Sunday, January 8, 2017

அலுவலகம் செல்வோருக்கான 5 பயிற்சிகள்!


லுவலகத்தில், ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் இருக்கையிலேயே அமர்ந்து வேலை செய்கின்றோம். சிலர் மதிய உணவுக்காககூட இருக்கையை விட்டு எழுவது இல்லை. இதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பல. ஆரோக்கியம் காக்கும் ஐந்து எளிய வழிகள் இங்கே...

20-40 இன்ச் இடைவெளி

கம்ப்யூட்டர் திரையில் இருந்து 20-40 இன்ச் தொலைவில் அமர்வது நல்லது. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கம்ப்யூட்டர் திரையில் இருந்து பார்வையை எடுத்து, 20 விநாடிகள் கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும்.

5-10 விநாடிகள்

கைகளை  தலைக்கு மேல் கோத்து, நன்கு உயர்த்தவும். இதனால் கைகள், தோள்பட்டை வலுவாகும்.

30 விநாடிகள்

எழுந்து நின்று பின்புற இடுப்பில் கையைவைத்து, உடலை முன்னை வளைத்து ஸ்ட்ரெச் செய்யவும். இதனால் மேற்புற உடல் வலுவாகும்.

5-10 விநாடிகள்

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தலையை இடது, வலது புறமாகவும், மேலும், கீழுமாகவும் ஸ்ட்ரெச் செய்ய வேண்டும். இதனால் கழுத்து எலும்புகள் காக்கப்படும்.

40-60 விநாடிகள்

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, சூரிய வெளிச்சத்தையோ, மரத்தையோ பார்க்கலாம்.