Wednesday, March 26, 2014

குழந்தைக்கு எது ஊட்டு வதாக இருந்தாலும், ....

வேண்டாமே... வலுக்கட்டாயம்!

       

                                                        







ன் தோழி, தன்னுடைய 3 வயது குழந்தைக்கு குழம்பு சாதம் பிசைந்து ஊட்டிவிட்டிருக்கிறாள். குழந்தை சாப்பிடாமல் அடம் பிடித்து அழுதிருக்கிறது. அவளோ... 'வர வர உன் அடம் தாங்கல' என்று கடிந்துகொண்டு, வலுக்கட்டாயமாக குழந்தை வாயில் சாதத்தை திணித்திருக்கிறாள். அதுவும் அழுதுகொண்டும், பாதி துப்பியும், முழுங்கியும் சாப்பிட்டு முடித்திருக்கிறது. அழுதுகொண்டே தூங்கியும்விட்டதாம். அதன் பிறகு அவள் குழம்பு சாதம் பிசைந்து வாயில் வைத்தவுடன் தூக்கிவாரிப் போட்டிருக்கிறது. கண்களில் நீர் பெருகும் அளவுக்கு அவ்வளவு காரமாம்! உடனே குழந்தையிடம் ஓடியிருக்கிறாள். உதட்டை சுற்றி புண் ணாகியிருக்கிறது. அலறி அடித்துக்கொண்டு, குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் சென்றாள். அவரிடம் சரியான திட்டு!

குழந்தைக்கு எது ஊட்டு வதாக இருந்தாலும், முதலில் உப்பு, காரம் சரியாக இருக்கிறதா... நன்றாக வெந்திருக் கிறதா என நாம் வாயில் போட்டு ருசி பார்த்துவிட்டே ஊட்ட வேண்டும். பொருட்களின் காலாவதி தேதியைப் பார்ப்பதும் மிக முக்கியம். இல்லையெனில், அநாவசிய தொல்லைக்கு ஆளாக நேரிடும். கவனம்... தோழிகளே!