குப்புசாமி குப்புசாமின்னு ஒருத்தன்....
ஒரு நாள் அவன் கடவுளை நோக்கி தவம் இருந்தான்..தவம்ன்னா சாதாரண தவம் இல்லை..
பயங்கரமான தவம்...
அவனோட தொடர்தவத்தால் மேலே கடவுள் இருக்கிற இடம் பூரா வெப்பத்தால
கொதிக்க ஆரம்பிச்சிட்டுது...இனிமேல் பொறுத்தால் ஆகாதுன்னு தெரிஞ்சி நேரா
தவம் செஞ்சிகிட்டிருக்கிற குப்புசாமிக்கிட்ட வந்துட்டார்..
குப்புசாமிக்கு சந்தோசம் தாங்க முடியல..
கடவுள் கேட்டார்....என்னப்பா உனக்கு குறை..?
இவன் சொன்னான்..சாமீ...உங்க ஆசிர்வாதத்தில எனக்கு எந்த குறையும் இல்லை..
இந்த சந்தோஷமான வாழ்க்கையை விட்டு போக எனக்கு விருப்பம் இல்லை..
ஆகவே...எனக்கு சாவே வரக்கூடாது..ன்னு கேட்டான்..
கடவுள்,எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்...அவன் விடுறதா இல்லை...
வேற வழி இல்லாமல் அவன் கேட்ட வரத்தை கொடுத்துவிட்டு போயிட்டார்..
நாட்கள் வேகமாக நகர்ந்தன...ஒரு நாள்....
தன்னோட பையன பள்ளிக்கூடத்திலே சேர்க்கப் போயிருந்தான்...தலைமையாசிரியர்
பையனோட அப்பா பேரு என்னன்னு கேட்டார்...
இவன் சொன்னான்..
என்னோட பேரு குப்புமி ன்னு..
மறுபடி சொல்லிப்பார்த்தான்....
குப்புமி
குப்புமி
குப்புமி...ன்னு தான் வந்தது....
கடைசி வரை அவனுக்கு "சா" வே வரலை...
கதையில் இருந்து விளங்கும் நீதி:-
கலியுகத்தில கடவுளும் நக்கல் பண்ணுவாரு..
நாமதான் யோசிச்சு வரம் கேக்கணும்...