய் உள்ளவர்கள் இரவில் கொய்யா இலையை தண்ணிரில் போட்டு, காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணிரை குடித்து வர விரைவில் சர்க்கரை நோயை கட்டுபடுத்தி விடலாம்..

 

21. சாப்பிடும் முன் கொத்தவரைக்காயை வேக வைத்தோ அல்லது வத்தலாகவோ கூட (வறுத்து) பிசைந்து சாப்பிட்டு விட்டு உங்கள் உணவை தொடருங்கள்.