Tuesday, April 19, 2011

மனிதம் வளர்போம்


திலும் ஓர் ஒழுங்குமுறை இருக்கவேண்டும். அதற்குக் கீழ்ப்படிதல் எனும் குணம் மிகமிக அவசியம். குறிப்பாக, ராணுவம், காவல்துறை மற்றும் சீருடை அணியும் பல துறைகளுக்குக் 'கீழ்ப்படிதல்' என்பது கூடுதலாகவே தேவை!

மக்களின் முறையான வாழ்க்கைக்குத் தேவையான கோட்பாடுகளை, அனைத்து மதங்களும் வழங்கியுள்ளன. அவற்றுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தால், உலகம் என்பது ஆனந்தப் பூஞ்சோலையாகிவிடும்!

'ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே, அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்' என்கிறது பைபிள்.

இறைத் தூதர்(ஸல்) அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவர்' என்கிறார்.

கீழ்ப்படி இல்லையெனில், மேல்படி இல்லை எனும் பழமொழி உண்டு. கீழ்ப்படிதலுக்கு உதாரணமாக, யயாதி மன்னனின் கதையைச் சொல்லுவார்கள்.

சந்தர்ப்பவசத்தால் விரைவிலேயே முதுமையை அடைந்தவன் யயாதி. அவனுக்கு ஐந்து மகன்கள். அவர்களில் யாரேனும் ஒருவர், தந்தையின் முதுமையைப் பெற்றுக்கொண்டு, தனது இளமையை அவருக்குக் கொடுக்கலாம் எனும் நிலையில்... மூத்தவர்கள் நால்வரும் மறுத்துவிடுகின்றனர். கடைசி மகன் புரு, தந்தையின் முதுமையை ஏற்கச் சம்மதித்து, தனது இளமையை தந்தைக்கு வழங்குகிறான்.  ஆயிரம் வருடங்கள் கழித்து முதுமையைத் திரும்பப் பெற்றுக் கொண்ட யயாதி, இளமையை மீண்டும் புருவுக்கு அளித்தது மட்டுமின்றி, போனஸாக அரசுரிமையையும் வழங்கி மகிழ்ந்தான். காரணம்... கடைசி மகனின் கீழ்ப்படிதல்!

'கராத்தே கிட்' என்று ஒரு திரைப்படம். அதில், 'ட்ரெ' எனும் 12 வயதுச் சிறுவனுக்கு, கராத்தே கலையைப் பயிற்றுவிக்கும் ஹான், எந்தக் கலையையும் கற்றுக் கொள்வதற்கான அடிப்படைத் தேவை கீழ்ப்படிதல்தான் என்பதைப் புரிய வைப்பார். இன்றைய இளைஞர்கள் சிலர், 'கீழ்ப்படிதல் என்பது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு' என நினைக்கின்றனர். வேண்டாவெறுப்பாகப் பெற்றோரின் கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றனர். தந்தையை ராணுவத் தளபதிபோல் பார்க்காதீர்கள்; உங்களின் நண்பனாக தந்தையைப் பாவித்து, தினமும் ஒரு 10 நிமிடம் அவருடன் பேசிப் பாருங்கள். பிறகு, உங்கள் உயிர் நண்பராக அவரையே சொல்வீர்கள்.

கீழ்ப்படிதல் குறித்து, 'கஸபியான்கா' எனும் உலகப் புகழ்பெற்ற கவிதை, ஃபெலிஸா டோரதி ஹீமேன்ஸ் என்னும் பிரிட்டிஷ் கவிஞரால், 1826-ஆம் வருடம், 'நியூ மன்த்லி மேகஸைன்' என்ற இதழில் எழுதப் பட்டது. ஓரியன்ட் என்ற பிரெஞ்சுக் கப்பலில் 1798-ஆம் வருடம் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட கவிதை இது.

கப்பற்படை அதிகாரியான தனது தந்தையுடன், கப்பலில் பயணித்துக்கொண்டு இருந்தான் 12 வயதுச் சிறுவன். அப்போது திடீரெனப் புயல் வீசவே, அவனை ஓரிடத்தில் இருக்கும்படிச் சொல்லிவிட்டு, கப்பலின் இயக்கத்தைச் சரிபார்க்கச் சென்றார் தந்தை. அப்போது திடீரெனக் கப்பலில் தீப்பிடித்தது. அனைவரும் இங்கும் அங்குமாக ஓடினர். தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட அந்தச் சிறுவன் மட்டும் அசையாமல் அதே இடத்தில் நின்றான்; உயிர் துறந்தான்.  

இப்படியான கண்மூடித்தனமான கீழ்ப்படிதலை implicit obedience என்பர். சர்வாதிகாரிகள் சிலர், 'செய் அல்லது செத்து மடி' என்ற கொள்கை உடையவர்களாக இருப்பதைப் பார்த்திருக்கிறோம். 'ஞிஷீ ஷீக்ஷீ பீவீமீ. ஞிஷீஸீ't ணீsளீ ஷ்லீஹ்!' என்பதே அவர்களது சித்தாந்தம்! மனச்சாட்சிக்கு விரோதமாக மேலதிகாரிகளோ உயர் அலுவலர்களோ இடும் சில கட்டளைகளுக்கு அடிபணிய மறுப்பது, கீழ்ப்படிதலுக்கு எதிரானதுபோலத் தோன்றலாம். ஆனால், மனோதைரியத்தின் அடையாளம் அது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தவறான கட்டளைகளுக்கு அடிபணிய மறுக்கின்ற சிலரை இன்றைக்கும் காணலாம். நேர்மையான அதிகாரிகளான அவர்கள், மனம் இடும் கட்டளைப்படி செயல்படுவதால், பிரச்னைகள் பலவற்றை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதேநேரம், தலைவர்களது நல்ல திட்டங்களுக்குக்கூடக் கீழ்ப்படியாமல், அதற்கு முட்டுக்கட்டை போடுகிற அதிகாரிகளும் உண்டு.

கர்மவீரர் காமராஜர் முதல்வராக இருந்தபோது, ஏழைக் குழந்தைகளைக் கண்டு மனமிரங்கி, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவர விரும்பினார். ஆனால், அதிகாரிகள் சிலர் அவருக்கு ஒத்துழைக்காமல், சாத்தியமே இல்லாத திட்டம் அது என்று விமர்சித்தனர். எனினும், விடாப்பிடியாக மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து, நினைத்ததைச் சாதித்தார் காமராஜர். 'ஏழைப் பங்காளன்' என மக்களின் மனங்களில் இடம்பிடித்தார்.

கீழ்ப்படிதலில் சிறந்தவர்கள் அமெரிக்கச் சிப்பாய்களா, ரஷ்யச் சிப்பாய்களா என இரண்டு தேசத்து அதிபர்களுக்கு இடையே ஒரு போட்டி! அப்போது அவர்கள் ஒரு மலையுச்சியில் இருந்தனர். அமெரிக்கத் தளபதி, தனது சிப்பாயை அழைத்து, 'குதி' என்று கட்டளையிட்டார். ஆனால் சிப்பாயோ, 'எனக்குக் குடும்பம், குழந்தை குட்டிங்க எல்லாம் இருக்கு. குதிக்கமாட்டேன்' என்று மறுத்துவிட்டார்.  

அடுத்து, ரஷ்யத் தளபதி; ரஷ்ய சிப்பாய்; அதே கட்டளை. மறுகணமே குதித்துவிட்டார் சிப்பாய். ஆனால், அதிர்ஷ்டவசமாக மரக்கிளையில் சிக்கி, உயிர் தப்பினார். பிறகு, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரிடம், ''குடும்பம் குழந்தை யெல்லாம் இருக்குன்னு சொல்லி நான் மறுத்த மாதிரி நீயும் மறுத்திருக்கலாமே?!'' என்று கேட்டார் அமெரிக்க சிப்பாய். ''அதே காரணம்தான்! குதிக்கா விட்டால், என் குடும்பத்துக்கு ஆபத்து என்றார் தளபதி. அதனால குதிச்சேன்'' என்றார் ரஷ்ய சிப்பாய்.