சில பிரபல நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு, தீபாவளி வாழ்த்து, பொங்கல் வாழ்த்து, பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவதற்காக, ஒரு நோட் புக்கை கொடுத்து, முகவரி மற்றும் மொபைல் எண்ணை எழுதித் தரும்படி கேட்கின்றனர்.
அழகான இளம் பெண்கள் சிலர், அதை, தங்களுக்கு கிடைத்த பெருமையாக நினைத்து, எல்லா விவரங்களையும் தெளிவாக எழுதிக் கொடுத்து விடுகின்றனர். அப்படி, தன்னுடைய மொபைல் எண் கொடுத்த, எனக்கு தெரிந்த ஒரு இளம் பெண்ணுக்கு, அந்தக் கடையில் வேலை செய்யும் ஒரு ஊழியன், பர்சேஸ் செய்யும் போது, சிரித்துப் பேசிய, அந்த இளம் பெண்ணை தவறாகப் புரிந்து கொண்டு மொபைலில் செக்ஸ் டார்ச்சர் கொடுத்திருக்கிறான். அதோடு, வேண்டாத எஸ்.எம்.எஸ்.,களையும் அனுப்பியிருக்கிறான்.
பெண்களே... நீங்கள், உங்க மொபைல் எண்களை, பொது இடங்களில், எக்காரணத்தை கொண்டும் தராதீங்க! கண்ட இடத்தில் மொபைல் நம்பரை கொடுத்து, எனக்கு அப்படி டார்ச்சர் வந்தது, இப்படி எஸ்.எம்.எஸ்., வந்தது என்று அழுது புலம்புவதில் பிரயோசனம் இல்லை.

இந்த பிரச்னையை பெரும் சிரமப்பட்டு தீர்த்து வைத்துள்ளனர். தேவை தானா... இது உங்களுக்கு?
பெண்களே... நீங்கள், உங்க மொபைல் எண்களை, பொது இடங்களில், எக்காரணத்தை கொண்டும் தராதீங்க! கண்ட இடத்தில் மொபைல் நம்பரை கொடுத்து, எனக்கு அப்படி டார்ச்சர் வந்தது, இப்படி எஸ்.எம்.எஸ்., வந்தது என்று அழுது புலம்புவதில் பிரயோசனம் இல்லை.
(தினமலர் செய்தி, 19/05/13)