"குழந்தைதானே! பாவம், அதற்கென்ன தெரியும்?"
"போகப்போகத் தானா எல்லாம் தெரிஞ்சுக்கும்."
குழந்தைகள் விஷயத்தில் இப்படி ஒரு போக்கைக் கடப்பிடிப்பதுதான் பல சமயங்களில், அந்தக் குழந்தையின் குணநலன்களைச் சிக்கலானதாக ஆக்கிவிடுகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்ப முடியாவிட்டாலும் அதான் உண்மை.
மூன்று வயதாகும்போதே குழந்தைக்குத் தன்னைப் பற்றிய பல விவரங்கள் புரிகின்றன. „நான் எங்கேயிருந்து வந்தேன்?" என்பது போன்ற கேள்விகளையெல்லாம் கேட்கத் தெரிகிறது அதற்கு.
முக்கியமாக, ஐந்திலிருந்து எட்டு வயது என்பது, குழந்தையின் குணநலன்களை உருவாக்குவதில் மிக முக்கியமான பருவம்.
மூன்று சக்கர சைக்கிளை எடுத்து ஓடும் குழந்தை கடைசியில் அந்த சைக்கிளை எடுத்த இடத்திலேயே வைக்கிறதா? என்ன செய்வீர்கள்?
கீழே எதையாவது சிந்திவிட்டால், பக்கத்தில் இருக்கும் துணியால் அதைத் துடைக்க முயற்சிக்கிறதா? என்ன செய்வீர்கள்?
இதென்ன கேள்வி? பார்த்து மகிழ்வேன். மனதிற்குள் பெருமைப்படுவேன். தெரிந்தவர்களிடம் இதைக்கூறி ஆனந்தப்படுவேன் என்கிறீர்களா? இவற்றோடு நின்றுவிட்டால் போதாது. நேரடியாகக் குழந்தையைப் பாராட்ட வேண்டும்.
ஒரு வேளை, தற்செயலாக (எடுத்த இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலேயே கூட) சைக்கிளை அந்த இடத்தில் குழந்தை வைத்திருக்கலாம். அப்போ உங்கள் பாராட்டின் காரணமாக, இதுதான் சரியான வழிமுறை என்பது குழநi;தயின் மனதில் பதியும்.
அதேபோல், அடுத்த முறை எதையாவது கீழே கொட்டிவிடும்போது, அம்மா இல்லாவிட்டால் கூட அவள் „வெரிகுட்" வார்த்தை, குழந்தையின் மனதில் தோன்றும். துடைப்பதற்குத் தானாக முயற்சிக்கும்.
நல்ல பழக்கங்கள் மட்டுமல்ல, குழந்தை தப்பு செய்யும் போதும் உடனடியாக சுட்டிக்காட்ட வேண்டும். தான் செய்வது தப்பு என்பது தெரிந்தால்தானே குழந்தையால் அதைத் திருத்திக்கொள்ள முடியும்? தொடர்ந்து தப்பு செய்து பழகினால், அதை மாற்றிக் கொள்வது கஷ்டம். எனவே, தொடக்க காலத்திலேயே அதை மாற்றிவிட வேண்டும்.
கண்ணாடி டம்ளரை வைத்துக்கொண்டு, அடிக்கடி விளையாடினால், கீழே விழுந்தால் உடைந்து விடும். எனவே இந்த விளயாட்டு வேண்டாம்'' என்பதைக் கண்டிப்பாகவே சொல்லிவிடலாம். தவறு செய்தால் லேசான தண்டனை கொடுப்பதும் நல்லதுதான். லேசான என்பது நினவில் இருக்கட்டும். ஆனால், அதே சமயம், அந்தத் தண்டனைக்குப் பிறகு குழந்தையைக் கட்டிக்கொண்டு, ''நான் இப்படி செய்துட்டேனே?... சாரி'' என்றெல்லாம் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்க வேண்டாம். 'நாம் செஞ்சது தப்பில்லே போல இருக்கு. அதுக்கு அம்மா கண்டிச்சதுதான் தப்பு' என்ற எண்ணம் குழந்தைக்கு வந்துவிடும்.
அதிகம் இல்லையென்றாலும், சின்னச்சின்ன உதவிகளைக் குழந்தை பிறருக்குச் செய்யும். தன் குட்டித் தம்பியின் கையிலிருந்து பந்து நழுவி ஓடினால், அதை எடுத்துக் கொடுக்கலாம். தாத்தாவுக்கு அவரது கைத்தடியை எடுத்துக் கொடுக்கலாம். இதுபோன்ற செயல்களை உன்னிப்பாகக் கவனித்து உடனடியாக குழந்தையைப் பாராட்டுங்கள். குழந்தையின் எதிரிலேயே பிறரிடம், அந்த உதவிகளைக் குறிப்பிட்டு பெருமைப்பட்டால் மேலும் நல்லது.
ஆத்திகம், நாத்திகம் ஆகிய கருத்துச் சண்டைகள் ஒருபுறம் இருக்கட்டும். இறை நம்பிக்கை என்பது குழந்தகளிடையே ஒருவித ஒழுக்கத்தை உண்டு பண்ணுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. பெரும்பாலும், இறை நம்பிக்கையும், ஒழுக்க நெறிகளும் சேர்ந்தே இருப்பதால், ஒன்றிலிருந்து இன்னொன்றிற்குச் செல்வது குழந்தைக்கு எளிதாக இருக்கும்.
இந்தக் காலகட்டத்தில் (மூன்றிலிருந்து எட்டு வயதிற்குள்) குழந்தைக்கு ஒன்று பிடித்துவிட்டால், அதையே திரும்பத் திரும்பக் கேட்கும். சாம்பார் சாதம் பிடித்துவிட்டதா, அதையேதான் ஒவ்வொரு வேளையும் சாப்பிடும். டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பிடித்து விட்டதா, அந்த வீடியோ அல்ல சி.டி. யைத்தான் தொடர்ந்து போட வேண்டும். இராமாயணம் மனதை ஈர்த்துவிட்டதா, அதே கதையத்தான் வீட்டில் உள்ளவர்கள் தினம் தினம் சொல்லவேண்டும். இது போன்ற தொடர்ந்து விரும்பும் இயல்புகளில் தவறில்லை. குறிப்பிட்ட கதைகளையே கேட்பதன் மூலம் குழந்தை, தனக்குள் ஒருவித நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்கிறது. நல்ல விஷயங்களப் போதிப்பதற்கு இது மிகவும் ஏற்ற பருவம்.
''தினமும் பதினொரு மணிக்குத்தான் படுக்கப் போறான். அவரது டி.வி. பார்க்கிறான். காலையிலே எவ்வளவு எழுப்பினாலும் சுலபத்தில் எழுந்திருக்க மாட்டேன் என்கிறான். அப்புறம் கடசி நிமிஷத்திலே அரக்கபரக்க ஸ்கூலுக்கு ஓடறான்.'' இப்படிச் சொல்லும் பல அம்மாக்களை நான் சந்தித்து வருகிறேன்.
மூன்று வயதுவரை ஒருவிதத்தில் பழக்கி விட்டு, குழந்தை பள்ளியில் சேர்ந்தவுடன், அதன் தூங்கியெழும் நேரங்கள் சட்டென்று மாறிவிட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதற்கும் முன்பிருந்தே அதற்கான பயிற்சியைக் கொடுங்கள். குழந்தைக்கு இரண்டு வயதாகும்போதே இரவு எட்டு மணிக்குள் உணவு உணவ அளித்துவிடுங்கள். பிறகு கை கால்களச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பல் தேய்த்துக் கொள்ளவேண்டும். படுத்துக் கொள்ளவேண்டும் என்பதை தினசரி பழக்கமாக்கிவிடுங்கள். அப்புறம், பள்ளிக்குப் போகும்போது எந்தவித சிரமத்தயும் உணரமாட்டீர்கள்.
சொல்லப்போனால், குழந்தைக்கு ஆறுமாதமானவுடனேயே நள்ளிரவில் ஒருமுறை பால் கொடுப்பது என்கிற பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், அதை நிறுத்திவிடுங்கள்.
சில சமயம் ஆழ்ந்த தூக்கம் இல்லாத காரணத்தினாலும், காலயில் சுறுசுறுப்பாக எழுந்து கொள்ள முடியாமல் போகலாம். ஆழ்ந்த தூக்கம் இல்லாததற்குப் பல காரணங்கள். கெட்ட கனவுகள் அவற்றில் ஒன்று (ஆழ்ந்த தூக்கம் இல்லாதபோதான் கனவுகள் வருகின்றன என்பதைப்போல, கெட்ட கனவினால் பயமேற்பட்டு, இருக்கும் து}க்கமும் போகிறது என்பதும் உண்மையே). தொலைக்காட்சி, குழந்தைகள் மனதில் பலவித குழப்பங்களையும், பயங்களையும் ஏற்படுத்தக்கூடும். எனவே, சரியான நிகழ்ச்சிகளையே தேர்ந்தெடுத்துப் பார்க்க வைப்பது முக்கியம்.
இந்தக் காலகட்டத்தில் சில குழந்தைகளுக்குத் தூக்கத்தில் நடக்கும் பழக்கம்கூட இருக்கலாம். உடனே பயப்பட்டுப் பதறவேண்டாம். பெரும்பாலும் இதெல்லாம் தானாக மறந்துவிடும். உடனே, மனநல மருத்வரிடம் ஓடவேண்டும் என்பதில்லை. பரம்பரை காரணமாகவும், து}க்கத்தில் நடக்கும் வியாதி வரக்கூடும். டாக்டரிடம் அடுத்த செக்கப் செய்து கொள்ளும்போது, இதைப் பற்றியும் குறிப்பிடலாம்.
இந்தக் காலகட்டத்தில் தூக்கத்தில் நடக்கும் வியாதி வரவில்லயென்றால், நீங்கள் ஒருவிதத்தில் அமைதி கொள்ளலாம். பின்னாளில் இந்தக் கோளாறு வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறவு. மூளைக்கோளாறுகளினால் வருவதல்ல இந்தப் பழக்கம்.
குழந்தை பொய் சொல்வது, மற்றும் திருடுவது குறித்து ஏற்கெனவே கொஞ்சம் பேசியிருக்கிறோம். இப்போ இன்னும் கொஞ்சம் ஆழமாக அந்தப் பிரச்சனைக்குள் செல்வோமே...
பெற்றோரின் எதிர்பார்ப்பு அளவுக்கு வரமுடியாதபோதான் குழந்தை பெரும்பாலும் பொய் சொல்வது, திருட்டுத்தனம் செய்வது போன்ற வழிகளில் ஈடுபடுகிறது என்கிறார்கள் மனநல மருத்வர்கள். புரியாத ஒரு பாடத்தைக்கூட அம்மாவிடம் ''புரியுது'' என்று குழந்தை கூறுவதும், வீட்டில் நல்ல பெயர் வாங்கவேண்டும் (அல்லது) திட்டிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பரீட்சையில் கொப்பியடிப்பதும் இதுபோன்ற செயல்கள்தான்.
மற்றவர்களிடையே தான் பிரபல்யமடைய வேண்டும் ('வர்ற வழியிலே ஒரு பாம்பு இருந்தது. என் செருப்பாலை அதை அடிச்சுக் கொன்றேன்') என்பதற்காகப் பொய் கூறுவது ஒரு வகை. இன்னொரு வகை, பிறரின் பெயரைக் கெடுப்பதற்காகக் கூறும் பொய். சிறு குழந்தையைக் கிள்ளிவிட்டு, அந்தப் பழியை வேறொரு சிறுவன் மீது போடுவதும் இந்த வகைதான்.
முதல் வகைப் பொய்யையாவது, அவ்வளவு பெரிதுபடுத்த வேண்டாம். இரண்டாம் வகைப் பொய்யை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒரு மூன்று வயது குழந்தை, மேலே உள்ளது போல் நடந்து கொண்டால், (உண்மையைத் தெரிந்து கொண்டும்) அந்த வேறொரு சிறுவனை ஒப்புக்காகவாவது திட்டி, உங்கள் குழந்தையின் மனதை மகிழ்விப்பது ஆபத்தான செயல். சொல்லப் போனால், இது போன்ற பொய்களினால் மற்றவர்களுக்கு என்னென்ன விதமான துயரங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை அப்படிப் பொய் சொல்லும் முதல் நாளிலேயே விளக்கி, அந்தப் பழக்கத்தைக் கைவிட வைக்க வேண்டும்.
ஆக்கம்: ஜி.எஸ்.எஸ்
nandri - Kumutham