திருமண விழா ஒன்றில், நண்பர் ஒருவரை சந்தித்தேன். தன் மூன்றாவது மகளுக்கு வரன் தேடுவதாக கூறினார். தன் குடும்பம் மிகப் பெரியது என்றும், உறவு முறை நீண்டு கொண்டே செல்கிறது. மேலும், சண்டை சச்சரவுக்கும் பஞ்சமே இல்லை. ஆதலால், மூன்றாவது மகளுக்கு சின்ன குடும்பம், ஒரே பையன் மட்டும் இருந்தால் உத்தமம் என கூற, நானும் வரன் தேடினேன். என்னுடைய தகவல் மூலம், ஒரு பையன் உள்ள வரன் அமைந்து, திருமணமும் நடந்தது.
இப்போது நண்பர் மிகவும் துயரத்தில் இருக்கிறார். காரணம், ஒரே மகன் என்பதால், அதிக பாசம் வைத்து மகனை வளர்த்துள்ளனர். பெற்றோரால் மகனையும், மகனால் பெற்றோரையும் பிரிய முடியவில்லை. இதனால், புதுமணத் தம்பதிகள் விருந்துக்கு சென்றால் கூட, பெற்றோருடன் செல்ல வேண்டிய நிலை. மகன், தன் மனைவியோடு ரொம்ப நேரம் தனிமையில் பேச வாய்ப்பு இல்லை. எப்போதும் மகனோடு, தாய், தந்தை இருப்பதால், நண்பர் மகளால், தன் கணவருடன் இன்பமாக இருக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. மாப்பிள்ளையோ, ஒரு தனிமை விரும்பி. விடுமுறை நாளில் தனி அறையில் படுத்து தூங்கி விடுகிறார். ஆதலால், நண்பரின் மகள் திருமண வாழ்க்கை, சந்தோஷமாக இல்லை என்பதை, சமீபத்தில் தெரிந்து, நானும் வருந்தினேன். திருமண வாழ்க்கையில் மாமியார், நாத்தனார் பிரச்னை என்றால், தீர்த்து வைக்கலாம். இங்கு மாப்பிள்ளையே பிரச்னை என்பதால், என்ன செய்வது, எப்படி தீர்ப்பது என்று புரியவில்லை.
சின்ன குடும்பம் தேவை, நாத்தனார் இருக்க கூடாது, மாமியார் இல்லாத வீடு போன்ற கட்டுப்பாடு போட்டு, வரன் தேடும் பெற்றோருக்கு, இந்த கடிதம், ஒரு படிப்பினையாக இருக்கட்டும். பிரச்னை இல்லாத இடம் என நம்பி, நாமே பிரச்னையில் மாட்டிக் கொள்ளக் கூடாது. பிரச்னையை தீர்க்கக் கூடிய குடும்பமாக தேர்ந்தெடுங்கள். (தினமலர் வாசகர் பகிர்ந்துகொண்ட கடிதம்)