Wednesday, January 7, 2015

குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள தேடு பொறிகள் - Search Engines

மக்கு ஏதாவது ஒரு தகவல் தேவைப்பட்டாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ உடனே கூகுள் உதவியோடு அதனைக் கண்டறிகிறோம். அதேபோல், குழந்தைகளுக்கும் சில சிறப்பு தேடுபொறிகள் இருக்கின்றன. அவற்றை தெரிந்து கொள்வது அவசியம் தானே?

குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள தேடு பொறிகள் ஒவ்வொன்றும் பாதுகாப்பானவையாக இருப்பதுடன் சுட்டிகள் பயன்படுத்தும் வகையில் மிகவும் ஜாலியானவையும் கூட.

ஒவ்வொரு சுட்டியும் ரசிக்கும் வகையில் விதவிதமான பொம்மைகள்.... விதவிதமான வண்ணங்கள்.. படிக்கப் படிக்க சுவையான தகவல்கள், அசத்தல் புகைப்படங்கள்.. என இங்கு குவிந்து கிடக்கும் ஒவ்வொன்றும் சுட்டிகள் கட்டாயம் சுவைக்கவேண்டிய இனிப்புப் பக்கங்கள். உதாரணமாக,

கிட் ரெக்ஸ்

இது சிறுவர்களுக்கான பொருத்தமான தகவல்களை மட்டும் தரக்கூடியது. சுட்டிகளுக்கும் பெரியவர் களுக்கும் என தனித்தனிப் பகுதிகள் இருப்பது இதன் சிறப்பம்சம். சுட்டிகளுக்கான பகுதியை கிளிக் செய்தால்.. சுட்டிகள் வரைந்த ஓவியங்களை பார்க்கலாம். அதுவே, பெற்றோர் பகுதியை கிளிக் செய்தால்.. அங்கே, இந்த தேடு பொறி பற்றியும்.. ஏன் இந்த தேடு பொறி? என்பது பற்றியெல்லாம் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.

இணையதள முகவரி : http://www.kidrex.org/

ஆகா கிட்ஸ்!



இந்த பக்கம் கொஞ்சம் விஷுவலானது. அதாவது படங்களுடன் தகவலும் தேவையா என்பதை நாம் முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளலாம். அதோடு கார்ட்டூன், விளையாட்டுகள், பொம்மைகள் செய்தல் போன்ற தனிப் பகுதிகளும் இதில் அடக்கம். அதுமட்டுமன்றி இணையத்தில் குழந்தைகள் விரும்பும் படங்களை வரைவதற்கான வசதியும் இதில் உள்ளன.

இணையதள முகவரி : http://aga-kids.com/

கிட்ஸ் கிளிக்



இந்த தேடுபொறி முழுக்க முழுக்க சிறுவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது என்பதால், குழந்தைகளின் வீட்டுப் பாடங்களுக்கு தேவையான தகவல்கள் தொடங்கி எக்கச்சக்கமான தகவல்களை இதன் மூலமாக சுட்டிகள் தேடிப் பெறலாம்.

இணையதள முகவரி : http://kidsclick.org/

அப்ப நீங்க உங்க சுட்டியுடன் பார்க்கவும் பயன்பெறவும் ரெடிதானே!