போதையில்லா நட்பால் பயன் இல்லையா?
என் நண்பர் ஒருவர், சில வருடங்களுக்கு முன் வரை, குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். அவரது மகள் வயதுக்கு வந்து விட்டதால், தன் குடிப்பழக்கத்தால், மகளின் மனம் பாதிக்கப்படும் என்றும், பின், அவளது திருமணத்திற்கு, மாப்பிள்ளை தேடுவதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்தும், குடிப் பழக்கத்தை நிறுத்தி விட்டார்.
குடிப்பழக்கம் இருந்தபோது, அவரைச் சுற்றி, எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருக்கும். "ஓசி'யில் குடிப்பதற்கும், அசைவ ஓட்டல்களில் சாப்பிடுவதற்கும், அவரை மொய்த்த கூட்டம், இப்போது, அவரை நாடுவதே இல்லை. என் நண்பர், அவர்களிடம் காரணம் கேட்டதற்கு, "உன் நட்பால், எங்களுக்கு என்ன பிரயோஜனம்... ஒரு, "கட்டிங்' அடிக்க முடியுமா... அட்லீஸ்ட், ஒரு, "லெக் பீஸ்' சாப்பிட முடியுமா... நீ என்னமோ புத்தர் மாதிரி, திடீர்ன்னு ஞானோதயம் ஏற்பட்டு, குடிக்கவே மாட்டேன்னு, சத்தியம் செஞ்சிட்டே... எந்த பயனும் இல்லாத, பிரெண்ட்ஷிப் தேவை இல்லை. உன்னோட இருக்கற நேரத்தில், வேறு யாராவது, ஒரு சரக்கடிக்கற பிரெண்டு கூட இருந்தால், கொஞ்சம், "ஓசி'யில் குடிக்கலாம்...' என்று, முகத்தில் அடிப்பது போல் சொல்லியிருக்கின்றனர்.
அதன்பின் தான், என் நண்பர் உணர்ந்திருக்கிறார். கொஞ்சம், "ஓசி சரக்கு' வாங்க, நம்மை எப்படியெல்லாம் பொய்யாக புகழ்ந்திருக்கின்றனர் என்பதை! போதையின் பாதையிலிருந்து, திருந்துவது தவறா? நட்புக்கு, களங்கம் விளைவிக்கும், குடிகாரர்களின் நட்புத் தேவையில்லை என்று, அவர்களை ஒதுக்கிவிட்டு, இப்போது மகிழ்ச்சி யோடும், நிம்மதியோடும் இருக்கிறார்.