நிதி ஆலோசகர் விளக்கம் அளிக்கிறார்...
கிரெடிட் கார்டு மூலம் செய்யும் செலவினை 45-50 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்திவிட்டால், வட்டி எதுவும் இல்லை. அந்தக் காலத்தைத் தாண்டிவிட்டால், மாதம் 2-3 சதவிகிதம் வட்டி. அதாவது, ஆண்டுக்கு 24-36 சதவிகிதம்!
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தைக் கட்டாவிட்டால், வட்டிக்கு வட்டி கட்டுவதோடு, அபராதக் கட்டணமாக 600 -700 செலுத்த வேண்டி இருக்கும். நீங்கள் 500-க்குப் பொருள் வாங்கிக் காலம் கடத்தினால்கூட, 600 அபராதம்.உஷார்!
வெட்டி பந்தாவுக்காக கிரெடிட் கார்டு வாங்கவே வாங்காதீர்கள். ஆண்டு முழுக்கச் சும்மா வைத்து இருந்தாலும் ஆண்டு பராமரிப்புக் கட்டணம் என்று 700-1,000 விதிப்பார்கள்!
ஆடைகள் அல்லது வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ஒரு வாரம் வரை 20-25 சதவிகிதம் தள்ளுபடி என அறிவித்து இருக்கிறார்கள். அடுத்த 15-20 நாட்களுக்குள் உங்களுக்கு போனஸ் வந்துவிடும் என்றால், தள்ளுபடி சலுகையை அனுபவிக்க கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம்!
இரு சக்கர, நான்கு சக்கர வாகனக் கடன், வீட்டுக் கடன் வாங்க மார்ஜின் பணத்துக்கு கிரெடிட் கார்டு கடனைப் பயன்படுத்தாதீர்கள்!
பொருட்கள் வாங்கும்போது 'ஸ்டேட்மென்ட் பில்' போடப்படும் சுழற்சியைக் கவனிப்பது அவசியம். பில்லிங் தேதி 25 என்றால், நீங்கள் 23-ம் தேதி பொருள் வாங்கி னால், இரண்டு நாட்கள்தான் வட்டி இல்லா சலுகைக் காலம் கிடைக்கும். 26-ம் தேதி வாங்கினால் வட்டி இல்லா சலுகையை அதிக நாட்கள் அனுபவிக்கலாம்!
கிரெடிட் கார்டு பெறும் முன் சம்பந்தப்பட்ட வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுக்கப் படிந்துப் புரிந்துகொள்ளுங்கள். புரிய வில்லை என்றால், தெளிவுபடுத்திக்கொண்ட பிறகே ஒப்பந்தத்தில் கையப்பம் இடுங்கள்!
கார்டைக்கொண்டு பணம் எடுப்பதை 100 சதவிகிதம் தவிர்க்க வேண்டும். பணம் எடுத்த உடனே வட்டி மீட்டர் ஓடத் தொடங்கிவிடும். மேலும், பணம் எடுத்ததற்கான பரிமாற்றக் கட்டணம் சுமார் 250 என்பதையும் மறக்காதீர்கள்!