Monday, April 20, 2015

மாற்றத்தை உருவாக்கும் மரியாதை! Carrots and Sticks Don't Work: Build a Culture of Employee Engagement with the Principles of RESPECT

மாற்றத்தை உருவாக்கும் மரியாதை!

புத்தகத்தின் பெயர்: கேரட்ஸ் அண்ட் ஸ்டிக்ஸ் டோண்ட் வொர்க் (Carrots and Sticks Don't Work)

ஆசிரியர்: பால் எல். மார்சியானோ

பதிப்பாளர்: McGraw-Hill


நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் பால் மார்சியானோ எழுதிய 'கேரட்ஸ் அண்ட் ஸ்டிக்ஸ் டோண்ட் வொர்க்' எனும் பணியிடத்தில்  சிறப்பாகப் பணிபுரிவோருக்கு பணம் மற்றும் பாராட்டும், மோசமான பணியாளருக்கு மெமோக்களும் பிங்க் ஸ்லிப்பும் என்ற தாத்பரியத்தை மாற்றச் சொல்லும் புத்தகம்.

இதற்கு மாறாக ஆசிரியர் சொல்வது ரெஸ்பெக்ட், அதாவது மரியாதையை. இந்த மரியாதை எனும் தத்துவத்துக்கு காப்பிரைட் வாங்கி வைத்து உள்ளார் ஆசிரியர். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான எண்ணமும் இந்த மரியாதை  மாடலை கண்டுபிடிக்கத் தூண்டிய ஆசிரியர் சொல்லும் காரணமும் சுவையானது.


அவர்வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில் முதல் நாள் அனுபவம்தான் அது. முதல்நாள் என்பதால், காலை ஒன்பது மணிக்கே அலுவலகத்துக்கு  சென்றுவிட்டாராம். ஆனால், சரியாக 8.59-க்கு ரிஷப்ஷனிஸ்ட் வந்து அலுவலகத்தைத் திறந்தாராம். ஆசிரியர் பவ்யமாக உள்ளே சென்று அமர, இவரைக் கண்டுகொள்ளாமல் நியூஸ் பேப்பரில் உள்ள குறுக்கெழுத்துப் போட்டியை நிரப்பிக் கொண்டி ருந்தாராம் ரிசப்ஷனிஷ்ட். ஆசிரியர் தயங்கியபடியே, நான் புதியதாக வேலைக்குச் சேர வந்துள்ளேன். இன்னாரைப் பார்க்க வேண்டும் என்றாராம்.


அட, அவரா நீங்கள். நீங்கள் பார்க்கவேண்டிய நபர் ஒரு அவசர வேலையாகச் சென்றிருக் கிறார் என்றாராம். அதன்பின்னர் ரிசப்ஷனிஷ்ட் ஒரு படிவத்தைத் தந்து பூர்த்திச் செய்துதரச் சொன்னாராம். அதை மேஜையில் வைத்து எழுதக்கூட இடமில்லாமல், கஷ்டப்பட்டு ஒரு டேபிளின் மூலையில் அமர்ந்து அதனைப் பூர்த்திச் செய்தாராம். அதன் பின்னர் என்ன செய்வது என்றே தெரியாமல், மதிய உணவு நேரம் வரை உட்கார்ந்திருந்தாராம்.  அக்கம் பக்கம் இருக்கும் நபர்களிடம் உங்களுக்கு ஏதாவது உதவட்டுமா என்று கேட்டால் மறுத்துவிட்டார்கள்.


அன்று இரவு ஆசிரியருக்கு தூக்கமே வரவில்லை. முதல் நாளை இப்படி வீணாக்கி விட்டோமே என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. அடுத்த நாள் 8.30 மணிக்குச் சென்றால் வழக்கம் போல் 8.59-க்குத்தான் அலுவலகம் திறக்கப்பட்டதாம். அன்றும் ஒன்றும் உருப்படியாக நடக்கவில்லையாம். இவர் பார்க்க வேண்டிய நபர் அன்று அலுவலகத்துக்கு 10.30 மணிக்கு வந்தாராம். உங்களுக்கு ஸ்டேஷனரி பொருட்களை வாங்கிவருவோம் என்று வெளியில் அழைத்துச் சென்றாராம். திரும்பி வரும்போது மாலை அலுவலகம் முடியும் நேரம் வந்துவிட்டதாம்.


அடுத்த நாள் அந்த அலுவலகம் உபயோகித்த ஒரு சர்வே கேள்விப் பட்டியல் தவறு என்று  சுட்டிக் காட்டினாராம். அவருடைய மேலாளர், தவறேயானாலும் இப்போது  உபயோகிப்பதை நிறுத்த முடியாது. நீங்கள் வேண்டு மென்றால் புதிதாக ஒன்றை தயாரியுங்கள் என்றாராம்.


ஆறு வாரம் கஷ்டப்பட்டுத் தயாரித்த பின்னர் அதைச் சிலரிடம் தந்து பரிசோதிக்க வேண்டும். அதன் பின்னர் உபயோகிக்க ஆரம்பிக்கலாம் என்று சொன்னாராம் ஆசிரியர். அதற்குள்ளாகவே அவருடைய மேலாளர் புத்தம் புதிய கேள்விகள் ரெடி, அனைவரும் இனி இதை உபயோகிக்கலாம் என சர்க்குலர் போட்டு விட்டாராம். அடுத்த நிமிடமே ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு வெளியேறினாராம்.


அந்த அலுவலகத்தில் நல்ல தொரு இன்சென்டிவ் சிஸ்டம் இருந்தது. கேரட் அண்ட் ஸ்டிக் அப்ரோச் எனும் கழுதையின் முன்னால் ஒரு கேரட்டை குச்சியில் கட்டி எடுத்துச் சென்றால் கழுதை கேரட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குச்சியைத் தொடர்ந்து போவதைப் போல் பணியாளர்கள் பணத்துடன்,  பதவி உயர்வும் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வேலை செய்வார்கள் என்ற நினைப்பி லேயே அந்த இன்சென்டிவ்கள் அந்த அலுவலகத்தில் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.


ஆனாலும், யாருமே உருப்படியான வேலைகளை மனதாரச் செய்யவில்லை. டார்கெட்டை முடிக்க நினைத்து ஓடினார்களே தவிர, நல்ல அலுவலகக் கலாசாரம் என்பது மருந்துக்குகூட இல்லை. இந்த அலுவலகத்தில் கேரட் அண்ட் ஸ்டிக் அப்ரோச் சுத்தமாக வேலை செய்யாததைக் கண்டறிந்ததால், புதிய சிஸ்டத்தை உருவாக்க நினைத்த ஆசிரியர் கண்டறிந்ததுதான் இந்த `ரெஸ்பெக்ட் அப்ரோச்'.


இந்த `ரெஸ்பெக்ட் அப்ரோச்' என்பது ரெக்கக்னிஷன், எம்பவர்மென்ட், சப்போர்ட்டிவ் பீட்பேக், பார்ட்னரிங், எக்ஸ்பெக்டேஷன், கன்சிட ரேஷன், ட்ரஸ்ட் என்ற ஏழு ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்தை சேர்த்த வாசகமாகும். கேரட் அண்ட் ஸ்டிக் அப்ரோச் என்பது அந்தக்காலத்தில் நன்றாகச் செயல்பட்டது. காலப்போக்கில் நடந்த மாறுதல்கள் இந்த அப்ரோச்சை நீர்த்துப்போகச் செய்துவிட்டது என்று சொல்கிறார் ஆசிரியர்.


முன்பெல்லாம் ஒரு தலைவர் என்பவர் பாஸ்-ஆக இருந்தார். இப்போது தலைவர் என்பவர் ஒரு பார்ட்னரைப் போன்ற நிலையிலேயே இருக்கிறார் என்று சொல்கிறார். இந்த `ரெஸ்பெக்ட் அப்ரோச்' என்பது எந்த ஏழு விதமான செயல்பாடுகளைக் கொண்டு உள்ளது என்று பார்ப்போம்.

முதலாவதாக, ரெக்கக்னிஷன் என்பது. பணியாளர்கள் தங்களுடைய சிறந்த உழைப்பைத் தரும்போது நன்கு பாராட்டப்பட வேண்டும். சூப்பர்வைஸர்கள் தொடர்ந்து இதைக் கண்காணித்து குழு உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்.


இரண்டாவதாக, எம்பவர்மென்ட். சூப்பர் வைஸர்கள் பணியாளர்களுக்கு வெறுமனே பயிற்சி  மற்றும் ஊக்குவிப்பை மட்டும் கொடுக்காமல் அவர்களை முழுச் சுதந்திரத்துடன் செயல்படத் தேவையான அதிகாரத்தைக் கொடுப்பது மிக மிக முக்கியம். தேவையான அதிகாரம் இருந்தால் பணியாளர்கள் சந்தோஷத்துடன் வேலையைச் சிறப்பாகச் செய்வார்கள் என்கிறார் ஆசிரியர்.  மூன்றாவதாக, சப்போர்ட்டிவ் பீட்பேக் தருதல். இந்த வகைப் பின்னூட்டம் என்பது பணியாளர்களுக்குத் தொடர்ந்து தரப்பட வேண்டும். பணியாளர் களை ஊக்குவிக்கும் விதத்திலும் அவர்களுடைய தவறுகளைச் சரிசெய்யும் விதத்திலும் இருக்க வேண்டுமே தவிர இது அவர்களை அவமானப்படுத்தும் வகையில் ஒருபோதும் இருக்கக்கூடாது.


நான்காவதாக, பார்ட்னரிங். பணியாளர்களைத் தொழிலில் ஒரு பார்ட்னரைப் போல் நடத்த வேண்டும். முக்கிய முடிவுகளில் அவர்களுடைய பங்களிப்பும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.


ஐந்தாவதாக, எக்ஸ்பெக்டேஷன். பணியாளர்களிடம் எதை மேனேஜ்மென்ட் எதிர்பார்க்கிறது என்பதைத் தெளிவாக அவர்களிடத்தில் சொல்லிவிட வேண்டும். அவர்களுடைய தகுதி மற்றும் திறனைக்கொண்டு அவர்களால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்திச் செய்ய முடியுமா அல்லது முடியாதா என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.


 ஆறாவதாக, கன்சிடரேஷன். சூப்பர்வைஸர்கள் பணியாளர்கள் எண்ணத்தையும் கருத்தையும் மதித்துச் செவி கொடுத்து கேட்டுப் புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.


ஏழாவதாக, ட்ரஸ்ட். பணியாளர்களைத் திறமை மற்றும் செயல்பாட்டில் நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையை அவர்கள் உணரும் அளவுக்கு நடைமுறையில் சூப்பர்வைஸர் செயல்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

மேலே சொல்லப்பட்ட ஏழு விஷயங்களும் கடைப்பிடிக்கப் படும்போது பணியாளர்கள்  முழுமனதுடன் கூடிய ஒத்துழைப்பை நிறுவனத்தின் முன்னேற்றத்துக்காக வழங்க முன்வருவார்கள் என்று சொல்கிறார் ஆசிரியர். உயிருள்ள விஷயங்களுக்கு மரியாதை கொடுக்கப்படும்போது அவை நமக்குத் திரும்பி எதிர்மரியாதையைச் செய்யும் என்பது ஒரு பழமொழி.


மரியாதையைக் கொடுத்து ஒத்துழைப்பை வாங்க முயலுங்கள் என்று சொல்லி முடிக்கிறார்.  மேனேஜரோ, தொழில் அதிபரோ முழுமையாகப் பணியாளர் களுடைய ஒற்றுமையைப் பெற நிச்சயமாய்ப் படிக்க வேண்டிய புத்தகம் இது எனலாம்.


To read this book, open the below link:


http://www.academia.edu/8413219/Carrots_and_Sticks_Dont_Work_Build_a_Culture_of_Employee_Engagement_with_the_Principles_of_RESPECT




Paul L. Marciano, "Carrots and Sticks Don't Work: Build a Culture of Employee Engagement with the Principles of RESPECT"
2010 | ISBN: 0071714014

The title says it all: Carrots and Sticks Don't Work.
Reward and recognition programs can be costly and inefficient, and they primarily reward employees who are already highly engaged and productive performers. Worse still, these programs actually decrease employee motivation because they can make individual recognition, rather than the overall success of the team, the goal. Yet many businesses turn to these measures first—unaware of a better alternative. So, when it comes to changing your organizational culture, carrots and sticks don't work!

What does work is Dr. Paul Marciano's acclaimed RESPECT model, which gives you specific, low-cost, turnkey solutions and action plans-- based on seven key drivers of employee engagement that are proven and supported by decades of research and practice—that will empower you to assess, troubleshoot, and resolve engagement issues in the workplace:
Recognition and acknowledgment of employees' contributions
Empowerment via tools, resources, and information that set employees up to succeed
Supportive feedback through ongoing performance coaching and mentoring
Partnering to encourage and foster collaborative working relationships
Expectations that set clear, challenging, and attainable performance goals
Consideration that lets employees know that they are cared about
Trust in your employees' abilities, skills, and judgment

Carrots and Sticks Don't Work delivers the same proven resources and techniques that have enabled trainers, executives, managers, and owners at operations ranging from branches of the United States government to Fortune 500 corporations to twenty-person outfits to realize demonstrable gains in employee productivity and job satisfaction.

When you give a little RESPECT you get a more effective organization, with reduced turnover and absenteeism and employees at all levels who areengaged, focused, and committed to succeed as a team. In short, you get maximum ROI from your organization's most powerful resource: its people!


Advance praise for Carrots and Sticks Don't Work:
"Paul Marciano pres a wealth of prescriptive advice that absolutely makes sense. You can actually open the book to any chapter and gain ideas for immediate implementation." -- Beverly Kaye, coauthor of Love 'Em or Lose 'Em

"This book should be in the hands of anyone who has to get work done through other people! It's an invaluable tool for any manager at any level." -- John L. Rice, Vice President Human Resources, Tyco International

"Carrots and Sticks Don't Work pres a commonsense approach to employee engagement. Dr. Marciano pres great real-world insights, data, and practical examples to truly bring the RESPECT model to life." -- Renee Selman, President, Catalina Health Resources

"The RESPECT model is one of the most dynamic, engaging, and thought-provoking employee engagement tools that I have seen. Dr. Marciano's work will help you pre meaningful long-term benefits for your employees, for your organization, and for yourself." -- Andy Brantley, President and CEO, College and University Professional Association for Human Resources

"This book pres clear advice and instruction on how to engage your team members and inspire them to a higher level of productivity, work satisfaction, and enjoyment. I am already utilizing its techniques and finding immediate positive changes." -- Robert Roth, Director, Accounting and Reporting, Colgate Palmolive Company