தப்பிக்க வைத்த பழமொழி!
  என்  பெண்ணிற்கு அதிகாலையில் திருமண முகூர்த்தம். முதல் நாள் இரவே கல்யாண  மண்டபத்தில் போய் தங்குவதாக ஏற்பாடு. அதனால் மண்டபத்திற்கு எடுத்துக்  கொண்டு போக வேண்டிய சாமான்களை ஒவ்வொன்றாய் யோசித்து யோசித்து எல்லா  லிஸ்டும் தயாரித்தோம். பேக்கிங் முடியும்போது இரவு பனிரெண்டு மணி எங்கள்  பாட்டியும் தூங்காமல் எங்களை கவனித்துக் கொண்டிருந்தார். நம்மை மாதிரி  இப்படி பிளான் பண்ணி செய்யமுடியுமா என்று பெருமையுடன் என் முதுகை நானே  தட்டிக் கொண்டேன், பின்பு பாட்டி கிளம்பலாமா என்றேன். மண்டபத்துக்கு கொண்டு  போக வேண்டியது எல்லாம் பேக் ஆயிடுச்சா என்று கேட்டதற்கு நானும் 'ஓ எஸ்'  என்று நாங்கள் கோரஸாகப் பாடினோம். அதற்கு பாட்டி, 'கல்யாண சந்தடிலே தாலி  கட்ட மறந்து போச்சாம்'ங்கற மாதிரி முக்கியமான சாமான் எதையும் மறந்துடக்  கூடாதுங்கறதுக்காகத்தான் கேட்டேன் என்றார். அதைக் கேட்டதும் எனக்கு சுரீர்  என்றிருந்தது. சுவாமி அறையில் வைத்திருந்த திருமாங்கல்யத்தை எடுத்துக்  கொள்ளாதது அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. உடனே எடுத்து வைத்து பேக்  செய்தேன். அப்படியொரு பழமொழியை இல்லையில்லை பொன்மொழியை பாட்டி  பயன்படுத்தாமல் இருந்திருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும் என்று கற்பனை  செய்யக்கூடப் பயந்தேன்.