கயமையே உருவாக ஒரு கணவன்' என்ற தலைப்பில், கடந்த இதழின் 'என் டைரி' பகுதியில் ஒரு கடிதம் இடம்பிடித்திருந்தது. அது, கணவனால் தான் படும் துன்பம் பற்றி வாசகி ஒருவர் எழுதியிருந்த கடிதம். அதைப் படித்த அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு வாசகி (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) நம்மை போனில் தொடர்புகொண்டார். திருமணமாகி கணவனுடன் அமெரிக்கா செல்லும் நம் பெண்கள், அங்கே படும்பாடுகளை ஒவ்வொன்றாக அவர் எடுத்துவைக்க... நம் கண்கள் குளமாகின! Tuesday, June 17, 2014
கல்யாணமாகி, நிறைஞ்ச முகத்தோடதான் அமெரிக்கா போறாங்க. ஆனா......
கயமையே உருவாக ஒரு கணவன்' என்ற தலைப்பில், கடந்த இதழின் 'என் டைரி' பகுதியில் ஒரு கடிதம் இடம்பிடித்திருந்தது. அது, கணவனால் தான் படும் துன்பம் பற்றி வாசகி ஒருவர் எழுதியிருந்த கடிதம். அதைப் படித்த அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு வாசகி (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) நம்மை போனில் தொடர்புகொண்டார். திருமணமாகி கணவனுடன் அமெரிக்கா செல்லும் நம் பெண்கள், அங்கே படும்பாடுகளை ஒவ்வொன்றாக அவர் எடுத்துவைக்க... நம் கண்கள் குளமாகின! Thursday, June 12, 2014
தயாரித்த விடைகள் வாழ்க்கையில் வெற்றிகளைத் தருவதில்லை;
ஆன்மிகத்தை போதிப்பவர்கள், தயாரிக்கப்பட்ட விடையைத் தந்து சீடர்கள் தேர்ச்சி பெறுவதை விரும்புவதில்லை. உண்மையைத் தேடுவதுதான் முக்கியமே தவிர, தேர்வுக்குப் படிக்கும் மாணவனைப்போல், விடையைக் கண்டு பிடிப்பது முக்கியம் அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான தேர்வு நடக்கும் பயிற்சி அது!
மற்றவருடையது அழுக்காக இருக்கிறது. யார் முகத்தைக் கழுவுவார்?' என்று கேட்டார்.
Monday, June 9, 2014
JOB INTERVIEW - நேர்காணல் தரும் பதற்றத்தை எப்படிக் குறைப்பது?
Monday, June 2, 2014
பழியைச் சுமத்துபவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்
பிட்டுக்கு மண் சுமந்த கதையும் ஒரு மாறுபட்ட சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதுதான். பரியை நரியாக மாற்றிய சிவபெருமான், அரிமர்த்த பாண்டியன், மாணிக்கவாசகருக்குத் தண்டனை தந்தது குறித்த உண்மை நிலையை உணர்த்த, வைகையாற்றில் வெள்ளம் வரச்செய்கிறார். வெள்ளமோ கரையை உடைத்துக்கொண்டு ஓடுகிறது. மீண்டும் வெள்ளம் வராமல் இருக்க, கரையை உயர்த்தும் பணியில் மக்களை மன்னன் ஈடுபடச் செய்கிறான். பிட்டு தயாரிக்கும் பெண்மணி, தனக்கு வாரிசு இல்லாததால் யாரை தன் சார்பாக வேலைக்கு அனுப்புவது என்று குழம்பி நிற்கும்போது, சிவபெருமான் இளைஞனாக வருகிறார்.
நீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா ???
1. உங்களது குடிப்பழக்கத்தால், உங்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியிழந்து விட்டதா
இந்த, 10 கேள்விகளில் எந்தக் கேள்வியும் உங்களுக்குப் பொருந்தவில்லை எனில், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையில்லை; ஆனால், அடிமையாகி விடாமல், உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள்.
Saturday, May 24, 2014
அந்த குழந்தையின் சிரிப்பொலி.
நல்ல மழை.வானம் தூறிக்கொண்டே இருந்தது. மின்சாரம் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருந்தது.கைத்தொலைபேசியில் மணியை பார்த்தான் சுப்பையா. அது எட்டை காட்டியது.
'காலையிலிருந்து ஒரு போன் வரல. இதுக்கு வேற அப்பப்போ காசு போட வேண்டியிருக்கு. மணிபாக்கத்தான் இது லாயக்கு, இனிமேல் யாரு நம்ம கடைக்கு வரப்போகிறார்கள்' என்று நினைத்தபடி கடையை அடைக்கும் முயற்சியில் இறங்கினான்.
சுப்பையா ஒரு நடுத்தரவாதி. ஊர் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துபவன். அவன் கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் அவன் வீடு. மனைவி, பத்தாவது படிக்கும் ஒரு மகன் என்று குடும்பத்தை வைத்திருப்பவன்.
மாலை வீட்டிலிருந்து தேநீர் வந்த தூக்கு வாளியைஎடுத்து ஒரு துணிப்பைக்குள் வைத்தவன், மழையில் நனைந்து விடுமோ என்ற கவலையில் தன் அலைபேசியையும் ஒரு பேப்பரில் சுற்றி கவனமாக அந்த துணிப்பைக்குள் வைத்தான். வெளியில் வந்து தன் சைக்கிளை நகட்டினான். சைக்கிளில் காற்று இறங்கி போயிருந்தது.
'சே....இந்த நேரத்தில் இப்படி பழிவாங்கிவிட்டதே' என்றவாறு சைக்கிளை கடையிலேயே வைத்து பூட்டிவிட்டு நடக்கலானான். இருட்டைப் பார்த்ததும் ஒருவித பயம் அவனுள் தொற்றியது. இன்று மதியம் இவன் பார்த்த இறந்து போன ஒரு குழந்தையின் சவ ஊர்வலம் வேறு நினைவிற்கு வந்து அவனை மேலும் பீதிக்குள்ளாக்கியது.
நடையை இன்னும் வேகமாக்கினான். திடீர் என்று ஒரு குழந்தையின் சிரிப்பொலி மிக அருகில் கேட்டது. ஒரு வித கலக்கத்துடன் 'மதியம் பார்த்த சவ ஊர்வலத்தையே நினைத்துக்கொண்டு நடந்ததால் பிரம்மையாக இருக்கும்' என்று நினைத்தபடி சிறிது நேரம் நின்றான்.
இப்போது சிரிப்பொலியை காணோம். மறுபடியும் நடக்கலானான். சிறிது தூரம் சென்றிருப்பான். மீண்டும் அதே குழந்தையின் சிரிப்பு சத்தம். இவன் பயத்தில் ஓட ஆரம்பித்தான். கூடவே வந்தது அந்த சத்தமும். ஒரு வழியாக வீட்டை அடைந்தான்.
"என்னங்க.... சீக்கிரமே கடையை அடச்சுட்டீங்க போல"
"மழை வேற... கரண்டும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. அதான் நேரத்தோட அடச்சுட்டேன்"
"அதாங்க.... வரும்போது மெழுகுவர்த்தி வாங்கி வரச் சொல்லலாம்ன்னு உங்களுக்கு போன் அடிச்சேன். எடுக்கவே இல்லை. ஏன் போன கடையிலேயே வச்சுட்டு வந்துட்டீங்களா?"
"இல்லையே நனைஞ்சாலும் நனைஞ்சுரும்ன்னு பையில்தான் இருக்கு. நீ போன் அடிக்கவே இல்லையே"
"நான் அடிச்சேன் உங்களுக்கு விளங்கல போல...."
"இல்ல... நீ போன் போடவே இல்ல... நான் பக்கத்துலதான வச்சுருந்தேன்."
"இல்லைங்க காலையில நம்ம பய உங்க போன எடுத்து என்னவோ பண்ணிட்டு இருந்தான். அதான் ஏதும் ஆச்சோ... எதுக்கும்... நீங்க போன எடுத்து பாருங்க தெரியும்."
"அப்பா நான் ஒண்ணும் பண்ணல. ரிங் டோன் தான் மாத்திவச்சேன்" என்றான் அவன் மகன்.
"எதுக்கும் இப்ப ஒரு தடவ போன் போடு. பாத்திடலாம்."
போன் அடித்தாள். அங்கே ரிங் டோனாக வந்தது அந்த குழந்தையின் சிரிப்பொலி.
இது கல்யாணப் பூங்கா
வரன் பார்க்க வேண்டும் என்றால் தரகரைப் பார்க்கப் போவோம் அல்லது ஏதாவது மேட்ரிமோனியல் சைட்டைத் தட்டுவோம். ஆனால் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரத்திலோ பூங்காவுக்குப் போகிறார்கள். ''அங்க ஏம்வே போறாய்ங்க?''னு கேட்கிறீங்களா?
2004-ம் ஆண்டு. காதலில் தோல்வியுற்று மனம் வெறுத்துப்போனவள் தன் படத்துடன் தன்னைப் பற்றிய குறிப்புகளும் எழுதி சீனாவின் ஷாங்காய் நகரத்தில் உள்ள மக்கள் பூங்கா ஒன்றில் ஒட்டிவிட்டுப் போனாள். அதை படித்து நிறையப் பேர் அவளை போனில் அழைக்க, தனக்குப் பிடித்தமான ஓர் ஆணைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்துகொண்டாள். இந்தச் செய்தி நாளிதழ்களில் வெளிவர, பல பெண்களும் ஆண்களும் இங்கு தங்களின் குறிப்புகளை எழுதி லேமினேட் செய்து மாட்டிவிட்டனர். இன்று உலகிலேயே மிகப்பெரிய திருமண சந்தையாக ஷாங்காய் பூங்கா மாறிவிட்டது.
'1980-களில் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஒரு குடும்பத்துக்கு ஒரு வாரிசுதான் என்று சீன அரசு அறிவித்தது. அதன் பின் பிறந்த குழந்தைகள் வீட்டில் தனித்தே வாழ்ந்து பழகியதால், எதிர் பாலினத்தாரிடம் எப்படிப் பழகுவதென்பதே தெரிவது இல்லை. எனவே இங்கு பிடித்தமான குறிப்புகளைப் பார்த்து அவர்களே ஒருவரை ஒருவர் பேசி முடிவு செய்கிறார்கள்'' என்கிறார் தன் மகனுக்காக பூங்காவுக்குப் பெண் பார்க்கவந்த சாங் லீ.
அதே ஷாங்காய் மக்கள் பூங்காவில் அரசின் அனுமதியோடு லீ என்ற ஒரு பெண் தகவல் நிலையம் நடத்திவருகிறார். அதாவது ஆயிரக்கணக்கில் குறிப்புகள் ஒட்டப்பட்டிருப்பதால், தேர்ந்தெடுக்க மிகுந்த நேரமாவதால் இங்கு பதிவு செய்தால் தகவல்களை மின்னஞ்சலிலேயே அனுப்பிவிடுகிறாராம். ஆண்களுக்கு இலவசமாம். பெண்களுக்கு 500 டாலர் கட்டணம் என்று வசூலிக்கிறார்.
''ஆண்கள் பொறுமையாக ஆயிரக்கணக்கான குறிப்புகளைப் படித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள். பெண்கள் அவசரப்படுவதால் இந்தக் கட்டணம்'' என்று சிரிக்கிறார். அதைவிட வேறொன்றும் உள்ளது. சீனாவின் மக்கள் தொகை அடிப்படையில் 100 ஆண்களுக்கு 134 பெண்கள் என்று இருக்கின்றதாம். எனவே சீனாவில் ஆண்களுக்கு செம கிராக்கி!
Friday, May 23, 2014
கருவறையில் பாடம் கேட்கும் குழந்தை
தாயைப் போலப் பிள்ளை நூலைப் போல சேலை என ஒரு பழமொழி உள்ளது. பொதுவாக ஒரு குழந்தையின் குணங்கள் தாய், தகப்பனை ஒட்டியே அமையும் என்பது நமது நம்பிக்கை. தாயின் குணங்களும் தந்தையின் குணங்களும் அவர்களுடைய மூதாதையரின் குணங்களும் மரபணு வழியாகக் குழந்தைக்குக் கடத்தப்படுகின்றன என்று மரபியல் சொல்கிறது.
நமது குணாதிசயங்கள் அனைத்தும் மரபணுவின் டிஎன்ஏவில் உள்ள குறிப்புகளின் பிரகாரமே அமையும் என்றும் அந்தக் குறிப்புகள் பெற்றோரின் மரபணுவிலிருந்து கடத்தப்படும் என்றும் கருதப்படுகிறது. ஆனால் தற்போது சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர் கெயித் காட்ப்ரே இந்த நம்பிக்கையின் ஆணிவேரை அசைத்துள்ளார்.
கருவிலுள்ள குழந்தையின் மரபணு, டிஎன்ஏ தொடர்பான ஆய்வொன்றை அவர் மேற்கொண்டுள்ளார். புற உலகம் சார்ந்து டிஎன்ஏவில் பதிவாகும் குறிப்புகளை ஆராய்ச்சி செய்துள்ளார். சீனர்கள் 131 பேர், மலேசியர்கள் 72 பேர், இந்தியர்கள் 34 பேர் ஆகியோர் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கருவில் உள்ள குழந்தையின் மரபணுவில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தாயின் வாழ்வியல் நடவடிக்கைகள் - உண்பது, குடிப்பது, உரையாடுவது உள்ளிட்டவை - முக்கியக் காரணங்களாக உள்ளன என்று அந்த ஆய்வு முடிவில் அவர் கண்டறிந்துள்ளார். இதைக் கேட்கும்போது அபிமன்யுவின் கதைதான் நமக்கு நினைவில் வருகிறது. கிருஷ்ணனின் தங்கை சுபத்திரைக்கும் அர்ச்சுனனுக்கும் பிறந்த மகன் அபிமன்யு.
இவன் வயிற்றிலிருக்கும்போதே அவனுக்குக் கதைகளாகச் சொன்னாள் சுபத்திரை என்று மகாபாரதம் சொல்கிறது. இதை வெறும் புராணம் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது என்பது போல் இந்த ஆய்வு அமைந்துள்ளது.
ஒரு வீணை இருக்கிறது. அதை யாராவது மீட்டும்போது அதிலிருந்து இனிமையான இசை வெளிப்படுகிறது. கருப்பையிலுள்ள குழந்தையின் மரபணுக்களை ஒரு வீணை போல நினைத்துக்கொள்ளுங்கள். அந்த மரபணு வெளி உலகில் நடக்கும் நடவடிக்கைகள் காரணமாக மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. இந்த மாற்றங்கள் குழந்தையின் குணாதிசயங்களை வடிவமைக்கின்றன, அதாவது ஒரு வீணையை மீட்டி மெல்லிசையைத் தவழவிடுவது போல.
இசைக்குத் தொடர்பே இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையின் தாய், கருவில் குழந்தை உள்ளபோது ஏதாவது ஒரு இசைக் கச்சேரிக்குச் செல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது குழந்தையின் டிஎன்ஏவில் இசை தொடர்பான பதிவுகள் உருவாகின்றன. இதனால் எதிர்காலத்தில் அந்தக் குழந்தை இசைத் துறைக்குள் நுழையக்கூடும்.
தாய், தந்தை மரபணு காரணமாகக் குழந்தையின் மரபணுவில் உருவாகும் குணாதிசயங்கள் வெறும் 25 சதவீத அளவிலேயே அமைகிறது என்றும் ஏனைய 75 சதவீதத்தைக் கர்ப்ப காலத்திலான தாயின் நடவடிக்கைகளே நிர்ணயிக்கின்றன என்றும் இந்தப் புதிய ஆய்வு மூலம் பேராசிரியர் கெயித் வலியுறுத்துகிறார்.
உடல் பருமன், இதய நோய் போன்றவை மரபணு வழியாகக் கருவிலுள்ள குழந்தைக்குக் கடத்தப்பட்டு வந்திருக்கலாம் எனும் நம்பிக்கையே இதுவரை நிலவிவந்தது. ஆனால் இத்தகைய மரபணு ரீதியான மாற்றங்கள் குழந்தையின் குணாதிசயங்களில் குறைந்த அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனப் பேராசிரியர் கெயித் தெரிவிக்கிறார்.
எதிர்காலத்தில் புற உலக நடவடிக்கைகள் மரபணுவில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பான ஆராய்ச்சிக்கான முன்மாதிரி போல் இந்த ஆய்வு நடந்துள்ளது என்றும் தாயின் சத்துமிக்க உணவுப் பழக்கம், வாழ்வியல் முறை சார்ந்து ஆகியவை அவளுடைய குழந்தையின் உடல்நலனில் ஏற்படும் மாற்றத்தை இதன் மூலம் ஆராய்ந்துள்ளோம் என்றும் பேராசிரியர் கெயித் கூறுகிறார்.
Thursday, May 22, 2014
வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டுவைத்தியம்
எந்தக் குறையுமில்லை – மருமகளின் காலில் தோன்றிய கடுகளவு வெண்புள்ளி தவிர. சிரிப்பால் மறைத்துக் கொண்டிருந்தாள் சில காலம், பின்னர் சிரிப்பை மறந்தாள் சில காலம். அவளுக்கு ஓர் குற்ற உணர்வு காரணமே இல்லாமல். பூவைத் தொடுவது போல் நாங்கள் அவளைத் தொட்டாலும், தீயைத் தொடுவதுபோல் அவள் எங்களைத் தீண்டினாள். அதிக அன்பு செலுத்திப் பார்த்தும், தோல்வியே மிஞ்சியது எங்களுக்கு.
எங்களைவிட ஆங்கில மருத்துவத்தின் மீது அபார நம்பிக்கை அவளுக்கு. மருந்துகளின் எண்ணிக்கையும், டாக்டர்களின் எண்ணிக்கையும் கூடக்கூட வெண்தேமல் பரவும் வேகம் அதிகமாயிற்று. முடிவு???? வழக்கம்போல் தான் ---கிட்னி பிராப்ளம், ஹார்ட் பிராப்ளம், மூச்சுத் திணறல்....... பிறகு ஒரு நாள் ஹேமாவுக்கு வந்தது கோமா. அவளாக பயந்து, ஆங்கில வைத்தியத்தை அடியோடு விட்டு விட்டாள். அவள் முகத்தில் சிரிப்பு இல்லாததால் நாங்களும் சிரிக்க முடியவில்லை. ஒரு நாள் சித்த வைத்தியர் வடிவில் தெய்வம் அவளுக்குக் காட்சி அளித்தது.
"சின்ன வைத்தியம் ஒன்று சொல்கிறேன் சீரியஸாக எடுத்துக் கொள்வாயா?" என்று கேட்டார்.
" சீரியஸான வைத்தியங்களே என்னை சின்னப்படுத்திவிட்டபின், சின்ன வைத்தியம் என்னை என்ன செய்துவிடும்? சொல்லுங்கள் செய்கிறேன் " என்றாள்.
"காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவா" என்றார்.
"ப் பூ .... இவ்வளவுதானா? " என்றாள்.
"நிறைய நீர் குடி. உணவைக் குறைத்து பழங்கள் பல சாப்பிடு" என்றார்.
"பத்தியம் ஏதேனும் உண்டா?" என்றாள்
"சொல்ல மறந்துவிட்டேன். வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது " என்றார். சனியனை விட்டு ஒழித்ததால் பிணியிலிருந்து விடுதலை பெற்றாள் எங்கள் குலமகள்.
"உலகத்திற்கு இதைச் சொல்லவேண்டும் மாமா " என்றாள்.
"இணைய தளத்தில் பரிமாரக் காத்திருக்கிறார்கள் இனிய நண்பர்கள், உன்னுடைய போன் நம்பர் கொடுக்கத் தயாரா? " என்றேன்.
அதற்கு "போட்டோக்களும் தருகிறேன் மாமா" என்றாள்.
"எத்தனை வேதனைப்பட்டிருந்தால் அடுத்தவர்க்கு இது பயன்படட்டும் என்ற துணிவோடு போட்டோக்களைக் கொடுக்க முன் வருவாள்" என்று எண்ணி நாங்கள் பாராட்டினோம் அவளை. நீங்களும் வாழ்த்துங்கள். வாழட்டும் அவள் இன்னுமொரு நூறாண்டு சுமங்கலியாக
மது. இராமகிருஷ்ணன்
இயற்கை விவசாயி
சந்தோஷ் பார்ம்ஸ்
பொள்ளாச்சி -642 114.
திருமதி. ஹேமா உமாசங்கர்
கைபேசி எண்.85262 32442 ( தயவு செய்து மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை)
by Vincent
Pasumai Vidiyal
Source
http://www.usetamil.com/t31338-topic#49899





