Sunday, July 10, 2011

குழந்தைகளை கொல்லும் எமன் தொலைக்காட்சி: - 1

தாய்மார்களே! சீரியலும், சினிமாவும் தான் பொழுது போக்கு என்று இருக்கும் உங்கலுக்கு, உங்கள் குழந்தை நல்ல பிள்ளைகளாக வள விருப்பம் இருந்தால் இதை படியுங்கள்.

உங்கள் தோட்டத்தில் தேவை இல்லாத கலைகளை நீக்கி தோட்டத்தை அழகுப் படுத்தும் நீங்கள் , ஏன் வீட்டின் உள்ளேயே உங்கள் கண் முன்னாடி களையை ஏன் வளறவிடுகிறிர்கள்.

என்ன புரியலையா? இதை படித்து பாருங்கள் புரியும்.

குழந்தைகளை கொல்லும் எமன் தொலைக்காட்சி:

*  
உங்கள் குழந்தைகள் பொம்மைத் துப்பாக்கி வாங்கிக் கேட்கிறார்களா? சுண்டுவிரலை உங்கள் நெற்றிப்பொட்டில் வைத்து டிஸ்ஸோ டிஸ்ஸோ என்று சப்தம் கொடுக்கிறார்களா? உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என்கிறார்களா? பெரியவர்கள் போல் பேசுகிறார்களா? விட்டத்தில் தொங்கிகொண்டு ஸ்பைடர்மேன் போல் தாவுகிறார்களா? பிற குழந்தைகளை கைகளால் தாக்கி விளையாடுகிறார்களா? என்னேரமும் சவுண்ட் எபெக்ட் கொடுக்கிறார்களா? கார்டூன் கீச்சு குரலிலும் கனத்த வில்லன் சப்தத்திலும் பேசுகிறார்களா? பாட்டு ,குத்தாட்டம் இவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறார்களா? புத்தகம் வாசிப்பது , படிப்பு , விளையாட்டு இவற்றில் ஆர்வம் குறைந்து இருக்கிறார்களா?

இத்தனைக்கும் காரணம் டி வி & கணிணியில் தேவை இல்லாதா வன்முறை விளையாட்டுக்கள் தான்.

பள்ளிக் கூடம் முடிந்து வீடு வந்தது முதல் இரவு தூங்கும் வரை உளவியல் ரீதியாக குழந்தைகளை தாக்கி அவர்களின் பிஞ்சு உள்ளத்தை பழுக்கவைத்து சாகடித்துக் கொண்டிருக்கிறது இந்தத் தொலைக் காட்சி.


தொலைவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை அப்படியே அந்நேரமே வீட்டிலிருந்தபடியே பார்க்க முடிவது மிகச்சிறந்த அறிவியல் அற்புதம் தான்.ஆனால் இன்று தொலைக்காட்சிகள் வெறும் விளம்பர நிறுவனமாகவும், சினிமா தியேட்டராகவும் மாறி மக்கள் மதியை கொள்ளையடித்து பணம் சம்பாதிக்கின்றன. நம் வீட்டுக்கு நடுவே திறந்து கிடக்கும் இந்த பாதாள சாக்கடைக்கு ஒரு மூடியை போட்டு நம் குழந்தைகளும் பெண்களும் தவறி விழாமல் காப்போம்.பிஞ்சுக்களின் புலன்கள் வழி மூளையை கைப்பற்றி அழிக்கும் இந்த நஞ்சிலிருந்து நம் அன்புச் செல்வங்களை காப்போம்!

தொலைக்காச்சியில் என்ன காட்டுகிறார்கள்?

சினிமா என்பது ஒரு பொழுது போக்குக் கலை, தொலைக்காட்சி என்பது ஒரு ஊடகம்.இரண்டும் வேறு.அனேக தொலைக்கட்சிகள் இதை உணராமல் தங்கள் நிகழ்ச்சிகள் முழுவதையும் சினிமாவை கொண்டே நிரப்பிக் கொள்கிறார்கள். ஒரு சுதந்திர தின நிகழ்ச்சியானாலும் திரைப்படக் கலைஞர்களின் பேட்டிகளைத் தான் காட்டுகிறார்கள். ( மக்கள் தொலைக்காட்சி விதிவிலக்காக சினிமாவை ஓரங்கட்டுவதை பாராட்டலாம்.)

திரைப்படங்களின் கொள்கையானது பெரும்பாலான ரசிகர்களின் மட்டமான ரசனையை குறிவைத்தும்.மனித மனங்களின் அழுக்குகள்,வக்கிரங்களுக்குத் தீனி போட்டும் இரண்டு மணி நேரம் திரை அரங்கத்துக்குள் ரசிகர்களை முடிந்த அளவு குஷிப் படுத்தி காசு சம்பாதிப்பதிலும் தான் இருக்கிறது.ஆண்கள் எடுக்கும் படங்களில் பெண்ணை இன்றுவரை போகப் பொருளாகத்தான் காட்டுகிறார்கள். இரட்டை அர்த்த வசனங்கள். கொச்சையான பாடல்கள் நிறைந்திருக்கின்றன. அத்தகைய தரத்திலுள்ள சினிமாவை குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் எல்லோரிடத்தும் ஒரே மாதிரியாக திணிப்பது மிகப்பெரிய தீமையான விளைவுகளை உண்டாக்கும். ஆத்தா ஆத்தோரமா வாரியா ?என்று அம்மாவை அழைக்கும் ஆபாச வரிகள் எல்லாம் குழந்தைகள் வாயிலே கொண்டு சேர்த்தது யார்?

எந்த சேனலை திருப்பினாலும் டிஸ்ஸூம் டிஸ்யூம் ,பம் ,தடால் முடால் அடி தடி சப்தம் ,பாம்கள் வெடிக்கிறது ,நீண்ட அரிவாள்கள் சகிதம் அலையும் முரடர்கள். தலையை கொய்வது ,துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, பெண்களை மானபங்கப் படுத்துவது, பழி தீர்ப்பது,வெட்டு குத்து,அழுகை,அலறல், காதல்,டப்பாங்குத்து ஆட்டம், துரத்தல்,பஞ்ச் டயலாக் என் சினிமா வெளிப் படுகிறது. பெரியவர்களுக்கு டென்சன் ,ரத்த அழுத்தத்தை அதிகரிக்க இது போதாதா?

எவ்வளவு எளிதில் சினிமாவில் பெண்கள் காதலிக்கிறார்கள். காதலியா ? கிராக்கியா எனுமளவு கதாநாயகிகளைக் காட்டுகிறார்கள்.டி வி சீரியல்களுக்கு ஜவ்வுபோல் இழுக்க முடிகிற, பல்வேறு கிளைகள், விழுதுகள் உள்ள ஆலமரம் போன்ற கதைகள் தான் மூலப்பொருள். அதில் கண்னீர் சிந்தி மூக்கை உறிஞ்சும் பெண்கள்,ஆஸ்பத்திரி , கற்பிணி, பிரசவம், சோரம் போதல் , பலதாரம்,ஒரு தலை மோகம், குடும்பத்துகுள் பழி வாங்குதல், துரோகம், வெட்டி வசனம் பேசுவது, அடுத்தது ஆட்டோவில் போவது ,அங்குமிங்கும் உலாத்துவது, ஆஸ்பத்திரி, கோமா, சதி ,வஞ்சனை இதைத் தான் திரும்பத்திரும்பக் காட்டுகிறார்கள்.

இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைப் படுத்தியும் டிவி தொடர்கள் காண்பிக்கப் படுகின்றன என்று கூறுகிறது. ஏன் இவற்றில் எல்லாம் நல்லதை விடக் கெட்டதையே அதிகம் காண்பிக்கிறார்கள் என யோசித்துப்பார்த்தால் மக்கள் கெட்டதைத்தான் அதிகம் பார்க்க விரும்புகிறார்கள் என்பது புரிகிறது. அதை பார்ப்பதால் கெட்டவர்கள் தங்கள் மனசாட்சியின் உறுத்தலிலிருந்து ஆறுதல் தேடிக்கொள்கிறார்கள்.கெட்டதைக் காணும் சுவாரசியம் நல்லவற்றை காணுவதில் இருப்பதில்லை. அமைதியான் வீடு அன்பான் குடும்பம் என ஒரு வாரத்துக்கு மேல் கதையை இழுக்க முடியாது. இதை தெரிந்து கொண்டுதான் கதை எழுதுகிறார்கள்.

அரசியல் வாதிகள், மதவாதிகளி்ன் விளம்பரதிற்கும் மூட நம்பிக்கையை பரப்பவும் தான் தொலைக்காட்சி பெரிதும் உபயோகிக்கப்படுகிறது.