Tuesday, March 29, 2016

எங்கே? எங்கே? எங்கே?


தென்னை ஓலை விசிறி எங்கே?
பனையோலை விசிறி எங்கே?
ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே ?
அரிக்கேன் விளக்கு எங்கே?
பல்லாங்குழி எங்கே? பம்பரங்கள் எங்கே?
கண்ணாமூச்சி எங்கே? திருடன் போலீஸ் எங்கே?
கம்பர்கட் கல்கோனா மிட்டாய் எங்கே?
பஞ்சு மிட்டாய்,இஞ்சி மரப்பா எங்கே?
பல் துலக்கிய ஆலங்குச்சி எங்கே?
பனை ஓலை குடிசைகள் எங்கே?
நடை பழகிய நடை வண்டி எங்கே?
பொதி சுமந்த கழுதைகள் எங்கே?
எலந்தைப்பழம் எங்கே? சீம்பால் எங்கே?
பனம்பழம் எங்கே? பழைய சோறு எங்கே?
மாட்டு வண்டி எங்கே? கூட்டு வண்டி எங்கே?
பொன் வண்டு எங்கே? சிட்டுக்குருவி எங்கே?
அன்பு எங்கே? பண்பு எங்கே?
பாசம் எங்கே? நேசம் எங்கே?
நேர்மை எங்கே? வாய்மை எங்கே?
கண்ணியம் எங்கே? கட்டுப்பாடு எங்கே?
விவசாயம் எங்கே? விளை நிலம் எங்கே?
ஏர்கலப்பை எங்கே?
மண் வெட்டி எங்கே? மண்புழு எங்கே?
தூக்கனாங் குருவி கூடுகள் எங்கே ?
தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே?
இடுப்பைச் சுற்றிய சுருக்குப்பை எங்கே?
பெட்மாஸ் லைட் எங்கே?
கோலி குண்டு எங்கே? கோலி சோடா எங்கே?
அம்மிக்கல் எங்கே? ஆட்டுரல் எங்கே?
பிள்ளை சுமந்த அம்மாக்கள் எங்கே ?
தாய்ப்பால் கொடுத்த தாய்மை எங்கே ?
அனுபவம் பகிர்ந்த மூத்தோர் எங்கே?
எல்லாவற்றையும் விட,
நம் முன்னோர்கள் வாழ்ந்த
முழு ஆயுள் நமக்கு எங்கே?
சுத்தமான நீர் எங்கே ?
மாசில்லா காற்று எங்கே ?
நஞ்சில்லா காய்கறி எங்கே?
நோயில்லா வாழ்க்கை எங்கே?
நிம்மதியான தூக்கம் எங்கே?
இதற்கு பாமரனாலும்,பதில் சொல்ல முடியாது, படித்தவனாலும் பதில் சொல்ல முடியாது,
விஞ்ஞானியாலும் பதில் சொல்ல முடியாது,
எந்த கணினியாலும்கூட பதில்சொல்ல முடியாது.