Wednesday, August 24, 2016

சிரிங்க... சிரிங்க... சிரிச்சுட்டே இருங்க

சிரிங்க... சிரிங்க... சிரிச்சுட்டே இருங்க

1) மனைவி : நீ தான் என்னோட புருஷனா வரப் போறேனு ஸ்கூல்ல படிக்கும் போதே மிஸ் சொல்லிடாங்க....!!! 

கணவன் : அப்படியா...! ஆச்சிரியம்மா இருக்கே ..!! 


மனைவி : ஆமா .!! நீயெல்லாம் பெரியவளாகி பன்னி மேய்க்கத்தான் லாயக்குனு சொல்லுவாங்க...!! 

கணவன் ??????? 

2) டாக்டர் : என்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு சேஞ்ச் இருக்கா? 

பேசண்ட் : பஸ்ல போகக் கூட சேஞ்ச் இல்ல டாக்டர்.! 

டாக்டர் : ?????? 

3) மனைவி : ஏங்க, நான் சாம்பார்ல புளி போடறதுக்கு மறந்திட்டேன்...கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..! 

கணவன் : பரவாயில்லை, நீ சமைக்கப் போறேன்னு சொன்னதுமே ஏற்கனவே வயித்திலே புளிய கரைச்சிடுச்சி...! 

மனைவி : ????? 

4) தோழி 1 : அவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டது?" 

தோழி 2 : "நீதானடி சொன்னே... தோசைக்கல் வாங்கினதை மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு." 

தோழி 1 : ????? 

5) நண்பர் 1 : "என்னாடா ? தலையில இவ்வளவு பெரிய கட்டு ?? என்னாச்சு ??" 

நண்பர் 2: "அது ஒண்ணும் இல்ல பாஸு....என் பொண்டாட்டி நேத்து வாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா... " 

நண்பர் 1 : "உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? " 

நண்பர் 2: "கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி... " 

நண்பர் 1 : ?????? 

6) மாணவிகள்: எக்ஸாம் டைம்ல நாங்க டிவி, கம்ப்யூட்டர், செல் எதையும் தொடமாட்டோம். உங்களால முடியுமா? 

மாணவர்கள்: ஹா..ஹா..ஹா.. நாங்களாம் "புக்"கையே தொடமாட்டோம். அது உங்களால முடியுமா? 

மாணவிகள்: ????? 

7) மகன் : அப்பா நம்ம வீட்டில் காக்கா கத்தினா சொந்தகாரங்க வருவாங்காளா?? 

அப்பா : ஆமாம் டா செல்லம் 

மகன் : அப்படினா எப்ப திரும்ப அவங்க போவாங்க அப்பா ? 

அப்பா : உன் அம்மா கத்தினா போய்டுவாங்க டா 

மகன் : ????? 

8) டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க 

விளம்பரதாரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!

டாக்டர் : ????? 

9) நோயாளியின் கணவன் : டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா'' 

டாக்டர் : எந்த அளவுக்கு பாக்குறாங்க? 

நோயாளியின் கணவன் : ''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!! 

டாக்டர் : ????