அவரவர் வாழ்க்கை, அவரவர் எண்ணங்களில்
அமெரிக்க விண்வெளியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது பேனாவைப் பயன்படுத்தி வந்தனர். விண்வெளியில் ஜீரோ க்ராவிடியால் பேனாவானது எழுதவில்லை. அதனால் எப்படியாவது விண்வெளியில் எழுதும் அளவிற்கு உள்ள பேனாவைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். முயற்சியின் பலனாக பன்னிரெண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில், பத்து ஆண்டுகள் கடின உழைப்பின் பலனாக
குறைந்த க்ராவிடியில் எழுதும் பேனாவினை கண்டுபிடித்தனர்.
அதேசமயம் விண்வெளியில் எழுதுவதற்கு ரஷ்யர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவர்கள் பென்சிலை பயன்படுத்தி எழுதினார்கள்.
இது வேடிக்கையாக கூறப்படும் ஒரு சிறுகதை. இதுவரை சிரிக்கக் கூடியதாக இருந்தாலும் இதற்கு மேலும் சிந்திக்கக் கூடிய ஒன்றும் உள்ளது. அதைப் பார்ப்போம் இப்போது.
இதிலிருந்து நாம் அறியவேண்டியது.....
வாழ்க்கை சுலபமானதே; கடினமானது அல்ல அவரவர்கள் கண்ணோட்டத்தில் சிறு சிறு யோசனைகளைப் பயன்படுத்தி வெற்றி காண்பதில் தான் உள்ளது. "அவரவர் வாழ்க்கை, அவரவர் கைகளில்(எண்ணங்களில்)"