Tuesday, August 23, 2016

குடிமகனின் குட்டி கதை..

 
குடிமகனின் குட்டி கதை.. 



மதம் (மனம்) மாற்றம்_ _ _ _ _ _?

குடித்துவிட்டு வந்து போதையில் குப்புசாமி செய்யும் அலும்புகளையும் கொடுமைகளையும் தாங்கமுடியாத குப்புசாமியின் மனைவி அவனை ஆலயத்திற்கு அழைத்துச் சென்று அவனை நல்லவனாக மாற்ற வேண்டும். அதற்கு ஏதாவது வழிவகை இருக்கிறதா ஃபாதர் என்று போதகரிடம் முறையிட்டாள்.


குடிகார குப்புசாமியை ஆலயத்திற்குள் வரச்சொல்லி அருகில் அழைத்த போதகர் அவனை மூன்று முறை தண்ணீரில் முக்கி எடுத்துக் கொண்டு கூறினார்.

மகனே " உன்னுடைய பாவங்களெல்லாம் கழுவி மாற்றப்பட்டது. இன்று நீ புதிதாக சுத்தமானவனாக பிறந்திருக்கிறாய். 

இன்று முதல் நீ சாமுவேல் என்றழைக்கப்படுவாய்.
கடவுள் சாட்சியாக இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்தியம் செய்துகொடு சாமுவேலே " என்றார். 

சத்யம் செய்த குப்புசாமி (எ) சாமுவேல் அப்படியானால் நான் இனி டீ கூட குடிக்கக் கூடாதா பாஸ்ட்டர் என்று கவலையுடன் கேட்டான்.

தாராளமா எத்தனை தடவை வேணும்னாலும் டீ குடிக்கலாம், அதற்கு உனக்கு எந்த தடையும் இல்லை என்றார் பாஸ்ட்டர்.

ஓகே நன்றி பாஸ்ட்டர்.

சாமுவேலான குடிகார குப்புசாமி தனது வீட்டிற்கு வந்தவுடன் அலமாரியில் இருந்த ஒரு புல் பாட்டில் ரம்மை எடுத்து தொட்டி நிறைய இருந்த தண்ணீருக்குள் மூன்றுமுறை முக்கி எடுத்துக்கொண்டு கூறினான்.

" உன்னுடைய விஷங்களெல்லாம் கழுவி மாற்றப்பட்டது. நீ புதிதாக சுத்தமானதாக பிறந்திருக்கிறாய்.
இன்றுமுதல் நீ " டீ " என்றழைக்கப்படுவாய் "

இதைப் பார்த்த குப்புசாமியின் மனைவி மயங்கி விழுந்தாள்.