Friday, August 19, 2016

வாழை இலையின் மகிமை


வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ...

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் 
அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். 

சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் 
வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை 
கண்டிருப்பீர்கள். 

வாழை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், 
வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு 
நச்சு முறிப்பான்கள் ஆகும். 

இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் 
முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். 
நச்சு முறிந்துவிடும்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் 
எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், 
அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் 
நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் 
வாழை இலை மட்டுமே….

திருமண வீடுகள், மற்றும் எல்லா விழாக்களிலும் 
சாப்பிட வாழை இலை போடும்போது கவனித்திருக்கிறீர்களா?

(இப்போ பெரும்பாலும் இந்த பழக்கம் மறைந்து 
பேப்பரில் சாப்பிடுகிற பழக்கம் வந்து விட்டது). 

வாழை இலையை முற்றிலும் சுத்தப்படுத்தியா சாப்பிடுகிறோம். 
ஏதோ பெயருக்கு கொஞ்சம் தண்ணீர் தெளித்து விட்டு 
சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம்.

சிலருக்கு இலைகளில் தூசி, தும்புகள், அழுக்கு என்று 
என்னவெல்லாமோ இருக்கும். தெளிக்கும் தண்ணீர் கூட 
அவ்வளவு சுத்தமாக இருக்காது 

ஆனால் சாப்பிடுபவர்களுக்கு ஏதாவது வியாதி 
அல்லது வயிற்றுக் கோளாறு வருகிறதா? இல்லையே. 
காரணம் என்ன தெரியுமா? வாழை இலையின் மகிமைதான். 
எவ்வித கிருமியையும் அழித்துவிடக் கூடிய 
அதன் மருத்துவத் தன்மைதான்……