Thursday, July 2, 2015

ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா? ஹெல்மெட் ஏன் அணிய வேண்டும்?

ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ?

இனிமேல் பைக்கில் கிளம்பும்போது லைசென்ஸ், ஆர்.சி புத்தகம், இன்ஷூரன்ஸ் - இவற்றோடு ஹெல்மெட்டையும் மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்த ஹெல்மெட்டை தலையில் மாட்டிய பிறகே, பைக்கை ஸ்டார்ட் செய்யுங்கள். டேங்க்கில் தொடையிடுக்கில் வைத்துக்கொண்டோ, ரியர்வியூ மிரரில் சொருகியபடியோ ஹெல்மெட்டை வைத்துக்கொண்டு பயணிப்பது - சட்டத்தை மட்டுமல்ல; உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஏமாற்றுவதற்குச் சமம்!

'ஹெல்மெட் இல்லையென்றால் லைசென்ஸ் பறிக்கப்படும்; வாகனம் சீஸ் செய்யப்படும்' போன்ற கடுமையான சட்ட திட்டத்தையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள்; 'ஹெல்மெட் போட்டா காது கேட்கவில்லை... வேர்த்துக் கொட்டுது பாஸ்... முடி போச்சுன்னா மொத்தமும் போச்சு' என்று ஃபீலிங் டேக்கா விடுபவர்கள் அனைவருக்கும், ஹெல்மெட் விஷயத்தில் ஆப்ஷன் இருக்கிறது.

ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?

எல்லோருக்கும் பொதுவான பயம் இதுதான். தலைவலி, நீர் கோர்த்தல், காது கேட்கவில்லை போன்ற உடல் உபாதைகள் வருவதாகச் சொல்லித்தான் பலர் ஹெல்மெட்டைத் தவிர்க்கின்றனர். ஆனால், இவை எல்லாமே பொய் இல்லை. பல நாள் துவைக்காத அழுக்குச் சட்டை போட்டால், எப்படி நம் உடம்பில் அரிப்பு ஏற்படுமோ, அதுபோலத்தான் ஹெல்மெட்டும். தினசரி துவைத்த காட்டன் கேப் அல்லது கர்ச்சீஃப்பைத் தலையில் கட்டிக்கொண்டு ஹெல்மெட் அணிந்தால், எந்தப் பிரச்னையும் வராது. சேவியர், ஆக்ஸர், வேகா போன்ற பிராண்டுகளில் ஹெல்மெட்டின் உள்பக்கத்தை அகற்றி, துவைத்துப் பயன்படுத்தலாம். துவைத்த இன்டீரியரை வெயிலில் அரை நாள் காயவைத்து அணிந்தால், தலையில் அரிப்பு ஏற்படுவது நிற்பதுடன், முடி உதிர்தலும் தடைப்படும். அகற்ற முடியாத உள்பக்கம் கொண்ட ஹெல்மெட் வாங்குபவர்கள், தினசரி கர்ச்சீப் அல்லது கேப் மாற்ற வேண்டும். மேலும், வாரம் ஒருமுறை ஹெல்மெட்டின் உள்பக்கம் வெயிலில் படுவதுபோல அரை மணி நேரம் வைக்க வேண்டும்.

'ரொம்ப வேர்க்குதுங்க' என்று சாக்கு போக்கு சொல்பவர்கள், வென்ட்டிலேஷன் உள்ள ஹெல்மெட்டுகள் பயன்படுத்தலாம். 6 முதல் 8 ஏர் வென்ட்டுகள் உள்ள ஹெல்மெட்டுகள் இப்போது மார்க்கெட்டில் இருக்கின்றன. ஏர் வென்ட் என்றவுடன், குபுகுபுவென காற்று அடிக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம். உள்ளே வரும் சூடான காற்றை வெளியே தள்ளும் வசதிதான் இது. பைக் ஓட்டும்போது, மறக்காமல் ஹெல்மெட் வென்ட் திறந்திருக்கிறதா என்று கவனியுங்கள். அதேபோல், மழை நேரங்களில் பைக் ஓட்டுபவர்களுக்கும் வசதியான ஹெல்மெட்டுகள் இருக்கின்றன. வேகா, ஸ்டட்ஸ் போன்ற பிராண்டுகளில், ஹெல்மெட்டின் முன் பக்கம் நீண்டுள்ள ஷேட் வழியாக மழை நீர் வடிந்துவிடும் என்பதால், மழை நீர் நேராக வைஸரில் அறைந்து பார்வையை மறைப்பதை இது தவிர்க்கும். இவற்றுக்கு 'ரெயின் ரெசிஸ்ட் ஹெல்மெட்' என்று பெயர்.

ஹெல்மெட்டுகளில் எத்தனை வகை உள்ளன?

இந்தியாவின் தரம் வாய்ந்த ஹெல்மெட்டுகளான ஸ்டீல்பேர்டு, வேகா, ஸ்டட்ஸ், சேவியர் போன்ற ஹெல்மெட்டுகளின் சென்னை டீலர்களான ஜவஹர் அரோரா-வித்யா தம்பதியர், ஹெல்மெட்டுகளில் உள்ள வகைகள் பற்றிச் சொன்னார்கள்.

"உலகம் முழுக்க ஃபுல்ஃபேஸ், ஓப்பன் ஃபேஸ், ஃப்ளிப்-அப், டூயல் பர்பஸ், த்ரீ குவார்ட்டர், மாடுலர், ஹாஃப், மோட்டோகிராஸ் என்று 8 வகைகள் ஹெல்மெட்டில் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் புழக்கத்தில் இருப்பவை நான்கு வகைகள்தான்.

1. ஓப்பன் ஃபேஸ் - அதாவது திறந்த வகை ஹெல்மெட். இதுதான் பேஸிக் மாடல். பெண்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், இதை லேடீஸ் ஹெல்மெட் என்கிறார்கள். ஆனால், இதை ஆண்களும் பயன்படுத்தலாம். வேகமாகப் பயணிக்காத வர்களுக்கு, இது பெஸ்ட். தலைப் பகுதி முழுவதையும் இது பாதுகாத்தாலும், முகத்துக்கு வைஸர் மட்டுமே பாதுகாப்பு.

2. ஃபுல் ஃபேஸ் - பொதுவாக, நாம் அனைவரும் பயன்படுத்தும் ஹெல்மெட் இது. தாடை முதல் தலை முழுவதையும் பாதுகாக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய ஃபுல் ஃபேஸ் மாடலில், ஏர் வென்ட்டுகள் இல்லாமல் இருந்தன. இப்போது வரும் அனைத்து மாடல்களிலும் ஏர் வென்ட்டுகள் இருப்பதால், வியர்க்குமோ என்று பயப்படத் தேவை இல்லை.

3. ஃப்ளிப் அப் - இதுவும் ஃபுல் பேஸ் மாடல்தான். ஆனால், வெயிலில் முகம் வியர்க்கக் கூடாது என்று விரும்புபவர்கள், கீழே உள்ள பட்டனைப் பயன்படுத்தி, தாடைப் பகுதியை மேலே ஏற்றிக்கொள்ளலாம். இது, பார்ப்பதற்கு ஓரளவு ஓப்பன் ஃபேஸ் மாடல் போல இருக்கும். இதிலேயே ஆட்டோ கூலிங் ஆப்ஷனும் உண்டு. அதாவது, வெயிலில் செல்பவர்களுக்கு வைஸர் இல்லாமல், கண்களை மட்டும் கவர் செய்யுமாறு கூலிங் கிளாஸை இறக்கிக்கொள்ளலாம். இரவில் வெளிச்சமாகவும், பகலில் கூலிங்காகவும் இது இருப்பதால், ஓட்டுவதற்கு சுகானுபவமாக இருக்கும். ஆனால், ஆபத்து நேரத்தில் இதில் முழுப் பாதுகாப்பு கிடைக்காது.

4. மோட்டோ கிராஸ் - இதுவும்  ஒரு வகையில் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்தான். இதில் தாடைப் பகுதிக்கென்று சிறப்புப் பாதுகாப்பு இருக்கும். இதை 'ஸ்கெலிட்டன் ஹெல்மெட்' என்றும் சொல்கிறார்கள். பைக் ஓட்டும்போது  கீழே விழ நேர்ந்தால், முகம் தரையில் அடிபட வாய்ப்பு இருக்கிறது. அந்த மாதிரி நேரங்களில், இந்த மோட்டோ கிராஸ் ஹெல்மெட் உங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும். முன்பு டர்ட் பைக் ரேஸ்களில்தான் இதைப் பெரிதும் பயன்படுத்தினார்கள். இது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால், இப்போதைய இளைஞர்களை இது மிகவும் கவரும். இதில், தலைக்கு மேலே சன் ஷேடு இருப்பதால், வெயில் மற்றும் மழை உங்களை நேரடியாகத் தாக்காது!" என்றனர்.

ஹெல்மெட்டுகள் எப்படித் தயாராகின்றன?

இந்தியாவில், முழுக்க முழுக்க பாலி கார்பனேட் கலவையால் ஹெல்மெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது, பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் சேர்ந்த கலவைதான் பாலிமர். தரமான ஹெல்மெட்டுகளில் இந்தத் தடிமனான பகுதிக்குக் கீழே 7 அடுக்குகளால் ஆன ஃபைபர் லேயர்கள் இருக்கும். இவை தரையில் மோதும்போது கிடைக்கும் அழுத்தத்தை ஈஸியாக்கும். லைட் வெயிட்டுக்கும், ஃப்ளெக்ஸிபிளிட்டிக்கும் பாலிமர்தான் பெஸ்ட். இதற்கு அடுத்த தரம், ஃபைபர் கிளாஸ் மெட்டீரியல். MT, AGV போன்ற இத்தாலியன் ஹெல்மெட்டுகளில் ஃபைபர் கிளாஸ் பயன்படுத்தப்படுகின்றன. இது, மோதும்போது ஏற்படும் வேகத்தைக் குறைக்கும் தன்மைகொண்டவை. உச்சபட்சமாக, கார்பன் ஃபைபர் மெட்டீரியல் கொண்டு தயாரிக்கப்படும் ஹெல்மெட்டுகள்தான் உலகத் தரம் வாய்ந்தவை. மோட்டோ ஜீபி, ஃபார்முலா-1 போன்ற ரேஸ்களில் பயன்படுத்தப்படும் ஹெல்மெட்டுகள் அனைத்தும் கார்பன் ஃபைபர் கொண்டு தயாரிக்கப்பட்டவை. சில கார்பன் ஃபைபர் ஹெல்மெட்டுகளின் எடை 1.3 கிலோ அளவுதான் இருக்கும். ஆனால், பாதுகாப்பில் இவைதான் பெஸ்ட். நம் நாட்டில் நெக்ஸ், AGV போன்ற கார்பன் ஃபைபர் ஹெல்மெட்டுகள் 28,000 ரூபாய் முதல் கிடைக்கின்றன.

எப்படி வாங்க வேண்டும்?

ஹெல்மெட், நம் தலையோடு மிக இறுக்கமாகவும் இருக்கக் கூடாது; மிகத் தளர்வாகவும் இருக்கக் கூடாது. ஹெல்மெட் போட்டுக்கொண்ட பிறகு, தலையை இட வலமாக அசைத்துப் பாருங்கள். லேசாக நகர்ந்தால், அது உங்களுக்குச் சரியான ஹெல்மெட். அதிகமாக நகர்ந்தால், மிகவும் தளர்வாக இருக்கிறது என்று பொருள். காது கேட்க வேண்டும்; காற்று வர வேண்டும் என நீங்கள் தளர்வாக ஹெல்மெட் அணிந்தால், ஸ்பீடு பிரேக்கர்களில் ஹெல்மெட் திரும்ப வாய்ப்பு உண்டு. அதேபோல், இறுக்கமாகவும் இருக்கக் கூடாது. ஹெல்மெட் அணியும்போது, இரு பக்கமும் உள்ள ஸ்ட்ராப்புகளை நன்கு இழுத்து லாக் செய்ய வேண்டும். இதுதான் ஹெல்மெட் அணிய வேண்டிய சரியான முறை.

ஹெல்மெட் ஏன் அணிய வேண்டும்?

இந்தியாவில் 45 சதவிகித விபத்துகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் விபத்துகளே! தலையில் மட்டும் அடிபட்டு மூளைச் சாவு ஏற்பட்டு வாழ்வை இழப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபம். ஹெல்மெட் அணிந்து பைக்கில் சிக்னலில் நின்றுகொண்டிருந்த ஒருவர், தலைக்கு மேலே சாய்ந்து விழுந்த மின் கம்பத்தில் இருந்து உயிர் தப்பிய கதையும் உண்டு. எனவே, சாலை விபத்துகளில் மட்டுமின்றி, பொதுவாகவும் நம் அழகான முகம் பாதுகாப்பாக இருக்க ஹெல்மெட் அவசியம்! ஹெல்மெட்டை சுமையாக நினைக்காதீர்கள்; சுகமாக அனுபவியுங்கள்!

தரமான ஹெல்மெட்டை எப்படிக் கண்டுபிடிப்பது

ஹெல்மெட் அணிவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுப்பது ரொம்ப முக்கியம். காஸ்ட்லியாக வாங்க விரும்புபவர்கள் ஜெர்மன், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த இம்போர்ட்டட் ஹெல்மெட்டுகள் வாங்கலாம். ஐரோப்பா பிராண்டுகளில் ECE குறியீடு இருக்கும். Economic Commissions for Europe என்பதுதான் இதன் சுருக்கம். இதை கவர்ன்மென்ட் ஆஃப் யுகே வெப்சைட்டில் செக் செய்து கொள்ளலாம். வட, தென் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஹெல்மெட்டுகளில் DOT (Department of Transportation) எனும் கோட் நம்பரும் சர்ட்டிஃபிகேட்டும் இருக்கிறதா என்று செக் செய்துகொள்ளுங்கள்.

 நம் ஊர்களில் DOT ஸ்டிக்கர்கள் டூப்ளிகேட்டாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒரிஜினல் ஹெல்மெட்களில் DOT கோடு, மோல்டு செய்யப்பட்டிருப்பதை வைத்துக் கண்டு பிடிக்கலாம். ஜெர்மன் தயாரிப்பில் SCHNELL என்ற குறியீட்டை வைத்துக் கண்டுபிடிக்கலாம். இதில் கவனமாக இருக்க வேண்டும். இந்தியாவுக்கு ISI முத்திரை. இதிலும் நிறைய போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதால், கவனம் தேவை. ISI முத்திரை உண்மைதானா என்பதைக் கண்டறிய, 044-22541442, 22541216 ஆகிய எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அல்லதுwww.bis.org.in   என்ற இணையதளத்தில், ISI மற்றும் CM/L நம்பரை வைத்துச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

Wednesday, July 1, 2015

INTERPRETATION OF ATHITI

INTERPRETATION OF ATHITI.

 

N G Chandorkar found that though he waited for athities, i.e., guests, for a few minutes, after the daily vaiswadeva, none ever turned up and he intended to ask Baba, if the direction in the Vedas to wait for guests was a worthless direction. But when he went to Baba, the latter anticipated the query and thus spoke. 


Baba: Yes. Yes. Guests will come! The devil, they will.

 

N G Chandorkar: True, Baba. I daily offer the Kakabali and go out and wait for guests. they never come.

 

Baba: Nana, the sastras are not in fault. Nor are the Mantras wrong. But their true importance you have not caught.. You get into your head a worthless interpretation and then stand and wait for guests. They will not turn up. Hallo! Does the term 'Athiti" denote a man 3 ½ cubits high and of the Brahmin caste? Athithi is what ever creature is hungry and comes on to you, at that time, whether it is human or a bird, beast or insect, all these seek food. The real Athiti that you get, you do not regard as such. These have come to you in lakhs. Nana, give up your rotten interpretation. At kakabali, take plenty of boiled rice outside the house and leave it there. Do not shout or call for any nor drive away. Whatever the creature that comes to eat, let not that disturb your mind. You get thus the merit of feeding lakhs of guests.

 

 

(from Baba's Charters and Sayings, No. 309)

Guruvaar Prarthna

Guruvaar Prarthna



Our Beloved Sadguru Sainath, please accept our humble prayers on this Holy day of Guruvaar. Baba,let us not feel overburdened with the state of our being. But let us wake up with a song of love and gratitude in our heart. Let us consciously be aware of a greater protecting power around us and hand over our life in trust, so You can go before us and prepare the way, take care and guide us at every step and hold our hand and chaperon us through our daily tasks, work office, and wade us through every difficult situation that arrives. Let us be assured that You will never let anything happen that is not for our ultimate good. And let us allow You work through us and bring relief and good to the world. Baba, on this holy day we start our prayers by reading your divine words in Shri Sai Samartha Satcharita.

 

To ward off the sufferings of the world, Baba, the cloud in the form of the Supreme Spirit, showered that water in the form of contentment to quench the thirst of the devotees, who were like the chataks  (birds).

 

Baba said: "Mother, tell me the truth. Why do you torment yourself? I am a mere fakir who begs for alms. Look at me kindly.

 

Really speaking, I am like a son and you the mother. Now pay attention to me. I will tell you about an amazing thing, which will make you very happy.

 

I had a Guru who was a great Aulia, an ocean of kindness. I served him, as much as I could, but he would not whisper any mantras to me.

 

I too had a great longing to receive a mantra from his lips, whatever efforts I may have to put in. I resolved never to leave him.

 

In the beginning he had my head shaved and asked for only two pice, which I gave immediately. I ardently prayed for him to give me those magical words of a mantra.

 

My Guru was a person who had fulfilled all desires. Why did he need two pice? and how could I call him desireless who asked money from a disciple?

 

Never have such doubts. He did not wish for the coins of the realm. That was not his idea at all. What use did he have for bullion?

 

Faith and Patience – these were the two (pice) – and nothing else. I gave them immediately, by which, my Guru was pleased with me, who was like my mother.

 

Courage is itself patience, oh woman. Never let it leave you! In times of difficulties, it will stand you in good stead.

 

The valour of a human being lies in being patient. It wards off the sins, worries and miseries. The difficulties are cleared, in some way or the other; and fear and panic vanish.

 

I bow down to Sree Ganesh

I bow down to Sree Saraswati

I bow down to the Guru

I bow down to the Family Deity

I bow down to Sree Sita-Ramachandra

I bow down to Sree Sadguru Sainath.

 

 

-(from Shri Sai Samartha Satchrita, Chapter  19, Ovi 44 - 54)

http://babaprayers.blogspot.in/