சிறுநீரகம், பித்தப்பையில் கற்கள் கரைய,
சாப்பிட வேண்டிய காய், பழங்களை கூறும், யோக கலைமாமணி பெ.கிருஷ்ணன் பாலாஜி
முளைக்கீரை, சாட்டரணை, யானை நெருஞ்சி, சிறு நெருஞ்சி, கரிசலாங்கண்ணி கீரைகளும், வாழைத்தண்டும் சாப்பிட்டால், சிறுநீரகம், பித்தப்பையில் கற்களை கரைக்கும்.
கீரைகளை வாரம் இரு முறை, தாராளமாக சாப்பிடலாம். தினமும் வாழைத்தண்டு சாறு எடுத்து, பலர் சாப்பிடுகின்றனர்; அது தவறு. உடலில் உள்ள உயிர்சக்தியை உறிஞ்சிவிடும் என்பதால், 15 நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடலாம்.
பூசணிக்காய், நுாக்கல், வெள்ளை முள்ளங்கி, கோவைக்காய், பழங்களில் ஆப்பிள், சாத்துக்குடி, அன்னாசிப்பழம், மாதுளம்பழம், ஆரஞ்சு, பேரிக்காய், கொய்யா சாப்பிடலாம். கூடவே கரும்புச்சாறு குடிக்க மறக்க வேண்டாம்.
கரிசலாங்கண்ணி கீரையை பச்சையாகவோ, சமையல் செய்தோ, நாள்தோறும் உட்கொண்டால், பித்தப்பை, சிறுநீரக கற்கள் கரைந்து மறைந்தே போய் விடும். இந்த கீரையில் உள்ள பழுப்பு இலைகளை நீக்கி, வாயில் போட்டு மென்று, சாற்றை விழுங்கி, சக்கையைப் பல் தேய்க்கலாம்.
தவிர, வாய் முழுவதும் நாக்கு, உள்நாக்கு உட்பட மேலும் கீழும் விரல்களால் தேய்த்தால், மூக்கு, தொண்டையிலுள்ள கபம் அந்நேரமே வெளியாகும். பித்தப்பையில் கற்கள் இருந்தால், அந்நேரமே பித்தம் வெளியேறும்; அதிலுள்ள கற்கள் வாந்தி, மலம் மூலம் வெளியேறும். மேலும், சிறுநீரகம் சுத்தப்படுவதுடன், சிறுநீர்ப் பையில் கற்கள் இருந்தால், அவை சிறுநீரில் கரைந்து வெளியேறும். இது முற்றிலும் உண்மை.
கரிசலாங்கண்ணி கீரையை உண்டால், கபநீர் வெளியேறுவதால், சுவாசப்பையும், நுரையீரலும்; பித்தநீர் வெளியேறுவதால், கல்லீரலும், பித்தப்பையும்; மலம் வெளியேறுவதால், பெருங்குடலும்; நீர் பிரிவதால் சிறுநீர்ப்பையும் சுத்தம் அடைகின்றன.
வெள்ளரிக்காய், முட்டைகோஸ், வெங்காயம், பூண்டு சாப்பிடுவதால், சிறுநீரகம் நன்றாக இயங்க உதவுவதுடன், நீர் நன்றாக குடித்தால் கற்கள் சேர்ந்தாலும், சிறுநீரில் பிரிந்து வந்துவிடும்.
மேலும், சிறுநீரகம், பித்தப்பையின் கழிவுகளை வெளியேற்ற, உடல் தாகமாக தண்ணீர் கேட்கும். ஆனால், நாம் அந்த உடல் மொழியை அலட்சியப்படுத்துகிறோம்; இது தவறு. தாகம் எடுக்கும்போது, தண்ணீர் குடித்தால், பித்தப்பை, சிறுநீரகப்பை சிறப்பாக இயங்கும்.
அதேபோல், அளவுக்கு அதிகமாக காபி சாப்பிடுபவர்களுக்கு, பித்தப்பையில் நச்சுத்தன்மை உருவாகி, பின் அது கற்களாக மாறும். எனவே, காபி குடிப்பதற்குப் பதில், இஞ்சி டீ குடித்தால், பித்தப்பை சுத்தமாகும். மேற்குறிப்பிட்ட உணவுகளுடன், ஜானு சீராசனத்தையும் செய்தால், பித்தப்பை, சிறுநீரகத்தில் கற்கள் என்ற பேச்சுக்கே இனி இடமிருக்காது.