Friday, May 31, 2013

உலகம் மறைத்தது பாதி, தமிழன் மறந்தது பாதி!


உலகம் மறைத்தது பாதி, தமிழன் மறந்தது பாதி! 
குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.
சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"

புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி. இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,

"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார். 

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர். 

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்.. 

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு : தமிழும் சம(ஸ்)கிருதமும் சித்தர்கள் மொழியாகவுள்ளது. அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப் பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

Baba's Letter to you

Dear Child,

      I see your loneliness and fears, your guilt and frustrations.  I see your endless search for love and fulfillment.  All this must be, in order for you to come to the end of your own understanding--then you can hear My voice.  Listen carefully amid the noise of the world and you will hear...

      I love you, I shed my blood for you to make you clean.  Give yourself completely to Me.  I created you to be just as you are, and you are lovely in My eyes.  Do not criticize yourself or become depressed for not being perfect in your own eyes.  In Me you have been made perfect.  I want you to trust Me one step, one day, one second at a time.  Dwell in My power and My love and be free, be yourself.  Don't allow other people to control you.  I will guide you, if you let Me, but be aware of My presence in everything.

      I give to you patience, love, joy, and peace.  Look to Me for answers for I am your Father and will lead you.  Follow Me only!  Do not ever forget this!  Listen and I will tell you My will.

      Let My love flow from you and spill over to all you touch.  Be not concerned with yourself - you are My responsibility.  I will change you without your ever knowing it.  You are to love yourself and others, simply because I love you.  Take your eyes off yourself, look only to Me, I lead, I change, I create, but only when you are not striving.  You are mine... Let Me have the joy of making you like Lord.

      Your only command is to look to Me, and Me only...  never to yourself and never to others.  Do not struggle, but relax in My love.  I know what is best and will do it in you.  Stop trying to become, and let Me make you what I want.

      My will is perfect; My love is sufficient.  I will supply all your needs...  only look to Me.

I Love You,

Your Father 

Marriage – the facts you need to know - 45

Marriage – the facts you need to know - 45

 

·         You need to know to not get comfortable with her making more money than you do.

·         You need to know your wife could have three personalities in one day: full-time employee, working mom, and full-time wife.

·         You need to know it's her nature to beat a subject to death, pick it up, kill it again, then burn it, then gather all the ashes together, and beat it again. It's a gift only women have. You still have to listen.

·         You need to know menopause affects husbands and wives. No matter which one is going through it.

·         You need to know men go through a form of menopause too. True.

·         You need to know millions of couples have successfully navigated menopause without a divorce.

·         You need to know menopause is a time when the sheets can get sweated up without anybody doing anything.

·         You need to know women tend be hot, cold, ecstatic, and suicidal all within a two-minute period. Men tend to remain confused.

·         You need to know a man in menopause is very much like a thirteen-year-old boy. Lost, dazed, and not sure what to do next.

·         You need to know that women in menopause tend to cry. Men tend to withdraw.

·         You need to know problems arise when both husband and wife hit menopause at the same time.

·         You need to know she could be dripping sweat while he's wearing his parka.

·         You need to know men feel helpless when their wives go through menopause. You can't stop the sweating, you can't stop the crying. The only thing you can stop is worrying about it.

·         You need to know that when a woman is suffering through menopause, men can't do anything right. Simply asking "How do you feel?" could launch World War III.

·         You need to know to tell each other how great they look in reading glasses.

·         You need to know it's best to not make any major decisions during this time. Not about your relationship or plastic surgery or getting a tattoo.

·         You need to know that getting into an argument with someone whose hormones are out of whack is a suicide mission.

·         You need to know this too shall pass. Sometime. Far, far out in the future. May be.

·         You need to know that a woman thinks about her wedding all her life. He hasn't thought about it two minutes. He doesn't know what kind of lowers he wants. He doesn't care what the color theme should be.

·         You need to know men and women think about housework differently. For one thing, women think about it.

 

நோய் எதிர்ப்பு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தீர்வா? தீங்கா?

''சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, உடல்வலி என்று ஏதாவது அடிக்கடி வந்து நம்மை பெரும் அவஸ்தையில் முடக்கிவிடுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல்போனால், பல்வேறு நோய்களும் படையெடுக்கத்தானே செய்யும். 

இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் நோய் எதிர்ப்பு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் ஒழுங்காக வேலைசெய்கிறதா? ஓரு மாத்திரைக்கு இரண்டு மாத்திரைகள் போட்டாலும், பலருக்குப் பாதிப்பு குறைவதே இல்லை.

''மருத்துவ ஆலோசனை இன்றி, கடைகளில் வாங்கி உட்கொள்ளும் மருந்துகளால், நம் உடலில் இருக்கும் நோய்க் கிருமிகள் நோய் எதிர்ப்பு சக்திக்குப் பழகிவிடுகின்றன' என்ற தகவல் அதிரவைக்கிறது.

''நோய்களுக்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோதே அதை உருவாக்குகிற பாக்டீரியாவைக் கொல்லும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன. ஆன்டிபயாட்டிக் என்றால், உயிரியல் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டு, நோய்க் கிருமிகளான பாக்டீரியாவை அழிக்கும் திறனுள்ளவை என்பது பொருள்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏகப்பட்ட நோய்க் கிருமிகள் நோயைப் பரப்பக் காத்திருந்தாலும், உடலில் போதுமான எதிர்ப்பு சக்தி இருக்கும் வரை எந்தக் கிருமியும் நம்மிடம் நெருங்காது. கிருமியின் வீரியம் அதிகமாகும்போதோ, உடல் எதிர்ப்பு சக்தி குறையும்போதோதான் நோய் நம்மைத் தாக்குகிறது. எந்தக் கிருமி தாக்கியிருக்கிறது, அதை அழிக்க எந்த மருந்தை என்ன அளவில், எத்தனை நாள், எந்த முறையில் கொடுக்க வேண்டும் என்பதை ஒரு மருத்துவர்தான் தீர்மானிப்பார். ஆனால், பொதுவாக அந்த மருந்தை எவ்வளவு வாங்குவது என்பதை, பணமும் மருந்தின் விலையுமே தீர்மானிக்கின்றன. நோயின் அறிகுறிகள் சற்றே குறைந்தாலும், மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடுகிறார்கள் பல நோயாளிகள். தீ, பகை, கடன், நோய் இவற்றை முழுவதும் அழிக்காமல் விட்டுவிட்டால், மீண்டும் பல்கிப் பெருகி பெரும் சேதத்தை உண்டுபண்ணும். பாதியிலேயே மருந்தை நிறுத்தும்போது, மருந்துகளுக்கு நோய்  கட்டுப்படாமல், அதை எதிர்க்கும் சக்தியை பாக்டீரியா உருவாக்கிக்கொள்கிறது. அதாவது, நோய் பரப்பும் கிருமியை விரட்டுவதற்காகக் கொடுக்கப்படும் மருந்தை பாதியிலேயே நிறுத்திவிடுவதால், அரைகுறையாகக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கிருமி இன்னும் பலம்பெற்றுவிடுகிறது. இப்படிப் பெரும்பாலான நோய்க் கிருமிகள் எந்த மருந்துக்கும் கட்டுப்படாத சூப்பர் கிருமிகளாக, வளர்ந்து, மருத்துவ உலகையே அச்சுறுத்துகிறது. எனவேதான் உலக சுகாதார நிறுவனம். 'தேவை இல்லாதபோது ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவது மிகவும் தவறான பழக்கம். அதை உடனடியாக நிறுத்துங்கள்' என எச்சரிக்கை செய்திருக்கிறது.

நோ ஆன்டிபயாட்டிக்

'பொதுவாக, வைரஸ் நோய்களான சளி, சாதாரணக் காய்ச்சல், அம்மை, அக்கி, மஞ்சள் காமாலை போன்ற பல நோய்களுக்கு, ஆன்டிபயாட்டிக் மருந்து தேவை இல்லை. காரணம், அவை நோயைக் குணப்படுத்தாமல், தேவையில்லாத பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும்.

தேவையில்லாத சமயத்தில், ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உபயோகித்தால், அந்த மருந்துகள் கிருமிகளைக் கொல்வதோடு நிறுத்திவிடாமல், ஜீரண சக்திக்கும், பி12 போன்ற உயிர்சத்துகளைத் தரும் நல்ல பாக்டீரியாவையும் கொன்றுவிடுகின்றன. இதனால், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று எரிச்சல், அலர்ஜி போன்றவையும் ஏற்படக்கூடும்.

தேவையில்லாத இடங்களில் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும். நோயாளிகள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மருத்துவரின் அனுமதி இல்லாமல் வாங்குவதை அரசு தடைசெய்ய வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த தலைமுறைக்கும் நோய்கள், மருந்துக்குக் கட்டுப்படாத கிருமிகள் இருக்கும். ஆனால் அதற்கான ஆன்டிபயாட்டிக் மருந்துகள் இருக்காது' என்று முடித்தார்.

'நூற்றுக்கு இரண்டு பேர் சாதாரணக் காய்ச்சல் வந்து இறக்கின்றனர். காரணம், அவர்களுக்குத் தரப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்யாததுதான்' 

''நடைமுறையில் எந்தப் பரிசோதனையும் செய்யாமலேயே மருந்துகளைப் பெரும்பாலான மருத்துவர்கள் எழுதித் தருகிறார்கள். மேலும் வயிற்றுவலி வந்த ஒருவர் மருந்துக் கடைக்குப் போய், 'எனக்கு வயித்து வலி. ஏதாவது மாத்திரை கொடுங்க' என்று கேட்பதும், கடைக்காரர் ஒரு மாத்திரையை எடுத்துக் கொடுத்துவிடுவதும் சர்வசாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சி. பல இடங்களில் நோயாளிகளின் பாதிப்புக்குத் தேவையான மருந்து கொடுக்கப்படாமலும், தேவை இல்லாத மருந்து கொடுக்கப்படுவதும் நிகழ்கிறது. இதனால் உடலில் நன்மை செய்யும் பாக்டீரி அழிகின்றன: புதிதாகத் தோன்றும் பாக்டீரியா, மாத்திரை மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் பெருகுகின்றன. இதைத்தான் 'டிரக் - ரெசிஸ்டென்ட்' நிலை என்கிறோம்.

ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எதிர்க்கும் கிருமிகள் இருபதே நிமிடங்களில் இரு மடங்காக வளரும் ஆற்றல் படைத்தவை. நன்றாக இருக்கும்போது அவை ஒன்றும் செய்யாது, விபத்து, அவசர சிகிச்சை காலங்களில் ஆன்டிபயாட்டிக் கொடுக்கும்போது தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.''

'ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்யாததை, எப்படி அறிந்துகொள்வது?' 

''இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் எந்த நோய்க்கு மருந்து சாப்பிடுகிறோமோ, அது கட்டுப்படாமல் இருக்கும். அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். தாங்க இயலாத வயிற்று வலி ஏற்படும். திடீரென்று சருமத்தில் தடிப்பு, வீக்கம், கட்டி அல்லது சதையில் பளபளப்பு தோன்றும்.

மருந்துகளுக்குக் கட்டுப்படாத வீரியத்துடன் இருக்கும் பாக்டீரியாவைக் கட்டுப்படுத்த, புதிய மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது வருத்தமான விஷயம். எவ்விதக் கட்டுக்குள்ளும் வராமல், யார் வேண்டுமானாலும், எந்த மருந்துகளையும் பரிந்துரைக்கலாம் என்ற நிலை மாற வேண்டும். நோய்கள், புதிய தொற்றுக்கள், கண்டறிந்த தகவல்கள் போன்றவற்றை பொது சுகாதாரத் துறைக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவதன் மூலம், இந்த பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்!''

 மருந்தில் கவனம்!

 மருந்துகளை வாங்கும்போது, அதன் உற்பத்தித் தேதி, காலாவதியாகும் தேதியைக் கவனிக்கவேண்டும்.  

 அரசு அங்கீகாரம் பெற்ற மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும்.

 மருந்துச் சீட்டில் டாக்டர் பரிந்துரைத்திருக்கும் மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.

 மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளுக்கு மாற்றாக வேறு ஒன்றை மருந்துக்கடைக்காரர் பரிந்துரைத்தாலும் அம்மருந்துகளை வாங்கக் கூடாது.

 மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத ஈரம்படாத இடத்தில் வைக்க வேண்டும்.

 உங்களுக்கு இருக்கும் நோயின் அறிகுறிகள் வேறு ஒருவருக்கு இருந்தாலும், நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளை அவருக்கு பரிந்துரைக்கக்கூடாது.  

Thursday, May 30, 2013

7 Simple steps to live in the present…

7 Simple steps to live in the present…

1.      Dance like nobody's watching.

2.      Take notice of the world.

3.      Focus on whatever you're doing.

4.      Smile when you wake up.

5.      Commit random, spontaneous acts of kindness.

6.      Minimize activities that dull your awareness of the moment.

7.     Be thankful for what is.
 
1.      Dance like nobody's watching. While you may or may not like dancing, no matter who's not watching, the idea embodied in those 4 words sums the entire experience of living in the moment.

·        If you care—if you even consider—who's looking, you're performing. Your goal is to dance well, to impress (or at least not disappoint) your audience. To live in the moment, to "dance like nobody's watching," you have to forget about performing for others and simply accept the moment for what it is.

2.      Take notice of the world. No matter what you're doing, notice the moments that surround you. Maybe on your way to work or school, you go over a beautiful bridge, or you get a view of the sunrise behind the city buildings.

·        When you walk down the street, look at the way the light reflects off the buildings, the tree line, and the birds that manage to nest in random corners and cracks. The simple act of tilting your chin can give you a whole new perspective on the place you live.

·        Really look at a flower. Okay, so you know it's pretty. What is pretty? What does it smell like, besides itself? How many petals does it have? Do the leaves spiral up the stem like a staircase or branch out on opposite sides every now and then? Are there any bugs going about their lives on this plant? Do you think they're even aware of your existence?

·        Realizing that whether these things are great or small, you are part of that singular moment when all these things come together. When you realize you are a part of every moment that you've lived through, you'll be almost there. When you stop realizing it, and just live it, you will be all the way there.

3.      Focus on whatever you're doing. Even if you're just walking, or wiping the counter, or shuffling cards—how does it feel? There's probably some kind of commentary spinning through your mind, and it probably has to do with something other than what you're doing. Let those thoughts go and focus on what is (not what was, or what could be). In Buddhism, this is referred to as mindfulness.

·        Just breathe. When the moment begins to escape you, as it will certainly try to do, breathe. Take a very deep breath, through your nose, as deep as you can. Listen to the air moving into your body, and feel your lungs swell. Breathe out slowly through your mouth, letting the air escape on its own.

·        Pay attention to your other senses—touch, sight, smell, sound, and taste. Pretend it's the very last time you'll ever experience whatever you're experiencing. Have you ever been so engrossed in something that it seemed like the rest of the world just disappeared? Living in the moment is about creating that state of mind at any time. Slow down, and try to savor the present.

·        Listen to the world. The birds, the sounds of one car passing, the conversations of distant strangers, the cracks and creaks of the building as it heats and cools, the planes overhead, the footsteps of passers-by. The moment is all around you.
 
4.      Smile when you wake up. You can set the tone of appreciation and awareness for the next 24 hours by simply waking up and smiling.[1] Don't wake up with a groan and a smash of your alarm clock. There's scientific proof that the expressions that you make with your face can actually influence how you feel.[2] In particular, true happiness is most closely tied to a Duchenne smile which involves smiling with your eyes, as well as your mouth.[3]

·        Visualize all the good things that are going to happen to you today. Got a presentation to give? Imagine the laughs you'll get for your jokes and the ovation you'll receive at the end. Got a busy day of cleaning? Imagine how good it'll feel to sit down with a delicious tea and admire your cozy living space when it's all done.
 
5.      Commit random, spontaneous acts of kindness. Whether it's donating 1 dollar to a fund at the pharmacy, picking up litter, or helping victims of natural disasters, keep alert in every moment of your day for some way in which you can make the world a better place. Even the smallest thing, like complimenting someone, can bring joy. It's the most spontaneous and unexpected acts of kindness that produce the greatest impact, and you can't be sensitive to those kinds of opportunities unless you're living in the moment.

·        Have an old or sick neighbor who doesn't get many visitors? Stop by with some cookies, a pot of coffee, or a jug of lemonade. If it's someone who won't let you leave once they've got your attention, dig in and enjoy their stories. People are a lot more interesting than you think.

6.      Minimize activities that dull your awareness of the moment. What are you doing that tempts your mind to run away from the present? For most people, watching television puts you in a passive state of mind, and time slips right by. Daydreaming and getting lost in a good movie or book isn't bad, but it's not living in the moment because it places your concentration on something that isn't right here, right now; it's a form of escapism. Don't zone out; zone in. Do things that are active, and that encourage you to look around and engage the world in that moment. Gardening, playing a game, knitting, and playing an instrument are all activities that lend themselves to mindfulness. So get off the computer after reading this article!

·        Choose at least one day a week to turn off your cell phone, your computer, your radio, your TV, and whatever other gadgets you use to distract yourself. Spend that day riding your bike to a café, gardening, having a friend over for tea, drawing something you see out the window, or exploring a new area of your town or city.

·        Narrow down your absolute favorite shows, write them into your schedule, and only turn on the TV at those times. Like to nod off to late-night television? Try herbal tea instead. Channel-surf when you're bored? Get a hobby. Watch game-shows during dinner? Cook yourself something special and savor every bite of it.

7.      Be thankful for what is. When you find yourself wishing for something you don't have, or wishing your life would be different, start your quest for your wish by being thankful for what is already in your life. This will bring you back to the present moment. Make a list of what you are thankful for right now, even if all you can think of is that you are alive and can breathe. You don't want to miss the gifts right in front of you, because you are always looking beyond what is in the present moment to what once was or what might be. If you are thankful for what is, you'll be happy to be in the moment – instead of dreaming about being happy someplace else.

Wednesday, May 29, 2013

All College Course Books Free Download கல்லூரி பாடப்புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய

 

கல்லூரிகளில் தேர்வுகள் படு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பல மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு நூல்களை வழங்க, கல்லூரி மற்றும் தனியார் நூலகங்கள் இருந்தாலும், தங்களுக்கென எடுத்து வைத்து, விரும்பும் நேரத்தில் படிப்பதனையே இவர்கள் விரும்புவார்கள். இவர்களுக்கு உதவிடும் வகையில் பல இணைய தளங்கள் உள்ளன.

 

அவற்றில் சிறப்பான ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. அதன் இணைய தள முகவரிhttp:////bookboon.com


இந்த தளத்தில், நமக்குத் தேவைப்படும் நூலின் பெயர் அல்லது எழுதிய ஆசிரியர் அல்லது பொருள் குறித்து தேடல் கட்டத்தில் டைப் செய்தால், நாம் தேடும் பொருள் குறித்த அனைத்து நூல்களும் வரிசையாகப் பட்டியலிடப்படும். தேவையான நூல் தலைப்பு அருகே, டபுள் கிளிக் செய்தால், உடன் நாம் எந்த நாட்டில் இருந்து இந்த நூலினைத் தரவிறக்கம் செய்ய இருக்கிறோம் என்ற தகவலைத் தர வேண்டும்.

 

உடனே அந்நூல் பி.டி.எப். வடிவில், கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்யப்படும். நம் பெயரைப் பதிவு செய்வதோ, அக்கவுண்ட் உருவாக்குவதோ இதில் தேவை இல்லை. கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என உயர்கல்வி பயில்வோருக்கு இந்த தளம் மிகவும் உதவி செய்வதாய் அமைந்துள்ளது. கற்க விரும்பும் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய தளம் இது. 

 

Accounting

Accounting books

Accounting videos

Career & Study advice

 Career & Job search

Career Advice from Partners

Personal Development

Presenting & Writing

 

Economics & Finance

 Econometrics

Economics

Finance 

Engineering

 Chemical Engineering

Construction Engineering

Electrical Engineering

Energy Engineering

Environmental Engineering

Mechanical Engineering

Nanotechnology

Petroleum Engineering

IT & Programming

 Adobe

Artificial Intelligence

C, C++ & C#

Information systems & Management

Java

Microsoft Office Programs

Other

 Marketing & Law

Law

Marketing

 Natural Sciences

 Biochemistry

Biology

Chemistry

Environmental science

Geoscience

Healthcare & Medicine

Physics

Statistics & Mathematics

 Algebra

Calculus

Complex functions

Mathematics

Probability

Statistics

 Strategy & Management

 Human Resource Management

Management

Organization

Strategy

Business

Accounting & Finance

 Accounting

Corporate Finance

Finance

 Career management

 Communication & Presentation

 Communication skills

Presentation skills

Writing skills

 Engineering

Entrepreneurship

 IT Management

 Job search & CV

 Management & Strategy

 Coaching & Motivation

Human Resource Management

Leadership

Management

Organization

Project Management

Strategy

Marketing & Sales

 Marketing

Sales

 Office Programs & Software

 Adobe Photoshop

Apple

MS Excel

MS PowerPoint

MS Word

Other MS Office programs

 Personal Development

 Self management

Stress Management

Time management

 

ஐ லவ் யூ மை டியர் சன்

திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் என் மனைவி கூறினாள்.

" எனக்கு தெரிந்த ஒரு பெண் உங்களோடு ஒரு நாள் பொழுதைக் கழிக்க வேண்டுமென்று விரும்புகிறாள். அந்தப் பெண் என்னை விட உங்களை அதிகமாக நேசிக்கிறாள்"

இவ்வாறு என் மனைவி குறிப்பிட்ட அந்த பெண் 19 வருடமாக விதவையாக இருக்கும் என்னுடைய தாயார்தான். நான் என் 3 குழந்தைகளுக்காக அதிகம் வேலை பார்க்க வேண்டி இருந்ததால் சில நாட்களாக அவளை சரியாக கவனிக்க முடியவில்லை.

அன்று மாலை நான் அவளை வெளியில் எங்காவது கூட்டிப் போகலாம் என்று நினைத்து போனில் கூப்பிட்டேன்.

"என்னாச்சு? உனக்கு ஒன்றுமில்லையே?" என்று வழக்கமாக போனை எடுத்தவுடன் கேட்கும் கேள்விகளையே அன்றும் கேட்டாள்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. நாம் இன்று மாலை எங்காவது வெளியில் போகலாமா?"

"நான் இதைத்தான் எதிர்பார்த்தேன்" ஒரு நிமிட யோசனைக்கு பின் அவள் கூறினாள்.

அன்று மாலை அலுவலகம் முடிந்ததும் நான் நேராக அவள் வீட்டுக்கு போனேன். எனக்கு கொஞ்சம் படபடப்பு. என்னுடைய கார் அவளது வீட்டுக்கு போகுமுன்பே அவள் ரெடியாக இருந்தாள். சுற்றுலா செல்லும் ஒரு குழந்தையை போல அவளுக்குள் ஒரு இனம் காணாத சந்தோஷம். குளிருக்கு கம்பளியை எடுத்து போர்த்தி இருந்தாள். தலைமுடியை சுருள் சுருளாக செய்து கடந்த என்னுடைய திருமணத்தின் போது வாங்கிய உடையை அணிந்து இருந்தாள்.

"என்னுடைய மகன் இன்று என்னை வெளியில் கூட்டிச் செல்வதாக கூறி இருக்கிறான்" என்று தன்னுடைய நண்பர்களிடம் எல்லாம் கூறி விட்டதாக என்னுடைய காரில் ஏறிக்கொண்டே கூறினாள்.

அந்த உணவகம் ஒன்றும் ஆடம்பரமானதாக இல்லை. ஆனால் நன்றாக இருந்தது. அன்னை மட்டுமே முதலும் கடைசியுமாக காதலிக்கும் ஒரு பெண்ணைப்போல் எனது கைகளை அவள் பிடித்துக் கொண்டாள். நாங்கள் மேஜையில் உட்கார்ந்த பின் அவளே வரவழைக்கட்டும் என்று எண்ணி உணவுப்பட்டியலை எடுத்து அவளிடம் படிக்க கொடுத்தேன்.

நீ குழந்தையாக இருக்கும் போது நான் உனக்காக முழுப்பட்டியலையும் வாசித்துக் காட்டினேன்" அவள் கூறினாள்.

இப்போது அவளுடைய எதிர்பார்ப்பு எனக்கு நன்றாக புரிந்தது.

சாப்பிடும் போது அவள் எங்களுடைய அப்போதைய குடும்ப விசயங்களைப் பற்றி மிகவும் சிலாகித்து பேசினாள். அதனால் அடுத்து சினிமாவுக்கு செல்ல கொஞ்சம் நேரமாகிவிட்டது. ஆனாலும் போய்விட்டோம்.

நான் அவளை வீட்டில் கொண்டுபோய் விடும்போது அவள் கூறினாள்.

" இன்னும் ஒரு நாள் இப்படி பொழுதை கழிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், ஆனால் அந்த முறை நானே உன்னை அழைப்பேன்"

நான் சரியென்று தலையாட்டினேன்.

வீட்டுக்குப் போனதும் மனைவி கேட்டாள்.

"இன்றைய பொழுது எப்படி கழிந்தது?

"நினைத்ததை விட நன்றாகவே கழிந்தது." நான் கூறினேன்.

சில நாட்களில் மிகப்பெரிய மாரடைப்பு வந்து அவள் இறந்து விட்டாள். என்னால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து நான் அவளுடன் சாப்பிட்ட உணவகத்திலிருந்து எனக்கு ஒரு ரசீது கடிதத்துடன் கவரில் வந்தது. அந்த கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது.

"நம்முடைய இரண்டாவது நாள் சாப்பாட்டுக்கும், சினிமாவுக்கும் நானே பணம் செலுத்தி விட்டேன். ஒருவேளை அந்த நாள் நான் இந்த உலகில் இல்லாது போய் விடலாம். அதனால் நான் உனக்கும் உன் மனைவிக்குமாக சேர்த்து இரண்டு பேருக்கு பணம் செலுத்தி இருக்கிறேன். நீ என்னை வெளியே கூட்டிச் சென்ற அந்த நாளில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என் அன்பு மகனே நான் உன்னை ஆழமாக நேசிக்கிறேன்."
 
(  இணையத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது )