Wednesday, May 11, 2016

சிரிக்க மட்டும்


1) மனைவி : என்னங்க இப்படியே நான் உங்களுக்கு தினமும் சமச்சிப் போட்டுக்கிட்டு இருந்தா எனக்கு என்னதான் கிடைக்கப் போகுது சொல்லுங்க...
கணவன் : இப்படியே சமச்சிக்கிட்டு இருந்தா கூடிய சீக்கிரம் என்னோட எல்ஐசி பணம் உனக்கு கிடைச்சிடும்
மனைவி : ????

2) பேசன்ட் : நர்ஸ் நீங்க என்னோட இதயத்தைத் திருடிட்டீங்க.
நர்ஸ் : அதுக்கு முன்னாடி டாக்டர் உங்க கிட்னியைத் திருடிட்டாரு. 
பேசன்ட் : ????

3) நண்பர் 1 : மாப்பிள்ளை மருத்துவத் துறையில் 10 வருஷமா இருக்கறதா சொல்லி ஏமாத்திட்டாரு.
நண்பர் 2 : எப்புடி?
நண்பர் 1 : அவரு 10 வருஷமா பேஷண்ட்டா இருக்காறாம்!
நண்பர் 2 : ????

4) நபர் : சார், என்னோட பொண்ணைக் காலையில் இருந்து காணல! புகார் கொடுக்கணும்..
போலிஸ் : அதோ போறாரே.. அவர்தான் உங்க சம்பந்தியா இருக்கணும்.. முதல்ல அவர்கிட்ட போய் பேசுங்க... 
நபர் : என்ன சார் நீங்க.. பொண்ணக் காணலைன்னு சொல்றேன்.. நீங்க என்னடான்னா அவர் கிட்ட பேசச் சொல்றீங்க?
போலிஸ் : அவரோட பையனக் காணோம்னு இப்போத்தான் புகார் கொடுத்துட்டு போறாரு.. அதான்.
நபர் : ?????

5) திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார்.
மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.
கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?
மனைவி - ????

6) தோழி 1 : என்னோட அம்மாவும் அப்பாவும் என்னை ரொம்ப மிரட்டினாங்க. அதனாலதான் நான் ரமேஷ மறந்துட்டு அவங்க சொல்றவனையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சம்மதிச்சேன்.
தோழி 2 : அப்படி என்னதாண்டி மிரட்டினாங்க?
தோழி 1 : தொடர்ந்து ரமேஷ் கூட பழகினா அப்புறம் அவனையே கல்யாணம் பண்ணி வச்சுடுவேன்னு மிரட்டினாங்க.
தோழி 2 : ??????

7) மனைவி : ஏங்க? பக்கத்து வீட்டு பரிமளத்தை அவளோட கணவன் சந்தோஷப்படுத்தறதுக்காக சினிமாக்கெல்லாம் அழைச்சுட்டுப் போறாரு. நீங்க ஏன் அழைச்சுட்டுப் போக மாட்டேங்கறீங்க?
கணவன் : நானும்தான் கூப்பிட்டேன். அவங்க மாட்டேன்னுட்டாங்க. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?
மனைவி : ????

8) நண்பர் 1 : என்னது? ராத்திரி பூரா உங்க பையன் புக் முன்னாடி உட்கார்ந்தும் தேர்ச்சி பெறலையா?
நண்பர் 2 : அவன் உட்கார்ந்திருந்தது facebook முன்னாடியாம்.
நண்பர் 1 : ?????