Tuesday, May 10, 2011

டிப்ஸ்...டிப்ஸ்..

வந்தாச்சு மாங்காய் சீஸன். ஊறுகாய் தவிர மாங்காயில் வேறு என்ன செய்யலாம் என்பவர்களுக்கு...


மாங்காய் புளிப்பாக இருந்தால்... துருவி, உலர்த்தி மிக்ஸியில் பொடியாக்கினால் ஆம்சூர் பொடி ரெடி. புளிப்புச்சுவை தேவைப் படும்போது உபயோகித்துக் கொள்ளலாம். மாங்காய்களைத் துருவி, வேக வைத்து தாளிப் புடன் சேர்த்துக் கலந்த சாதம் தயாரிக்கலாம்.

புளிப்பில்லாத மாங்காய்களைத் தோல் நீக்கி வேக வைத்து, சர்க்கரைப்பாகுடன் அடுப்பில் வைத்துக் கிளறி, மாங்காய் ஜாம் தயாரித்து பிரெட், சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளலாம். தோல் சீவி வேக வைத்த மாங்காய்களை மிக்ஸியில் மசித்து, சம அளவு தண்ணீர், இரண்டு மடங்கு சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். சர்க்கரை கரைந்ததும் இறக்கி, ஆறியதும் பாட்டிலில் நிரப்பி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். ஒரு மடங்கு மாங்காய் 'சிரப்'பில் நான்கு மடங்கு தண்ணீர் கலந்து ஜில்லென்று மாங்காய் ஜூஸாக குடிக்கலாம்.

- கே.ஆர்.மோகனா, ஹரியானா

நான்கு தக்காளி, ஒரு சின்ன வெங்காயம் ஒன்றிரண்டு கிராம்பு, சிறிய பட்டைத் துண்டு, இரண்டு பூண்டு பல்... இவற்றை மிக்ஸியில் விழுதாக அரையுங்கள். ஒரு கடாயில் இந்த விழுதுடன் உப்பு, மிளகாய்த்தூள், சிறிது சர்க்கரை சேர்த்து, அரை டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடுங்கள். கெட்டியானதும், இறக்கினால் ருசியான தக்காளி சாஸ் நொடியில் ரெடி!

- ஏ.பி.எம்.பானுமதி, திருச்சி

பாதி பயன்படுத்திய எலுமிச்சம் பழம், பீட்ரூட், சௌசௌ, வெங்காயம் என நறுக்கிய பிறகு மீந்திருக்கும் காய்கறிகள், நறுக்கிய பழங்கள்... இவற்றையெல்லாம் ஃப்ரிட்ஜில் சேமிப்பது சற்றே சிரமமான விஷயம். சீக்கிரமே அவை கெட்டுவிடவும் வாய்ப்பு உண்டு. ஆனால், அந்த பொருட்களை ஒரு அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் பல நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கலாம்.

- எஸ்.சந்திரா, சென்னை-56

 

இட்லிக்கு மொத்தமாக மாவு அரைத்து ஃப்ரிட்ஜில் வைப்பவர்கள்,  'சீக்கிரமே புளித்துவிடுகிறதே' என்று கவலைப்படுவார்கள். சமைப்பதற்கு நான்கைந்து மணி நேரத்துக்கு முன்பு, தேவையான அளவு மட்டும் மாவை வெளியே எடுத்து, கரைத்து வையுங்கள். ஃப்ரிட்ஜில் இருக்கும் மாவு நீண்ட நாட்களுக்கு புளிக்காமல் இருக்கும்.

- லலிதா ராமன், மகாராஷ்ட்ரா

குழந்தைகளுக்காக வாங்கி வைத்திருக்கும் கோகோ, மைலோ, பூஸ்ட், காம்ப்ளான் போன்ற ஊட்டச்சத்து பான பவுடர்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே க்ரீம் பிஸ்கட் தயாரிக்கலாம். ஏதாவது ஒரு பவுடரை ஒரு ஸ்பூன் பால் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, இரண்டு பிஸ்கட்டுகளின் நடுவில் வைத்து அழுத்திவிட்டால்... கிரீம் பிஸ்கெட் நொடியில் தயார்.

- கே.ரேகா, தேனி

குக்கரில் சாதம் வைக்கும்போதே, சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் முதலிய வற்றுக்குத் தேவையான பொருட்களையும் வெவ்வேறு பாத்திரங்களில் வைத்துவிடுங்கள். வெளியே எடுத்ததும் தாளிப்புடன் நான்கைந்து நிமிடங்கள் கொதிக்க வைத்தால் போதும். எல்லா அயிட்டங்களும் நிமிடத்தில் ரெடி! கேஸ் செலவு, நேரம் மிச்சமாவதுடன், கொளுத் தும் வெயிலில் சமையலறையிலிருந்து சட்டென விடுதலை.

- எஸ்.விஜயா சீனிவாசன், திருவெறும்பூர்