Sunday, January 26, 2014

Children's educational web site


Enchanted Learning® produces children's educational web sites which are designed to capture the imagination while maximizing creativity, learning, and enjoyment.
Ease of use is a hallmark of our material. Children need the clearest, simplest computer interface, and our material is created so that the navigation and controls are intuitive. Our mission is to produce the best educational material, emphasizing creativity and the pure enjoyment of learning.
காடு மற்றும் வீடுகளில் வாழும் அல்லது வளர்க்கப்படும் மிருகங்களை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது? இந்த சந்தேகம் இது குறித்து எழுதுபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் ஏற்படுவது உண்டு. எடுத்துக் காட்டாக, ஆடு ஒன்றை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது - goat/sheep எது சரி?

பெண் ஆட்டிற்கான சொல் என்ன? ஆடுகள் கூட்டமாக இருந்தால் அதனை எப்படிக் குறிப்பிடுவது? குட்டி ஆட்டினை எந்தப் பெயர் சொல்லி அழைப்பது?
டிக்ஷனரியைப் புரட்டினாலும், அதற்கான ஏதேனும் ஒரு பெயர் தெரியாமல் கண்டறிவது கஷ்டமல்லவா? இந்த வகையில் உதவி செய்திட ஓர் இணைய தளம் உள்ளது. அதன் முகவரி  http://www.enchantedlearning.com/subjects/animals/Animalbabies.shtml. இந்த தளத்தில் நுழைந்தவுடன், அகரவரிசையில் மிருகங்களின் பெயர்ப்பட்டியல் காணப்படுகிறது. அதன் அருகிலேயே Animal, Male, Female, Baby, and Group எனப் பட்டியல் வரிசை தரப்பட்டு அதன் பெயர்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு மிருகம் குறித்து மேலும் கூடுதல் தகவல்கள் அறிய வேண்டுமானால், மிருகத்தின் பெயரில் கிளிக் செய்தால், இன்னொரு தளத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். அதில் பலவகையான தகவல்களைப் பெறலாம். 

எடுத்துக்காட்டாக, ஆடு குறித்து அறிய goat என்னும் பெயரில் கிளிக் செய்த போது, பத்தாயிரம் ஆண்டுகளாகத்தான் ஆடு, வீட்டில் வளர்க்கப்படும் பிராணியாக மாறியது என்ற தகவல் கிடைக்கிறது. காடுகளில் இவை வளர்ந்தால் 12 ஆண்டுகள் வரை வாழும் என்ற உண்மையும், ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு ஆடுகளுக்கும் கொம்பு மற்றும் தாடி உண்டென்றும் அறியப்படுகிறது.
இப்படியே பல தகவல்கள் நமக்கு அதிசயத்தக்க வகையில் கிடைக்கின்றன. குழந்தைகளை இந்த தளத்திற்குப் பழக்கிவிடுங்கள். பல கூடுதல் தகவல்களை அவர்களாகவே அறிந்து கொள்வார்கள். நீங்களும் அறிந்து கொள்ளலாம்