Friday, March 11, 2011

சொர்க்கம் என்றால் என்ன?

 

 

சொர்க்கம் என்றால் என்ன?

 

ஒரு நாள் மாணவன்,குருவே!சொர்க்கம் என்றால் என்ன? நரகம் என்றால் என்ன?என்று கேட்டான்.

 

சொல்லுகிறேன் ,என்னுடன் வாருங்கள்! என்று முனிவர் மாணவர்களை அழைத்துக் கொண்டு போனார்.

 

வீட்டுக்குள் ஒரு கணவன் மனைவி இருந்தார்கள். கணவன் லொக்....லொக்.. என்று இருமிக் கொண்டிருந்தான். வைத்தியரிடம் போய்ப் பாருங்கள் என்று மனைவி சொன்னாள்.அதெல்லாம் எதுக்கு?வெந்நீர் வைத்து எடுத்து வா குடித்தால் சரியாகப் போகும் என்றான் கணவன். மனைவி சுக்குக் கசாயம் வைத்து எடுத்து வந்தாள்.

 

பார்த்தீர்களா? இதுதான் சொர்க்கம் என்றார்,முனிவர்.

 

பிறகு மாணவர்களை அழைத்துக் கொண்டு அடுத்த தெருவுக்குப் போனார்.

 

அங்கும் ஒரு கணவன், மனைவி இருந்தார்கள். கணவன் இருமிக் கொண்டிருந்தான். அவர் நோய் எனக்குப் பரவி விடும் போலிருக்கிறதே? மனைவி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

கொஞ்சம் வெந்நீர் வைத்து எடுத்து வாயேன்!

 

ஏன் என் உயிரை வாங்குறீங்க? வைத்தியரை போய் பாருங்கள்! என்று மனைவி சிடுசிடுத்தாள்.

 

உம்...நடக்கமுடியாமல் தானே உன்னிடம் கேட்கிறேன்.

 

மனைவி முணுமுணுத்தாள்.

 

முனிவர் சொன்னார் இதுதான் நரகம்.