Friday, June 10, 2016

உடல் மற்றும் ஆத்மா

உடல் மற்றும் ஆத்மா

உடல் பஞ்கபூதங்களாலானது
ஆன்மா உணர்வுப்பூர்வமானது

உடலுக்கு உருவமுண்டு
ஆன்மா ஜோதி புள்ளிவடிவமானது

உடலைப் பார்க்க முடியும்
ஆன்மாவை பார்க்க முடியாது

உடல் ஸ்தூலமானது
ஆன்மா சூட்சமமானது

உடலுக்கு பெயருண்டு
ஆன்மாவிற்கு பெயரில்லை

உடல் ஆண் பெண் என வகைப்படும்
ஆன்மா ஆணுமல்ல பெண்ணுமல்ல

கண்கள் காண்கிறது
ஆன்மா நினைவு செய்கிறது

காதுகள் கேட்கிறது
ஆன்மா புரிந்துகொள்கிறது

மூக்கு சுவாசிக்கின்றது
ஆன்மா நுகர்கின்றது

வாய் உண்கிறது
ஆன்மா சுவைக்கின்றது

தோல் தொடுகிறது
ஆன்மா ஸ்பரிசிக்கிறது

உடலுக்கு ஐம்புலன்கள் உண்டு
ஆன்மாவிற்கு அஷ்ட சக்திகள் உண்டு

உடல் உழைக்கின்றது
ஆன்மா சிந்திக்கின்றது

உடல் உணவைப் பெறுகிறது
ஆன்மா தூக்கத்தை பெறுகிறது

உடல் உருவத்தில் வளர்கிறது
ஆன்மா அறிவில் வளர்கிறது

உடல் பாக்டீரியா வைரஸ் ஃபங்கஸ் பேராசைட்ஸ் ஜெர்ம்ஸ் போன்ற கிருமிகளால் நோயுறுகிறது
ஆன்மா காமம் கோபம் ஆசை பற்று அகங்காரம் போன்ற தீயகுணங்களால் நோயுறுகிறது

உடலுக்கு வைத்தியம் பார்க்கப்படுகிறது
ஆன்மா தியானம் வழிபாடு செய்கிறது

உடல் விபத்தை சந்திக்கின்றது
ஆன்மா வலியை அனுபவிக்கின்றது

உடலுக்கு ஆதாரம் சுவாசம்
ஆன்மாவிற்கு ஆதாரம் விருப்பம்

உடலுக்கு கண்களே ஒளி
ஆன்மாவிற்கு ஞானமே ஒளி

உடலுக்கு 16 மண்டலங்கள் உண்டு
ஆன்மாவிற்கு 16 குணங்கள் உண்டு

உடல் ஒரு கருவி
ஆன்மா அதனை இயக்குபவர்

உடல் ஒரு வீடு
ஆன்மா அதில் குடியிருப்பவர்

உடல் ஒரு வாகனம்
ஆன்மா அதன் ஓட்டுனர்

உடல் ஒரு அடிமை
ஆன்மா சுதந்திரமானது

உடல் ஒரு படைப்பு
ஆன்மா படைப்பவர்

உடல் உருவாக்கப்படுகிறது
ஆன்மா ஆதி அந்தமற்றது

உடலுக்கு தந்தை வேறுபட்டவர்
அனைத்து ஆன்மாக்களுக்கும் தந்தை ஒருவரே

உடலுக்கு இரத்த சம்பந்தம்  உண்டு
ஆன்மாவிற்கு உணர்வு சம்பந்தம் உண்டு

உடல் அழியக்கூடியது
ஆன்மா அழிவற்றது

உடல் எரிக்கப்படுகிறது
ஆன்மாவை எரிக்க இயலாது

உடல் புதைக்கப்படுகிறது
ஆன்மாவை புதைக்க இயலாது

உடல் பூமிக்கு திரும்பிவிடுகிறது
ஆன்மா ஆத்மலோகத்திற்கு திரும்பிவிடுகிறது

உடல் நினைவு செய்யப்படுகிறது
ஆன்மா ஆசிர்வதிக்கப்படுகிறது

உடலை பிரிக்க இயலும்
ஆன்மாவை பிரிக்க இயலாது

உடல் எல்லைக்குட்பட்டது
ஆன்மா எல்லைக்கு அப்பாற்பட்டது

உடல் ஒரு அத்தியாயம்
ஆன்மா ஒரு முழுக்கதை

உடலைப் பற்றியது பௌதீகம்
ஆன்மாவைப் பற்றியது ஆன்மிகம்

உடலை மட்டும் அறிவது அசுரகுணம்
ஆன்மாவை மட்டும் அறிவது தேவகுணம்

நாம் அனைவரும் அசுரர்களா? தேவர்களா?

அசுரர்கள் வாழ்வது கலியுகத்தில்
தேவர்கள் வாழ்வது சத்தியுகத்தில்

இறுதியாக.......
கடவுளுக்கு என்ன வேலை?
அசுரனை தேவனாக்குவது.