Sunday, October 20, 2013

பேஸ்புக்கில் முகம் காட்டும் பெண்களே உஷார்!

பேஸ்புக்கில் முகம் காட்டும் பெண்களே உஷார்!

என் அலுவலக தோழி மிகவும் நல்லவள். குணமான கணவன், கல்லூரியில் பயிலும், இரு மகள்கள் என, மாமனார்- மாமியாருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறாள். "பேஸ்புக்'கில், தன் புகைப்படம் மற்றும் முகவரியை பதிந்து வைத்திருந்தாள். இது எப்படியோ, ஒருவருக்கு ஒருவர் பரிமாற்றம் செய்யப்பட்டு, நட்பு வட்டாரம் பெருகியது.
திடீரென ஒருநாள், அவளுடைய மொபைலில், ஒரு அழைப்பு. முப்பது ஆண்டிற்கு முன், காதலித்து ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்த காதலன் தான், அழைத்திருந்தான். தன் தற்போதைய நிலை, கணவர் மற்றும் குழந்தைகள் பற்றி தோழி எவ்வளவோ எடுத்து கூறியும், முன்னாள் காதலன் அதை புரிந்து கொள்ளாமல், காதலி கிடைத்து விட்டாளே என்ற சந்தோஷத்தில், தினமும் மொபைல் மற்றும், "பேஸ்புக்'கில் தொல்லை கொடுத்து வருகிறார்.

"என் நிலையை உன்னிடம் சொல்ல வேண்டும். எப்போது, நேரில் வரட்டும்...' என, அடிக்கடி கேட்கிறாராம். இதனால், பயந்து போன தோழி, எப்போதும் ஒரு வித அச்சத்துடனே காணப்படுகிறாள். அவளுடைய செயல்பாடுகளால், கணவர், மகள்கள் மற்றும் மாமனார்- மாமியாரிடம் மாட்டிக் கொள்வாளோ என, நாங்கள் பயப்படுகிறோம்.

"பேஸ்புக்'கில் ஏன் புகைப்படத்தை கொடுத்தோம் என்று, இப்போது யோசிக்கிறாள். 

"பேஸ்புக்'கில் புகைப்படம் மற்றும் மொபைல் எண்ணுடன், தங்கள் எண்ணங்களை பரிமாறி கொள்பவர்கள், இனி, எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது!