மனிதர்களாகிய நமக்கு புன்னகை என்ற தனி சிறப்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் . இயந்திரங்களுடன் மனிதனையும் ஒப்பிட்டு ரசிக்கும் காலம் என்றோ வந்திருக்கும் . இந்த புன்னகை என்ற தனி சிறப்பிற்கு உயிர் கொடுப்பவை நகைச்சுவை என்று சொல்லலாம் . வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்ற பழமொழி உண்டு அதற்காக யாரும் இல்லாத ரூம்ல கதவுகளை பூட்டிக்கொண்டு தனியாக சிரித்தால் நோய் போவதற்கு வாய்ப்புகள் இல்லை பக்கத்து தெருக்களில் உள்ள நாய்கள் வருவதர்க்குதான் வாய்ப்புகள் அதிகம் . அதற்காக சிரிக்க நினைப்பவர்கள் பலருடன் சேர்ந்து இனிமையான எண்ணங்களை பகிந்துகொண்டு சிரித்து மகிழுங்கள் . எது எப்படியோ சிரிக்கவும் சிந்திக்கவும் தெரிந்த அனைவருக்கும் இந்த நகைச்சுவை துணுக்குகள் சமர்ப்பணம்
அப்பா : டேய் அங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?
மகன் : கடிகாரம் நின்னுப் போச்சுப்பா?
அப்பா : சாவி கொடுடா சரியாகிடும்.
மகன் :அதான்பா ரொம்ப நேரமா கொடுத்துக்கிட்டு இருக்கேன். அது வாங்கவே மாட்டேங்குதுப்பா...
&&&&&&&&&&&&&&&&&
அவர் பல் டாக்டர் இல்ல போலி டாக்டர்னு எப்படி சொல்ற?
பல் ஆடுதுன்னு இந்த டாக்டர் கிட்ட சொன்னதுக்கு, பரதநாட்டியமா? குச்சுப்புடியான்னு கேக்கிறாரு.
&&&&&&&&&&&&&&&&&
சர்தார்ஜி புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார். அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க அமிர்தசரஸில் இருந்து ஜலந்தர் கிளம்பினார். சில மணி நேரங்களில் போய் சேர்ந்து விட்டதாக தனது அம்மாவுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார்.
அம்மா கேட்டார்: என்ன ஆச்சு? இவ்வளவு லேட்டா வர்றே?
சர்தார்ஜி: இந்த மாருதி கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சிருக்காங்க. அதனால் சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ஒரே ஒரு ரிவர்ஸ் கியர்தான் வச்சிருக்காங்க. அதுலே ஓட்டினா எப்படி சீக்கிரம் வரமுடியும்?
&&&&&&&&&&&&&&&&&
இவர் கணினி தொழில்நுட்பத் துறையில் வேலை பாக்குறவரு போல?
இதயத் துடிப்ப வச்சே எப்படி சொல்றீங்க டாக்டர்.
இதயம் லப் டப்புன்னு துடிக்காம லேப் டாப் லேப் டாப்புன்னு துடிக்குதே... அத வச்சித்தான்.
&&&&&&&&&&&&&&&&&
பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்?
விழுந்தது பலாப்பழம் ஆச்சே
&&&&&&&&&&&&&&&&&
வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க..."
"வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?"
"அதில்லைங்க"
"எது இல்லை?"
"சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?"
"போன்ல இருந்துதான் பேசறேன்"
"சரி என்ன பாட்டு வேணும்?"
"சினிமா பாட்டுதான்"
"சரி எந்த படத்துல இருந்து?"
"சினிமா படத்துல இருந்துதான்"
"அய்யோ!"
என்று தலையில் அடித்துக்கொண்ட அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்
அன்றோடு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
&&&&&&&&&&&&&&&&&
டாக்டர் : உங்களுக்கு இருக்கிற வியாதி குணமாகணும்னா மீன், கோழி சாப்பிடறதை நிறுத்தித்தான் ஆகணும்.

நோயாளி : எப்படி டாக்டர் அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்?
&&&&&&&&&&&&&&&&&
ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!
ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.
அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு.. சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!
சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..
அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம் மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு.. திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவதான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!
&&&&&&&&&&&&&&&&&&&&
கள்ள நோட்டு அடிச்சு, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே?
ரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல, குப்பு சாமின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...!