Thursday, September 16, 2010

உங்கள் வாழ்க்கை உங்கள் கைபேசியில்

உங்கள் வாழ்க்கை உங்கள் கைபேசியில்

 

நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது.அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.


ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும் மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள்  உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்தஎண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது.ஆனால் "ICE" என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு, உங்களை காப்பாற்றி உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.

 

ICE என்பது In Case of Emergency.  இதன் முக்கிய நோக்கம் அவசர  நேரங்களில் மக்களை காப்பாற்றுவதாகும்.இன்று ஏறத்தால அனைவரிடமும் கைபேசி உள்ளநிலையில் இதுசாத்தியமாகும்.இந்த முறையானது பாராமெடிக் (PARAMEDIC) ஆல் கொண்டுவரப்பட்டது இவர்கள் விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அனைவரிடமும் கைபேசி வைத்திருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இப்படி கைபேசி இருந்தும் ஏன் இவர்கள் குடும்பத்தினர்களுக்கு தகவல் போய் சேரவில்லை என ஆராய்ந்து இந்த முறையை அமல்படுத்தினர். இது நாடுமுழுதும் அங்கீகரிக்கப்பட்டதாகும்.


ஒன்றுக்கு மேற்ப்பட்ட எண்களை ICE1 , ICE2 , ICE3………….etc எனவும் பதிவு செய்துகொள்ள்ளாம்.

 

இன்றே, உங்கள் கைபேசியில் பதிவுசெய்யுங்கள் இந்த முறையை நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.உங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்வை காப்பாற்றுங்கள்.


A great idea that will make a difference!


குறிப்பு:-

     உங்களுக்கு முடியாத போது உங்களுக்காக ICE பேசும்.