அன்பின் வெளிப்பாடாக ஏதாவது கொண்டுவாருங்கள் என்று நான்கு மாணவர்களை அனுப்பினார் ஆசிரியர்.
ஒரு மாணவர் கையில் மலருடன் வந்தார்.
இரண்டாவது மாணவர் ஒரு வண்ணத்துப் பூச்சியுடன் வந்தார்.
மூன்றாவது மாணவர் சிறு பறவையின் குஞ்சுடன் வந்தார்.
நான்காவது மாணவர் வெறுங்கையுடன் வந்தார்.
ஏன் நீ மட்டும் எதுவும் கொண்டு வரவில்லை என்று கேட்டார் ஆசிரியர்.
அந்த மாணவர் சொன்னார். நானும் மலரைப் பார்த்தேன் பறிக்கவேண்டும் என்றுதான் தோன்றியது ஆனால் மலர் செடியில் இருப்பதுதான் அழகு என்றும் தோன்றியது அதனால் விட்டுவிட்டேன்.
வண்ணத்து பூச்சியையும் பார்த்தேன். அதன் சுதந்திரமான வாழ்க்கையைப் பறித்துவிடக்கூடாது என்று விட்டுவிட்டேன்.
பறவையின் சிறுகுஞ்சையும் பார்த்தேன். அந்தக் குஞ்சை எடுத்து அதற்கு என்ன கொடுத்தாலும் அதற்கான தாயன்பை யாராலும் கொடுக்கமுடியாது என்று விட்டுவிட்டேன் என்றார்.
ஆசிரியர் மற்ற மூன்று மாணவர்களிடமும் சொன்னார் இதுதான் அன்பின் வெளிப்பாடு என்று.